Thottal Thodarum

Jan 4, 2016

கொத்து பரோட்டா -04/01/16

2015
எனக்கு பல விதமான அனுபவங்களையும், பாடத்தையும் புகட்டிய வருடம். 2013ல் ஷூட்டிங் ப்ளான் செய்யப்பட்டு, 2014 மார்ச்சில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்ட எனது முதல் படமான தொட்டால் தொடரும், 2015ல் பல தடைகளை கடந்து வெளியானது. வழக்கம் போல தியேட்டர்கள் கிடைக்காமை பெரும் சவாலாகி, முதல் நாள் 145 தியேட்டர்களுக்கு தயாராகி, அடுத்த நாள் அப்படியே பாதி திரையரங்குகளில் வெளியானது. ஓரளவுக்கு நல்ல ரெவ்யூ வந்ததும், தியேட்டர்கள் இல்லாமை பெரும் மைனஸாய் போனது. பின்பு நான்கைந்து மாதங்களுக்கு பின் வெளிநாட்டு ஆன்லைன் உரிமை விற்ற பிறகு உலகமெங்கும் ஆன்லைனில், டோரண்டில், யூ ட்யூபில் பார்த்து கிடைத்த நல் விமர்சனங்கள் கொடுத்தது எல்லாம் எனக்கு அனுபவம். இப்படம் உருவாகிக் கொண்டிருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் ரைட். குமுதத்தில் நான் கு பக்க கட்டுரை, சாப்பாட்டுக்கடை வீடியோ வடிவம், என சுவாரஸ்யத்துக்கு குறைச்சல் இலலி. அடுத்த கட்டமாய்,  சிவிகுமாருடன் அவரது இயக்கத்தில் ஆரம்பிக்க இருக்கும் திரைப்படத்துக்கு திரைக்கதை வசனமெழுதும் பொறுப்பு. ஒரு  சிறு முதலீட்டு இன்னோவேட்டிவ் முயற்சிப் படம், ஒர் பெரிய நிறுவனத்துடனான அடுத்த படைப்புக்கான பேச்சுவார்த்தை, என முயற்சிகள் சிறப்பாய் போய்க் கொண்டிருந்த நேரத்தில் வெள்ளம் வந்து மொத்தமாய் வாஷவுட் ஆக்கிவிட்டதை என்னவென்று சொல்ல?. நண்பர்கள் இல்லையென்றால் நானில்லை என்பதை மீண்டும் நிருபித்தது இந்த இக்கட்டு. நன்றி நண்பர்களே. இப்புத்தாண்டு இலக்கியவாதிகளோடு விடிந்தது வித்யாசமான அனுபவம். உயிர்மையில் என் முதல் கட்டுரையோடு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
என் ட்வீட்டிலிருந்து
Mediocre acting, consused heroine characterisation, half cooked second half inspite of all its bold and engaging..‪#‎MalaiNerathuMayakkam‬

If you want to get the worst experience of 3d visit inox virugambakkam @INOXLEISURE

காலுக்கடியில் குறுகுறுப்பை அடக்க முடியவில்லை. ‪#‎PointBreak‬

இந்த சட்டத்தினால் பக்தி மார்கம் தமிழ் நாட்டில் குறைய வாய்ப்பிருக்கிறது ‪#‎அப்படித்தானே‬

ஒரு வேளை வேட்டி கம்பெனிக்காரவுக சதியோ..?

ஜீன்ஸ் போட்டா உள்ள விடமாட்டேன்குறது எல்லாம் வேலைக்காகாது. கோயிலுக்கு வர்ற இளைய தலைமுறை கிட்ட வேட்டி வித்து காசு கொள்ளையடிக்க ப்ளான் போல

வாங்கிக்கோ வாங்கிக்கோன்னு காரை விக்க விட்டுட்டு,.. இன்னைக்கு ஒத்தபடை, நாளைக்கு ரெண்டை படை அது வெற்றின்னு எல்லாம் சின்னப்புள்ளதனமா இருக்கு

2015 ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் ‪#‎எனக்கு‬

கொடுக்குறதுன்னு முடிவாயிட்ட பொறவு எல்லாத்தையும் ப்ரீயா கொடுக்க வேண்டியதுதானே..நல்லவனாயிருந்தா? ‪#‎FreeBasics‬

குப்பனுக்கும் சுப்பனுக்கு நல்லது செய்யுறோம்னு எவனாவது கோடிக்கணக்குல விளம்பரம் செய்து பாத்திருக்கீங்களா?‪#‎FreeBasics‬

பேப்பர்ல பக்கம் பக்கமா விளம்பரம் கொடுக்குறத பார்த்தாலே தெரியலை.. இவனுங்க நமக்கு ஆப்பு வைக்கத்தான் ப்ளான் பண்றாங்கன்னு ‪#‎FreeBasics‬

தீபாவளியிலிருந்து 1000 பொருட்களுக்கு மேல் பரிசுன்னு வசந்த் அண்ட் கோ விளம்பரம். எக்ஸ்டெண்ட் ஆயிருக்கு. ஆனா இன்னமும் 1000தான்.அது எப்பூடி?

என்னதான் ஆனாலும் இப்படி துப்பியிருக்கக்கூடாது
1. தப்பு 2. தப்பில்ல 3. என்னாத்த சொல்றது 4. தப்புத்தேன் பட் ஐ லைக் இட்

பழசு தான் பழசே தான்.. ம்க்கும்.. ம்..ஸ்டார்ட் மீசிக்

ஒரு பொண்ணுக்கு, மூணு புருஷனை எல்லாம் டீவி சீரியல்ல காட்டுறாய்ங்க.. எங்கப்பா அந்த கலாச்சார க்ரூப்ஸ்

What finish..only thalaivar can do ‪#‎TheHatefulEight‬
@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை
சாப்பாட்டுக்கடை பதிவுகளுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையாய் அதன் வீடியோ வடிவத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. தன் மூன்றாவது வீடியோ இது. மாரி ஹோட்டல். வடகறிக்காக பிரபல்யம் அடைந்த உணவகம். 
@@@@@@@@@@@@@@@@
Star Wars The Force Awakens
ஏனோ தெரியவில்லை. மற்ற சீரீஸ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் போல ஸ்டார் வார்ஸ் சீரீஸுக்கு கிடைப்பதில்லை. இன்னமும் சுவிட்ச் தட்டினால் ரெட் கத்தியும், ப்ளூ கத்தியுமாய் சண்டை போடுவதை விட சுவாரஸ்யங்கள் நிறைய பார்த்தாகிவிட்டதினால் கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது.  இளைஞர்களை விட மிடில் ஏஜ் ஆட்கள் தான் நிறைய பேர் அரங்குகளில் இருந்தார்கள். மகாபாரத கதை போல.. கேரக்டர்கள் பெயர் தெரிந்தவர்கள் பின்னணி தெரிந்தவர்கள் அக்கேரக்டர்கள் வரும் போது விசிலடித்து கொண்டாடினார்கள். எனக்கு கதையாய் பெரிய சுவாரஸ்யமில்லையென்றாலும், போரடிக்கவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@
Point Break
ட்ரைலர் கொடுத்த இம்பாக்டில் முதல் நாள் முத ஷோவில் உட்கார்தாகிவிட்டது. நீர், நிலம், ஆகாயம், காற்று என சகல இடத்திலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளால் காலுக்கு அடியில் குறுகுறுக்க வைக்கிறார்கள். உலகெங்கும் கொள்ளையடிக்கும் அதெலெடிக் குழுவொன்று, கொள்ளையடித்ததை வைத்து பணம் சேர்க்காமல் உலக எகனாமிக்கோ எதோ ஒரு எழவை சமன் படுத்த போராடுகிறார்கள். அவர்களை பிடிக்க, மிகச் சிறந்த அதலெட்டான ஹீரோ அண்டர்கவராய் போய் உளவு பார்த்து பிடிக்கப் போகும் மொக்கை கதை. விஷுவலுக்காகவும், கற்பனைக்கெட்டாத ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும், நிச்சயம் பார்க்க வேண்டிய படம். தயவு செய்து ஐநாக்ஸ் விருகம்பாக்கத்தில் மட்டும் பார்த்து விடாதீர்கள் கண்களுக்கு முன் பாசிப் பச்சையில் அழுக்காய் ஒரு திரையில் தான் படம் பார்ப்பீர்கள். அம்பூட்டு அழுக்கு கண்ணாடிகளில். இடைவேளைக்கு பிறகு கேட்டால் கிடைக்கும் கோட்பாட்டில் ரெண்டு கவர் பிரிக்காத கண்ணாடி வாங்கி போட்டுப் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@
பசங்க 2
ஹைபர் ஆக்டிவ் பசங்களைச் சுற்றி நடக்கும் கதை. அக்குடும்பங்கள். அவர்களது ப்ரச்சனைகள் என ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் நாடகத்தனமாய் போகிறது. அக்குழந்தைகளின் நடிப்பு ஓகே. பையனின் அப்பாவாக வரும் முனீஷ்காந்த நன்றாக நடித்திருந்தாலும், அவரது க்ளப்டோமேனியாக் வியாதியும், கேரக்டரும் ஒட்டவில்லை. இன்னொரு பக்கம் பாஷ் கார்த்திக் குமார், பிந்து மாதவி பேமிலி. மிகவும் செயற்கையான குடும்பம். டிஸ்லெக்சியாவுக்கும், ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளின் ப்ரச்சனைகளுக்குமான வித்யாசத்தை பெரிதாய் கவனிக்காமல் ரெண்டையும் ஒன்றாக்கி குழப்பி அடித்திருக்கிறார்கள். ரெண்டாம் பாதி முழுக்க, விளம்பர ஏஜெண்ட் போல சூர்யாவும், அமலாபால் குடும்பமும். க்ளைமேக்ஸ் அதை விட மோசம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
பூலோகம்
பூலோகத்திற்கும், அவரது பரம எதிரியான லோக்கல் ஆளுக்குமிடையே நடக்கும் கதை, அவர்களின் ப்ரச்சனைக்கான பின்புலம். அவர்களிடையே இருக்கும் வன்மம், விளையாட்டை விளையாட்டாய் பார்க்காத வட சென்னை மக்களின் குழு மனப்பான்மை. என முதல் பாதி முழுவதும், நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஜெயம் ரவி ஆங்காங்கே கொஞ்சம் ஓவராய் நரம்பு  புடைக்க கத்தினாலும், டெடிகேஷனான உழைப்பு படம் முழுக்க, தெறிக்கிறது. முதல் பாதியில் எதிரியை வெல்லும் போதே கதை முடிந்துவிட, அதற்கு பிறகு, இம்மாதிரி போட்டிகளில் இருக்கும் விதி முறைகள். சாட்டிலைட் சேனல்களின் பின்புலம், பே சேனல் என்றால் என்ன? ஐநூறு கோடியெல்லாம் ரீஜெனல் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு வருமா? வட நாட்டு செமி பைனலிஸ்ட் ஏன் லோக்கல் தாதா போல இறங்கி அடிக்கிறான்? வெளிநாட்டு சைக்கோ வில்லன் க்ளைமேக்ஸில் திருந்துவது. என ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள். முதல் பாதியிலேயே படம் முடிந்திருக்கலாம். ஆங்காங்கே ஜனநாதனின் வசனங்கள் நரம்பு புடைக்க வைக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@
மாலை நேரத்து மயக்கம்
என்னதான் அடிச்சு கேட்டாலும் யாருக்கும் சொல்லாதே என்று சொல்லி இயக்கம் கீதாஞ்சலி செல்வராகவன் என்றாலும், படம் நெடுக தெரிவது செல்வராகவனே. அவரது டிபிக்கல் லோ செல்ப் எஸ்டீம் உள்ள பையன். ஹைஃபை பொண்ணு. அவர்களுக்குள்ளான ப்ரச்சனை. அதுவும் இதில் முக்கியமாய் திருமணம் ஆன பிறகான ப்ரச்சனை என்பதால் செக்ஸ் அதில் முதலிடத்தில் இருக்க, பெண் வாசனையே இல்லாமல் வளர்க்கப்பட்டவனும், நான்கைந்து பாய் ப்ரெண்ட் இருந்தாலும், தன் உடலை ஆள்பவன் தன் உள்ளத்தை ஆள்பவனாய் இருந்தால்தான் உடன்படுவேன் எனும் நிலையில் உள்ள பெண்ணுக்குமிடையே ஆன ப்ரச்சனையை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். டிபிக்கல் ரவி கிருஷ்ணா மாடுலேஷனில் பேச்சுக்கள். அந்த பெண்ணின் நடிப்பு நிச்சயம் பேசப் படும். அதற்கு முக்கிய காரணம் அவருக்கு டப்பிங் பேசிய தீபா வெங்கட். அவரின் நடிப்பு அட்டகாசம். மாலை  என்கிற பாடல் சந்தோஷ் நாராயணனின் பிட்ஸா பாடலை நினைவூட்டினாலும் இதம். போல்ட்டான தீம். சீரியஸான அடல்ட் கண்டெண்ட். எல்லாம் இருந்தும், ரெண்டாம் பாதியை க்ளீஷேவான காட்சிகளுடன், ஹீரோயினின் கேரக்டர் ஏன் இப்படி இருக்கிறது என்பதையும், அவள் ஏன் திடீரென மாறுகிறாள் என்பதையும் விளக்காமல் போய் விடுவதால் எதுவும் மனதில் நிற்காமல் போய் விடுகிறது. பட் ஒன் திங். ஒன்லி செல்வா கே டேக் தீஸ் டைப் ஆப் பிலிம் இன் டமில் :)
@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Two Men were out fishing when one decides to have a smoke He asks the other guy if he has a lighter He replies "Yes I do!" and hands the other a 10 inch long BIC lighter Surprised the guy asks "Where did you get this?" The guy replies "Oh I have a personal genie." The first man asks "Can I make a wish? " Sure says the other man "Just make sure that you speak clearly cause he is a little hard at hearing" "Ok I will" says the other as he rubs the lamp a genie appears and asks the man what he wants The man says " I want a Million Bucks " The genie says OK and goes back to his bottle and 10 seconds later a million ducks fly over head And the guy says to the other " Your genie realy sucks at hearing doesnt he?" The other man replies "I know, do you really think I asked for a 10 inch BIC" 
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

குரங்குபெடல் said...

" பட் ஒன் திங். ஒன்லி செல்வா கே டேக் தீஸ் டைப் ஆப் பிலிம் இன் டமில் :) "


அண்ணே . . . நீங்க அறிவுகொழுந்து அண்ணே . . .

Unknown said...

Bala

Unknown said...

Hi Cablesankar

I would say Pasanga-2 climax is good because of the content. Other part review may be okay but climax i was pleased because if you show something they are winning it will be cinematic climax. This way of climax .. parents know how to take step forward like that children and how to take all things positive. Also children will learn to take part in the show not considering results to be favored. This my view upon climax.

'பரிவை' சே.குமார் said...

கொத்துப்புரோட்டா கலக்கல் காக்டெயில்...