Posts

24 சலனங்களின் எண். விமர்சனம் #4

Image
p t ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவல் நாவலாக மட்டுமல்லாமல் புதிதாக சினிமா எடுக்க வருபவர்களுக்கு சினிமா உலகில் உள்ள அரசியலையும் மனிதர்களின் நுணுக்கமான ஈகோவை புரிந்துகொண்டு வெற்றிகரமாக காய் நகர்த்த உதவும் ஒரு சிறந்த புத்தகமாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.தலைவர் கேபிள் சங்கர் அவர்கள் வலைப்பூவுலகின் சுஜாதா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அவரது தனித்துவபாணி எழுத்தின் மூலம். நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவரின் கொத்துபரோட்டாவை சுவைத்த திருப்தி. ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவலில் சினிமாத்தனம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கட்டுரைத்தொனி தென்பட்டாலும் மிக சுவாரஸ்யமான நடையால் மீண்டும் கதைக்குள் இழுத்து விடுகிறார். கதை நகர நகர அதற்குப் பின்புலமான உண்மைச் சம்பவங்கள் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்ற எண்ண ஓட்டங்கள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. வெப் சீரிஸ் என்ற ஒரு வஸ்து அறிமுகமாவதற்கு முன்பே அதற்கான கண்டண்டாக பிரபல வார இதழ்களில் வெளியாகும் தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் கேபிள் சங்கர் வலைப்பதிவில் வந்து பாதியில் நின்ற 'நான் ஷர்மி வைர...

Kerala Paradiso

Image
  சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர் இருந்து, இன்று அது இல்லாமல் பக்கத்து நகரங்களுக்கு படம் பார்க்கச் செல்லும் சினிமா ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் அவரவர்கள் ஊருக்கு போகும்போது அங்கே இருந்த தியேட்டரை நினைத்து நாஸ்டால்ஜிக் விஷயங்களை நண்பர்களுடன் அசை போடாதவர்கள் இருக்கிறார்களா? என்ன? அலங்கார் தியேட்டரில் ஜாக்கிசானின் ப்ராஜெக்ட் ஏ பார்த்துவிட்டு, அவரைப் போலவே நண்பர்களுடன் ஓடுகிற பஸ்ஸில் ஏற முயன்ற நாட்களை இன்றைக்கும் நானும் என் கல்லூரி நண்பர்களும் பார்க்கும் போதெல்லாம் சொல்லி சிரிக்காமல் இருந்தது இல்லை. அப்படியான ஒரு சிறு கேரள ஊரில் வெளிநாட்டுக்கு போய் சம்பாரித்து வந்த காசில் சினிமா பாரடைசோ படம் கொடுத்த தாக்கத்தில் தன் சொந்த கிராமத்தில் “கேரளா பேரடைசோ” என்கிற் தியேட்டரைக் கட்டியவரின் மருமகன். தினமும் தியேட்டரைச் சுற்றியே வலம் வருகிறவனுக்கு அத தியேட்டர் பேங்க் கடனுக்காக மூடப்பட, தியேட்டர் கட்டிய மாமனுக்கு உடல் நலமில்லாமல் போக, தன் காதல், தியேட்டர் இடத்தை அடைய நினைக்கும் ஆட்கள், நிஜ வாழ்க்கை சம்பவங்களை சினிமாவக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ, அவனது அன்பான குடும்பம், கூட்...

சாப்பாட்டுக்கடை- ரஹமாஸ் பிரியாணி.

Image
பிரியாணியை கண்டுபிடித்தவர்களை விட நமக்கு பிரியாணி ஒர் எமோஷன் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் சென்னையில் உள்ள அத்தனை தெருக்களிலும் ரெண்டு பிரியாணி கடை திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பிரியாணிக்கடை  மூடப்படுகிறது. இத்தனை பிரியாணிக்கடைகள் இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தான் நல்ல பிரியாணிகடைகள் இருக்கிறது.  என்னதான் சிக்கன், சிக்கன் 65, எறா, பிஷ், என பிரியாணி வகைகள் நிறைய வந்திருந்தாலும், என்னை பொறுத்தவரை பிரியாணி என்றால் அது மட்டன் பிரியாணிதான். சீரகசம்பா ஒரு வகையான சுவை என்றால் நல்ல பாஸுமதி ரைசின் சுவை வேற லெவல். அப்படி சமீபதத்தில் நான் சாப்பிட்ட நல்ல பிரியாணியைப் பற்றித்தான் இங்கே சொல்லப் போகிறேன்.  சென்னை கோடம்பாக்கத்தில் ரஹமாஸ் பிரியாணி என்று போர்ட்டை பார்த்து பல முறை கடந்து போயிருக்கிறேன். அக்கடை பற்றி பல முறை நண்பர்கள் சொல்ல கேட்டும் சாப்பிட வாய்க்கவில்லை. போன வாரம் பார்சலில் வந்தது ரஹமாஸ் பிரியாணி. பெட்டியை திறந்தவுடன் கிடைத்த ஆரோமாவை சொல்வதா?. காரம், மணம் குணத்தோடு, நன்கு வெந்த மசாலாவில் தோய்ந்த மட்டனை சொல்வதா?. பல சமயங்களில் பிரியாணியை தால்சாவ...

24 சலனங்களின் எண் - விமர்சனம் 3

Image
 

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1

Image
  நான் ..ஷர்மி ..வைரம்.. ஆண் விபச்சாரம், கிரைம் என்று ஒரு விறுவிறுப்பான திரில்லர். காமத்தயிரை கடைந்து கொடுத்திருக்கிறார் என்றும் சொல்வோம் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா.. மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன் .. நன்றி மணிஜி நான் ஷர்மி வைரம் கிண்டில் வர்ஷன் வாங்க லிங்க் https://amzn.to/2qxcgiF நான் ஷர்மி வைரம் புத்தகம் அமேசானில் வாங்க https://amzn.to/2P3SSUi

சாப்பாட்டுக்கடை - அன்னப்பறவை

Image
இக்கடையைப் பற்றி நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். சுய்யம் சாப்டேன். பாயசம் சாப்டேன் என்று. அப்படி என்னதான் கொடுக்கிறார்கள் ஒரு நாள் மாலை வேளையில் அன்னப்பறவைக்கு விசிட் விட்டோம். கடையின் அமைப்பேன் கிராமத்துக் கடை போல இருக்க, வரிசைக் கட்டி வைத்திருந்த அயிட்டங்களைப் பார்க்க இன்னும் ஆர்வம் அதிகமானது. முக்கியமாய் மாலையில் அவர்கள் போடு சுக்கு மல்லிக் காப்பி படு பிரசித்தம். போட சொன்ன பிறகு தான் சுக்கு மல்லிப் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். நாட்டு சக்கரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.  சுடச்சுட வாழைப்பூ வடையை சுவைக்காமல் வராதீர்கள். கிரிஸ்பி என்றால் அத்தனை க்ரிஸ்பியாய் அதே நேரத்தில் கடுக்கு முடுக்கு என்று கிரிஸ்பியாகவும் இல்லாமல்,  கூடவே தொட்டுக் கொள்ள தினமும், புதினா, மல்லி, பீட்ரூட் என வித்யாசமான சட்னியுடன் கொடுக்கிறார்கள். கூடவே பயறு வெல்லம் போட்ட சுய்யம், உளுத்தம் சுய்யம் என தினமொரு விதமான சுய்யம். வேர்கடலை சுண்டல், உருளை போண்டா என ஆயில் ஒட்டாத டேஸ்டில் அசத்துகிறார்கள். ரெண்டு வடை, ஒரு சுக்கு மல்லி காப்பி சாப்பிட்டால் சுக்கு மல்லியின் காரம் ஏறி சும்மா ஜிவ்வெனெ இருக்க...

Forbidden Love - anthology stories from zee5

Image
நான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர்.  நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது.  அனாமிகா பிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர்.  ரூல்ஸ் ஆப் கேம்ஸ் பிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே.  அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவ...

Crack Down - Hindi Web Series Review

Image
  shootout at lokanwala படத்தின் இயக்குனர் அபூர்வ லக்கியாவின் முதல் வெப் சீரீஸ். பேமிலி மேனின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட சுவாரஸ்ய ரா உளவுத்துறை சம்பந்தமான கதைகள் இந்தியில் சிறப்பாகவே வர ஆரம்பித்திருக்கிறது. இந்த க்ராக்டவுனும் அதில் ஒன்று என்று சேர்க்கலாம். சிக்ஸ்பேக்கில் இறுக்கமான முகத்துடன் சமயங்களில் ரா தலைமைக்கே போன் போடு, அவனை பிடி என்று உத்தரவு கொடுக்கும் அளவுக்கான டாமினெண்ட்  சாகுப் சலீம், கொஞ்சம் ராஸ் பட அலியா பட் கேரக்டரின் சாயலில் வரும் ஷிரியா பில்கனோகர்,   ராவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசியல். சட்டப்படி நடவடிக்கையை மீறி செயல் படும் ராவுக்கும் டைரக்டர் ஆப் ஆப்பரேஷனுக்குமிடையே நடக்கும் உள் புகைச்சல்கள். பாகிஸ்தானிய தீவிரவாதிகள். முஸ்லிம் ஏரியாக்களில் ஊடுருவும் பெண் தீவீரவாதிகள். கொலை செய்வதற்கு முன் நமாஸ் செய்துவிட்டு போகும் தீவிரவாதிகள் என எல்லா தீவிரவாதக் கதைகளுக்குண்டான அத்தன விஷயங்களும் இதில் இருக்கிறது.  சிந்தன் காந்தியும், சுரேஷ் நாயரும் இணைந்து எழுதியிருக்கும் இந்த சீரீஸுக்கு இவர்கள் தந்த டீடெயிலிங் எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு இதை படமாக்க...

Alive - Netflix Movie

Image
கேமிங், இண்டர்நெட், ஆன்லைன், டெக்னாலஜியில் ஆழ்ந்து மூழ்கிய டீன் இளைஞன் ஒரு தூங்கி எழுந்திருக்கும் போது, வீட்டில் அப்பா, அம்மா, தங்கை என யாருமில்லை. கடைக்கு போய் வருவதாய் சிட் எழுதி வைத்து போயிருக்கிறார்கள். வீட்டின் வெளியே ஒரே ஆரவாரம். என்னவென்று பார்த்தால் மக்கள் ஜோம்பிகளாய் மாறி ஒருவரை ஒருவர் கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியே போன குடும்பத்துக்கு என்ன ஆனது? இவன் எப்படி இருபது நாட்களுக்கு மேலாக சர்வைவ் ஆகிறான்?. எது அவனை சர்வைவ் செய்ய வைத்தது? தப்பினானா இல்லையா என்பதுதான் கதை.  தனியறையில் மாட்டிக் கொண்ட இளைஞன். அவனது தவிப்பு. குழப்பம். டெக்னாலஜியின் பயன் மூலமாய் அறிய முற்படுவது, எதிரே ஏதோ நம்பிக்கை. நம்பிக்கையின்மை, தனியே ஒரு பெண். அவளுடனான நட்பின் மூலமாய் ஏற்படும் வாழ்க்கையின் வெளிச்சம். தப்பித்தல். என எல்லா டெம்ப்ளேட்களுடனான ஜோம்பி படம். பட் ஒன்னரை மணி நேரம் போனது தெரியவில்லை. காரணம் கிட்டத்தட்ட கோவிட் நாட்களில் தனிமையில் மாட்டிக் கொண்டவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டால் சுவாரஸ்யம் குறையவில்லை. டைம் பாஸ் கொரியன் படம். 

எம்மி அவார்டை வாங்கிய ஆப்பிள் சீரீஸ்

Image
சென்ற வருடம் நவம்பர் மாதம் ஆரம்பித்த ஓடிடி தளம் ஆப்பிள் +. ஆப்பிளின் ப்ளாட்பார்ம்களிலும், செட்டாப் பாக்ஸ் மூலமாய் மாதம் 5$க்கு மிகத் தரமான படங்களையும், சீரீஸ்களையும் வழங்கி வருகிறது. மார்னிங் ஷோ, டிபண்டிங் ஜேக்கப், மனோஜ் நைட் ஷியாமளனின் சர்வர்ண்ட் என வரிசைக் கட்டி சிரீஸ்கள் இருக்க, கோவிட் பாண்டமிக் நேரத்தில் டாம் ஹாங்ஸின் இயக்கம் மற்றும் நடிப்பில் வந்த “க்ரே ஹவுண்ட்’ எனும் திரைப்படத்தை சுமார் 100 மில்லியன் கொடுத்து நேரிடை வெளியீடு வேறு செய்து பெரும் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.  இவர்களின் தயாரிப்பான மார்னிங் ஷோ எனும் சீரீஸில் நடித்த கோரி எலிசன் என்கிற கேரக்டரில் நடித்த பில்லி கோட்ரப்புக்கு சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை பெற்று இருக்கிறது. ஆரம்பித்து ஒன்பது மாதங்களில் 16 நாமினேஷன்களை பெற்று ஒரு விருதையும் பெற்று இருக்கிறது ஆப்பிள் +டிவி