Thottal Thodarum

Nov 20, 2011

கொத்து பரோட்டா - 21/11/11

நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
தமிழக மக்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். தப்பு பண்ணிட்டமோ.. என்று. ஒரேடியாய் பால் விலை, பஸ் டிக்கெட் , விரைவில் மின்சாரக் கட்டணம் என்று ஏகத்துக்கு ஏற்றி விட்டார்கள். பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு இதை தவிர வேறு வழியில்லை என்ற சால்ஜாப்பு வேறு. வழக்கம் போல இதற்கு காரணம் முந்தைய மைனாரிட்டி திமுக அரசுதான் என்ற குற்றச்சாட்டு. ஆளாளுக்கு அறிக்கைவிட்டால், உடனே கேட்டு குறைக்க என்ன திமுக ஆட்சியா நடக்கிறது?. என்று கேட்கும் உ.பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். போன கொ.பரோட்டாவில் கூட எழுதியிருந்தேன். சென்னையின் சாலைகளைப் பற்றி. இந்த வாரம் வரை அதற்கான விமோசனம் ஏதுமில்லை. நம்மிடம் வாங்கும் ரோட் டாக்ஸ் பணம் எங்கு போயிற்று. அதான் கார்பரேஷன் அவர்களிடம் வந்துவிட்டதே? செலவு செய்த பணத்தை எடுக்க வேண்டாமா? அட்லீஸ்ட் அதற்காவது மீண்டும் ஒரு அறை குறை ரோட்டை போட்டு தொலைக்கலாம் அல்லவா?
########################################

வழக்கமாய் காதல் கதைகள் எல்லாம் அழகுள்ளவரை என்று சொல்வார்கள் காதலைப் பற்றி உடல் சார்ந்த ஐடியா வைத்திருப்பவர்கள். ஆனால் இவர்களது காதலை பார்த்தால் நிச்சயம் காதல் மேல் ஒரு மரியாதை வரும். காதல் மேல் நம்பிக்கை வரும். 
################################################
சுக்ராமுக்கு 5 வருட தண்டனை கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார்கள். “நான் லஞ்சம் வாங்கினேனே தவிர, அரசுக்கு ஏதும் நஷ்டம் அடைய செய்யவில்லை. அதனால் என் வயதை கருத்தில் கொண்டு தண்டனையை தவிர்த்து விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு சி.பி.ஐ லஞ்சம் வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்தால் கூட அது அரசுக்கு வருமான இழப்பே என்று கூறி உள்ளே தள்ளிவிட்டது. என்ன ஒரு கொடுமை பாருங்க சார்.. லஞ்சத்தை விட அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவது தான்  தண்டனைக்குரிய விஷயமாய் ஆகிவிட்டது பாருங்க. ங்கொய்யால இன்னும் ஒரு அஞ்சு வருஷம் உள்ள போடணும். அங்கேயே சாகட்டும்.
#################################################
பதினேழு லட்சம் கோடி, ஸ்பெக்ட்ரம் ஊழல் அது இது என்று கத்திக் கொண்டிருந்தவர்களுக்கு மீண்டும் தணிக்கை குழு வெறும் சில ஆயிரம் கோடிகள் தான் என்று கூறியுள்ளது. எனவே பெரிசா பில்டப் எல்லாம் இல்லாம சாதாரண ஊழல்ன்னு மட்டுமே மக்கள் எல்லோரும் கூவும்படி கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் இந்த சுக்ராம் பேசுனதை கேட்ட இம்பாக்ட்...
############################################### 
மூன்று பேரின் உயிரையும்,35 பேர் காயமுறும் அளவிற்கு ஒர் விபத்து பனியால் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமையன்று ஜெர்மனியிலுள்ள ஒர் ஹைவேயில்.திடீரென பனி மூடியதால் ஏற்பட்ட விபத்து என்று சொல்கிறார்கள். ஆனாலும் இவ்விபத்திற்கு பின்னால் ஏதோ ஒன்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறார்கள். அதைக் குறித்தான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.
############################################
செவிக்கினிமை
இந்தப் பாடல் செவிக்கினிமையா என்று கேட்டால் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. ஆனால் கேட்ட மாத்திரத்தில் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. தனுஷ் சமீபகாலமாய் பாடும் பாடல்கள் எல்லாமே இந்த ஜெனரில் தான் வருகிறது. போதையை போட்டு விட்டு, பெண்களை குறை சொல்லும் ஆணாதிக்க பாடல்கள். அதனாலேயோ என்னவோ பாட்டு ஹிட்டாகிவிட்டது என்றும் தோன்றுகிறது. எனிவே எனக்கு பிடித்தற்கான காரணம் இதன் ட்யூனும், வார்த்தைகளில் உள்ள எளிமையும். படு சீரியஸாய் தங்கிலீஷில் எழுதியிருக்கிறார்கள்.
########################################
அக்டோபர் மாதம் வெளியான சேத்தன் பகத்தின் "Revolution 2020" புத்தகம் இதுவரை 7,50,000 காப்பிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றனவாம். என்ன ஒரு விஷயம் என்றால் மற்ற இந்திய ஆங்கில புத்தக சந்தை பெஸ்ட் செல்லர்கள் என்று வகைபடுத்தப்பட்டிருக்கும் மற்ற நாவல்கள் எல்லாம் பத்து மாதங்களில் வெறும் 20,000 காப்பிகள் தான் விற்று தீர்ந்திருக்கின்றனவாம். தமிழ்ல மட்டுமல்ல இங்கிலிஷுல எழுதினாக் கூட யாரோ ஒருத்தர் புக்கு மட்டும் தான் விக்கும் போலருக்கு.
##########################################
நண்பர் ஒருவருக்கு பேஸ்புக்கின் மூலம் ஒருவர் நண்பராகியிருக்கிறார். நேரில் சந்திக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்து சந்தித்திருக்கிறார்கள்.  இரண்டொரு சந்திப்பில் நெருக்கமாகி, அடிக்கடி சந்திக்க ஆரம்பித்து ஒரு நாள் நண்பரின் அறையில் தங்கிப் போயிருக்கிறார். அடுத்த நாள் காலையில் ரூமில் இருந்த அயிட்டங்களை எல்லாம் அபேஸ் செய்துவிட, நண்பர் போலீஸ் கம்ப்ளெயிட் கொடுத்து ஆளை பிடித்து பொருட்களை மீட்டெடுத்திருக்கிறார். திருடிய பேஸ்புக் நண்பர் இப்போது ஜெயிலில். ஒரு ஜாக்கிரதைக்கான இன்பர்மேஷன்.
########################################
சென்னை போலீஸை அழைத்து முதலமைச்சர் ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்களாம். அதாவது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைப் போல ட்ராபிக்கை கட்டுப்படுத்த, அதை வழி நடத்த எல்லா டெக்னாலஜிகளையும் அமல் படுத்த போவதாய் சொல்லியிருக்கிறார்கள். அதுக்கு முன்னால் எல்லா ரோட்டையும் சிங்கப்பூர், மலேசியா மாதிரி போட்டுருவாங்களா?
###########################################
இந்த வார விகடனில் லேடிகாகாவைப் பற்றி படித்திருப்பீர்கள். கொஞ்சம் தேடிப் பிடித்து இவரது பாடல்களையும், அதன் வீடியோக்களையும் பார்த்தேன். அவரைப் பற்றி கொஞ்சம் எக்ஸ்ஸெண்ட்ரிக்கான பெண் என்று எழுதியிருந்தார்கள். வீடியோவை பார்க்கும் போது அது புரிந்தது.
#############################################
யுடான்ஸ் கார்னர்
யுடான்ஸ், ஆதி, பரிசல் ஆகியோருடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதை போட்டி முடிவுகள் அறிவித்தாயிற்று. விரைவில் அவர்களுக்கான பரிசுகளை சிறப்பான விழா நடத்தி கொடுக்க முயற்சி செய்யவிருக்கிறோம். அதற்கான இடம், நாள், நேரம் ஆகியவை அறிவிக்கப்படும். பரிசு பெற்ற அனைவருக்கும் யுடான்ஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
##########################################
ப்ளாஷ்பேக்
இந்த படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்தவர்கள் எல்லாம் துக்கம் தொண்டையடைக்க தனியே போய் கதறியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதற்கு காரணம் இப்பாடலில் வரும் காட்சிகளும், அதற்கு உருக்கும் இளையராஜாவின் குரலும், ட்யூனும் காரணம் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இளையராஜாவின் இசையில் கீரவாணி ராகத்தில் இசையமைத்த பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த முத்து. அதே போல இந்த க்ளைமாக்ஸ் பாடல். ராஜாவை இசையமைப்பாளராய் கொண்டாடும் அளவிற்கு, பாடகராய் கொண்டா எனக்கு தேன்றியதில்லை. இந்த பாட்டை கேட்கும் வரை. மனுஷன் உருக்கியிருப்பார்.
###############################################
தத்துவம்
மற்றவர்கள் செய்யும் தவறுகளை பார்த்து நீ கற்றுக் கொள். எல்லா தவறுகளையும் நீயே செய்து கற்றுக் கொள்ள ஆயுசு போதாது.

நிறுத்தி நிதானமாய் ஒரு செயலை செய்பவர்கள் நிச்சயம் இறந்து போவார்கள் அவர்களின் இலக்கை அடையும் முன் 

உன் எதிரியுடன் சமாதானமாக போக சிறந்த வழி அவனுடன் இணைந்து பணி புரிவது.

The naked truth is always better than the dressed lie..
####################################################
அடல்ட் கார்னர்
ஒருவன் பாரில் சரியான போதையில் மேலும் குடித்துக் கொண்டிருக்க, அருகில் இருந்தவன் ”ஏன் இப்படி குடிக்கிற உனக்கு அவ்வளவு மனசு வருத்தமா?” என்று கேட்க, அதற்கு குடித்தவன்  “என் மனைவி எனக்கு துரோகம் இழைக்கிறாள். தினமும் சாயங்காலம் ஆனால் “லோரி பாருக்கு” சென்று விடுகிறாள். அவளை அங்கு யார் அழைத்தாலும் அவனுடன் படுத்துவிடுகிறாள். அதைப் பார்த்து எனக்கு வருத்தம் அதிகமாகிவிட்டது. குடிப்பதை தவிர வேறு வழியில்லை. நான் என்ன செய்வேன்?” என்று அழ, பக்கத்தில் இருந்தவன் “ தோபாரு.. அழாத.. நாங்கெல்லாம் இருக்கோம்.. மொதல்ல கண் துடை.. இப்ப சொல்லு அந்த லோரி பார் எங்கருக்கு?” என்றான்.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

Philosophy Prabhakaran said...

அவன் இவன் பார்த்துட்டு வரும்போது கூட அடைச்சிருக்குமே... தொண்டையை சொன்னேன்...

Sharmmi Jeganmogan said...

கொலைவெறி சாங்கிற்கு நான் தான் அடிக்ட் ஆகிட்டேன்னு பார்த்தேன். நீங்களுமா தலை?

Sharmmi Jeganmogan said...

//தமிழ்ல மட்டுமல்ல இங்கிலிஷுல எழுதினாக் கூட யாரோ ஒருத்தர் புக்கு மட்டும் தான் விக்கும் போலருக்கு.//

உங்க ப்ளாக் கவுண்டரைப் பார்த்தா எனக்கும் இதே ஃபீலிங் தான் வருது பாஸ்.

Sharmmi Jeganmogan said...

கொத்து பரோட்டா பார்த்தா ஜாலியாயிருக்கும். இன்னைக்குன்னா எல்லாம் மனசைப் புழியிற மாதிரி விஷயமாகவே போட்டிருக்கிறீங்க, சார். வை திஸ் பீலீங்? வீட்டிலே அண்ணி திட்டீட்டாங்களா?

Arun Kumar said...

thalivaree !! before election you comment was most of the people were supporting DMK. now you are telling most of the people talking About voting ADMK.. which one is true ? :)

facebook matter where its happened ?? in chennai?

மயில் றெக்க said...

http://www.thiraipaadal.com/playlistirsongs.php?PLID=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF&lang=ta

KEERAVAANI SONGS

Unknown said...

@Cable Ji:

Naan Innnaikku Kothu Parotta Saappida muthalle ninaichan neega
"Sevikkinimai" Part la
y dis Kolaveri song poduveenganu.. Nenaicha mathiriye pottuteenga..

Adult Corner
--> superb

Regards
M.Gazzaly
http://greenhathacker.blogspot.com

Sivakumar said...

வை திஸ் கொல வெறிடி...தக்காளி சிம்புவை தனுஷ் 'சுட்டே' புட்டார்!!

arul said...

information about facebook cheating is nice no one should accept a friend request without knowing him personally so that it will lead to problems

(www.astrologicalscience.blogspot.com)

MANO நாஞ்சில் மனோ said...

தோபாரு.. அழாத.. நாங்கெல்லாம் இருக்கோம்.. மொதல்ல கண் துடை.. இப்ப சொல்லு அந்த லோரி பார் எங்கருக்கு?” என்றான்.//

ஹா ஹா ஹா ஹா ஆமா அந்த பார் எங்கே இருக்கு அண்ணே ஹி ஹி....

இளம் பரிதி said...

udanz parisu ellam book fair la vachu kodukka try panlamla...

rajamelaiyur said...

சேது அருமையான படம் ,,

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

why this kolaveri கொலவெறிடி டி?
விடியோவை இடம் மாற்றுங்கள்
முதல் பத்திக்கு சரியாக பொருந்துகிறது

நெல்லை கபே said...

இந்தப் பாட்டைக் கேட்டதும் எனக்கு வித்தகன் ஞாபகம் வந்திடுச்சு. தனுஷ் அவரது அண்மைய படங்களை மறந்திருப்பார் என்றே நம்புவோம்.