தொட்டால் தொடரும்
ஜனவரி23 ஆம் தேதி முதல் தொட்டால் தொடரும் தமிழகம், கர்நாடகம், கேரளா, மற்றும் சிங்கப்பூர், மலேசியாவில் வெளியாகிறது. யாருடா மச்சான்?” பாடல் எக்ஸ்க்ளூசிவாய் இசையருவில் தொடர்ந்து ஒளிபரப்பாகி படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேரன் மற்றும் திரையுலக நண்பர்களின் கருத்தோடு வெளியான வீடியோக்கள், சில சினிமா மற்றும் நண்பர்கள் அல்லாதவர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டு ரெண்டொரு நாட்களுக்கு பிறகு அவர்களின் எண்ணத்தில் என்ன உள்ளதோ அப்படியே அதை ஒரு செல்பி வீடியோவாக அனுப்பச் சொன்னேன். நல்ல வரவேற்பு அவர்களிடத்திருந்து. அதே வரவேற்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்களாகிய உங்களிடமிருந்தும் வருமென்று நம்புகிறேன். கிட்டத்தட்ட கமல்ஹாசனின் வசனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். :)
ரிலீஸ் டேட்டுடனான போஸ்டரை பார்ப்பது என்பது குழந்தை பிறந்தவுடன் கையில் ஏந்தும் உணர்வுக்கு ஒப்பானது. அதுவும் முதல் படம் எனும் போது அது கொடுக்கும் உற்சாகமே தனிதான். புத்தக கண்காட்சியில் யாரைப் பார்த்தாலும் அவர்களின் முதல் கேள்வியே படத்தின் பாடலைப் பற்றியும், என் பட அனுபவத்தைப் பற்றியும், எப்போது வெளிவருமென்கிற கேள்வியும்தான். முக்கியமாய் திரையுலக நண்பர்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பார்க்கும் போது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. தொட்டால் தொடரும் படத்தின் தேதியோடு வெளியான போஸ்டர் டிசைன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Comments
படம் கண்டிப்பாக வெற்றிப்பெறும்
Cheers
Raja
சார்
Congratulations and good luck.
I think you have many viewers outside of India, and it will be good and provide us all an opportunity to watch your movie, if you could release the same on You tube or other such sites, for a nominal fee. You may have noticed that the movie "The Interview" was released in such a fashion,and they got good response I learn.
Any chances of thinking along these lines?
Otherwise we do not have an opportunity since it wont be on theaters here in US in many states.
thx
தொடர் வெற்றி காண
நெஞ்சார்த்த நல் வாழ்த்துக்கள்.
வணக்கம்!
"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)