Posts

கொத்து பரோட்டா- 30/05/11

Image
நேற்று முன் தினம் கல்யாண மாலை மோகனுக்கு அறுபதாம் கல்யாணம்.  ஊருக்கே கல்யாணம் செய்து வைப்பவருக்கு கல்யாணம் எனும் போது உற்சாகம் கரை புரண்டது ஒன்றும் அதிசயமில்லை. பல பட்டிமன்ற பேச்சாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள்  வந்திருந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் அவரைப் பற்றி அவரது குடும்பத்தினரின் பகிர்தல் வீடியோ க்யூட் அண்ட் ஸ்வீட். நல்ல கம்பைளிங் மீரா நாகராஜன். எனக்கும் மிக நெகிழ்வாக இருந்தது. என் அப்பாவின் அறுபதாம் கல்யாணம் ஞாபகம் வந்தது. நெடுநாளைக்கு பிறகு நான் கிட்டத்தட்ட  அரை நாளுக்கு மேல் நிகழ்வில் கலந்து கொண்டு மோகன் தம்பதியரின்  ஆசியை பெற்று வந்தேன். கல்யாண மாலை மோகன் என் சித்தப்பா. #############################

குறும்படம் – மிட்டாய் வீடு

Image
இப்படமும் ஏற்கனவே கொத்து பரோட்டாவில் அறிமுகப்படுத்தியதுதான். நாளைய இயக்குனர் முதல் பகுதியில் பைனலில் கலந்து கொண்ட படம். பாலாஜியிடம் ஒரு ப்ள்ஸ் என்னவென்றால்  அவரின் திரைக்கதைகள் பெரும்பாலும் கொஞ்சம் க்ளாஸாக, நகைச்சுவை ஊடுருவியபடி இருக்கும் அதில் இப்படமும் தவறவில்லை. அதற்கு அந்த ஓப்பனிங் சீனே சாட்சி. அருமையான கான்செப்ட். க்யூட் எண்ட். நிச்சயம் எல்லோரும் பார்த்து என்ஜாய் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

எத்தன்

Image
நிதிகளின் ஆக்கிரமிப்பிலிருந்ததாய் சொல்லப்பட்ட காலத்தில் தனியொரு படமாய் வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி தயாரிப்பாளரிடமிருந்து மற்றொரு படம். போன வாரமே ரிலீஸாக இருந்தது சுமார் 80 லட்சத்திற்கும் மேலாய் டிபிசிட் காரணமாய் ரிலிஸாகாமல் இந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்கிற படம். டிபிசிட் என்றால் என்ன என்பவர்களுக்கு சினிமா வியாபாரம் நூலை படிக்குமாறு சொல்லிக் கொள்கிறேன். (விளம்பரம்)

ஃபாதர் கேரக்டர்

Image
”ஹலோ.. சங்கர்நாராயணன் சாருங்களா?” “ஆமாம்” “.. ப்ரொடக்‌ஷன் மேனேஜர் பேசுறேன். டைரக்டர் சார் தான் நம்பர் கொடுத்தாரு” “சொல்லுங்க”

404- அமானுஷ்யங்களின் தேடல்

Image
இந்தி திரையுலகம் பீடு நடைப் போட்டு போய்க் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்ய வந்துள்ள படம்.பிரவல் ராமன் இயக்கியுள்ள படம். இவரின் முந்தைய படங்களான தர்னா மனா ஹே, காயப், போன்ற படங்கள் கொடுக்காத ஒரு தாக்கத்தை இப்படம் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Veera

Image
தெலுங்கு திரையுலகில் இந்த சம்மருக்கு வந்த பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் அமையவில்லை. ஜுனியர் என்.டி.ஆரின் சக்தி,  ராணாவின் நீ நா ராக்‌ஷஷி, என்று ஊத்தி மூடிக் கொள்ள, நாக சைதன்யாவின் 100% லவ் மட்டுமே சூப்பர்ஹிட். அப்படி வெளிவரும் பெரிய பட்ஜெட் பட வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வீரா. மிரபாகாயின் வெற்றியும், புதிதாய் மாஸ் மஹாராஜா என்ற பட்டத்துடன் அவதரித்திருக்கும் ரவிதேஜாவின் படம் என்பது மேலும் ஆர்வத்தை தூண்டியிருந்தது.

சாப்பாட்டுக்கடை- அக்பர் மெஸ்

Image
அக்பர் மெஸ் என்றதும் ஏதோ தலைவாழை இலைப் போட்டு மதிய உணவு  போடும் உணவகம் என்று நினைத்து விடாதீர்கள். அக்பர் மெஸ் என்பது ஒரு பிரியாணிக் கடை. சென்னை செண்ட்ரலிலிருந்து வந்தால் மாநகராட்சி கட்டிடத்திற்கு வலது பக்கமாய் திரும்பினால் பெரியமேட்டிக்கு போகும். அங்கே நேரு ஸ்டேடியத்திற்கு எதிரே இருக்கும் மசூதிக்கு அருகில் ஒரு சிக்னலிருக்கும். அங்கே இடது பக்கமாய் திரும்பினால் இரண்டாவது இடது தெருவின் உள்ளே நுழைந்தாலே சும்மா வாசனைப் மூக்கைத் துளைக்கும்

கொத்து பரோட்டா-23/05/11

Image
புதிய தலைமை செயலகத்தை ஏன் பயன்படுத்தவில்லை என்று ஒரு விளக்கத்தை ஜெ அளித்துள்ளார். தூரத்திலிருந்து பார்க்கும் போது ஏதோ அவங்களுக்கு சரிபடலைப் போலருக்குன்னு நினைக்கிறாப்புல இருந்தாலும். உள்குத்தாய் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று ட்ராபிக் ப்ரச்சனை.  எதிர்காலத்தில் அங்கு பல பாலங்கள் வரவிருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் நிச்சயம் ஏற்படும் என்றும், அது மட்டுமில்லாமல் எதிரே இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் வியாபார ஸ்தலமான ரிச்சிதெரு வியாபாரிகளுக்கு ப்ரச்சனையாக இருக்கிறது என்றும், இன்னும் பல இடங்களில் லிப்ட் கூட சரி வர பிக்ஸ் செய்யாமல் இருப்பதாகவும். இரண்டாம் கட்ட கட்டுமானம் முடிந்தால்தான் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றும், இங்கு தலைமைசெயலகத்தை மாற்றியதால் சுமார் 30 கோடி பணம் வேஸ்ட்டாகியிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் எங்குமே இரண்டாவது கட்டகட்டுமானம் முடிந்தவுடன் தான் அங்கு மாறிக் கொள்வதாய் சொல்லவேயில்லை. இரண்டு கிலோமீட்டர் தூரம் கோப்புகளை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் வருவதால் மக்கள் பணி கெட்டுப் போகும் என்று சொல்லியிருப்பது சரியே.. ஆனால் கட்டி...

குறும்படம்- போஸ்டர்

Image
கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்ட இப்படம். அவ்வாரத்திய சிறந்த படமாய் அமைந்தது. அது மட்டுமில்லாமல் நான் பின்னணி குரல் கொடுத்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு சிறந்த நடிகர் விருதும் கொடுத்தார்கள். உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

கண்டேன்

Image
பிரபுதேவாவின் உதவியாளர் ஏ.சி.முகில் இயக்கியுள்ள முதல் படம். போஸ்டரில் சாந்தனு, ஹீரோயின் படத்துடன் எல்லாவற்றிலும் சந்தானத்தின் படத்தை போட்டிருந்தார்கள். முழுக்க, முழுக்க சந்தானத்தை நம்பியே வெளி வந்திருக்கும் படம் என்று தெரிந்தது. தாத்தா கிராமத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்து கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்ட, அவரிடம் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாய் சொல்லிவிடுகிறார் சாந்தனு.  முப்பது நாளுக்குள் காதலியை கூட்டி வரவில்லையென்றால் தான் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் காதலியை தேடி அலைகிறார் சாந்தனு. ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கிய சாந்தனு அவளை இம்ப்ரஸ் செய்ய, குருடன் என்று பொய் சொல்லி காதலிக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கு தெரிந்து விடுகிறது. பின்பு காலில் விழுந்து எல்லாம் இழந்த காதலை பெற, கல்யாணம் எல்லாம் நிச்சயமாகிவிடுகிற நேரத்தில் ஒரு சண்டையில் நிஜமாகவே கண் போய்விடுகிறது. அப்புறம் என்ன ஆனது என்று தியேட்டரில் போய் கண்டு கொள்ளுங்கள். படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து ஏற்கனவே மூன்னூறு முறைக்கு மேல் தமிழ் சினிமாவில் பார்த்த காட்சிகளாய்...