Posts

சாப்பாட்டுக்கடை - வைரமாளிகை - சென்னை

Image
திருநெல்வேலிக்கு போனால் நிச்சயம் வைரமாளிகை பரோட்டாவையும், தேங்காய் எண்ணையில் பொரித்த நாட்டுக்கோழியையும் சாப்பிடாமல் வரமாட்டேன். சில வருடங்களுக்கு முன் சென்னை ரஷ்யன் கல்சுரல் அகாடமியில் உள்ள காப்பிஷாப்பில் ஆரம்பித்தார்கள்.  ஆனால் கூட்டம் தான் வரவில்லை என்றார்கள். வாசல்ல ஏகே 47 வச்சிட்டு நின்னுட்டிருந்தா எவன் பரோட்டா சாப்பிட வருவான்? என்று கேட்ட ஒரிரு மாதத்தில் கடையை ஏறக்கட்டிவிட்டார்கள்.  அவர்கள் இப்போது டிநகர் வித்யோதயா ஸ்கூலின் எதிரில் தங்களது புதிய சென்னைக் கிளையை திறந்திருக்கிறார்கள். அதே மொறு மொறு பரோட்டா, தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டுக்கோழி, அதன் உடன் கொடுக்கப்படும் பாயா டேஸ்டில் கொடுக்கப்படும் வெஜ் கிரேவி. தற்போது உடன் நான் வெஜ் கிரேவியும் கொடுக்கிறார்கள். பரோட்டாவை பிய்த்து போடாமலேயே சால்னாவை ஊற்றி ஊற வைத்து, பிய்த்தாய் அப்படி இலகுவாய் பரோட்டா பிய்ந்துக் கொண்டு வரும். வாயில் வைத்தால் லபக்கென வழுக்கிக் கொண்டு ஓடும். நாட்டுக்கோழி ஆஸ்யூஸுவல் அட்டகாசம். நான் வெஜ் கிரேவி நம்மூர்காரர்களுக்கான விஷயமாய் இருந்தாலும், ஒரு பரோட்டா வெஜ் கிரேவிக்கும் இன்னொன்று நான்...

சினிமா வியாபாரம் -6- திரைப்பட பாடல் மூலம் எளிதில் சம்பாதிப்பது எப்படி?

Image

கொத்து பரோட்டா 2.0-53

கொத்து பரோட்டா 2.0-53 எங்கு பார்த்தாலும் ப்ளூ வேல் விளையாட்டு பற்றியும், தற்கொலைகள் பற்றியுமே பேச்சாகவும், செய்திகளாகவும் இருக்கிறது. எல்லா பசங்க கையிலேயும் போன் இருக்க, அவங்க அதை வச்சி என்ன பண்ணுறாங்கன்னு வாட்ச் பண்றது எப்படினு கைய பிசைஞ்சிட்டு இருக்கிற பெற்றோர்கள் நிறைய பேர். கம்ப்யூட்டரை காமன் ஹால்ல வையுங்க. பாஸ்வேர்ட் எல்லாம் எதுன்னு பசங்க கிட்ட பேசி தெரிஞ்சுக்கங்க, என்ன விளையாடுறாங்கன்னு பார்த்துட்டேயிருங்க என்றெல்லாம் நிறைய அட்வைஸ்கள் கிடைத்துக் கொண்டேயிருந்தாலும், பெற்றோர்கள் இருக்கிற பிஸியில் இதுங்க நம்மளை தொல்லை பண்ணாம அதும் பாட்டுக்கு ஏதோ விளையாடிட்டு இருக்குதுங்கனு விடுற பெற்றோர் தான் அதிகம். பிரச்சனை அங்க தான் ஆரம்பிக்கிறது. நாம் அவர்களை தனியே விட விட, அவர்கள் மேலும் அவர்களின் செயல்களில்  மிக ஆழமாக ஈடு படுகிறார்கள்.  ஆனால் இதையெல்லாம் யூஸ் பண்ணாதே, போன் எதுக்கு என்றெல்லாம் கேட்பதை விட, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். பள்ளி, ட்யூஷன், பாட்டுக்கிளாஸ், ஹிந்திக்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ் என நம்மை விட படு பிசியாய் இருக்கும் நம் குழந்தைகளுக...

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -1

எங்கு பார்த்தாலும் கந்துவட்டி.. கந்து வட்டி என்கிற பேச்சுத்தான். ஒரு மாதத்துக்கு முன் கந்துவட்டிக் காரணமாய் தீக்குளித்த குடும்பத்திற்கு கிடைத்த கவன ஈர்ப்பை விட சமீபத்தில் பைனான்ஸ் பிரச்சனையால் தூக்கு மாட்டிக் கொண்ட இயக்குனர்/ நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரின் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளருமாகிய அசோக்குமாரின் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவின் பவர் அப்படி. இறந்தவர் தன் இறப்புக்கு காரணமானவர் அன்பு செழியன் என்கிற பைனான்ஸியர்தான் என்று எழுதி வைத்துவிட்டு போக, ஏற்கனவே அவரின் பேரில் பல செவிவழிக்கதைகள் உள்ள நிலையில் பற்றிக்கொண்டது. உடனடியாய் கைது செய் என்று ஒரு கோஷ்டி போர்க்கொடி ஏந்தி களத்தில் இறங்க, அடுத்த நாளே அன்பு செழியன் நல்லவர் , வல்லவர், உத்தமர் எங்களீடம் அவர் நன்றாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார். என்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டிக் கொடுக்க ஆரம்பித்த ஒரு கோஷ்டி என தமிழ் சினிமா ரெண்டாய் பிளந்திருக்கிறது. இதில் அரஸ்ட் செய்யச் சொல்லி போராடுகிறவர்கள் அதே அன்புவிடம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களும் இருக்க, இந்த பிரச்சனையை பெரிது செய்து அதில் அவர்களி...

பைரஸியும் சினிமாவும் -5

பைரஸியும் சினிமாவும் -5 ஆம் தமிழ் சினிமாவின் பைரஸி உலகம் இலங்கை தமிழர்களால் தான் நடத்தப்படுகிறது. அதன் கீழ் இருக்கும் நாமெல்லாம் அவர்களது அடிபொடிகள் மட்டுமே. எந்த தமிழ் சினிமாவின் மார்கெட் உலகளாவிய வகையில் வளர உதவினார்களோ, அவர்களே தான் உலகளாவிய பைரஸிக்கும் காரணம். இந்த உண்மையை சொன்னதால் இயக்குனர் சேரனை கழுவி ஊற்றினார்கள் நம் தமிழ் பற்றாளர்கள். இவர்கள் எல்லாரும் எங்கேயிருந்துதான் வருவார்கள் என்று தெரியவில்லை. இலங்கை தமிழர்கள் என்றாலே கிளம்பி விடுகிறார்கள். இப்போது உலகம் எங்கும் இருக்கும் இலங்கை தமிழர்கள் இரண்டாம், அல்லது மூன்றாம் தலைமுறையினர்.  அவர்களைப் பொறுத்தவரை தமிழ் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள வரவேற்பு காரணமாய் நல்ல வியாபாரம் இருக்கிறது என்பது மட்டுமே தெரியும். அதற்கு இணையம் மிகப் பெரிய காரணம். பல ஐரோப்பிய நாடுகளில்  உள்ள சிறு திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்களை வாடகைக்கு வாங்கி திரையிடுகிறவர்கள் இந்த இரண்டாம்/ மூன்றாம் தலைமுறை இலங்கை தமிழர்களே. வாடகைக்கு வாங்கி அவர்களே பைரஸியும் எடுத்து அவர்களது வெப் சைட்டில் போட்டால் அதனால் வரும் வருமானம் பல கோடி. உலகம...

சினிமா வியாபாரம் - 5- ஆடியோ உரிமைகள்

Image

கொத்து பரோட்டா 2.0-24

கொத்து பரோட்டா 2.0-54 Saheb Bibi Golaam பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விமர்சகர், இயக்குனர் என பன் முகம் கொண்ட ப்ரீதம் டி. குப்தாவின் இயக்கத்தில் 2016ல் வெளிவந்த வங்காள மொழிப் படம். இவருடய முந்தைய படமான ”பாஞ்ச் அத்யாய்” கமர்ஷியல் வெற்றியையும், விமர்சனகளிடையேவும் மிகுந்த வரவேற்பை பெற்ற ரொமாண்டிக் ஜெனர் படம். இது முற்றிலும் வேறான கதைக்களன். ஜிம்மி, ரிட்டையர்ட் போலீஸ். தற்போதைய தொழில் காண்ட்ரேக்ட் கில்லர். ஜெயா ஒர் குடும்பத்தலைவி. ஆனால் பார்ட் டைம் விபச்சாரி. ஜிகோ டாக்ஸி ட்ரைவர். அவனுக்கு கல்லூரி மாணவியான ரூமிக்கும் காதல். ஜிம்மிக்கு ஒரு  காண்ட்ரேக்ட் வருகிறது. அரசியல்வாதியின் பையனான அவனை பாலோ செய்கிறான். அவனது நடவடிக்கைகளை கண்காணித்து, அவன் தினமும் ஒரு ஃபேமிலி டைப் விபச்சார விடுதிக்கு செல்கிறதை கண்டுபிடிக்கிறான். ஒரு தினத்தை குறித்து அவனை கொல்ல தயாராகிறான். அந்த தினமும் வருகிறது. துப்பாக்கியை எடுத்து குறிபார்த்து தனக்கு முதுகு காட்டி நிற்கிறவனை சுடுகிறான். அவனை அணைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முகம் க்ளோஸப்பிற்கு போக, அவளின் கதை ஓப்பன் ஆகிறது. ஜெயா ஒரு பெண் குழந்தைக்கு தாய்...

சினிமா வியாபாரம் - 4 - 7 ஏரியாக்கள் 9 ஆன கதை.

Image

பைரஸியும் சினிமாவும் -4

பைரஸியும் சினிமாவும் -3 டிஜிட்டலானாதால் இருக்கும் பாதுகாப்பின்மை ஒரு ரிஸ்க் என்றாலும், பெரும்பாலானவர்களின் அடிப்படை நேர்மையினால் பைரஸிக்கு துணை போகாவிட்டாலும், ஒரு சில படங்களின் வீடியோக்கள், ஏன் சில படமே வெளிவந்ததற்கான காரணம் அங்கிருந்த மனசாட்சி இல்லாத ஒரு சில அரைவேக்காட்டு பண தேவை மிகுந்த அப்ரசண்டிகள் தான் காரணம். முன்பெல்லாம் வெளிநாட்டு வீடியோக்கள் மூலம் வந்ததைப் போல டிஜிட்டல் கேமராக்களின் வளர்ச்சி இன்றைக்கு மொபைலிலேயே அட்டகாச படமெடுக்கும் வசதி வரை வந்து விட்டதால் சுலபமாய் போய்விட்டது. தியேட்டர் ஆப்பரேட்டர்களின் உதவியுடன் கேமரா பிரிண்டுகள் வெளிவர ஆரம்பித்தது. பல தியேட்டர்களை ஒரிஜினல் ஓனர்கள் நடத்தாமல் லீசுக்கு விட்டு விட்டு மாச காசு மட்டுமே வாங்கிக் கொண்டிருக்க, பெரும்பாலான பி, சி செண்டர் தியேட்ட்ரகளின் ஓனர்கள் தியேட்டர் மேனேஜரும், ஆப்பரேட்டருமாகவே இருக்க, சொற்ப சம்பளம், இவர்களின் தேவையை அதிகரித்திருக்க, லம்பாய் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கிடைக்கக் கூடிய வாய்ப்பை யார் வேண்டாமென்று சொல்லுவார்கள்?. இப்படியாக தியேட்டர் பிரிண்டுகள் வர ஆரம்பிக்க, க்யூப், யூ எப்.ஒ போன்ற நிறுவனங்க...

கொத்து பரோட்டா 2.0-53

கொத்து பரோட்டா 2.0-53 எங்கு பார்த்தாலும் ப்ளூ வேல் விளையாட்டு பற்றியும், தற்கொலைகள் பற்றியுமே பேச்சாகவும், செய்திகளாகவும் இருக்கிறது. எல்லா பசங்க கையிலேயும் போன் இருக்க, அவங்க அதை வச்சி என்ன பண்ணுறாங்கன்னு வாட்ச் பண்றது எப்படினு கைய பிசைஞ்சிட்டு இருக்கிற பெற்றோர்கள் நிறைய பேர். கம்ப்யூட்டரை காமன் ஹால்ல வையுங்க. பாஸ்வேர்ட் எல்லாம் எதுன்னு பசங்க கிட்ட பேசி தெரிஞ்சுக்கங்க, என்ன விளையாடுறாங்கன்னு பார்த்துட்டேயிருங்க என்றெல்லாம் நிறைய அட்வைஸ்கள் கிடைத்துக் கொண்டேயிருந்தாலும், பெற்றோர்கள் இருக்கிற பிஸியில் இதுங்க நம்மளை தொல்லை பண்ணாம அதும் பாட்டுக்கு ஏதோ விளையாடிட்டு இருக்குதுங்கனு விடுற பெற்றோர் தான் அதிகம். பிரச்சனை அங்க தான் ஆரம்பிக்கிறது. நாம் அவர்களை தனியே விட விட, அவர்கள் மேலும் அவர்களின் செயல்களில்  மிக ஆழமாக ஈடு படுகிறார்கள்.  ஆனால் இதையெல்லாம் யூஸ் பண்ணாதே, போன் எதுக்கு என்றெல்லாம் கேட்பதை விட, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். பள்ளி, ட்யூஷன், பாட்டுக்கிளாஸ், ஹிந்திக்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ் என நம்மை விட படு பிசியாய் இருக்கும் நம் குழந்தைகளுக்...