Posts

முனி அடிச்சிருச்சு....

ஆமா.. முனிதான் அடிச்சிரூச்சு, முனி படம் சாயங்காலம் ஆனா பேய்க்கு பயப்படும் ஓருவனின் கதை. அப்படி பேய்க்கு பயப்படும் ஓருவன் அவர்தம் குடுப்பத்தோடு பேய் வசிக்கும் வீட்டிற்கு குடியேறுகிறார்கள், அங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. வழக்கமா ஹீரோவென்றால் எல்லாரையும் அடித்து உதைத்து, எதற்கும் பயப்படாதவனாய் இருப்பான் ஆனால் இதில் கதாநாயகன் ஆறு மணியானால் வெளியே போகப் பயப்படுகிறான்.ஆனால் லாஜிகில்லாமல் நேரே கதாநாயகியின் வீட்டிற்குப் போய் அவளின் பெற்றோர்களிடம் உங்கள் பெண்ணை காதலிப்பதாய் சொல்லி உடனே அவர்கள் எல்லாம் சம்மதிப்பதும், படு தமாஷ். பேயை காட்டும்முன் அதற்கான பில்டப்புகள் அமர்களம். பேயின் அட்டகாசங்களும், வீட்டிலேயே குடியிருக்கும் ஓரு குடும்பத்தில் பேய் பிடித்ததாக நடித்து கொண்டிருக்கும் பெண், குட்டி சாத்தான் போலிருக்கும் வாட்சுமேன், பின்பக்கத்தில் குடியிருக்கும் பெரிய பொட்டு கிழவி, என்று படத்தின் முதல் பாதி, படு சுவாரஸ்யம், பேயே வராமல் படு சுவாரஸ்யமாயிருந்த படம், பேய் வந்ததும், அத்தனை பில்டப்புகளூம் வடிந்து போய் வெறும் காத்தாய் போய்விட்டது தான் வருத்தம். அதிலும் பேயாய் வரும் ராஜ்கிரண் கேரக்டர் படு அ...

தரிசனம்

Image
என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து "என்ன நீங்கள் .... உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க... நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க..." என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து "சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்... மேல வந்து படு..." என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது ப...

டி.ஆருக்கு பயந்த விஜய்

டி.ஆருக்கு பயந்த விஜய் இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று விளம்பரபடுத்தப்பட்ட, டி.ஆரின் "வீராசாமி" பொங்கலுக்கு வரவில்லை .ஏன் என்று விசாரித்தபோது, வெளிப்பட்ட ரகசியம் இதுதான். அதாகப்பட்டது. டி.ஆரின் வீராசாமி... தன்னுடய போக்கிரி படத்துடன் வெளியானால் தன்னுடய படத்தின் வசூல் பாதிக்குமென்று கருதி தனிப்பட்ட முறையில் டி.ஆரிடம் கோரிக்கை வைத்து படத்தை தள்ளிப்போட வைத்துள்ளதாக தகவல். ஜோக்.. ஆப் த டவுன்

குறைந்த சினிமா கட்டணமும், கானல் நீரூம்...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள் வருகிற ஜனவரி மாதம் முதல் சென்னையில் உள்ள தீயேட்டர்களில் எல்லாம் ஜம்பது ரூபாய்க்கு படம் பார்க்கலாம்ன்னு பார்தா.. வழக்கப்படி கருணாநிதி அவர்கள் குழப்படிச்சிட்டாரூ.. போனவாரம் ஓண்ணு , இந்த வாரம் ஓரு ரூல்ஸ்ன்னு மாத்திட்டாரு. அதனால இனிமே நாம வழக்கப்படி அதே நூறு ரூபாய் கிட்ட கொடுத்து தான் படம் பார்கணும். சத்யம், மாயாஜால் போன்ற நல்ல முறையில் பராமரிக்கபடும் தியேட்டர்களுக்கு இந்த விலை கொடுத்தாலும் தகும், ஆனால் இந்த மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தினால். டூபாக்கூர் தியேட்டரான... ரோகிணி போன்ற காம்ளெக்ஸ் ஏற்கனவே அநியாயமாய் படம் பார்க்கும், பார்வையாளரூக்கு எந்த வசதியையும் செய்யாமல், ஏன் எல்லா தியேட்டரும் டிடிஎஸ்ஸூக்கு மாறிக் கொண்டிருக்க, சென்னையின் முக்கிய கலெக்ஷன் செண்டரான அந்த தியேட்டரில் நல்ல ஓளி, ஓலி அமைப்பு கிடையாது, சீட் பற்றி கேட்டகவே வேண்டாம்.. கருணாநிதி அவர்க்ள் போட்டிருக்கும் புதிய சட்டத்தினால் நிறைய சம்பாதிக்க போகிறவர்க்ள அரசு அதிகாரிகள்தான் எப்படியும் இவர்கள் காம்ளெக்ஸ் தியேட்டர் என்று சொல்லி புதிய விலையை வைக்க போகிறார்கள் அனால் வச்தியை பெருக்காமல் அந்த விலைய...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்

'கேபிள் சங்கரின்'சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா? அல்லது நடந்தது என்ன? வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ? எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...? பக்கங்கள்

அம்மன் கண் திறந்த கதை...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள் சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா? அல்லது நடந்தது என்ன? வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ? எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...?

டாஸ்மாக் சட்டங்கள்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: ஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது. அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா? என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை...இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காம...

தயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா?

தயாநிதிக்கு ஓரு நியாயம் , கலாநிதிக்கு ஓரு நியாயமா?போர்ப்ஸ் இதழ் நடத்திய.. இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களீன் பட்டியலில். நமது சன் டிவியின் தலைவர் டாப் 20வது இடத்தில் இருக்கிறார். ஹெ.சி.எல். சிவ்நாடார்.. 14வது இடத்தில் இருக்கிறார். ஓரு வகையில் கலாநிதிமாறனின் தனித்திறமையினாலும், அவரது தீவிர உழைப்பாலும் தான் இந்த அளவிற்கு அவர் முன்னேறியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அதிலும் அவரது சன் குழுமம் பங்கு மார்க்கெட்டில் நுழைந்தது முதல் ச்ன் தொலைக்காட்சி குழுமத்தின் 90 சதவிகித பங்கை வைத்திருக்கும் அவரின் சொத்தின் மதிப்பு எறியது ஓன்று ஆச்சர்யமில்லை.. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால்..எல்லா தமிழ் பத்திரிக்கைகளூம் உயர்திரு. தயாநிதிமாற்ன் இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மத்திய அமைச்சர்களில் இரண்டாவது இடத்தை பிடித்ததை ஹெட்லைனில் அறிவித்தவர்கள்.. ஏன் கலாநிதிமாறனின் இந்த சாதனையை மறைபதேன்..? இரண்டு பேர் செய்ததும் சாதனைதான் அதிலென்ன தயாநிதிக்கு ஓர் நியாயம்? கலாநிதிக்கு ஓரு நியாயம்>>> கேபிள் சங்கர்.. www.shortfilmindia.com www.classiindia.com

சுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள் மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..5 ஆங்... எங்க விட்டேன்.. ஆ நெல்சன் மாணிக்கம் ரோடுல போய் பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கிற அந்த அலுவலகத்துக்கு போனேன். மிக அமைதியா இருந்தது.. அங்க போனவுடனே அங்கிருந்த வாட்ச்மேன்.. (வாட்ச்மேனா?.. வேற என்ன பேர் அவருக்கு?} ஓரு சிலிப் கொடுத்து ஓரு தனி அறையில உட்காரவைத்தார். சில அரை மணிகளுக்கு பிறகு என்னுடய டர்ன் வந்த்தும், ஏதோ .. பிரதமர் அறைக்கு கூப்பிடற மாதிரி.. தனியா கிட்ட வந்து சார் அடுத்து நீங்க.. என்றார். வாட்ச்மேன்... அங்கே போனதும், அங்கிருந்தது பெண்ணிடம் எல்லாவற்றையும் சொன்னேன்.. அவள் மெதுவாக என்னை ஏறிட்டுப்பார்த்து " ஓகே... ஓரு லெட்டர் எழுதிக்கொடுங்க... அதுக்கப்புறம் தான் நாங்க உங்களூக்கு ப்ரிக்ளோசிங் அமொளண்ட் தருவோம்..என்றாள்..நான் சலித்துக் கொண்டே.. எழுதிக் கொடுக்க, அவள் எல்லாவற்றையும் பார்த்து வாங்கிட்டு, கம்ப்யூட்டரில் ஏதோ தட்டி கீழே குனிந்து, ஓரு ப்ரிண்ட் அவுட்டை எடுத்து.. இதோ இதில இருக்கிற அமொளண்ட கட்டிடுங்க.. " என்றவுடன்.. நான் என் பாக்கடினில் கையைவிட்டு பணத்தை எடுக்க முற்பட, அவள் ... சார்.. இங்க் பணம் கட...

சரண்டல்... பார்ட்..4

'கேபிள் சங்கரின்' பக்கங்கள் மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...4 ஆனா .. என்ன ஆனா... இந்த சர்வீஸெல்லாம் லோன் வாங்கிறவரைக்கும்தான், அதுக்கப்புறம், நடக்குறதே வேற...நான் என்னுடய காரின் அக்கவுண்டை க்ளோஸ் செய்யலாம்னு ஆரம்பிச்ச போதுதான் ப்ராப்ளமே.. முதல்ல, பேங்கோட கஸ்டமர் சர்வீஸ் நம்பரை காண்டாக்ட் செஞ்சதும், அது அந்த நம்பர்,,, இந்த நம்பர்ன்னு பல நம்பர்களை(அப்பப்பா... எவ்வளவு நம்பர்கள்) கேட்டு உள்ளிட்டு விட்டு நிஜக்குரலுக்காக காத்திருந்து, குரல் வந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு, என்னுடய அக்கவுண்டை முடிக்கணும்னா நான் எவ்வளவு கட்டணும்னு கேட்டதும், "சார்.. அது எங்களுக்கு தெரியாது... அதப்பத்தி நீங்க உங்க ப்ராஞ்ச காண்டாக்ட செய்யுங்கள்..உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமாண்னு..:" கேள்வி வேற... நம்ம கேட்டத தவிர எல்லா உதவியும் செய்ய த்யாராயிருக்கிற கால் சென்டர். சரி வேற வழியில்லைன்னு நாமளே பேங்குக்கு போவோம்னு கிள்ம்பினேன்.. ஏன்னா, ஓவ்வொரு நாளுக்கும் வட்டியா நம்ம பணம்தானே போகுது.... மிக அமைதியாக இருந்த்து அந்த பேங்க்.. உள்ளே மக்கள் நிறைய பேர் இருந்தாலும் அங்கி...