Posts

ஈசன்

Image
தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம் சசிகுமாரை. தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட படங்களின் வெற்றி அவருக்கு தந்த மகுடம் அது. அவர் இயக்கும்  இரண்டாவது படம் என்கிற போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது  ஒன்றும் ஆச்சர்யமில்லை.. அது தியேட்டர்களில் கூடியிருந்த கூட்டத்தை வைத்தே சொல்லிவிடலாம். இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, சசிகுமாரோ நடிக்காத படம். கிராமம் சார்ந்த படங்களிலிருந்து  விலகி நகரம் சார்ந்த கதைக்களனை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியே சென்னையின்  டிஸ்கோ பப்பிலிருந்து கிளம்பும் ஒரு பெண்ணை துரத்தி அவள் இறந்து போவதில் ஆரம்பிக்கிறது. முழுக்க, முழுக்க, ஹைஃபை பப் கலாச்சாரம் பழகும் இளைஞர்களை  சுற்றி நடக்கும் கதையாய் ஆரம்பித்து, அரசியல்வாதி, நேர்மையான ஆனால் எதுவும் செய்ய முடியாமல் கையாலாகமல் இருக்கும் போலீஸ், அரசியல்வாதியின் மகன், அரசியல் வாதியின் ஆதிக்க ஆக்ரமிப்புகள், அதற்கான கொலைகள், அரசு அதிகாரியின் அதிகாரம். அரசியல் வாதிகளை உருவாக்கும் பணம் கொழுத்த தொழிலதிபர். அவரின் மகள். அவளுக்கும் அரசியல் வாதி மகனுக்குமான காதல். காதலை அறுக்க த...

கொண்டாட்டங்களும்.. நண்பனின் துரோகமும்.

இதோ ஆரம்பித்துவிட்டது.. இனி தொடர்ந்து பல விழாக்கள் நடைபெற போகிறது. அதற்கு அச்சாரமாய் கொண்ட்டாட்டத்தோடு ஆரம்பித்தது சாருவின்  7 புத்தகங்களின் வெளியீடு. இம்முறை சற்றே பெரிய காமராஜ் அரங்கில். சாரு அரங்கை நிரப்ப அழைத்திருந்தார். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் சாருவை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் பிடிக்காதவர்கள் தான் அதிக அளவில் எனக்கு தெரிந்து ஹாலில் இருந்தார்கள். முதலில் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் போகப் போக நிறைவாகவே இருந்தது. முக்கால் வாசி இடம் நிரம்பியதே அதற்கு சாட்சி. ஆனால் மனுஷ்யபுத்ரன் ஏகத்துக்கும் வருத்தப்பட்டார். குப்பையாய் பாடும் சினிமா பாடல்களுக்கு நிறைய கூட்டமிருப்பதாய் சொன்னார்.. குப்பை எது கோமேதகம் எது என்பது அவரவர் தனிப்பட்ட பர்ஷப்ஷன் என்பது என் எண்ணம் ஏகப்பட்ட விருந்தினர்கள். ஏ.நடராசன், மதன், கனிமொழி, எஸ்.ரா, மிஷ்கின், ரவிக்குமார், நல்லி செட்டியார், இவர்களுடன் தமிழ்ச்சி தங்க பாண்டியன். நல்லி செட்டியார் மிகவும் நல்லவர். சாருவுக்கெல்லாம் படியளந்த அன்னதாதாவானதினால் அவர் பேச்சை பற்றி பெரிதாக சொல்ல ஏதுமில்லை. இருந்தாலும் அவர் சொன்ன ஜோக் மிக பெரிய...

Nagavalli

Image
சந்திரமுகியின் வெற்றிக்கு பின் பி.வாசு அதே கண்டெண்டை வைத்து கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து எடுத்த படம் ஆப்த மித்ரா..  மனுஷன் படம் வெளியாவதற்கு முன் இறந்துவிட.. படம் சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் நடித்த கடைசி படமாய் போனதால் ஹிட்டோ ஹிட்டென ஓடியது வரலாறு. அதே கதையை திரும்பவும் ரஜினிக்கு போட்டுக் காட்டி செகண்ட் பார்ட் சந்திரமுகி எடுக்கிறேன் என்று பிட்டை போட ரஜினி எஸ்கேப்பானது கடவுள் அருள். தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க வந்து 25வது வருடம் நடக்கும் இந்நாளில் சந்திரமுகி பேய் வாசு ரூபத்தில் பிடித்தது அவரது கெட்ட நேரமாய் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே சவுத் இந்தியாவிலேயே பெரிய ஹிட் படமான சந்திரமுகியை அதுவும் தெலுங்கில் கூட சூப்பர் ஹிட்டான சந்திரமுகியை நாகவல்லி என்கிற பெயரில் திரும்பவும் ரீமேக்கும் படத்தில் நடிப்பாரா..? பெரிய பணக்காரரான சரத்பாபுவின் வீட்டில் இரண்டு சாவு விழுந்துவிட, அதை பற்றி விவரம் தெரிய ஒரிஜினல் சந்திரமுகி சாமியார் இவர் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கெலலாம் காரணம் அவரது மூத்த மகள் கமலினி முகர்ஜி கொண்டு வந்த சந்திரமுகி படம் தான் என்கிறா...

அய்யனார்

Image
775வது பதிவு.. சொந்த தம்பியை கொலை செய்து புதைத்துவிட்டு மிகவும் கூலாக இருக்கும் ஆதியோடு ஆர்ம்பிக்கிறது படம்.  உயிரிலே கலந்தது படத்தில் அண்ணன் தம்பிக்கிடையே நடக்கும ப்ரச்சனையை வைத்து ஒரு மசாலா படத்தை அளித்திருக்கிறார்கள். ஆதி ஒரு வாலிபால் ப்ளேயர். தமிழ் சினிமாவின் அடிப்படை தகுதியான குடி, ரவுடி, குத்து பாட்டு, வெளியில் அலப்பறை என்று முன் சொன்ன விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமில்லாமல் இருப்பவர். அவருடய தம்பி சரவணனோ.. நன்றாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுபவன்.ஒரு டிவி சேனல் கேமராமேன். திக்குவாயன், தான் என்ற அகந்தையும், அவ்வப்போது அண்ணன் ஆதியை போட்டுக் கொடுத்து வீட்டில் நல்ல பெயர் வாங்குபவன்.  என்ன தான் ஆயிரம் சண்டைகள் அண்ணன் தம்பிக்குள் இருந்தாலும் பிரச்சனை என்று வரும் போது தம்பிக்காக அண்ணன் பழிவாங்குகிறான். ஆனால் கொலைப் பழி அவன் மேல் விழுகிறது. படம் மொத்தமும் மூன்று டிராக்குகளில் போகிறது. ஒரு பக்கம் தம்பியின் உடலை புதைத்துவிட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாமல் அடியாளாய் சேர்ந்து கொண்டு சுற்றுவது, ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அரசியல் வாதிகளின் அரசியல் குத்து வெட்டுகள...

விருதகிரி

Image
கடைசியாய் நானும் பார்த்துவிட்டேன். மணிஜி பார்த்துவிட்டு நல்லாத்தான் இருக்கு கேபிள் என்று ரெகமண்ட் வேறு செய்துவிட்டார். அதனால் நானும் பார்த்துவிட்டேன். விஜயகாந்த முதல் முதலாய்  இயக்கும் படம். அதற்காக அவரது இரண்டு கைகளையும் அகல விரித்து வைத்து போஸ் கூட கொடுத்திருப்பதினால் அதை நம்பித்தான் ஆகவேண்டும். இணையத்தில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது அதிலிருந்து எடுத்தது, இதிலிருந்து எடுத்தது என்று சொல்லி டேக்கன் படத்தை சொல்லலாம். ஆனால் விஜயகாந்த் படம் பார்க்க வருபவர்களுக்கு அதெல்லாம் முக்கியமில்லை என்பது அண்ணா தியேட்டரில் கூடியிருந்த ஆல்மோஸ்ட் ஹவுஸ்புல் கூட்டத்தை பார்த்தால் தெரிந்தது. வழக்கமான விஜயகாந்த படமாகத்தான் ஆரம்பிக்கிறது. கூடுதலாக ரெண்டு லைனுக்கு ஒரு முறை பஞ்ச் டயலாக் பேசி, ஆளும் கட்சியை விமர்சித்து, டைட் க்ளோசப்பில் சிவந்த கண்களுடன் பேசுகிறார். அதையெல்லாம் மீறி வில்லன்கள் கூட சண்டை போடுவதற்கு முன் ஒரு அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாக விஜயகாந்த்தின் அரசியல் பார்வையை பற்றியும், அவரது கொள்கைகளை பற்றி அவரை பேச வைத்துவிட்டுத்தான் சாகிறார்கள் என்பது போன்ற ஒரு சில இடர்பாடுகளை தவிர, இண்ட்...

சித்து +2

Image
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இயக்குனர் வந்து கோலோச்சுவார்கள். பீம்சிங் படம், ஏ.பி.நாகராஜன் படம், பாலசந்தர் படம், பாரதிராஜா படம் என்றிருந்த காலத்தில் பாக்யராஜ் படமென்றால் ஒரு குதூகலத்தோடு குடும்பம் குடும்பமாய் பார்த்த நாட்களை சினிமாவிற்கு தந்தவர் இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர் என்று பெயர் பெற்ற  இயக்குனர், நடிகர் பாக்யராஜ். தன் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்து ஊட்டி எஸ்டேட்டில் பக்கத்து வீட்டில் ஒரு டெலஸ்கோபிக் கன்னை வைத்துவிட்டு, ஊருக்கு போவதாய் ட்ரைனில் கிளம்ப, போலீஸ்காரர் கராத்தே மணி அவரை ட்ரைனில் வைத்து ஊருக்கு போகிறாரா என்று செக் செய்வார். அவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் டிரைனை நிறுத்தி பக்கத்து வீட்டு மாடியேறி, அங்கு பனியில் நினைந்திருக்கும் டெலஸ்கோபிக் கன்னை எடுத்து தன் கர்சீப்பால் இரண்டு வீயு பாயிண்டையும் துடைத்துவிட்டு குறிபார்த்து சுடுவார்.. இது விடியும் வரை காத்திரு படத்தில் வரும் ஒரு காட்சி. விடியற்காலையில் கிளம்பி கோலம் போடும் பெண்களை சைட் அடிக்கும் போட்டியில் ஒரு பெண்ணை கட்டி பிடித்துவிட்டு வருகிறேன் என்று சபதம்...

கொத்து பரோட்டா-13/12/10

மீண்டுமொரு முறை ஐம்பதாயிரம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி பதினெட்டு லட்சம் நோக்கி பயணிக்க வைத்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி...கேபிள் சங்கர் விக்கி லீக் உரிமையாளர் அசாங்கியை கைது செய்திருக்கிறார்கள். உலகின் புராதன குற்றச்சாட்டை வைத்து. பல விதங்களில் அவர்களின் இணையதளத்தை முடக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு டொனேஷன் வருவதை தடுக்க, ஆன்லைன் கார்டு கம்பெனிகளின் ஒத்துழைப்பை, முக்கியமாய், பேபால், விசா, மாஸ்டர்கார்ட் உள்ளிட்ட இணையதளங்களை அமெரிக்க அரசு மிரட்டி பணிய வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோக்களை பார்த்தால் மிக கொடுமையாக இருக்கிறது. கையில் கேமரா கொண்டு செல்லும் பத்திரிக்கையாளர்களை எல்லாம் கையில் வெப்பன் கொண்டு போவதாக கோட் வேர்ட் சொல்லி ஹெலிகாப்டரிலிருந்து கொல்லும் காட்சி கொடூரம், தேவையில்லாமல் ஒருவன் கூட உயிரோடு போய்விடக்கூடாது என்பதில் குறியாய் இருந்து கடைசி நேர உயிர் ஊசலில் இருக்கும் நபரையும் கொன்று விடுவதும், உயிரற்ற உடல்களின் மேல் வண்டியை ஓட்டி சொல்வதும். போரில் இருக்கும் மனித மனங்களின் வக்கிரங்கள் தாண்டவமாடுகின்றன. விக்கிலீக்ஸ்...

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி

Image
மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி என்கிற ஒரு சிறு பட்ஜெட் படக்குழுவினரின் அடுத்த படைப்பு. முதல் படம் சாதாரண HDVயில் எடுத்தார்கள். படத்தை பற்றிய விளம்பரம் வித்யாசமாய் செய்து மக்களிடையே ரீச்சாகி தியேட்டரில் வசூலாவகில்லை என்றாலும், சாடிலைட் ரைட்சிலேயே படத்தின் இன்வெஸ்ட்மெண்டை எடுத்து லாபம் பார்த்தவர்கள். இவர்கள் அடுத்த முயற்சியும் டிஜிட்டல் தான். ஆனாம் இம்முறை Canon 5D HDSLR கேமராவில் எடுத்திருக்கிறார்கள். உலகின் முழு முதலாக அந்த கேமராவில் எடுக்கப்பட்ட படம் என்று லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றிருக்கிறார்கள்.   டிஜிட்டல் முறையில் எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் கொஞ்சம் நம்ப முடியாது. மிக அருமையான ஒளிப்பதிவு.  வழக்கமாய் டிஜிட்டல் படங்களில் உள்ள க்ரெயின்ஸ் இல்லவேயில்லை. ரெட் ஒன் தவிர மற்ற எல்லா கேமராக்களிலும் க்ரெயின்ஸ் லேசாக தெரியும். ஆனால் இதில் பளிச். வாழ்த்துக்கள் ஒளிப்பதிவாளருக்கும், காமெரா கண்டுபிடித்தவர்களுக்கும். நிறைய பேர் இப்போது இந்த கேமராவில் தான் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய படங்களில் ஒரு சில காட்சிகள் எடுத்து சேர்த்திருக்கிறார்கள். சமீ...

சினிமா வியாபாரம்-2

பகுதி-3 பழைய தியேட்டரை புதுசாக்கி, பளபளவென மாற்றியாகிவிட்டது. புது படம் போட்டால் தானே ஒரு கவுரதையாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த தியேட்டரே.. செகண்ட் ரிலீஸ் செண்டர் என்று பெயர் பெற்று, கடைசியாய் பிட்டு படம் போடும் நிலைக்கு வந்திருக்கும் போது நாங்கள் பொறுப்பெடுத்துள்ளதால், அதை எப்படியாவது அந்த இழிப் பெயரிலிருந்து வெளி கொணர்ந்தே ஆக வேண்டும் என்ற சூளுரையை எங்களுக்குள் இட்டுத்தான் தியேட்டரை எடுக்கும் ஆட்டத்தில் இறங்கினோம். அது மட்டுமில்லாமல், பக்கத்தில் இருந்த காசி, உதயம், போன்ற தியேட்டர்களுக்கு போட்டியாக ஒரு செண்டரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதில் ஆழ இருந்ததால் புதுப் படம் தான் போட்டாக வேண்டும் என்று ஒரு பெரிய படத்துக்கு முயற்சி செய்தோம். ஆனால் ரிசல்ட் பூஜ்யம்தான். எங்களின் ஆலோசகர், காட்பாதர் தான் எங்கள் தியேட்டரின் கன்பர்மேஷன் செய்யும் பணியில் அமர்த்தியிருந்தோம். ஒரு தியேட்டரை திறம்பட நிர்வகிக்க, முக்கிய ஆட்களில் இந்த கன்பர்மேஷன் செய்யும் ஆளும் ஒருவர். அவர் தான் நம் தியேட்டருக்கும், விநியோகஸ்தர்களுக்குமான பாலம். அதென்ன கன்பர்மேஷன்? அது வேறொன்றுமில்லை இந்த வார...

ரத்த சரித்திரம்-2

Image
ஏற்கனவே முதல் பாகத்தை  பார்த்துவிட்டதால் பெரிய எதிர்பார்ப்பு ஏதுவுமில்லாமல் ஒரு ரெண்டு நாள் கழித்துத்தான் பார்த்தேன்.அதுவும் சூரியாவுக்காக. ரத்த சரித்திரம் பழிவாங்கும் உணர்வை உன்னதமாக்கும் முயற்சி. முதல் பாகத்தை ரத்ன சுருக்கமாய் முதல் இருபது நிமிடங்களில் காட்டுகிறார்கள். அதன் பிறகு சூரியா தன் பழிவாங்குதலை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ரத்தகளறி ஆரம்பிக்கிறது. இருவருக்குமான காய் நகர்தல்தான் அடுத்தடுத்து வரும் காட்சிகள் எல்லாம். பிரதாபை கொல்லும் முதல் முயற்சியில் சூர்யா தோற்கிறான்.  சூர்யாவை கொல்ல தேடி அலையும் பிரதாப்பிடமிருந்து தப்பிக்க, தான் வெளியே இருந்தால் பிரச்சனை என்று சூர்யா சரண்டர் ஆகி ஜெயிலுக்கு போகிறான். அவரது மனைவி ப்ரியா மணியை தேர்தலில் நிற்க எதிர்கட்சிகள் தூண்டிவிட, ஜெயிலில் இருந்த படியே சூர்யா காய் நகர்துதல்களை செய்கிறான். சூர்யா தன் பழிவாங்கலை முடித்தானா? இல்லையா? என்பதுதான் மீதி கதை. எனக்கென்னவோ.. முதல் பாகத்தில் பார்த்ததைவிட இதில் வன்முறை குறைவு என்றேதான் சொல்வேன். ஏன் என்றால் இதில் நடக்கும் அத்துனை விஷயங்களிலும் துப்பாக்கி வந்துவிட்டதால் டப்..டுப் என சடுதி...