Posts

கறி தோசையும் நானும்

  கறி தோசையும் நானும் எனக்கு கறி தோசை என்றால் மிகவும் பிடிக்கும். முதன் முதலில் நான் கறி தோசை சாப்பிட்டது மதுரை கோனார் மெஸ்ஸில். அதுவும் பழைய கடையில். ஒரு பள்ளமான இடத்தில் நின்றபடி மாஸ்டர் தன் இடுப்பளவுக்கு மேலான தோசைக்கல்லில் தோசை மாவை தூக்கி வீசிய லாவகத்தில் வட்டவட்டமாய் ஊற்றும் ஸ்டைலாகட்டும், முட்டையை உடைத்து அப்படியே ஒவ்வொரு தோசையின் மேல் கரெக்டாய் விழுந்த லாவகத்தை வாய்பிளந்து பார்த்தபடி ரெண்டு கறி தோசை ஆர்டர் செய்தோம். என்னைப் பொறுத்தவரை கறி தோசை என்பது அவ்வளவாய் புளிக்காத தோசை மாவில் கெட்டியாகவும் இல்லாமல், தளதளவெனவும் இல்லாமல் ஒரு மாதிரி தளுக்கான பதத்தோடு, முட்டையை எடுத்து ஊற்றி, அதில் நன்கு வெந்த கறித்துண்டுகளை மாவு கீழ் பக்கம் வெந்து கொண்டிருக்கும் போதே மேலே மாசாலாவோடு வைத்து அழுத்தி, நன்றாக எண்ணெய் விட்டு, கீழ் பக்கம் கருகாத பதத்தில் எடுத்தி அப்படியே ஒரு திருப்பு திருப்பி, இன்னும் நன்றாக எண்ணெய் விட்டு, கறி, விறகு அடுப்பு என்றால் சிறப்பு. அன் ஈவனான வெப்பத்தில் திருப்பிப் போட்ட தோசையில் உள்ள கறி மெல்ல வேக ஆரம்பித்து கிரிஸ்பியாய் மாறும் போது எடுத்து ஒரு திருப்பி திருப்ப...

Life Goes On

  இரண்டு நாள் முன்பு மாலை வேலை செம்ம டிராபிக். என் காரை நான் கிட்டத்தட்ட உருட்டிக் கொண்டு வந்தேன். பின்னால் இருந்து ஒரு பைக்காரன் ஹாரன் அடித்துக் கொண்டே வந்தான். ரியர் வியூ மிரரில் பார்த்தால் என்னை ஓவர் டேக் செய்யும் எண்ணத்துடன் ஒரு சைக்கிள் மட்டுமே போகக்கூடிய கேப்பில் பைக்கை வைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். நான் சைட் மிரர் வழியாய் பார்ப்பதை அவன் பார்த்துவிட்டு, ஏதோ கத்தினான். காரின் கண்ணாடி ஏற்றியிருந்த படியால் அவன் பேசியது கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் கத்திக் கொண்டே என் வண்டியை அத்தனை கிடிக்கிப்பிடி டிராப்பிக்கில் இடது புறம் ஓவர் டேக் செய்து, ஜன்னல் பக்கம் நின்று “ஒத்தா.. வழிவிட மாட்டியா? கொன்றுவேன்” என்றான். முகம் முழுவதும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. வெய்யில் வேறு மனிதன் கோபமாய் ஆவதற்கு ஏற்றார்ப் போல இருக்க, பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தேன். “ஒத்தா நிறுத்துடா.. வண்டிய.. நிறுத்துடான்னா” என்று கத்தினான். நான் பொறுமையாய் இரு வர்றேன் என்பத் போல வலது புறம் இருந்த பெட்ரோல் பங்கின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கினேன். எங்கே அவன் என்று அவனைப் பார்த்தால்...

Feminist -Review

  பெமினிஸ்ட் வெப் சீரியஸின் ஒரு எபிசோட் திரையிடப்பட்டது.. மிக சிறப்பாக இருந்தது.. இயக்குனராகவும் கேபிள் சங்கர் சார் மிகப்பெரிய உயரம் தொடுவார்.. Ra Venkat

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

ஒரு காலத்தில் ட்ராவல் செய்யப் போகிறோம் என்றாலே வீட்டிலிருந்து தூக்குசட்டியில் உணவு எடுத்துப் போன காலம் உண்டு. கடந்த இருபது வருடங்களில் ஹைவே உணவங்கள் மிக பிரபலமாக, பல உணவகங்கல் நல்ல தரத்துடன் இருக்க, பயணங்களில் உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லாமல் போனது. பயணங்களில் வெஜ் உணவுதான் சேஃப் என்ற ஒரு எண்ணத்தை ஒரு சில உணவங்கள் மாற்ற ஆரம்பித்தது. அப்படியான ஒரு உணவகம் தான் இந்த டி.கே மாப்பிள்ளை மெஸ். இனி நாம் நல்ல நல்ல நான் -வெஜ் உணவுக்காக 99-100 கி.மிட்டர் எல்லாம் பயணப்பட தேவையில்லை. சென்னையிலிருந்து திருச்சி ரோட்டில் சரியாய் 77வது கி.மீட்டரில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது.  நல்ல இண்டீரியருடன் ஏசி உணவகம். உள்ளே நுழைந்ததும் அவர்கள் போட்டிருந்த அறிவுப்பு போர்ட்டே ஆர்வத்தை ஏற்படுத்தியது.அஜினோமோட்டோ என்கிற சேர்க்கையே அவர்களின் உணவுகளில் கிடையாது என்றிருந்தார்கள். அதே போல பார்ப்பிக்யூ உணவுகளை சமைப்பதற்கு சல்பர் சார்க்கோல் உபயோகிக்காமல் சமைக்கிறோம். எல்லா உணவுகளை அவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணையில் தான் சமைக்கிறார்கள் என்று அறிவித்திருந்தார்கள். சாப்பிட வருகிறவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம...

டெலிவரி ஆஃபுகள் வரமா? சாபமா?

  டெலிவரி ஆஃபுகள் வரமா ? சாபமா ? சமீபத்தில் கும்பகோணத்திற்கு போயிருந்த போது சுவிக்கி டி சர்ட் போட்ட இளைஞர்களை ஆங்காங்கே பார்க்க முடிந்தது . அட இங்கேயும் வந்துட்டிங்களா மஹாப்பிரபு ?  என்று ஆச்சர்யப்பட ஏதுமில்லை . காரணம் லாஜிஸ்டிக் பிஸினெஸ் போல லாபம் வரும் தொழில் இல்லையென்றே சொல்ல வேண்டும் . ஆனால் அதற்கு சரியான எக்ஸிக்யூஷனும் , செயல் திறன் கொண்ட பின்னணியும் அமைய பெற்றிருக்க வேண்டும் . ஆன்லைன் உணவு டெலிவரி வியாபாரம் 2022 ஆம் ஆண்டின் கணக்குபடி 581.86 பில்லியன் ரூபாய்கள் என்றும் வருகிற 2028 க்குள் 3059.25 பில்லியன் வரை போகும் என்கிறார்கள் . இதில் உணவு டெலிவரி ஆப்களின் தொழில் வகைகளில் இரண்டு வகை உண்டு . ஒன்று எல்லா உணவகங்களையும் ஒன்றினைத்து அதன் மூலம் ஆர்டர்களை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி அவர்களைக் கொண்டே டெலிவரி செய்வது . இன்னொன்று ஆர்டர்களை தங்களது நிறுவன ஆட்கள் மூலம் பெற்று டெலிவரி செய்வது . இதில் இரண்டாவது வகைத்தான் இன்றைய பெரும் பிஸினெஸ் . உணவு டெலிவரி ஒரு காலத்தில் பிட்சா கடைக்க...