Thottal Thodarum

Feb 22, 2017

கொத்து பரோட்டா 2.0-14

கொத்து பரோட்டா -2.0-14
செல்வதெல்லாம் உண்மையை கலாய்த்து கலாய்த்தே அதற்கான டி.ஆர்.பியை ஏற்றிவிட்டிருக்க, தமிழ், தெலுங்கு, கன்னடமென எல்லாம் மொழிகளிலும், யாராவது மார்கெட் போன நடிகையை வைத்து இதோ போன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் மதிய நேர டி.ஆர்.பிக்கு செம்ம போட்டி. இதில் பங்கு பெரும் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நிலையில் கீழ் நிலையில் உள்ளோர். ஆரம்ப காலத்தில் நான் கூட ஆட்களை செட் செய்து எடுக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜீ டிவி அலுவலகத்துக்கு போன போதுதான் தெரிந்தது, மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்களாகவே முன் வந்து ரிஜிஸ்டர் செய்து கொண்டும், சம்பந்தபட்ட இரண்டு தரப்பும் சேனல் வாசலிலேயே சண்டைப் போட்டுக் கொள்வதையும் நேரில் பார்த்தேன். இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார விஷயமே அடல்டரி, செக்ஸ், ரெண்டு பொண்டாட்டி, மூணு புருஷன் என்பது போன்ற உறவு சிக்கல்கள் தான் பெரும்பாலும். எனக்கு பயமே இதைப் பார்க்கும் மக்களின் மனநிலையை பற்றித்தான். ஏற்கனவே எல்லாவிதமான நெகட்டிவ் விஷயங்களை டிவி சீரியலே நம் வீட்டு ஆண்/பெண் மனதில் அழுத்தமாய் ஏற்றி விடப்பட்டிருக்க, இன்னும் அழுத்தமாய் ஊர் உலகத்துல நடக்காதது ஒண்ணுமில்லை என்கிற எண்ணம் மேலோங்கி, எப்படி குடிப்பது எல்லா குடும்பங்களிலும் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதோ அது போல எல்லா சமூக குற்றங்களும் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிடுமே என்கிற பயம் கவ்விக் கொள்கிறது. இதை நடத்தும் நடிகைகளைப் பற்றி பேசிப் பிரயோஜனமில்லை. ஏனென்றால் அது அவர்களின் தொழில். பார்க்கும் மக்களைத்தான் சொல்ல வேண்டும்.  மக்கள் கொண்டாடாத எதுவும் டிவிக்கள் பிரயத்தனப்பட்டு கொடுக்கப் போவதில்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வருடம் வெள்ளத்தில் மூழ்கி தவித்த சென்னை இந்த வருடம் புயலில் சிக்கித் தவித்தது. வெள்ளத்தில் தப்பிய மரங்கள் எல்லாம் புயலில் அடியோடு வீழ்ந்தது. தொலைத் தொடர்பு என்பது பெயரளவில் மட்டுமே தொலைவாக இருந்த டெக்னாலஜி நிஜமாகவே மீண்டும் தொலைவாக ஆனது. தண்ணீரில் மூழ்கிக் கிடந்த நகரம் இந்த வருடம் அணைகளில் உள்ள நீர்மட்டத்தைப் பார்த்து வரும் கோடையில் குடத்தை தூக்கி அலைவதற்கு பதிலாய் புயலோ, வெள்ளமோ வந்தால் கூட பரவாயில்லை நாடாவோ, வரதாவோ வரட்டும் பார்க்கலாம் என்று மனதை தைரியப்படுத்தி எதிர் கொண்டிருந்தது.  நகரில் பசுமை என்பதற்கு பெயர் சொல்லும் இடங்களே இருந்தது. அத்துனை இடங்களும் வேரோடு பெயர்த்தெடுத்துப் போனது இந்த வரதா. சென்னையை புயல் கடந்து வருடங்களானதால் புதிய தலைமுறையினருக்கு செல்ஃபி ஆச்சர்யமாய் போனதும் ஒன்றும் அதிசயமில்லை.  ஊரே கந்தரகோளமாகியிருக்க, வழக்கம் போல மக்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்ய பழக்கப்பட்டிருந்தார்கள். அவர்களே கூடி உணவளித்தார்கள். மரங்களை வெட்டினார்கள். சென்ற வெள்ளத்தில் தரையடி நெட்வொர்க் எல்லாமே ஊறிப்போயிருக்க, சில நாட்களில் அப் ஆன ஓவர்ஹெட் ப்ராட்பேண்ட், கேபிள் டிவி நெட்வொர்க்குகள் எல்லாம் துண்டு துண்டாய் போய், செய்வதறியாது திணறிக் கொண்டிருக்க, ஓல்ட் இஸ் கோல்ட் என்பது போல லேண்ட்லைன்கள் உதவியாய் இருந்தது. மார்ச் வரை இலவசம் என்று எக்காளமிட்டிருந்த ஜியோ புயல் வந்த மதியம் முதல் ஊத்திக் கொண்டது. மற்ற நெட்வொர்க்குகள் கேட்கவே வேண்டாம்.  இத்தனை அவஸ்தகளையும் மீறி நாம் இழந்தது சென்னையின் பசுமையை. அதை மீட்டெடுக்க மீண்டும் நகருக்கு தேவையான மரங்களை மீண்டும் நடுவது. எதிர்பார்த்து ஏமாந்தது சென்னையின் குடிநீர் தேவைகளுக்கான அணைகளில் தண்ணீர் தேவைக்கு போதிய அளவில் சேராதது. ஆச்சர்யப்படுத்திய விஷயம் அரசு இயந்திரத்தை மிக லாவகமாய் சுழட்டி விட்ட மந்திரிகளும், அரசு அதிகாரிகளும். ஓயாமல் உணவளித்த அம்மா உணவகங்களும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

1 comment:

Unknown said...


Asking questions are in fact nice thing if you are not understanding anything fully, but this paragraph presents nice understanding even. yahoo mail login