Thottal Thodarum

Jun 27, 2016

கொத்து பரோட்டா - 27/06/16 - இயக்குனன் - உட்தா பஞ்சாப் - மெட்ரோ - இண்டிபெண்டெண்ட்ஸ் டே 2 - அடல்ட் கார்னர்

இண்டிபெண்டென்ஸ் டே 2
போன முறை உலகத்தை அழிக்க வந்த ஏலியன்கள். இருபது வருஷத்துக்கு பொறவு கிட்டத்தட்ட அப்போ தப்ப்பிச்ச ராணியோட தலைமையில் மீண்டும் உலகை அதுவும் குறிப்பா அமெரிக்காவை அழிக்க வந்திருக்க, கோமாவிலிருந்து எழுந்த பழைய அமெரிக்க ப்ரெசிடெண்ட்.. வில்ஸ்மித் போன்ற ஒருவர்.. ஏசியன் மார்கெட்டுக்காக  ஒரு சைனீஸ் பெண், எதிர்காலத்தை கணித்தது போல அமெரிக்கா பெண் ப்ரெசிடெண்ட். என எல்லாம் மசாலாக்களையும் ஒன்றாய் அரைத்து, அத்தனாம் பெரிய ஏலியன் தட்டுக்குள், நான்கைந்து ப்ளைட்டை விட்டு, அவர்களது ப்ளைட்டையே திருடி, ராணியோட ப்ளைட்டிலேர்ந்து அதை வெளிய வர வைச்சு, சுட்டு கொன்னுடுறாங்க. ங்கொய்யால...முடியலைடா.. வலிக்குது. ராணிய வெளிய ஓடி வர வச்சி கொல்லுறதுக்கு எதுக்குடா, பில்டப்பு, ப்ளைட்டு, 3டி, அடுத்த பார்ட் எதையாச்சும் எடுத்து வுட்டீங்க. அவ்வளவுதான் நான் எழுச்சி அடைந்திருவேன்.
@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
தினத்தந்தி, போன்ற தமிழ் பத்திரிக்கைகளைத் தவிர வேறெந்த ஆங்கில பத்திரிக்கைகளிலும்,, நான்கு பெண்கள் கொலையில் கணவன் தன் பெண்களை தகாத உறவுக்கு முயற்சித்ததாய் செய்தியேயில்லை

வரி ஏய்ப்பு செய்தால் 3 ஆண்டு ஜெயில் -ம்க்கும் ஜெயில் கட்டுறதுக்கு ஜெயில் கல்யாண் வரி வாங்க வேண்டியிருக்கும்

though little bit predictable towards the climax.. its riviting, excellent performance, and execution in ‪#‎uttapunjab‬

கடை மூடினதை விட 7 கோடி வருமானம் போச்சுங்கிறது தான் @Daily_Thanthi முக்கிய நியூஸா இருக்கு. விட்டத எப்படி பிடிக்கப் போகுதாம் அரசு?

அப்பா இருந்து பார்பதற்கும், இல்லாமல் பார்பதற்கும் ஆயிரம் வித்யாசங்கள், அனுபவங்கள் ‪#‎தவமாய்தவமிருந்து‬
#######################################
மெட்ரோ
இது வரை தமிழ் சினிமாவில் அவ்வளவாக சொல்லாத களம். செயின் ஸ்நேச்சிங். கொஞ்சம்  டீடெயிலாகவே சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பக் காட்சியில் குழந்தை அந்தரந்தில் பறந்து விழும் காட்சி, அதை படமாக்கிய விதம் எல்லாமே பதற வைக்கிறது. வயலண்டிக்கான செயல்களை ஹீரோ சிரீஷ் செய்தாலும், முகத்தில் அரை டன் லேக்டோஜன் வழிவதால் சுத்தமாய் எடுபட மாட்டேன்கிறது. தம்பியாய் நடித்தவரின் நடிப்பு மட்டும் ஓக்கே. பாபி சிம்ஹா இம்முறை ரஜினி போல நடிக்காமல் இயல்பாய் நடித்ததினாலேயே அட என்று சொல்ல வைக்க முயல்கிறார். அவர் ப்ரெண்டாய் வரும் கஞ்சா பார்ட்டி, அதன் செட்டப், என ஆர்ட் டைரக்டர் மூர்த்தியின் கைவண்ணம் தெரிகிறது. பட்.. பணம் சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்கள் இம்மாதிரியான கேங்கின் கீழ் வேலை செய்கிறார்கள் என்பதை அவ்வளவு நம்பத்தகுந்தாற்போல சொல்லப்படவில்லை. ஏனென்றால் நகை கொள்ளை, அடமானம் என்றால் அதன் பின்னால் இருட்டு சந்திற்குள் இருக்கும் மார்வாடி கும்பல் இன்றளவிற்கும் இருக்கிறார்கள். பெரும்பாலான நகை வாங்கி மாற்றும் இரண்டாம் நம்பர் பிசினெஸில் அவர்கள் தான் இன்றைக்கும் முதலாளிகள். தம்பிக்கும் பணத்தாசை, உல்லாசமாய் வாழ ஆசை செய்கிறார் ஆனால் அண்ணன் நேர்மையானவன். பத்திரிக்கையாளன். அம்மாவின் சாவிற்கு பழி வாங்குகிறேன் என தீவிரவாதிகளிடம் ட்ரெனிங் பெற்றது போல, கடத்துவது, பத்து பேரை போட்டு தாக்கிவிட்டு, டி.சி.பிக்கே பார்சல் அனுப்புவது எல்லாம் கொஞ்சம் ஓவர். பட். நல்ல மேக்கிங், அவ்வளவாக தொடாத களம், வசனங்கள், இயக்கம் எல்லாம் இருந்தும், நல்ல காஸ்டிங் படத்தை இன்னும் காப்பாற்றியிருக்கக் கூடும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உட்தா பஞ்சாப்
உட்தா என்றால் பறப்பது. போதையினால் பறக்கும் பஞ்சாப் என்று தலைப்பிட்டிருந்தாலும், அதை எங்கேயும் கொண்டாட்டமாய் காட்டாமல் மிக் ஆழுத்தமாய் அதன் தீவிரத்தை சொல்லியிருக்கும் படம். கொஞ்சம் பிசகியிருந்தாலும், டாக்குமெண்டரியாய் போயிருக்கும் அதை அற்புதமான நடிகர்கள், எழுத்து, மேக்கிங்கில் பொட்டில் அடிக்கும் படமாக்கியிருக்கிறார்கள். நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார் அலியா பட். எங்கேயும் துள்ளலான அலியா பட்டை தேடினால் கிடைக்கவே மாட்டார். அவ்வளவு தூரம் கேரக்டர் மேக்கோவர் செய்திருக்கிறார். அதே போல போதை பழக்கத்திற்கு அடிமையான பாடகராய் வரும் ஷாஹித் கபூர் செம்ம.. அவர் தான் எந்தளவுக்கு இளைஞர்களை போதையின் பால் திருப்பி விட்டிருக்கிறோம் என புரிந்து கொள்ளும் காட்சி அட்டகாசம். போதை பொருள் கடத்த உதவியாய் இருக்கும் போலீஸ்காரனின் தம்பியே போதைக்கு அடிமையாக, அதன் தீவிரம் புரிந்து போதை பொருட்களை ஒழிக்க நினைக்கும் டாக்டராய் வரும் கரீனாவுடன் இணைந்து ஜேம்ஸ்பாண்ட் வேலை செய்து, எலக்‌ஷன் கமிஷன் முன்பு ஆதாரங்களை வெளியிட முயற்சிக்கும் காட்சி, ஷாஹித், அலியாவை தேடி வர அவர் சொல்லும் ஒர் விளம்பரப்பட பேனர், டூவார்ட்ஸ் க்ளைமேக்ஸ்  நடக்கும் தொடர் கொலைகள் கொஞ்சம் சினிமாவாக இருந்தாலும் முழுக்க, முழுக்க, டீடெயிலான, பர்பெக்ட் படம். எங்கேயும் பொய்யில்லை அதனால் தான் எலக்‌ஷன் நடக்கவிருக்கும் பஞ்சாப் மாநிலத்தினரும், அதன் காரணமாய் பி.ஜேபியும் இதை சென்சார் மூலமாய் எதிர்க்க முனைந்ததன் காரணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இயக்குனன் - குறும்படம்
பெரும்பாலான குறும்படங்களில் முக்கிய கருவே, காதல், சரக்கு, காமெடி என்றாகிப் போன தற்போதைய குறும்படச் சூழலில் குறும்படங்களில் மட்டுமே தைரியமாய் கையாளப் பட வேண்டிய கதைகளை பெரும்பாலும் யாரும் எடுப்பதேயில்லை. ஏனென்றால் சினிமாவைப் பார்த்து குறும் சினிமா எடுத்து, விரைவில் அடுத்த கட்டமாய் பெரும் திரையில் நுழைய கிடைக்கும் டிக்கெட் என்றே இத்துறையை பெரும்பாலான இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இங்கே இயக்குனன் எனும் இந்த குறும்படம், பெரும்பாலும் குறும்படங்களில் மட்டுமே சத்தியப்படும் கதையை எடுத்திருக்கிறார்கள். திரைப்பட இயக்குனன் அவனின் கேரக்டர்களோடு ஒவ்வொரு படத்திலும் வாழ்வது இயல்பு. அதே கேரக்டர்களோடு, அவன் பேசினால், அக்கேரக்டர்கள் அவனின் அடுத்த கதைகளில் நுழைந்து விவாதித்தால், கிண்டல் செய்தால் எப்படியிருக்கும். சொல்லும் போது கொஞ்சம் குழப்பமாய் இருந்தாலும், அதை திரைக்கதை ஆக்கும் போது தெளிவாய் சொல்லியிருக்கிறார் மகேஷ்வரன். ஒரு மணி நேரக் குறும்படம். நடித்த நடிகர்களில் ஆரம்பித்து, டெக்னீஷினயன்கள் வரை திறம்பட உழைத்திருக்கிறார்கள். குறையாய் படத்தின் நீளமும், ஆங்காங்கே உபயோகப்படுத்தப்பட்ட திரைப்பட காட்சிகளையும் சொன்னாலும், முன்று நான்கு கேரக்டர்களுக்குள் ஆங்காங்கே வசனங்கள் மூலம் சிரிப்பை வரவழைத்து, சுவாரஸ்யமாய் நகரத்திய இயக்குனர் மகேஷ்வர பாண்டியனுக்கும்,  பாலோ அப் ஷாட்களில் திறமையாய் கையாண்ட ஒளிப்பதிவாளர் கோபி - மனோவுக்கும், பின்னணியிசையில் ரிட்ரோவாய் கலக்கிய சாந்தனுக்கும் வாழ்த்துக்கள்.

@@@@@@@@@@@@@@@@@@\
அடல்ட் கார்னர்
What is similarity between woman and mobile?\
They both are charged at night. 


Post a Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா செம.

Unknown said...

Iyakunan film is awesome and very good and neat script....