Thottal Thodarum

Dec 29, 2007

புதிய குறும்படம் "ஆக்ஸிடெண்ட்"

நான் சமீபத்தில் இயக்கிய குறும்படம் "ஆக்ஸிடெண்ட்" என்கிற இந்த குறும் படத்தை என்னுடய இணைய தளத்தில் ஏற்கனவே.. வெளீயிட்டுள்ளேன்.
பெறுவாரியான இணையதள மக்களிடம் அதன் வரவேற்பை அறியவே.. அந்த குறும் படத்தை இங்கே வெளியிடுகிறேன்.

அதற்கான லிங்க் இதோ...

http://www.shortfilmindia.com/ShortAccident.html

Post a Comment

4 comments:

பாலா said...

சரியா... 10:21-ல முடிவு என்னன்னு guess பண்ணிட்டேன் சங்கர். அதனால அடுத்த.. 7 நிமிசம் கொஞ்சம் நெளிஞ்சுட்டுதான் பார்த்தேன்.

‘போட்டோ’ கூட பேசறது.., ‘போன்’ கூட பேசறது... மாதிரி ‘சினிமா’தனமான சீன் இல்லாம... ஒரு 12-13 நிமிசத்துல முடிஞ்சி இருந்தா... இன்னும் effective-ஆ இருந்து இருக்கும்-ஙறது என்னோட அபிப்ராயம்.

17 நிமிச படத்துக்கு... ஏகப்பட்ட கோணங்கள்-ல shot வச்சி கலக்கி இருக்கீங்க...!!!

அதுக்காக... செந்தில்-க்கு ஒரு சபாஷ். ஹீரோ-வை சரியா வேலை வாங்காததுக்கு.. உங்களுக்கு ஒரு சின்ன குட்டு...!! :-))))

பாலா said...

அப்புறம்.. shortfilmindia.net இன்னும் ரெடி ஆகலயா??? உங்களோட மத்த குறும் படங்கள் எல்லாம் எங்க??? ’ப்லாக்’-லயும் எதுவும் இல்லை..!!

nagoreismail said...

சார், நான் ஆக்ஸிடண்ட் பார்த்தேன். நான் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட துறையில் இருக்கிறதால எனக்கு நீங்க எடுத்துக் கொண்ட கரு மிகவும் பிடித்திருக்கிறது.

தலைக்கவசம் அணிவது, சுய குறிப்புகளை வைத்துக் கொள்வது போன்ற அதிமுக்கியம் வாய்ந்த தகவல்களையும் தருகிறது உங்கள் குறும்படம்.

ஆனால் உண்மையில் 4 நிமிடம் முடியும் முன்பே நான் கணித்து விட்டேன். ஏனெனில், அந்த போட்டோவில் இருக்கும் படத்தை காட்டவே இல்லை என்பதால் எனக்குள் அந்த முடிவு ஏற்பட்டது. ஆனால், நல்லா இருந்திச்சு.

மருத்துவமனையில் மருத்துவர் சிவாவிடம் அவரின் மனித நேயத்தை பற்றி சொல்லும் போது சிவா யாரோ யாரிடமோ எதையோ சொல்வது போல் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கு ஒரு குளோஸ்-அப் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

புதுமனைவியாக நடித்தவர் ஆசை, காதல், தவிப்பை ஓரளவு நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.

கேட் வழியே சினிமா தியேட்டர்,'மீசையும் ஆளையும் பாரு' என்று கூறும் போது சட்டென்று வாய்க்கும் கண்களுக்கும் காட்சி மாறுவது என கோணங்கள் படம் பிடித்த இடம் எல்லாம் நன்றாக இருக்கிறது.

வாழ்த்துகள்..!

SelvamJilla said...

ji, recently i saw this Dedicated video platform "shortfunly" to watch and share your shortfilms. This google link is not working. can you share it on shortfunldy.