சாப்பாட்டுக்கடை - அட்டகாசமான மோர் வேண்டுமா?

 அட்டகாசமான மோர் சாப்புடுறீங்களா? என்று Shamanth Nag ஸ்டியோவில் நுழைந்தவுடன் கேட்டார். இண்டர்வியூ முடிச்சு சாப்பிடுவோமா? என்றதற்கு.. “இல்லை.. காலி ஆனாலும் ஆயிரும். இப்பவே போவோம்” என்று அழைத்துச் சென்றார். ஆளுக்கொரு மோர் ஆர்டர் செய்ய, அட்டகாசமான புளிக்காத, திக்கான, மிளகாய் எல்லாம் போட்ட ஜில் மோர் கொடுத்தார்கள். அடிக்கும் வெய்யிலுக்கு அநியாய அமிர்தம். ஒன்று குடித்து முடித்ததும், இன்னொரு க்ளாஸ், இன்னொரு க்ளாஸ் என மூன்று க்ளாஸ் மோர் குடித்து முடித்தேன். விலை எவ்வளவு என்று கேட்டேன். பத்து ரூபாய் என்றார் கடைக்காரம்மா. மிக சல்லீசான ரேட் தான். தேவைக்கேற்ப மோரை கடைந்து, கடைந்துதான் தருகிறார்கள். ஆடட் ப்ளேவராய் லைட்டாய் ஒரு சிறு துண்டு எலுமிச்சையை போட்டா இன்னும் நல்லாருக்கும் என்று ஒளிப்பதிவாளர் Jagadeesh Sundaramurthy சொல்ல, நான்காவது க்ளாஸ் மோரில் எலுமிச்சையோடு ஒரு ரவுண்ட். செம்ம டேஸ்ட். அசோக் நகர் ஆர்.3 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் இந்த டீக்கடைதான் ஸ்பாட்.. ஒரு முறை ட்ரை பண்ணுங்க.. அட்டகாசம்.


Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்