Posts

சாப்பாட்டுக்கடை - ஆற்காடு மெஸ்- தோற்ற கதை.

பல சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். 40-50 வருட பாரம்பரியம் உள்ள கடைகள் முதற் கொண்டு, புதியதாய் ஆரம்பித்திருக்கும் கடைகள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் மூடிய கடையைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. மூடியதை பற்றி எழுதி என்ன பிரயோஜனம்?. பல வருட பாரம்பரியம் உள்ள கடைகள் கால மாற்றத்தில் தக்க வைக்க முடியாமல் மூடியதில்லையா?. இதில்  எழுத என்ன இருக்கிறது என்று கேட்கலாம். மொக்கையான சின்னக்கடைகளை எல்லாம் வேற லெவல் கடை என்று வீடியோ போட்டு ப்ரோமோட் செய்யும் காலத்தில் எந்த விதமான ப்ரோமோஷனும் இல்லாமல் முப்பது வருடங்களுக்கு மேலாய் பூந்தமல்லி ரோட்டில், அமைந்தக்கரை முரளிகிருஷ்ணா தியேட்டருக்கு திரும்பும் இடத்தில், ஒரு பழைய பில்டிங்கில் இருந்த கடை தான் இந்த ஆற்காடு மெஸ். மதிய சாப்பாடு இங்கே மிகப் பிரபலம். குறிப்பாய் எறா தொக்கு, சிக்கன், மட்டன் குழம்புகள் அட்டகாசமாய் இருக்கும். இன்றைக்கு எல்லா நான்வெஜ் கடைகளிலும் கருவாட்டுக்குழம்போ, தொக்கோ இல்லாமல் இருப்பது இல்லை. ஆனால் அப்போது எல்லாம் கருவாட்டுக் குழம்பு எல்லா கடைகளிலும் கிடைக்காது. இவர்கள் கடையில் ஞாயிறு ஸ்பெஷல். அதை சாப்பிடுவதற்காக ஒரு பெரிய க...

சாப்பட்டுக்கடை - மன்னா மெஸ்

Image
சாப்பாட்டுக்கடை - மன்னா மெஸ் இந்தக்கடையைப் பற்றி பல பேர் சொல்லியிருக்கிறார்கள் . இக்கடையின் ஓனர் ஜெயராஜ் அவ்வப் போது பேஸ்புக்கில் விருந்தினர்களுடன் படமெடுத்து போட்டிருப்பார் . பெரும்பாலும் பயணங்களில் அசைவத்தை பலரும் தவிர்க்கவே நினைப்பார்கள் . முக்கியமாய் காரம் , மசாலா காரணங்களால் வயிறு பிரச்சனை கொடுக்க வாய்ப்புண்டு என்பதாலேயே தவிர்த்து விடுவார்கள் . சென்னையிலிருந்து 99 கிலோமீட்டரில் 99 கிலோ மீட்டர் எனும் உணவகத்தை நடத்து மனோவின் உணவகம் ஆரம்பித்ததிலிருந்து வெளியூர் போகும் போதெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன் . அற்புதமான , தரமான சைவ உணவு வேண்டுமென்றால் நிச்சயம் இவர்களைத்தான் ரெகமெண்ட் செய்வேன் . இந்த மன்னா மெஸ் மட்டும் நம் லிஸ்டில் எஸ்கேப் ஆகிக் கொண்டேயிருந்தது . காரணம் பெரும்பாலும் காலை உணவு நேரத்திலேயே அந்த ஏரியாவை க்ராஸ் செய்வதாலும் , அத்தனைக் காலையில் அசைவம் சாப்பிட வேண்டாமே என்கிற யோசனையாலும் தவிர்த்துக் கொண்டிருந்தேன் .  இம்முறை சரியாய் மதியம் தான் பாண்டிச்சேரிக்கு கிளம்பினோம் . கிளம்பும் போதே ஈ . சி . ஆர...

ஞான் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர்

ஞான் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர் “ சார் .. நம்ம ஆபீஸுக்கு டீ கொடுக்க ஒரு பையன் வருவான் . அவன் உங்களை மீட் பண்ணணுமாம் ?” என்றார் அலுவலக ஊழியர் . “ என்னவாம் ?” “ ரெண்டு நாள் முன்னாடி வந்து இங்க சினிமா சம்பந்தமா ஏதாச்சும் பண்ணுறீங்களானு ? கேட்டாரு . ஆமான்னே . அவரு ஒரு ஸ்க்ரீன் ப்ளே ரைட்டராம் அவராண்ட ரெண்டு மூணு கதை இருக்காம் அது பத்தி உங்களோட பேசணும்னு சொன்னாரு .. நேத்து டீ கொடுத்துட்டு கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணாரு . நீஙக் மீட்டிங்குல இருந்தீஙக் .. அதான் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வைக்கச் சொன்னாரு .. நாளைக்கு காலையில வரச் சொல்லட்டுமா ?” திறமை எங்கே வேண்டுமானாலும் இருக்கும் அதை கண்டுபிடிப்பதுதான் நல்ல கலைஞனின் கடமை என்று யாரோ சொன்னது நியாபகம் வந்தது .“ சரி நாளைக்கு காலையில வரச் சொல்லுங்க ” என்றிருந்தேன் . அடுத்த நாள் மதியமாய் வந்தான் .  “ உங்க பேர் ?” சொன்னான் . “ சொல்லுங்க தம்பி ” என்றேன் . “ சார் நான் ஸ்க்ரீன் ப்ளே எல்லாம் எழுதுவேன் . ரெண்டு கதை எழுதி வச்சிருக்கேன் . த்ரில் கதை . உங்களுக்கு ஏதாச்சும் வேணுமா ?” ...