Posts

சாப்பாட்டுக்கடை - கறி தோசை

Image
சாலிகிராமத்தில் ப்ரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரே பிரபல டீக்கடையான காவேரி கார்னர் பக்கத்தில் சட்டென தெரியாத வண்ணம் ஒரு கறி தோசை கடை உதயமாகியிருப்பதை கண்டு கொண்டேன்.  சரி ஒரு நடை போய் பார்ப்போம் என்று மெனுவைப் பார்த்ததில் கறி தோசையில் சிக்கன், மட்டன் கறி தோசை வகைகள் மட்டுமில்லாமல், பன் பரோட்டா எல்லாம் போட்டிருந்தார்கள். சரி முதல் முயற்சியாய் மட்டன் கறி தோசை சாப்பிடுவோம் என்று ஆர்டர் செய்தேன். அதற்கு முன்னால் ஒரே ஒரு பன் பரோட்டா டேஸ்ட் செய்வோம் என்று ட்ரை செய்ததில் பரோட்டாவை பன்னாக செய்து ஹாட் பேக்கில் போட்டு வைத்திருந்ததினால் பன் அமுங்கிப் போயிருந்தாலும், கூட தொட்டுக் கொள்ள, மட்டன், நாட்டுக்கோழி க்ரேவி, மீன் குழம்பு, குடல் குழம்பு என அதகளப்படுத்தினார்கள்.  டிபிக்கல் கிராமத்து ஸ்டைலில் இருந்தது குழம்பு வகைகள். குறிப்பாய் மட்டன் மற்றும் நாட்டுக் கோழி குழம்பைச் சொல்ல வேண்டும். கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்த பின் மட்டன் கறி தோசை பிட்ஸா போல வெட்டப்பட்ட பீஸ்களாய் வந்தது. வழக்கமாய் கொஞ்சம் தடிமனாய் இருக்கும் கறி தோசை கொஞ்சம் மெலிந்திருந்தார்ப் போல இருந்தது. அடித்தளம் நல்ல கிரிஸ்பியாகவும், ...

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -2

Image
  பு(து)த்தகம் நான் ஷர்மி வைரம் (A) நாவலுக்கு A சர்டிஃபிகேட் கொடுத்தமைக்காகவே எழுத்தாளர் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள் . சாதாரண வைர கொள்ளை கடத்தல் தான் நாவலின் கரு.ஆனால் அதை மிகவும் ரசிக்கும் படியாய் காமத்தோடு கதையையும் எழுதியிருப்பது தான் மிக சிறப்பு.1998 - 2000 வாக்கில் எப்பொழுதோ கேள்விபட்டிருக்கிறேன் கோவாவில் ஆண் ஐட்டங்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.வெளிநாட்டினரோடு செக்ஸ் வைத்துக் கொண்டு பணமும் மகிழ்ச்சியையும் பெறுவர் என்று. அவர்களின் பெயர் ஜிகிலோ என்று இன்றைக்குத் தான் அறிந்து கொண்டிருக்கிறேன்.சென்னையில் இதற்கென ஒரு கூட்டமே இயங்கி வருவதை கண்டு மனம் அதிசயமும் ஆச்சர்யமும் அடைகிறது.கேபிள் சங்கர் தன் வசீகர எழுத்தில் இவர்களின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக எழுதி இருப்பதை பார்க்கும் போது கதை தானே என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை. மிகவும் டிடெய்ல்டு ஆன நாவல்.கதையும் விறுவிறுப்பாகவே செல்கிறது. நான் என்கிற ராஜன், ஷர்மி என்கிற பெண், வைரம் என்கிற ஆள் அல்லது வைரக் கடத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.மூவரையும் தனித்தனியாய் விவரித்துக் கொண்டு ஒற்றைப் புள்ளியில் இணைத்து பின் கதையை ஆச்சர்யத்...

24 சலனங்களின் எண். விமர்சனம் #4

Image
p t ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவல் நாவலாக மட்டுமல்லாமல் புதிதாக சினிமா எடுக்க வருபவர்களுக்கு சினிமா உலகில் உள்ள அரசியலையும் மனிதர்களின் நுணுக்கமான ஈகோவை புரிந்துகொண்டு வெற்றிகரமாக காய் நகர்த்த உதவும் ஒரு சிறந்த புத்தகமாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.தலைவர் கேபிள் சங்கர் அவர்கள் வலைப்பூவுலகின் சுஜாதா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அவரது தனித்துவபாணி எழுத்தின் மூலம். நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவரின் கொத்துபரோட்டாவை சுவைத்த திருப்தி. ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவலில் சினிமாத்தனம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கட்டுரைத்தொனி தென்பட்டாலும் மிக சுவாரஸ்யமான நடையால் மீண்டும் கதைக்குள் இழுத்து விடுகிறார். கதை நகர நகர அதற்குப் பின்புலமான உண்மைச் சம்பவங்கள் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்ற எண்ண ஓட்டங்கள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. வெப் சீரிஸ் என்ற ஒரு வஸ்து அறிமுகமாவதற்கு முன்பே அதற்கான கண்டண்டாக பிரபல வார இதழ்களில் வெளியாகும் தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் கேபிள் சங்கர் வலைப்பதிவில் வந்து பாதியில் நின்ற 'நான் ஷர்மி வைர...

Kerala Paradiso

Image
  சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர் இருந்து, இன்று அது இல்லாமல் பக்கத்து நகரங்களுக்கு படம் பார்க்கச் செல்லும் சினிமா ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் அவரவர்கள் ஊருக்கு போகும்போது அங்கே இருந்த தியேட்டரை நினைத்து நாஸ்டால்ஜிக் விஷயங்களை நண்பர்களுடன் அசை போடாதவர்கள் இருக்கிறார்களா? என்ன? அலங்கார் தியேட்டரில் ஜாக்கிசானின் ப்ராஜெக்ட் ஏ பார்த்துவிட்டு, அவரைப் போலவே நண்பர்களுடன் ஓடுகிற பஸ்ஸில் ஏற முயன்ற நாட்களை இன்றைக்கும் நானும் என் கல்லூரி நண்பர்களும் பார்க்கும் போதெல்லாம் சொல்லி சிரிக்காமல் இருந்தது இல்லை. அப்படியான ஒரு சிறு கேரள ஊரில் வெளிநாட்டுக்கு போய் சம்பாரித்து வந்த காசில் சினிமா பாரடைசோ படம் கொடுத்த தாக்கத்தில் தன் சொந்த கிராமத்தில் “கேரளா பேரடைசோ” என்கிற் தியேட்டரைக் கட்டியவரின் மருமகன். தினமும் தியேட்டரைச் சுற்றியே வலம் வருகிறவனுக்கு அத தியேட்டர் பேங்க் கடனுக்காக மூடப்பட, தியேட்டர் கட்டிய மாமனுக்கு உடல் நலமில்லாமல் போக, தன் காதல், தியேட்டர் இடத்தை அடைய நினைக்கும் ஆட்கள், நிஜ வாழ்க்கை சம்பவங்களை சினிமாவக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ, அவனது அன்பான குடும்பம், கூட்...

சாப்பாட்டுக்கடை- ரஹமாஸ் பிரியாணி.

Image
பிரியாணியை கண்டுபிடித்தவர்களை விட நமக்கு பிரியாணி ஒர் எமோஷன் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் சென்னையில் உள்ள அத்தனை தெருக்களிலும் ரெண்டு பிரியாணி கடை திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பிரியாணிக்கடை  மூடப்படுகிறது. இத்தனை பிரியாணிக்கடைகள் இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தான் நல்ல பிரியாணிகடைகள் இருக்கிறது.  என்னதான் சிக்கன், சிக்கன் 65, எறா, பிஷ், என பிரியாணி வகைகள் நிறைய வந்திருந்தாலும், என்னை பொறுத்தவரை பிரியாணி என்றால் அது மட்டன் பிரியாணிதான். சீரகசம்பா ஒரு வகையான சுவை என்றால் நல்ல பாஸுமதி ரைசின் சுவை வேற லெவல். அப்படி சமீபதத்தில் நான் சாப்பிட்ட நல்ல பிரியாணியைப் பற்றித்தான் இங்கே சொல்லப் போகிறேன்.  சென்னை கோடம்பாக்கத்தில் ரஹமாஸ் பிரியாணி என்று போர்ட்டை பார்த்து பல முறை கடந்து போயிருக்கிறேன். அக்கடை பற்றி பல முறை நண்பர்கள் சொல்ல கேட்டும் சாப்பிட வாய்க்கவில்லை. போன வாரம் பார்சலில் வந்தது ரஹமாஸ் பிரியாணி. பெட்டியை திறந்தவுடன் கிடைத்த ஆரோமாவை சொல்வதா?. காரம், மணம் குணத்தோடு, நன்கு வெந்த மசாலாவில் தோய்ந்த மட்டனை சொல்வதா?. பல சமயங்களில் பிரியாணியை தால்சாவ...

24 சலனங்களின் எண் - விமர்சனம் 3

Image
 

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1

Image
  நான் ..ஷர்மி ..வைரம்.. ஆண் விபச்சாரம், கிரைம் என்று ஒரு விறுவிறுப்பான திரில்லர். காமத்தயிரை கடைந்து கொடுத்திருக்கிறார் என்றும் சொல்வோம் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா.. மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன் .. நன்றி மணிஜி நான் ஷர்மி வைரம் கிண்டில் வர்ஷன் வாங்க லிங்க் https://amzn.to/2qxcgiF நான் ஷர்மி வைரம் புத்தகம் அமேசானில் வாங்க https://amzn.to/2P3SSUi

சாப்பாட்டுக்கடை - அன்னப்பறவை

Image
இக்கடையைப் பற்றி நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். சுய்யம் சாப்டேன். பாயசம் சாப்டேன் என்று. அப்படி என்னதான் கொடுக்கிறார்கள் ஒரு நாள் மாலை வேளையில் அன்னப்பறவைக்கு விசிட் விட்டோம். கடையின் அமைப்பேன் கிராமத்துக் கடை போல இருக்க, வரிசைக் கட்டி வைத்திருந்த அயிட்டங்களைப் பார்க்க இன்னும் ஆர்வம் அதிகமானது. முக்கியமாய் மாலையில் அவர்கள் போடு சுக்கு மல்லிக் காப்பி படு பிரசித்தம். போட சொன்ன பிறகு தான் சுக்கு மல்லிப் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். நாட்டு சக்கரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.  சுடச்சுட வாழைப்பூ வடையை சுவைக்காமல் வராதீர்கள். கிரிஸ்பி என்றால் அத்தனை க்ரிஸ்பியாய் அதே நேரத்தில் கடுக்கு முடுக்கு என்று கிரிஸ்பியாகவும் இல்லாமல்,  கூடவே தொட்டுக் கொள்ள தினமும், புதினா, மல்லி, பீட்ரூட் என வித்யாசமான சட்னியுடன் கொடுக்கிறார்கள். கூடவே பயறு வெல்லம் போட்ட சுய்யம், உளுத்தம் சுய்யம் என தினமொரு விதமான சுய்யம். வேர்கடலை சுண்டல், உருளை போண்டா என ஆயில் ஒட்டாத டேஸ்டில் அசத்துகிறார்கள். ரெண்டு வடை, ஒரு சுக்கு மல்லி காப்பி சாப்பிட்டால் சுக்கு மல்லியின் காரம் ஏறி சும்மா ஜிவ்வெனெ இருக்க...

Forbidden Love - anthology stories from zee5

Image
நான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர்.  நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது.  அனாமிகா பிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர்.  ரூல்ஸ் ஆப் கேம்ஸ் பிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே.  அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவ...

Crack Down - Hindi Web Series Review

Image
  shootout at lokanwala படத்தின் இயக்குனர் அபூர்வ லக்கியாவின் முதல் வெப் சீரீஸ். பேமிலி மேனின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட சுவாரஸ்ய ரா உளவுத்துறை சம்பந்தமான கதைகள் இந்தியில் சிறப்பாகவே வர ஆரம்பித்திருக்கிறது. இந்த க்ராக்டவுனும் அதில் ஒன்று என்று சேர்க்கலாம். சிக்ஸ்பேக்கில் இறுக்கமான முகத்துடன் சமயங்களில் ரா தலைமைக்கே போன் போடு, அவனை பிடி என்று உத்தரவு கொடுக்கும் அளவுக்கான டாமினெண்ட்  சாகுப் சலீம், கொஞ்சம் ராஸ் பட அலியா பட் கேரக்டரின் சாயலில் வரும் ஷிரியா பில்கனோகர்,   ராவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசியல். சட்டப்படி நடவடிக்கையை மீறி செயல் படும் ராவுக்கும் டைரக்டர் ஆப் ஆப்பரேஷனுக்குமிடையே நடக்கும் உள் புகைச்சல்கள். பாகிஸ்தானிய தீவிரவாதிகள். முஸ்லிம் ஏரியாக்களில் ஊடுருவும் பெண் தீவீரவாதிகள். கொலை செய்வதற்கு முன் நமாஸ் செய்துவிட்டு போகும் தீவிரவாதிகள் என எல்லா தீவிரவாதக் கதைகளுக்குண்டான அத்தன விஷயங்களும் இதில் இருக்கிறது.  சிந்தன் காந்தியும், சுரேஷ் நாயரும் இணைந்து எழுதியிருக்கும் இந்த சீரீஸுக்கு இவர்கள் தந்த டீடெயிலிங் எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு இதை படமாக்க...