Thottal Thodarum

May 24, 2017

கொத்து பரோட்டா 2.0-27

கொத்து பரோட்டா -2.0-27
ORU MEXICAN APARATHA
அரசியல் என்பது மலையாளிகளின் வாழ்க்கையில் ஊடுருவிய விஷயம் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் குடும்பப் படங்களில் கூட மிக இயல்பாய் ஆண்/ பெண் பேதமில்லாமல் போகிற போக்கில் அரசியல் பேசிவிடுவார்கள்.  ஒரு மெக்ஸிக்கன் அபரதா முழு கல்லூரி அரசியல் படம்.. 70களில் கம்யூனிஸ்ட் கட்சியான SYFன் அனுதாபியான கோச்சானினைக் கல்லூரி கேம்பஸில் வைத்து கொல்லப்படுவதுடன் ஆரம்பிக்கும் கதை என்பதுகளுக்கு ட்ராவல் ஆகிறது. மீண்டும் அதே கல்லூரி, ஆனால் அங்கே KSQ எனும் மற்றொரு கட்சி தான் பல வருடங்களாய் கல்லூரி பாலிடிக்ஸில் கொடி கட்டி பறக்கிறது. அங்கே எப்படி SFYயின் கொடியை பறக்க விடுகிறார்கள் எனும் சாதாரணக்கதை தான்.ஆனால் அதை படமாகியிருக்கும் விதத்தில் தான் சுவாரஸ்யம். ஏகப்பட்ட கேரக்டர்கள், கல்லூரி ஆஸ்டல். குடி, காதல், காதல் தோல்வி, கல்லூரிகுள் இருக்கும் அரசியல் காரணமாய் நடக்கும் மாணவ துரோகங்கள், கல்லூரி கலை விழா, என படு லைவாக வீஷுவல் படுத்தியிருக்கிறார்கள். ஏகப்பட்ட துணை நடிகர்கள், இது மாஸ்டர் ஷாட், இது மிட், என்றில்லாமல் மிக இயல்பாய் திரைமொழியில் நம்மை அவர்களுள் ஒருவராய் அலைய விடுகிறார்கள். முதல் பாதி காலேஜ் கலாட்டா என்றால் பின் பாதி கல்லூரி தேர்தல், அதன் பின் உள்ள அரசியல், மாணவர்களின் அரசியல் ஆர்வம், கொலை வெறி என பல விஷயங்களை பேசுகிறது. என்ன ஏகப்பட்ட கேரக்டர்களினால் யாருடய கதை என்று செட்டிலாகத்தான் அரை மணிநேரம் ஆகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Las elegidas
உலூசிஸும், சோபியாவும் சந்திக்கிறார்கள், காதலிக்கிறார்கள், உடலுறவு கொள்கிறார்கள். கொண்ட மாத்திரத்தில் உனக்காக நானும் ஏதும் செய்வேன் என்கிறான். அவளும் ஆமோதிக்கிறாள். தன்னுடய வீட்டிற்கு சோபியாவை உலூசிஸ் கூட்டிப் போகிறான். அங்கே அப்பா பார்பிக்யூவில் சமைத்துக் கொண்டிருக்க, அன்பாய் வரவேற்று, அவளது குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார். அவளுடய அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டதையும், தாயும் சின்னத் தம்பியும் இருப்பதாய் சொல்கிறார். அவர் ஆதரவாய் பேசி ஆறுதல் சொல்கிறார். அதே சமயம் அண்ணன் தன் மனைவி குழந்தையின் சகிதம் வந்து சேருகிறான்.  சோபியாவிடம் உன்னிடம் சரியாக நடந்து கொள்கிறானா என் தம்பி என்று விசாரித்து, உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருகிறேன் உலூஸிஸ் மூலம் என்கிறான். அப்பா தன்னுடய 54வது பிறந்தநாள் கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். மிகச் சந்தோஷமாய் அமைகிற நாளுக்கு பிறகு உலூஸிஸ் அவளிடம் நாம் ஊரை விட்டு ஓடிவிடலாம் என்கிறான். ஏன் என்று கேட்டதற்கு தன் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லி ரகசியமாய் ஊரை விட்டு கிளம்பும் நேரத்தில் அவனை தொடர்ந்து வந்த அவனது அண்ணன் உலூசிஸை அடித்துப் போட்டுவிட்டு, சோபியாவை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவளை விபசாரவிடுதியில் சேர்க்கிறான். ஒன்றுமறியா இளம் அப்பாவி பெண்களை காதல் என கவர்ந்து மெல்ல அவர்களது பின்புலத்தை அறிந்து கொண்டு, வறுமையை பயன்படுத்தி, மிரட்டி, அவரக்ளை விபச்சாரிகளாக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இவர்கள் என்று விளக்கப்படுகிறது. விபச்சார விடுதி, அங்கு நடக்கும் அராஜகங்கள், கொடுமைகள், காண்டம் எப்படி மாட்டுவது என்பதில் ஆரம்பித்து எப்படியெல்லாம் உடலுறவு கொள்ள வேண்டுமென்று லைவ் டெமோ சொல்லிக் கொடுக்கப்பட்டு, எது எதெற்கு எவ்வளவு பணம் வாங்க வேண்டும்? என மெனு கார்டு போல உடலுறவின் பல முறைக்களுக்கு தொகை செட் செய்வது. மாதவிடாய் காலங்களிலும் உடலுறவுக்கு தயார்படுத்துவது போன்ற காட்சிகளை ஆபாசமில்லாமல், மிக நாசூக்காக சொல்லியிருக்கிறார்கள். அடிபட்ட உலூஸிஸ் தங்கள் குடும்பத்திற்கு இழுக்கு சேர்த்ததாய் அவனது அப்பாவும் அண்ணனும் அடித்து துவைக்க, அவ்வளவிற்கு அப்புறமும் உலூஸிச் தனக்கு சோபியா வேண்டும் என்கிறான் அப்படியானால் வேறொரு பெண்ணை மயக்கி கூட்டி வந்து சேர்த்துவிட்டு, அவளை கூட்டிக் கொள் என்று அப்பா கண்டீஷன் போட, வேறு வழியில்லாம இன்னொரு பெண்ணை தேட ஆரம்பிக்கிறான். அதே நேரத்தில் ஒவ்வொரு விபச்சார விடுதியாய் ஒரு வருடத்துக்கு முன் காணாமல் போன தன் பெண்ணை தேடியலையும் ஒருவர், சோபியாவின் வயதை கேட்டறிந்து தன் பெண்ணும் அவள் வயதுதான் என்று சொல்லி வருந்தி, அவளை எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்கிறார். உலூசிஸ் இன்னொரு பெண்ணை கொஞ்சம் கொஞ்சமாய் கவர்ந்து அவளை தன்னுடன் தனி வீடெடுத்து தங்கவைத்து, அவளுக்கு வேறொரு விதமான ப்ரெஷரை கொடுத்து தனக்காக விபச்சாரம் செய்தால் தன் கடனெல்லாம் சரிகட்டிவிடலாமென்று எமோஷனல் ப்ளாக் மெயில் செய்கிறான். இன்னொரு பக்கம் சோபியா தப்பிக்க தகுதியான நாள் குறித்து எல்லாம் ப்ளானும் ரெடியாக இருக்க, என்ன நடக்கிறது என்பதுதான் க்ளைமேக்ஸ்.. இப்படம் ஸ்பானிஷ் படமாய் இருந்தாலும் எல்லா ஊருக்கும் நாட்டிற்கும் இன்றைய நிலையில் பொறுத்தமான நிஜக் கதை தான். உலூஸிஸ் இன்னொரு பெண்னை கண்டுபிடித்து மயக்கி தன் வீட்டிற்கு கூட்டிவரும் போது, சோபியாவிற்கு நடந்த அதே காட்சிகள், அப்பா, சமைப்பது, அவரது பிறந்தநாள், கேக் கட்டிங்க், அண்ணன் இப்போது வேறு ஒரு பெண்ணுடனும் குழந்தையுடனும் வருவது என காட்சி வரும் போது நம் அடி மனதில் வருத்தம் தோய ஆரம்பித்துவிடும். அய்யோ.. புள்ளை ஏமாறப்போவுதே என்று பதைக்கும். இளம் பெண்களை அதிலும் பொருளாதாரத்தில் மிக நலிந்த நிலையில் இருக்கும் இளம்பெண் குழந்தைகளை  ஜீன்ஸும், டீசர்ட்டும், மால்களுக்கு கூட்டிக் கொண்டும் போய் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து கவர்கந்து பின் என்ன ஆகிறது? என்பதை மால்களி ஓரங்களில் வெட்கப்புன்னகையோடு இடுப்பை சுற்றிய கைகளை தட்டி விட்டுக் கொண்டே நடக்கும் பெண் குழந்தைகளைப் பார்க்கும் போது திக்கென்றுதான் இருக்கிறது. அதே உணர்வை இப்படத்தை பார்க்கிற போதும் வருவதை தவிர்க்க முடியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
The Salesman
ஆஸ்கர் விருது பெற்ற வெளிநாட்டு திரைப்படம். ஈரானிய படங்களுக்கு மட்டும் கதை என்கிற வஸ்துவுக்கு பஞ்சமே வராது. ஏனென்றால் மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட திரைப்படக்கதையாய் மாற்றி விடுகிறார்கள். எமாட்டும் ராணாவும் தம்பதிகள். எமாட் பள்ளி வாத்தியாரும் கூட. கணவன் மனைவி இருவருக்கும் தொழில் முறை நடிப்பு என்பது பாஷன்.  The death of  a salesman எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறவர்கள். தம்பதியரின் வீடு சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் காலி செய்ய நேரிடுகிறது. புதிய வீட்டிற்கு போய் செட்டிலாக முயன்று கொண்டிருக்கும் நேரத்தில், ரானாவை ரத்த களறியில் பாத்ரூமில் கண்டெடுக்கிறார்கள். சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்ற படுகிறாள். ஆனாலும் அவளின் மன உளைச்சல் போகவில்லை. யாரோ ஒருவன் பாத்ரூம் வரை வந்து பார்த்து அவள் கத்த ஆரம்பித்ததும் தாக்கிவிட்டு ஓடியிருக்கிறான் என்று சொல்கிறாள். இதற்கு முன் இந்த வீட்டில் இருந்தவள் ஒரு விபச்சாரி என தெரிய வர, அவளின் பொருட்களும் அங்கேயே ஒரு அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதையெடுக்க சொல்கிறான் எமாட். வீட்டில் ஓரிடத்தில் பணமும், ஒரு கொத்து சாவியும் கிடைக்க, சாவிக்கான வண்டியை தேடி அலைகிறான். அது ஒரு லோட் அடிக்கும் ட்ரக். அதை கொண்டு வந்து தன்னுடய வீட்டின் பார்க்கிங்கில் வைத்துவிட்டு, அலுவலகத்திற்கு செல்கிறான். தன் ஸ்டூடண்ட்  ஒருவனின் அப்பா மூலமாய் வண்டியின் எண்ணை வைத்து அட்ரஸை கண்டுபிடிக்கிறான். அந்த வண்டியை சம்பந்தப்பட்டவன் வேறொரு சாவி போட்டு எடுத்துப் போயிருக்க, அதை தொடர்கிறான். ஒர் இளைஞன் தான் அதை ஓட்டுகிறவன் என்று தெரிந்து கொள்கிறான். அவனுடய வண்டியை தனக்கு லோட் அடிக்க வேண்டுமாய் கேட்கிறான்.  மிகுந்த பிரயாசைக்கு பிறகு வருவதாய் ஒத்துக் கொள்கிறான்.  அவனின் வருகைக்காக காத்திருக்கிறான் எமாட் தன்னுடய பழைய வீட்டில். ஆனால் வருவது அந்த இளைஞனின் மாமனார். வயதானவர். இதய நோய் உள்ளவர். தன்னுடய பெண்ணுக்கும் இளைஞனுக்கு விரைவில் திருமணம் நடக்க விருப்பதால் பர்சேஸுக்கு போயிருப்பதாய் சொல்கிறார். தொடர்ந்து பேசுகையில் தன் மனைவியை தாக்கியது அவர்தான் என்று தெரிகிறது. அவரை அடைத்துவைத்துவிட்டு, உன் மனைவி, மகள், மருமகனை அழைத்திருக்கிறேன். அவர்கள் வரட்டும் உன் சுயரூபத்தை தெரிந்து கொள்ளட்டும் அது வரை காத்திரு என்று சொல்கிறான். அதன் பின் நடக்கும் உணர்ச்சிமயமான நிகழ்வுகள் வாவ்.. அட்டகாசம். கதை சொன்ன விதமும், க்ளைமேக்ஸில் நடக்கும் போராட்டங்கள், ஒரு சின்ன சபலத்தினால் பாதிப்படையப் போகும்  தன் குடும்பத்தை நினைத்து அவர் வயதையும் மீறி மன்னிப்பு கேட்குமிடம். அதன் பின் எமெட் எடுக்கும் முடிவு எல்லாமே க்ளாஸ்..  எமெட்டும், ராணாவும் நடிக்கும் நாடகத்தின் நிகழ்வுகளின் மூலம் வேறு ஒரு வர்ஷனை இணைத்திருப்பதும், இருவரது நடிப்பும்  அட்டகாசம். ஏன் விசாரணையெல்லாம் லிஸ்டுலேயே வரவில்லை என்பதை இப்படம் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
இளைஞன் காபி ஷாப்பில் காத்துக் கொண்டிருக்கிறான். இளைஞி கோபமாய் வருகிறாள். இருவருக்கிடையே ஆன முந்தைய நாள் சண்டையினால் ப்ரேக்கப் ஆகிவிடலாம் என்று அவள் முடிவெடுக்க, பேச ஆரம்பிக்கிறார்கள். இருவருக்கிடையே ஆன நெருக்கம், காதல், அதையெல்லாம் விட பொசசிவ்னஸ் வெளிப்படுகிறது. காதலை உயிர்ப்புடன் வைக்கும் இந்த பொஸஸிவ்னெஸ் பற்றி பேசி இணைகிறார்கள். நடித்திருக்கும் அரவிந்த், வைதேகி இருவரும் இயல்பாய் நடிக்க முயன்றிருக்கிறார்கள். அரவிந்த் பாலாஜியின் நல்ல விஷூவல்ஸ், அரவிந்த் ராஜகோபாலின் சில ஷார்ப் வசனங்கள் எல்லாம் அடங்கிய டெம்ப்ளேட்டான கதை தான் என்றாலும் ப்ரெசெண்ட் செய்த விதத்தில் அருண் டிவிஏஆர் ராகவ் ஸ்கோர் செய்கிறார்.  இருவரும் ப்ரேகப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்க, இளைஞனுக்கு மட்டும் கோபம், https://www.youtube.com/watch?v=CJeq4JfNJWc

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

No comments: