Posts

சாப்பாட்டுக்கடை - அட்டகாசமான மோர் வேண்டுமா?

  அட்டகாசமான மோர் சாப்புடுறீங்களா? என்று Shamanth Nag ஸ்டியோவில் நுழைந்தவுடன் கேட்டார். இண்டர்வியூ முடிச்சு சாப்பிடுவோமா? என்றதற்கு.. “இல்லை.. காலி ஆனாலும் ஆயிரும். இப்பவே போவோம்” என்று அழைத்துச் சென்றார். ஆளுக்கொரு மோர் ஆர்டர் செய்ய, அட்டகாசமான புளிக்காத, திக்கான, மிளகாய் எல்லாம் போட்ட ஜில் மோர் கொடுத்தார்கள். அடிக்கும் வெய்யிலுக்கு அநியாய அமிர்தம். ஒன்று குடித்து முடித்ததும், இன்னொரு க்ளாஸ், இன்னொரு க்ளாஸ் என மூன்று க்ளாஸ் மோர் குடித்து முடித்தேன். விலை எவ்வளவு என்று கேட்டேன். பத்து ரூபாய் என்றார் கடைக்காரம்மா. மிக சல்லீசான ரேட் தான். தேவைக்கேற்ப மோரை கடைந்து, கடைந்துதான் தருகிறார்கள். ஆடட் ப்ளேவராய் லைட்டாய் ஒரு சிறு துண்டு எலுமிச்சையை போட்டா இன்னும் நல்லாருக்கும் என்று ஒளிப்பதிவாளர் Jagadeesh Sundaramurthy சொல்ல, நான்காவது க்ளாஸ் மோரில் எலுமிச்சையோடு ஒரு ரவுண்ட். செம்ம டேஸ்ட். அசோக் நகர் ஆர்.3 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் இந்த டீக்கடைதான் ஸ்பாட்.. ஒரு முறை ட்ரை பண்ணுங்க.. அட்டகாசம்.

பேஸ்புக் சினிமாக்கள்

  Facebook சினிமாக்கள் அதென்ன பேஸ்புக் சினிமாக்கள் . சினிமா எல்லாருக்குமானதுதானே ? என்று கேட்பீர்கள் . ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை . சோஷியல் மீடியாவுக்கென தனி சினிமா இருக்கிறது . அங்கு பாராட்டு பெற்றாலே அது வெற்றிப் படம் என்று இறுமாந்து மார் தட்டிக் கொள்ளும் கூட்டம் உருவாக ஆரம்பித்துவிட்டது . பேஸ்புக் சினிமாக்கள் ஷோஷியல் மீடியாவில் மட்டுமே பாராட்டு பெறும் . வெகு ஜனங்களிடையே பெயர் தெரியாமல் போகக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள திரைப்படங்களின் வரிசையில் இந்த பேஸ்புக் படங்கள் தான் முன்னிலை வகிக்கும் . ஜாதி   சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் ஒரு விஷம் என்று கருத்து சொல்கிற , ஒடுக்கப்பட்டவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற கூட்டத்தினர் கூட அவர் சாதி ஆட்களீன் படங்களை அது எப்படி இருந்தாலும் கொண்டாடும் மனோவியாதியை பேஸ்புக் படங்கள் கொண்டிருக்கும் . சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளுர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது “ வர வர ஸ்பெஷல் எழுத்தாளர் ஷோன்னா ஜன்னி வர ஆரம்பிசிருது . வெளிய வந்...

பேன் இந்திய படங்களால் அழியப் போகும் தெலுங்கு சினிமாவின் எதிர்காலம்.

தெலுங்குல எல்லாம் பாருங்க எப்படி இருக்காங்க ஹீரோக்கள் எல்லாம் . படம் ஓடலைன்னா காசைக் கூட திரும்பக் கொடுத்துடுறாங்க . கணக்கு வழக்கு எல்லாம் சரியா கொடுத்துருவாங்க . அதை விட முக்கியம் டிக்கெட் ப்ரைஸ் . ஹைதராபாத்துல 80 ரூபாய்க்கு புதுப்படம் பாக்கலாம் . அங்க பார்க்கிங் கிடையாது . ஸ்நாக்ஸுக்கு எம் . ஆர் . பி ரேட் தான் ” இப்படி நாலு பக்கத்துக்கு அக்கட தேச சினிமாவைப் பற்றி புகழ்ந்து கொண்ட்டிருந்தவர்கள் எல்லாம் விரைவில் நம்மூரைப் போல புலம்ப ஆரம்பிக்க போகிறார்கள் . அப்படி என்ன நடக்கப் போகிறது ? என்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரையே . சில பல வருடங்களுக்கு முன் மகதீரா என்கிற படம் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் வளர்ந்து வந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படம் . மிகப் பெரிய ஹிட் . இங்கே தமிழில் தாணு அவர்கள் டப் செய்து வெளிடப் போவதால் நேரடி தெலுங்கு பதிப்பு தமிழ் நாட்டில் கிடையாது என்று முடிவாகிவிட்டதால் , நானும் என் நண்பர்களும் நகரி போய் படம் பார்ப்பது என்று முடிவெடுத்து போய் பார்த்தோம் . படம் வந்து கிட்டத்தட்ட இருபது...