Thottal Thodarum

Mar 7, 2016

கொத்து பரோட்டா -07/03/16

ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்திப் பார்க்கலாம் என்ற நடத்திய போது வந்த ரிசல்ட்டுகள் குழப்பமாய் இருந்தாலும் வேறொரு விஷயத்தை தெளிவாக சொல்கிறது. ட்விட்டர் ஓட்டெடுப்பில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம்தான் இருக்கிறது என்பது போல வருகிறது. பேஸ்புக்கில் அதெல்லாம் வரவே வராது என்கிறார்கள். நடுநிலை வாதிகள் என்ற க்ரூப்பே காணவில்லை. கொஞ்ச மாதத்திற்கு முன் சகாயம் தான் முதல்வர் என்று ஒரு க்ரூப்பும், ஏன் கெஜ்ஜரிவாலை தமிழ் நாட்டு முதலமைச்சராக்கக் கூடாது என்று ஒரு க்ரூப்பும் பேசிக் கொண்டிருக்க, ம.ந.கூ என்ற ஒன்றைப் பற்றி ஓட்டெடுத்தால் ஒட்டெடுப்பை கூட சீந்த மாட்டேன் என்கிறார்கள். சும்மா போடுற ஓட்டுக்கே இப்படியென்றால் நிஜ ஓட்டெடுப்பில் என்னவாகுமென்று புரிந்தது. மக்களைப் பொறுத்தவரை ஒருத்தரையே தொடர்ந்து ஆளவிடுவது இல்லை என்ற முடிவில் இருப்பதாலும், இவர்கள் ரெண்டு பேரைத் தவிர வேறொரு க்ரூப் ஸ்ட்ராங்காக வரவில்லை என்பது தான் உண்மை நிலை. எலக்‌ஷன் தேதி அறிவிப்புக்கு ரெண்டொரு நாள் முன்பு கட்சி ஆரம்பித்த அப்துல் கலாம் ஆலோசகரின் கட்சியை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இதன் நடுவில் சீமான் வேறு கம்யூனிஸ்டுகளிடம் உங்களை விட ஓட்டு ஜாஸ்தி வாங்கலைன்னா கம்யூனிஸ்ட் கட்சியில சேர்ந்திடுறேனு சொல்லிட்டே உங்களுக்கு கொள்கையில்லை, போய்யா லூசு என்று நட்ட நடு வீட்டு டீவியில் கத்துகிறார். அடப் போங்கடா..நீங்களும் உங்க அரசியலும்னு இருக்குறது ஒண்ணியும் தப்பில்லை போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
பிச்சைக்காரன் என்னைக்குமே பணக்காரன் என்பதைத்தான் அப்படத்தின் வெற்றி காட்டுகிறது ‪#‎தத்துவம்டா‬

Though it started like routine period love story..time goes.. started praying for Kanchanamala ‪#‎Ennunintemoideen

லேண்ட்லைன்லேர்ந்து ஃபீரி கால் இருக்கேன்னு யாரை செல்லுல கூப்பிட்டாலும் 
எடுக்கவே மாட்டேங்குறாங்க.. அதான் ஃபீரியா கொடுத்திருக்கான் போல

பிச்சைக்காரனில் ஹீரோவே விஜய் ஆண்டனியின் அம்மா தான். வாழ்த்துக்கள் @dramanujam Dheepa Ramanujam

ம.ந.கூ வேலைக்காகுமா?
1. ஆகும் 2. ஆகாது 3. சொல்ல முடியாது 4. ஹி..ஹி

அப்பாடி எலக்ஷன் ரிசல்ட் வரைக்கும் அம்மாவின் சாதனை ரீலை ஒட்ட மாட்டாங்க வாழ்க ‪#‎Election2016‬

கலைஞரை முதலமைச்சராய் ஏற்பதை விட ஸ்டாலினை ஏற்க சில நடு நிலை ஓட்டர்கள் தயார் என்றே தோன்றுகிறது.

After a long time.. Wow.. Moving.. Engaging. And emotional film.‪#‎pichaikaaran‬

பா.ம.கவின் வளர்ச்சியை இந்த தேர்தல் நிர்ணையிக்குமா?
1. நிர்ணையிக்கும் 2. நிர்ணையிக்காது 3. சொல்ல முடியாது 4. எனக்கென்ன வந்திச்சு?

டேய்.. என்னை முதல்வராக்குறேன்னு சொல்லி கட்சிய விட்டே தூக்க வச்சிறாதீங்கடா உங்க கால்லேயும் விழுந்து கேட்டுக்குறேன். இப்படிக்கு பணிவுடன்

தேமுதிக கூட்டணி வந்தாலும் திமுக பெருபான்மை பெற்று ஆட்சி ...
1. அமைக்கும் 2. அமைக்காது  3. 50-50 4. யாரு வந்தா எனக்கென்ன?

எனக்கென்னவோ ப்ரேமத்துக்கு விருது கொடுத்திருந்தாத்தான் யோசிச்சிருக்கணும்னு தோணுது ‪#‎ஸ்டார்ட்மீசிக்‬

இங்கிலீஷ் பேப்பர்ல தேமுதிகவுக்கு 58 சீட்டுன்னு போடறாங்க.. தமிழ் பேப்பர்ல ஸ்டாலின் இன்னமும் வந்தா நல்லதுங்குறாரு.. வாட் எ பத்திரிக்கை ‪#‎dtnextd‬

நம்மளை ஓட்டுறாய்ங்களா..? பாராட்டுறாய்ங்களானு கூட புரியாம அரசியல் கட்சி ஆட்கள் பதில் சொல்றதும், கேள்வி கேட்குறதையும் நினைச்சா..‪#‎மிடில‬

எது எப்படியோ.. தனியா நிக்கறேன்னு சொன்னதுக்கு அப்புறம் டாக்டர் அய்யா மட்டும்தான் ஆளும் அரசை தொடர்ந்து விமர்சனம் செய்யுறாரு ‪#‎இப்பசந்தோஷமாய்யா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Neerja
1986ல் பான் ஆம் விமானத்தை லிபியன் டெரரிஸ்ட் கும்பல் ஒன்று கராச்சிக்கு கடத்திச் சென்றுவிட, அவ்விமான ஏர் ஹோஸ்டஸான நீரஜா எப்படி காக்பிட்டிலிருந்த விமானிகளுக்கு விமானம் ஹைஜேக் தகவலைச் சொல்லி, அவர்களை காக்பிட்டிலிருந்து விடுவித்து, பல மணி நேர போராட்டங்களுக்கு பிறகு, எப்படி தன் பயணிகளை வெளியேற உதவி தன் உயிரை விட்டாள். இந்த உண்மை சம்பவத்தை பரபர திரில்லராய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம் மாத்வானி. நீரஜாவாக சோனம் கபூர். ஆரம்பத்தில் கொஞ்சம் குருவி தலை பனங்காயோ என்று நினைத்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் சந்தோஷ கொண்டாட்ட பெண், திருமண வாழ்க்கையில் சோகம் கொண்ட பெண், தன் வேலையை தன் லட்சியத்தை அடைய போராடும் பெண், மீண்டும் துளிர்க்கும் காதலை வெளிப்படுத்த நேரம் பார்க்கும் பெண் என பல வித உணர்வுகளை மிக அழகாய் வெளிப்படுத்தி இறுதிக் காட்சியில் நம்மை சோகத்தில் ஆழ்த்துக்கிறார். சபனா ஆஸ்மி எதற்கு இந்த அம்மா கேரக்டருக்கு என்று யோசித்த போது க்ளைமேக்ஸில் அதற்கான பதிலை அளித்துவிடுகிறார். செம்ம பர்பாமென்ஸ். பயோகிராபிக்களை படமாக்கும் பேஷன் இந்தி சினிமாவில் தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படத்தின் வெற்றி மேலும் பல சுவாரஸ்ய திரைப்படங்களை நமக்கு அளிக்கும் என்பது நிச்சயம்.
#@@@@@@@@@@@@@@@@
Kshanam
அமெரிக்க குடிமகனான அத்விக்கு அவனுடய முன்னாள் காதலி போன் செய்கிறாள். தான் ஒரு பிரச்சனையில் இருப்பதாகவும் அவனால் தான் உதவி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைக்க, இந்தியா வருகிறான். அவனது முன்னாள் காதலி தன் பெண் குழந்தை ரியாவை யாரோ கடத்தி விட்டார்கள் என்றும், அவளை தேடி தான் நொந்து போய்விட்டதாகவும், சொல்ல, சாதாரண மேட்டர் தானே என்று அவளுடன் தேட ஆரம்பிக்கிறான். ஆனால் போகப் போக, ரியா என்கிற பெண் குழந்தையே அவளுக்கு இல்லை என்பது போன்ற ருதுக்கள் வெளிப்பட, ஒரு கட்டத்தில் அவளிடமே அப்படி ஒரு குழந்தையில்லை என்று சொல்ல, மனம் தளர்ந்த அவனது காதலி தற்கொலை செய்து கொள்கிறாள். அப்போது அத்விக்கு கிடைக்கும் ஒரு சின்ன க்ளூ கிடைக்கிறது. ஏன் அவன் காதலி அவனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தாள்?. நிஜமாகவே ரியா எனும் பெண் குழந்தைக்கு அவள் தாயா? சம்மந்தப்பட்ட ஆட்கள் ஏன் கொல்லப் படுகிறார்கள்? என பல ட்விஸ்ட் அண்ட் டர்ன் கேள்விகளுக்கு விறுவிறு, பரபர திரைக்கதையில் பதிலளித்திருக்கிறார்கள். அத்வியின் நடிப்பு, காதல் கதையை முன் பின் சொன்ன விதம், அடுத்தடுத்த ட்விஸ்டுகள், அதை முடிச்சவிழ்த்த விதம் என எங்கேஜிங்காகவும் சொல்லியிருக்கிறார்கள். ஜிகினா செட்டுகளும், க்ளைமேக்ஸுக்கு முன்பு ஒரு குத்துப் பாட்டுமாய் போய்க் கொண்டிருக்கும் தெலுங்கு பட உலகில் இம்மாதிரியான பட்ங்களின் வெற்றி பெரும் நம்பிக்கையை கொடுக்கும் என்பது நிச்சயம் பிவிபி போன்ற நிறுவனங்கள் இம்மாதிரியான படங்களுக்கு கொடுக்கும் ஆதரவு பெரிய ப்ளஸ். டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
பிச்சைக்காரன்
விஜய் ஆண்டனியின் நான்காவது படம். முந்தைய இந்தியா பாகிஸ்தான் ஹாட்ரிக்கை தள்ளிப்போட்டதற்கு பின் வரும் படம். இயக்குனர் சசியின் 555க்கு பிறகு வரும் படம். ட்ரைலரும், படம் வெளிவருவதற்கு முன்பு வெளியிட்ட குட்டி ப்ரோமோ படமும் ஹைஃப்பை ஏற்றியது. பெரும் கோடீஸ்வரன் தன் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பிச்சைக்காரனாக வாழ வேண்டும். அப்படி வாழும் போது எந்தவிதத்திலும் தான் யார் என்று வெளிப்படுத்தக்கூடாது என்ற கட்டளையோடு தாயின் உயிருக்காக பிச்சைக்காரனாய் வாழும் விஜய் ஆண்டனியின் கதை. மனிதர் தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து அதற்கேற்றாப் போலான ஸ்கிரிப்ட்டை தெரிந்தெடுப்பதில் வல்லவராய் இருக்கிறார்.  அம்மா செண்டிமெண்ட். ஏன் கிட்டத்தட்ட அம்மா தீபா ராமானுஜம் கேரக்டர் தான் படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம். பெரியப்பாவின் துரோகம் என கொஞ்சம் தப்பினாலும் இதெல்லாம் டிவி சீரியல் படம்பா.. என்று சொல்லக் கூடிய கதை. சசி தன் திறமையான திரைக்கதையாலும், வசனத்தாலும், இயல்பான காமெடியினாலும், நம் மனதை கொள்ளை கொள்கிறார். குறிப்பாய் பிச்சைக்காரர்கள் குழு, நேத்து நான் வண்டி தள்ளிட்டு வந்தேன் இன்னைக்கு அவன் வண்டி தள்ளிட்டு வர்றான் அதையே கவனிக்கலை என கலாய்க்கும் பிச்சைக்காரன், சிரிப்பை அடக்க மாட்டாமல் சிரிக்கும் சந்திரபாபு டிசைன் நடிகர். கொஞ்சம் டெம்ப்ளேட்டான, தேவையில்லாத வில்லன் கும்பல்கள், ஓவர் செண்டிமெண்ட் போன்ற காட்சிகள் ஆங்காங்கே வந்தாலும் படம் விட்டு வெளி வரும் போது ரொம்ப நாள் கழித்து ஒரு மாதிரியான கொஞ்சம் மசாலாத்தனமான ஃபீல் குட் படம் பார்த்ததை மறுக்க முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@
போக்கிரி ராஜா
ரொம்ப நாள் கழித்து வரும் ஜீவாவின் 25வது படம். உடன் சிபியின் வில்லத்தனமும் சேர, படம் அதிர வைக்கப்போகிறது என்று எதிர்பார்த்தோமனால், ஜீவாவிற்கு கொட்டாவி விடும் வியாதி என காமெடியாய் போகிறது. சரி சீரியசாய் காமெடி பண்ணப் போகிறார்கள் என்றால், திடீரென, வில்லன் ஜஸ்ட் லைக்தட் பைத்தியக்காரப் பெண்ணையெல்லாம் கொன்றுவிட்டு, கேஸுவலாய் எஸ்ஸாகிற அளவிற்கு டெரர் என்கிறார்கள். ரோட்டில் நம்பர் ஒன் போகும் ஆட்கள் மீது தண்ணீர் வண்டியிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் விஷயத்தை அப்படியே ஸ்வாக செய்து ஜீவா, ஹன்சிகா காதல் ட்ராக்காய் மாற்றி கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் ஏதோ முன்னோர் வாயாலேயே பலூன் ஊதுவதைப் போல படையையே தூக்கி அடித்தவன் என ஜீவாவின் முப்பாட்டன் கதையை சொல்லி, மகா மொக்கையான சிஜியில் ஒரு சீரியஸ் கதை சொல்கிறார்கள். தெலுங்கு பட பாணியில் வில்லன் திடீரென காமெடி பண்ணுகிறார். மறுபடியும் சீரியஸாகிறார். க்ளைமேக்ஸில் காமெடி, காமெடி என்று ஏதோ பண்ணுகிறார்கள். சிபியும், ஜீவாவுக்கும் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ennu Ninte Moideen‬
காஞ்சனமாலா எனும் இந்துப் பெண்ணிற்கும் அவளுடய அப்பாவின் முஸ்லிம் சிநேகிதரின் பைனான மொய்தீனுக்குமிடையே ஆன காதல் கதை. ஆரம்பித்த மாத்திரத்தில் டெம்ப்ளேட்டான கொஞ்சம் விக் வைத்த 1950களின் காலக் கட்டத்தில் சொல்லப்படும் காதல் கதையாகத்தான் தெரிந்தது. குடும்பத்தை எதிர்த்து வெளியே ஓடிப் போகாமல் காத்திருப்போம் என ரெண்டு பேரும் காஞ்சன மாலா வீட்டிலேயே தன் எதிர்ப்பை காட்டிக் கொண்டு வாழ, வீட்டை விட்டு வெளியேறி வாழ்கிறான் மொய்தீன். வருடங்கள் கழிகிறது. காஞ்சனமாலாவின் அக்காமார்கள், தங்கைமார்களுக்கெல்லாம் கூட கல்யாணம் ஆகி குழந்தை குட்டியாகிவிட, இனிமேல் யாருக்கு காத்திருக்கணும் என்று கேட்கிறான் மொய்தீன். சரி போயிடலாம் நாளைக்கு எனும் போது, காஞ்சனமாலாவின் அண்ணன் மரிக்கிறார். அடுத்த முறை கிளம்பலாமென்று முடிவெடுக்கும் போது, சொந்த மகனை அப்பாவே கத்தியால் குத்தி கொல்ல முயற்சிக்கிறார். எல்லாம் முடிந்து வெளிநாட்டில் போய் செட்டிலாகலாம் எனும் போது விதி மொய்தீனை படகு விபத்து மூலமாய் காவு வாங்கிக் கொள்ள, காஞ்சனமாலா மொய்தீனின் நினைவாக, அவனது வீட்டில் விதவையாய் வாழ்கிறாள். 1950களின் கதை. சீரியல் காலத்துக் கதை. ஆனால் பார்வதி மேனனும், பிரிதிவிராஜும், அவர் அப்பாவாக நடித்தவரும், பின்னணியிசையும், எப்ப வேண்டுமானாலும் சரசரவென மழைக் கொட்டும் லொக்கேஷனும், மழையின் ஈரமாய் மனதை கவ்விக் கொள்ளூம் சோகமாய் ஒளிப்பதிவு. மலையாளிகளின் வாழ்வை மிக இயல்பாய் ஆக்கிரமித்துக் கொள்ளூம் அரசியல் அதன் பின்னணி என அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். படம் பார்க்க ஆரம்பித்த போது இருந்த அலட்சியம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து காஞ்சனமாலாவின் நல்வாழ்வுக்காக வேண்டுமளவுக்கு மாறிவிட்டது படத்தி வெற்றி. நிச்சயமாய் இம்மாதிரி படமெல்லாம் தமிழில் செய்கிறேன் பேர்விழி என யாரும் முயற்சித்துவிட வேண்டாம். சார்லியை தமிழில் எடுக்குறாங்களாம். என்னத்த சொல்ல. என்ட குருவாயூரப்ப..
 @@@@@@@@@@@@@@@@@@
வருடக் கணக்காய் கொத்து பரோட்டாவில் அடல்ட்கார்னர் எழுதி வருகிறேன். ஒரு வாரம் அது இல்லாமல் பரோட்டா போடலாமென்று சென்ற வாரம் எழுதவில்லை. தமிழ் படைப்புலகிலிருந்து ஆகச் சிறந்த கண்டங்கள் மெயிலிலும், போனிலும், நேரிலும் என்ன அண்ணாத்தே சரக்கு தீந்திருச்சா? என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவையனைத்து இணையத்து சரக்கே.. இருந்தாலும் நானே கடைக்குப் போய் பொறுக்கி எடுப்பதால் .. ஹி..ஹி.. அதனால்... இதோ உங்கள்
அடல்ட் கார்னர்
“A doctor and his wife were having a big argument at breakfast. He shouted at her, "You aren't so good in bed either!" then stormed off to work. By mid-morning, he decided he'd better make amends and called home. "What took you so long to answer?" he asked. "I was in bed," she replied. "What were you doing in bed this late?" "Getting a second opinion.” 
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

குரங்குபெடல் said...

சைதாபேட்டையில் கூட ஒரு கடையில முட்டை போடாம கொத்து பரோட்டா போட்டாங்க . . .

ஏன்னு கேட்டதுக்கு கேபிள் சங்கர் அடல்ட் ஜோக் போடாததுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிரொம்னு அந்த

மாஸ்டர் சொன்னாரு .. . .