தரிசனம்
என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து "என்ன நீங்கள் .... உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க... நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க..." என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து "சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்... மேல வந்து படு..." என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது ப...