கடந்த ஒரு வாரமாய் ஏகப்பட்ட கால்கள். வழக்கமாய் ஒரு 30-50 போன்கால்கள் வரும். பிஸியான நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூட கூடும். ஆனால் என்னுடய இன்னொரு எண்ணுக்கு தொடர்ந்து கால்கள் வந்ததேயில்லை. மிகவும் சில நபர்களுக்கே அந்த நம்பர் தெரியும். கடந்த ஒரு வாரமாய் நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள். மிஸ்ட் கால்கள். வாட்ஸப்பில் “கந்தி” மெசேஜுகள் என குவிய ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம்? நம்ம காயாடு லோஹர் தான். எனக்கும் அவருக்கும் ஸ்நானப் ப்ராப்தி இது வரை கிடையாது. எதிர்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறது என்றாலும் வருகிற போன் கால்களில் எல்லாரும் கூப்பிடுவது பெரும்பாலும் வடக்கன்கள் “கயாடு லோஹர்?” என்று கேட்க, நான் என் கந்தர்வக்குரலில் ‘ஹலோ” என்றதும், டக்கென கட் செய்து விடுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். வெறும் “ஹலோ” மட்டுமே சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பார்கள். நானும் பொழுது போகாத நேரங்களில் “மெளனமான நேரம்” விளையாட ஆரம்பித்துவிட்டேன். சமயங்களில் கயாடு லோஹர் குரலில் “ஹலோ” என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, செம்ம சுவாரஸ்யமாய் சமயங்கள் போகும். அலோ மேட்டர் எல்லாம் போய் கொஞ்சம் கொஞ்சமாய் கயாட...
Comments
‘போட்டோ’ கூட பேசறது.., ‘போன்’ கூட பேசறது... மாதிரி ‘சினிமா’தனமான சீன் இல்லாம... ஒரு 12-13 நிமிசத்துல முடிஞ்சி இருந்தா... இன்னும் effective-ஆ இருந்து இருக்கும்-ஙறது என்னோட அபிப்ராயம்.
17 நிமிச படத்துக்கு... ஏகப்பட்ட கோணங்கள்-ல shot வச்சி கலக்கி இருக்கீங்க...!!!
அதுக்காக... செந்தில்-க்கு ஒரு சபாஷ். ஹீரோ-வை சரியா வேலை வாங்காததுக்கு.. உங்களுக்கு ஒரு சின்ன குட்டு...!! :-))))
தலைக்கவசம் அணிவது, சுய குறிப்புகளை வைத்துக் கொள்வது போன்ற அதிமுக்கியம் வாய்ந்த தகவல்களையும் தருகிறது உங்கள் குறும்படம்.
ஆனால் உண்மையில் 4 நிமிடம் முடியும் முன்பே நான் கணித்து விட்டேன். ஏனெனில், அந்த போட்டோவில் இருக்கும் படத்தை காட்டவே இல்லை என்பதால் எனக்குள் அந்த முடிவு ஏற்பட்டது. ஆனால், நல்லா இருந்திச்சு.
மருத்துவமனையில் மருத்துவர் சிவாவிடம் அவரின் மனித நேயத்தை பற்றி சொல்லும் போது சிவா யாரோ யாரிடமோ எதையோ சொல்வது போல் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கு ஒரு குளோஸ்-அப் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
புதுமனைவியாக நடித்தவர் ஆசை, காதல், தவிப்பை ஓரளவு நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.
கேட் வழியே சினிமா தியேட்டர்,'மீசையும் ஆளையும் பாரு' என்று கூறும் போது சட்டென்று வாய்க்கும் கண்களுக்கும் காட்சி மாறுவது என கோணங்கள் படம் பிடித்த இடம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்..!