மயக்கம் என்ன
தனுஷ் ஒரு புகைப்படக் கலைஞர். எப்படியாவது மஹேஷ் எனும் மாபெரும் வைல்ட் லைப் புகைப்பட கலைஞரிடம் வேலைக்கு சேர்வதற்காக அலைபவர். தனுஷும், அவரது தங்கையும் அப்பா அம்மா இல்லாதவர்கள். தனுஷின் நண்பன், அன்னதாதா ஒரு பெண்ணை தன் கேர்ள் ப்ரெண்ட் என்று அறிமுகப் படுத்த, அவருக்கும், தனுஷுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துக் கொள்ளாமல் அடித்துக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவள், தனுஷை காதலிக்க, நண்பனின் கேர்ள் ப்ரெண்டை எப்படி தான் காதலிப்பது என்று குழம்பி அலைகிறான். ஒரு கட்டத்தில் நண்பன் விட்டுக் கொடுக்க, இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தனுஷ் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை தன் படம் என்று வெளியிட்டு பரிசு பெருகிறார் மஹேஷ். அந்த அதிர்ச்சியில் மாடியிலிருந்து கீழே விழுபவன். கொஞ்சம் கொஞ்சமாய் சில வருடங்களில் சினிக் ஆகிறான். அவனின் தேடல் நிறைவேறாமல் கிடைக்கும் வலி தனுஷை மேலும் குடிகாரனாய், மனநலம் குன்றியவனாய் ஆக்க, காதல் மனைவியிடம் தன் வக்கிரத்தையெல்லாம் காட்டுகிறான். எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் அவளும் ஒரு கட்டத்தில் உடைக்கிறாள். தனுஷ் என்னவாகிறார்? என்பதுதான் கதை.
மேற்ச் சொன்னவையை கதை என்று சொல்ல முடியாது. நிகழ்வுகளின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்ல முடியும். ஒரு புகைப்பட கலைஞராய் வர துடிக்கும் இளைஞனை கண் முன் நிறுத்துகிறார் தனுஷ். மஹேஷை பார்க்கும் போது இருக்கும் தவிப்பு, அவரை பார்க்கும் போது இருக்கும் பயம் கலந்த பாடி லேங்குவேஜ் அட்டகாசம். நண்பனின் கேர்ள் ப்ரெண்ட் தன்னை காதலிப்பது தெரிந்து, அடக்கமாட்டாமல் “நீ எனக்கு தங்கச்சி மாதிரி” என்று சொல்லுமிடத்திலும், மீண்டும் ரிச்சாவை பார்த்ததும் தவிப்புடன் அணைத்து கொண்டு உருகுமிடத்தில் நம்மை அவருடன் ஒன்ற வைத்துவிடுகிறார். அவர் ரிஜெக்ட் ஆகும் நேரத்திலும், அவரின் படத்தை தன் படம் என்று மஹேஷ் வெளிப்படுத்தியதை புத்தகத்துடன் போய் நின்று கேட்குமிடத்தில் உருக்குகிறார். க்ளைமாக்ஸிலும், ஃப்ரி க்ளைமாக்ஸிலும் மனிதர் நடித்து தள்ளுகிறார்.
ரிச்சா… குண்டு பார்ர்டி. தனுஷுடன் பார்க்கும் போது எல்லாமே பெரிசாய் இருக்கிறது. நான் சொல்வது கண்களை. ஆரம்பக் காட்சிகளில் தனுஷின் மேல் அவருக்கு ஏற்படும் சண்டைகள் ஆகட்டும், பின்பு அதுவே காதலாய் மாறி அவரை துறத்தும் போதாகட்டும் சுவாரஸ்யம். தன் கணவனின் நண்பனே அவளை வைத்துக் கொள்வதாய் வேறு மாதிரி சொல்ல, “ என் தப்புத்தான்.. இதை உன்கிட்ட சொல்லி அழுதுருக்க கூடாது. நீ ஆம்பளை. உனக்கு தேவை கல்யாணம். நல்ல பொண்டாட்டி. வேறொருத்தன் பொண்டாட்டியை பாக்க வேண்டாம்” என்று சொல்லுமிடத்தில் இருக்கும் அழுத்தமும், க்ளைமாக்ஸில் தன் கரு கலைந்தவுடன் நடிக்கும் காட்சியில் கொஞ்சம் மனதை கலைக்கிறார். அதன் பிறகு பேசாமலேயே இருப்பதும், க்ளைமாக்ஸில் நிலைகுத்திய பார்வையில் கண்ணீருடன் டிவி பார்க்கும் காட்சியில் நச்சென மனதில் நிற்கிறார்.
படத்தின் ஹீரோ என்று சொல்ல வேண்டுமானால் ராம்ஜியின் ஒளிப்பதிவுதான். ஆரம்பக் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை ஒரு புகைப்பட கலைஞனோடு பயணிப்பதால் பிக்சர் பர்பெக்ட் ஷாட்டுகளை அருமையாய் அமைத்திருக்கிறார். வைல்ட் லைப் காட்சிகளிலிருக்கும் ஷாட்டுகள் ஆகட்டும். அதிகாலை காட்டின் விஸ்தாரம் ஆகட்டும் அப்படியே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறார். அதே போல் இசையமைப்பாளர் ஜி.வி.ப்ரகாஷ்குமார். ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகியிருக்க, இரண்டாவது பாதி முழுவதும் வசனங்களுக்கு பதிலாய் இவரது பின்னணியிசைதான் பேசுகிறது. நிச்சயம் எங்கேயும் சுடாததாய் இருந்தால் பாராட்டுக்குரிய குட் ஜாப்.
எழுதி இயக்கியவர் செல்வராகவன். அவருக்கே உரித்தான டெம்ப்ளேட் கேரக்டர். புத்திசாலியான ஒன்றுக்கும் உதவாத கேரக்டர். அவனை கண்டெடுக்கும் ஹீரோயின். பின்பு அவனால் வாழ்வின் உயர் நிலை அடைவது. இவையெல்லாம் மீறி முதல் பாதியை சுவாரஸ்யமாக்கியது கேரக்டர் காண்ட்ரடிக்ஷன்கள் தான். டேட்டிங் வரும் ரிச்சாவுக்கும், தனுஷுக்குமான காட்சிகளில் முதலில் வன்மத்தை வெளிப்படுத்தும் போதே, இவர்களுக்குள் காதல் நிச்சயம் வரும் என்பது தெரிந்து விடுவதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவுதான் என்றாலும் விறுவிறுப்பாகத்தான் போனது. இரண்டாவது பாதியில் அவர்களுக்கு திருமணம் ஆனதும், தனுஷ் உடல் நிலையும், மனநிலையும் சரியில்லாமல் போக, என்ன செய்வது என்று தெரியாமல் குடித்துக் கொண்டிருப்பதும், திடீரென மனைவியை நிர்வாணமாய் படமெடுக்க நிற்கச் சொல்லி, அவளை அடிப்பதும் என்று தன் நிலையை பற்றிய கழிவிரக்கத்தை வெளிப்படுத்த முடியாமல், மனநிலை குன்றி, குடிகாரனாய் அலையும் காட்சிகள் தனுஷுன் கேரக்டருக்கு வேண்டுமானல் ஸ்ட்ராங் பாயிண்டாக இருக்கலாம் ஆனால் படத்தின் ஓட்டத்திற்கு பெரிய மைனஸ் பாயிண்ட். அதே போல தன் நண்பர்களிடம் எல்லாவற்றிக்கும் ரியாக்ட் செய்பவன், தன் படத்தை திருடிய மஹேஷை ஒன்றும் செய்யாமல் இருப்பது இடிக்கிறது. அட்லீஸ்ட் ஓங்கி ஒரு அறை கொடுத்திருந்தால் கூட சிறப்பாய் இருந்திருக்கும். அதே போல மஹேஷ் போன்ற ஆட்கள் ஏமாற்றுவது கொஞ்சம் ட்ராமாடிக்காக இருக்கிறது. அதே போல அந்த படங்கள் ஏற்கனவே திருடப்பட்டு விட்டது என்று தெரிந்த பிறகு, அவர் அவார்ட் வாங்கியதன் காரணமாய் அதிர்ச்சியாவது கொஞ்சம் ஓவர் என்றும் தோன்றுகிறது. அதன் பிறகு நடக்கும் ஃப்ரி க்ளைமாக்ஸ் அபார்ஷன் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் உருக்கியெடுத்திருப்பது செல்வாவின் படங்களில் புதுசு. நான் பயந்து கொண்டேயிருந்தேன். எங்கே க்ளைமாக்சில் ரியாலிட்டியை புகுத்துகிறேன் என்று நெகட்டிவ் எண்டிங் வைத்துவிடுவாரோ என்று பயந்தேன் நல்ல வேளை இல்லை. காதல் என் காதல் பாடல் ப்ளேஸிங் படு சொதப்பலான ப்ளேசிங். ஏதோ முதல் பாதியில் பாடல் வர வேண்டும் என்று வைத்தது போல் திணிக்கப் பட்டிருக்கிறது.
பாராட்ட வேண்டிய விஷயம் என்றால் சின்னச் சின்ன டயலாக்குள் மூலம் முதல் பாதியை கொண்டு சென்றதும், அதே இரண்டாம் பாதியில் அந்த டயலாக் கூட இல்லாமல் பின்னணியிசை, நடிப்பு இவைகளை வைத்தே கதை சொன்ன விதம் சுவாரஸ்யம். அபார திறமையிருந்தும் ஏத்திவிட, ஆளில்லாமல், எழாமலே போனவர்கள் இருக்கும் உலகில், இம்மாதிரியான கணவனின் திறமை மேல் மரியாதையும், நம்பிக்கையும் வைத்து வாழும் மனைவியை காட்டியிருப்பதும், மிக நுண்ணிய உணர்வுகளை திரையில் கொண்டு வந்ததற்காகவும், செல்வாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கேரக்டருக்கு ஜீனியஸ் என்று பெயர் வைப்பதனால் மட்டுமே மக்கள் அவனை ஜீனியஸ் என்று ஏற்றுக் கொள்ள முடியுமென்று நம்பியது தவறு. அது மட்டுமில்லாமல் இம்மாதிரி கேரக்டர்களை படத்தில் வரும் காலனி செகரட்டரி போல, குடிகாரனாய், மெண்டலாய் தான் பார்ப்பார்களே தவிர, பொண்டாட்டி போல புரிந்து கொண்டு கதையோடு இயந்து ரசிகர்களால் செல்ல முடியாது. அபார திறமையிருந்து வாய்ப்பு கிடைக்காமல் இம்மாதிரி சைக்கலாஜிகல் இம்பேலன்ஸோடு ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் ஒர் நண்பரை எனக்கு தெரியும். என்னால் படத்தை உணர முடிந்த அளவிற்கு வெகு ஜன மக்களுக்கு முடியாது என்றே தோன்றுகிறது. தனுஷின் அருமையான நடிப்பு, நல்ல பாடல்களும், பின்னணியிசை, அழுத்தமான கேரக்டர்கள், சிறந்த ஒளிப்பதிவு, கண்கலங்க வைக்கும் நெகிழ்வான க்ளைமாக்ஸ் எல்லாம் இருந்தும், தூக்கி நிறுத்த ஒரு அற்புதமான திரைக்கதை அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். என்னவோ.. படம் பார்த்து தியேட்டரில் பெரும் பாலானவர்கள் புலம்பிக் கொண்டேயிருக்கும் போது செல்வா இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்ற ஆதங்கம் தோன்றத்தான் செய்கிறது. ஆனாலும் சட்டென மொக்கை படம் என்று ரிஜெக்ட்டும் செய்ய முடியவில்லை என்பதும் நிஜம்.
மயக்கம் என்ன? –60/120
Comments
சிறப்பான படம், தனுஷ், ரிச்சா நடிப்பு அபாரம்!! பாடல்கள் கேட்டு டீசர்கள் பார்த்து இது வேறுமாதிரி படம் என்று பலர் நினைத்து ஏமாந்துவிட்டார்கள் அதனால்தான் பல நெகடிவ் விமர்சனங்கள்..
உங்க விமர்சனம் படிச்சு ரொம்ப நாளாச்சு !
Holiness Film என்று சொல்லப்படக்கூடிய சலங்கை ஒலியையே நாம் 25 வருடங்களுக்கு முன் பார்த்தாகிவிட்டது. இந்த குப்பைகளுக்கு நீங்கள் வேறு பரிந்துரை செய்கிறீர்கள்?
அனுபவம் உள்ள நீங்களே இதை விட நல்ல படத்தை இயக்கலாம். காலம் உங்களை மனநிலை பாதிக்கப்பட்ட இயக்குநரின் படங்களையெல்லாம் விமர்சனம் எழுதவைத்து உங்களையே மனநிலை பாதிக்கவைத்து விட்டிருக்கிறது.
காப்பி அடித்த படமென்றாலும் தெய்வத்திருமகள் 100 மடங்கு உயர்வானது.
வாழ்க உமது ரசனை!
உண்மைதான்.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கேரக்டரை புரிந்து கொள்ள மனநிலை பாதிக்கப்பட்ட இன்னொருமனிதரால்தான் புரிந்து கொள்ள முடியும்.
உங்களால் புரிந்து கொள்ள முடிந்தமைக்கு நன்றி.
அப்ப மன நல மருத்துவர் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவரா? நண்பரே.. முதல்ல. உங்களை டாக்டர்கிட்ட காட்டணும்.:)
அப்ப மன நல மருத்துவர் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவரா? நண்பரே.. முதல்ல. உங்களை டாக்டர்கிட்ட காட்டணும்.:)//
சினிமா பார்க்கப் போகும்போது மட்டும் யாரும் டாக்டரப் பத்தி யோசிக்க மாட்டீங்களா ?
மனநிலை பாதிக்கப்படுவது விமர்சனத்தாலும் இருக்கலாம் !
பைத்தியகார ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சா வைத்தியம் பார்க்க சினிமாவுக்கா போவாரு ?
அவரவர் மனநிலை அவரவர்களுக்குத் தான் தெரியும்...
-சினிமாவால் மனம் சீர் கெட்டு போவதென்னமோ உண்மை !
மனதை ஒரு நிலை படுத்துவது கடினம் !
அதை அடக்கி ஆளத் தெரிந்து கொண்டால் உனக்கு நீயே டாக்டர் !
வாழ்க வளமுடன் !
- cable sankar சினிமா சம்பந்தப்பட்ட ஒரு விமர்சகர். டாக்டர் அல்ல ராமச்சந்திரன் !
Oh really, but it matters coz you wrote wrongly. His name was mentioned in several scenes.
But for me Its a crap movie. Most of the people in the Theater laughed for several scene including the "blood stain cleaning" scene.
Views & taste differs.
Boss Vimarsanam Nadunilamayaathane irukku !! Umakku Pidikkaatti yen Kolaverila Pakkureenga
@Cable Ji :
mMM Nethu n8 1AM Varaikkum Review Varumnu Paathukittu irunthu thoongittan ! :S
But Review Middle Awesome Songs !
Paakalam nu irukkan !! boss Songs kum Olippathvukkum oru 75/120 Irukkalamnu thonchu
Regards
M.Gazzaly
(http://greenhathacker.blogspot.com)
:-(
படத்தின் ட்ரெய்லர்கள் மற்றும் காட்சிகள் கட் செய்து கொடுக்கும்போது உடனிருந்தேன்.
ஒளிப்பதிவு சூப்பராக இருந்தது!
Intha padathi kurai solla yarukkum thakuthi undu yena yenakku dhondravillai.
கதையின் மையக்கரு நன்றாகவே உள்ளது, ஆனால் திரைக்கதை ஒரு ART படம் போலவுமில்லை அதே வேளையில் ஒரு மசாலா படமாக்கவுமில்லை. பல நல்ல தருணங்கள் படத்தில் உள்ளது ஆனால் நிறைய குழப்பங்களும் கூடத்தான். செள்ளவராகன் என்றாலே சில திருப்பங்கள் எங்கு செல்லும் என்று நம்மால் யுகிக்கமுடிகிறது. அது ஏனோ வாழ்வில் தோல்விகள் அடைந்தாலே psychicகாக மாறவேண்டுமா என்ன... இதே கதையை ஒரு உருக்கமான அதே நேரத்தில் விறுவிறுப்பான திரைகதையாகவும் எடுக்கமுடியும்.
தனுஷ் ஒரு intent நடிகராக உருவாகிவருகிறார். அனால் பல நேரங்களில் அவருடைய expressions கள் contradictoryயாக உள்ளது. தனுஷ்க்கு தாய் தந்தையில்லை ஆனால் ரிக்காவுக்குமா? ஆவளுடையே உறவு வட்டமே திரைக்கதையில் காணோம். அதுவும் ஒரு realisticகான கதை களத்தில் மனித வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை காட்டும் படத்தில்.
ரிச்சா... எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான உணர்வு வெளிபாடு... அந்த முகத்தில் வேறு expressions முடியாதா? அந்த office conversations எல்லாம் படு unrealistic கற்பனை.
இரண்டாம் பாதி முழுக்க படத்தில் ஒன்றமுடியவில்லை அரங்கத்தில் ஒரு comments தான்.
எனக்கென்னமோ box office காலிதான்.
Gopi.
http://vimeo.com/18283950
if that is the case, u'd hav avoided these lines from the reivew.
//கேரக்டருக்கு ஜீனியஸ் என்று பெயர் வைப்பதனால் மட்டுமே மக்கள் அவனை ஜீனியஸ் என்று ஏற்றுக் கொள்ள முடியுமென்று நம்பியது தவறு.///
பள்ளிக் கூடம் போகலாமா?
வேறு எப்படி கேள்வி கேட்க்க வேண்டும் உங்களை? "மதிப்பிற்குரிய அய்யா ஏன் பெயரை மாற்றி எழுதினீர்கள்" என்றா?
எது எப்படியோ கடைசி வரை செஞ்ச தப்ப ஒத்துக்கல.....இனிமேல் உங்ககிட்ட பேசி பிரயோசனமில்ல....நடத்துங்க.
"அதே போல அந்த படங்கள் ஏற்கனவே திருடப்பட்டு விட்டது என்று தெரிந்த பிறகு, அவர் அவார்ட் வாங்கியதன் காரணமாய் அதிர்ச்சியாவது கொஞ்சம் ஓவர் என்றும் தோன்றுகிறது." - உங்கள் கதையை யாரவது திருடி படமெடுத்தால் அது ரிலீஸ் ஆகும் பொது மட்டும் தான் ரியாக்ட் பண்ணுவிங்களா?? தேசிய விருது வாங்கினா உங்க BAD LUCK நினச்சி திரும்ப அழுவீங்களா இல்ல அன்னைக்கே அழுதுவிட்டோம்னு ரிலாக்ஸ் ஆயுடுவீங்களா?? -
something not convinced !!..
"
Ennappa Simb. U,
Sowkkiyama?
Suddenly, why this filmveri?
Ok ok. Me 2 want 2 see filmu.
Why not Mayakkam Enna filmu?
Heard it's semma hittu.
How many ticketsu? U tellu!
-M.E.Dhanush
"
Howiis ittu!
-R. J.
Life is beautiful, the way it is...
Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills