Thottal Thodarum

Jan 25, 2016

கொத்து பரோட்டா - 25/01/16

கேட்டால் கிடைக்கும்
வெள்ளத்தில் என் வீட்டு டெலிபோன் மற்றும் இண்டர்நெட் இரண்டாம் தேதி டிசம்பர் அன்று கட் ஆனது. அதன் பிறகு என் வீட்டு லைன் 18 ஆம் தேதிதான் திரும்பவும் வந்தது. ஆனால் அதற்கு பில் தொகையாய் ஒரு முழு மாத தொகையை கட்டச் சொல்லி, அனுப்பியிருந்தார்கள். போன் செய்து கேட்ட போது டிஸ்கவுண்ட் கொடுக்கிறோம் முன்னூறு ரூபாய் என்றார்கள். அது என்ன கணக்கு? எப்படி முன்னூறு ரூபாய் வரும். என்னுடய கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் எனக்கு எந்த விதமான டெலி கம்யூனிகேஷன் தொடர்பு உங்களது நெட்வொர்க்கில் இல்லையே என்று தொடர்ந்து கேட்டதில் மாதம் 1500 ரூபாய் பேக்கேஜில் இருக்கும் எனக்கு உடனடியாய் பில் தொகை வெறும் 535 கட்டச் சொல்லி வந்தது. அதே போனில் என் மொபைல் எட்டு நாட்கள் வேலை செய்யாததற்கு 180 ரூபாய் டிஸ்கவுண்டும் பெற்றேன். ஏதோ என்னைப் போன்ற வேலையில்லாதவர்கள் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் கேட்கிறோம் கிடைக்கிறது. இவனுங்க கிட்ட என்ன கேட்டு என்னத்த? என்று என்னத்த கன்னைய்யா போல இருக்கிற எத்துனை பேர் முழு பில்லையும் கட்டியிருப்பார்கள். இந்த ஏரியாக்களில் தங்களது லைன் வேலை செய்யவில்லை என்பது தெரிந்தே பில் அனுப்பும் ஏர்டெல் போன்ற கார்பரேட் நிறுவனங்களை என்ன செய்தால் தகும்? மக்களே பில்லை கட்டியிருந்தாலும் டைம் வேஸ்ட் ஆகுது என்று பார்க்காமல் கேளுங்கள் நிச்சயம் கிடைக்கும். அடுத்து சேஃப்பில் வைத்திருக்கும் லைனுக்கும் முழு பில் தொகை அனுப்பி டெய்லி டார்சர் செய்து கொண்டிருக்கிறார்கள். என் சித்தி வீட்டில் அவர்களுக்காக கேட்க புறப்படணும் பை.. கேட்டால் கிடைக்கும்

@@@@@@@@@@@@@@@@@@@@
சென்னையின் ரோடுகள் எல்லாம் அவசர கதியில் போடப்படுகிறது. நடு செண்டரில் மட்டும் ரோடு போடப்பட்டு, மீதி இரண்டு பக்கமும் வேட்டியின் கரை போல பழைய ரோடே. அதில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. உதாரணத்துக்கு, ஆற்காடு ரோடு ஃபேம் மால் சைட், வடபழனி 80அடி ரோடு இந்த பக்கமெல்லாம் சென்று பாருங்கள். எல்லாமே அரை குறை வேலை. இதுக்கு எதுக்கு ரோட்ட போடணும்? யாரை திருப்திப் படுத்த இந்த வேலை?. சரி அம்மாக்கிட்ட குறைய சொன்னா சரி பண்ணுவாங்கன்னு போனைப் போட்டா நாட் ரீச்சபிள்னு சொல்லுது.
@@@@@@@@@@@@@@@@@@@@
எல்லா படங்களும் கோடிக் கணக்கில் வசூலனாதாய் சொல்லிக் கொண்டிருக்க, நேற்று ஈரோட்டில் இருந்த அபிராமி அரங்கிலும், அதற்கு ஏத்ரே இருந்த ராயல் என்று நினைக்கிறேன். அங்கும் கூட்டத்தையே காணோம். இத்தனைக்கும் கெத்து, ரஜினி முருகன், தாரை தப்பட்டை ஓடுகிறது ஒரு அரங்கில் இன்னொன்றில் கதகளி மட்டும். எதிலும் கூட்டமேயில்லை. காலைக் காட்சியாகட்டும், மாலையாகட்டு, ஏன் நேற்றிரவு காட்சியாகட்டும். இத்தனைக்கும் பஸ்ஸ்டாண்டுக்கு எதிரில் இருகும் அரங்கங்கள். குமாரபாளையளம் கெளரியில் கூட ர்ஜினி முருகன் தான் ஓடுகிறது அங்கேயு ம் அதே நிலைதான். இன்னும் சில தியேட்டர்களை விசிட் அடித்த போது நிலையும் அதே தான். ஆனால் தினமும் ட்விட்டரில், பேஸ்புக்கில் மட்டும் கோடிக்கணக்கில் வசூல் என்கிறார்கள். ஈரோட்டில் மஹாராஜா என்ற ஒரு புது மல்ட்டிப்ளெக்ஸ் ஓப்பன் செய்திருப்பதாகவும். அதற்கு எங்களிடம் 120 ரூபாய் மட்டுமே டிக்கெட் என்று போஸ்டர் , பேனர் எல்லாம் வைத்து விளம்பரம் செய்திருக்கிறாரக்ள். இத்தனைக்கும் அதே அரங்கில் ஒரு திரையரங்கில் சோபா போட்டு 500 ரூபாய் வரிஅ டிக்கெட் விற்கிறார்களாம். மற்ற திரையரங்குகளில் புது படமென்றால் குறைந்த பட்சம் முன்னூறிலிருந்து 150 வரை விற்பார்க்ளாம். மஹாராஜாவினால் 80க்கு வந்ஹ்டிருப்பதாய் தகவல்.. இவர்களுக்கு யார் 120க்கு விற்க அனுமதி அளித்தது? யார் 500 ரூபாய்க்கு டிக்கெட் விற்க அனுமதி கொடுத்தது.> சினிமாவை யாரும் அழிக்க வேண்டாம் .சினிமாக்காரர்களே போதும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@.
கதகளி
அப்பாவி நாயகன். அவன் மேல் கொலைப்பழி, அதனால் அவன் துரத்தப்படுகிறான். நான்கு நாட்களில் அவனுக்கு திருமணம் வேறு. எப்படி அதிலிருந்து தப்பிக்கிறான். யார் கொன்றார்கள் என்பதுதான் கதை. ஒரு மணி நேரத்தில் சொல்ல வேண்டிய கதையை காதல் கதை ப்ளாஷ்பேக் என நீட்டி முழக்கியிருக்கிறார்கள். அதனாலேயே படத்தின் கெத்து குறைந்துவிட்டதாய் தோன்றுகிறது. அதிலும் விஷால் போன்ற ஹீரோ பம்மிக் கொண்டேயிருக்கும் போது க்ளைமேக்ஸில் அவர் தான் எல்லாவற்றையும் செய்திருப்பார் என்பது உ.கை.நெ.கனியாய் தெரிந்துவிடுவதால் திரில் ஏதுமில்லை. சரி வேறு யார் கொலை செய்திருப்பார்கள் என்ற திசை மாற்று வேலைகளும் சரிவர கையாளப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் க்ளைமேக்ஸில் ஹீரோத்தனமான சிரிப்புடன் நான் தான் கொன்றேன் என்று விஷால் சொல்லுமிடத்தில் அவர் ஏதும் ப்ளான் செய்து கொல்லவில்லை. அவங்க எல்லாம் துறத்தினபோது எதிர்பக்கம் வந்து கத்தியால குத்தினது எல்லாம் ஹீரோயிசம்னா என்ன ப்ரோ..? நல்ல ஒளிப்பதிவு, குறைவான ஓடும் நேரம் எல்லாம் ப்ள்ஸ். வேறு யாராவது ஒரு சின்ன ஹீரோ நடித்திருந்தால் சுவாரஸ்யப்பட்டிருக்கலாம். சொல்ல மறந்திட்டேன் அந்தப் பொண்ணு கேத்தரீன் ஹீ..ஹி..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
லோன் ஒரு விதத்தில் சரியென்றாலும்.. எனக்கென்னவோ....

நமக்கு பிடிச்சா மாதிரித்தான் மத்தவன் திட்டணும்னு எதிர்பார்க்குறது என்ன மாதிரியான டிசைன்? ‪#‎டவுட்டு‬

Though got some lagged moments.. it's engaging and intresting.. ‪#‎Airlift‬

குறை தீர்க்கும் நம்பருக்கு ட்ரை பண்றேன்.. பண்றேன்.. நாட் ரீச்சபிள்னு நாலு மொழியில சொல்லுதும்மா.
@@@@@@@@@@@@@@@@@
ஆரோக்யம் &நல்வாழ்வு
அசிடிட்டிப் பற்றி நிறைய படித்திருப்போம். கேட்டிருப்போம், ஏன் மருந்து கூட சாப்பிட்டிருப்போம். அதைப் பற்றிய ஒரு குட்டி வீடியோ நம் நியாண்டர் செல்வனிடமிருந்து, ஏன் அசிடிட்டி ஏற்படுகிறது? அதற்காக நாம் சாப்பிடும் மருந்தினால் வரும் கெடுதல் என்ன? அதை எப்படி சமாளிப்பது? என சுருக்கமாய், புரியும் படியாய் சொல்லியிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கோபி செட்டிப்பாளையத்தில் ஒரு குடும்ப விழாவிற்காக போக வேண்டியிருந்தது ஈரோடு வந்து செல்கிறேன் என்று போஸ்ட் போட்ட மாத்திரத்தில் நண்பர் தாமோதர் சந்துரு போன் செய்துவிட்டார். காலையில என்ன சாப்பாடு? எங்க? என்று கேட்டுவிட்டு, எல்லாம் நம்ம வீட்டுலேர்ந்து ஆரம்பிச்சிக்கலாம் என்று முடிவு சொல்லி போனை வைத்துவிட்டார். காலையில் நாலு ரோடு எனப்படும் ரெண்டு ரோட்டு முனையில் உள்ள ராணா லாட்ஜில் அறை எடுத்தோம். சிறிது நேரம் இளைப்பாறிய நேரத்தில் சந்துரு அழைத்தார். ரெடியா? குளிச்சாச்சா? நான் ரெடி என்று என் முன் நின்றார். கிட்டத்தட்ட 23 கிலோ பேலியோவினால் உடல் குறைந்திருந்து பார்க்க சிக்கென இருந்தார்.:). வீட்டிற்கு அழைத்துப் போய், மகன், மருமகள் பேத்தி ஆராதனாவை ஆகியோரை அறிமுகப்படுத்தினார். சுடச்சுட, இட்லி, நல்லெண்ணெயில் சமைக்கப்பட்ட மொறு மொறு முட்டை தோசை, வாயில் போட்டால் கரைந்து போகும் அளவில் நன்கு வேகவைக்கப்பட்ட இளம்கறிக் குழம்பு, மட்டன் சாப்ஸ் என காலை ப்ரேக்பாஸ்டை அதகளப்படுத்திவிட்டார். அபாரமான சுவை. அன்பான விருந்தோம்பல் என திளைக்க வைத்த தாமோதர் சந்துருவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வந்தவுடன் ட்ரேயில் தண்ணிருடன் வரவேற்ற குட்டி தேவதை ஆராதனாவுக்கு வாழ்த்தும், மற்றோருக்கு நன்றியும்.

அங்கேயிருந்து என் லாட்ஜுக்கு  அடுத்த பில்டிங்கில் இருந்த ஈரோடு கதிருக்கு ஒரு போனைப் போட்டேன் மனிதர், வாசலுக்கே வந்து வரவேற்று, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, என்ன ப்ரோகிராம் என்று கேட்க, மாலை கோபியில் ஒரு நிகழ்வு, அதுக்கு இங்கேயிருந்து கிளம்பணும். அதுக்க் முன்னாடி உங்களையெலாம் பாத்துட்டு, மதியம் லஞ்ச், யு.பி.எம்  போலாம்னு யோசிக்கிறேன். என்றதும். அது ஒரு முப்பது கிலோ மீட்டர் போவணும். முன்னயெல்லாம் அஹா ஹோன்னு சொன்னாங்க.. இப்ப அவ்வளவு சரியில்லை. அதுக்கு நீங்க அம்மன் மெஸ் போகலாம் கொமாரபாளையத்துல இருக்கு என்றபடி இருங்க ஆருரான் கிட்ட கேக்குறேன் நமக்கு சமைக்கிறவங்க ஒருத்தர் இருக்காரு அவரு இருந்தா நாமளே மதிய சப்பாட்டு சமைச்சு ஒரு பிடி பிடிக்கலாம் என்றார். அதற்குள் வால்பையனையும், அவரது நண்பர் கார்த்தியையும் அவரின் மேல் மாடி அலுவலகத்தில் சந்தித்தோம். மனிதர் முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். காத்தியின் அதே இனிமையான சிரிப்பு. மதிய சாப்பாடு ப்ளான் ஊத்திக் கொண்டதால் நாங்கள் கொமாரபாளையம் போவது முடிவாகி, கார்த்தியின் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றது சாப்பாட்டுக்கடை கதை. நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களுடனான சந்திப்பு இனிமை. நன்றி
@@@@@@@@@@@@@@@@@@@@@@
AirLift
குவைத்தின்  மீது சதான் அட்டாக் செய்த போது அங்கிருக்கும் இந்தியர்களை இங்கே அனுப்பி வைத்தவரைப் பற்றிய கதை. ஒரு டாக்குமெண்டரியாய் எடுக்க தூண்டும் நிஜ கண்டெண்ட். அதை அக்‌ஷய் குமார் போன்ற ஸ்டாரை வைத்து திரைப்படமாக்கியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான இந்தியர்களை மக்களை ட்ரான்ஸிட் செய்த இந்த உலக மகா நிகழ்வுக்கு காரணமானவர் தன்னை ஒரு குவைத்தியாகவே நினைத்துக் கொண்டிருந்தவர். அப்படிப்பட்டவர் செய்த உதவிதான் பெரிய விஷயம். தன்னை இந்தியராய் உணர்ந்த நேரம். அந்த ட்ரான்ஸ்மிஷன், அங்கே தங்கியிருக்கும் மக்களின் கேரக்டர்கள், உடன் வெளியேறிய குவைத்தி பெண்ணும், அவளது குழந்தையும். செல்ப் செண்டர்ட் மலையாளி குடும்பத் தலைவன் என நிறைய கேரக்டர்கள் மூலம் ட்ராமாவாக முயற்சித்திருக்கிறார்கள். ஆர்கோ போல தடக் , தடக் விஷயமில்லை. அதனால் பரபர காட்சியில்லாமல் போகிறது. க்ளைமேக்ஸ் பார்டர் சண்டையைத் தவிர. நிறைய ஜிங்கோயிச வேலைகள், பேட்ரியாட்டிங் விஷயம் என கமர்ஷியலாய் நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய சர்காரின் மெத்தனம், டெட் டேப்பிசம், மந்திரிகளின் அறிவு, மனித நேயம் கொண்ட சர்கார் அதிகாரி, அவரின் தன்னலமற்ற முயற்சி என இன்னொரு பக்கத்தை மிக யதார்த்தமாய் காட்டியதன் மூலம் சட்டென திரைப்படத்தை தாண்டிய ஒர் உணர்வு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் ஏர்லிப்ட் ஒரு குட் வாட்சபிள் கண்டெண்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A daughter asked her mother, "Mom, how do you spell 'scrotum'?" Her mom replied, "Honey, you should have asked me last night—it was on the tip of my tongue.” 
கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

குரங்குபெடல் said...

உங்கள் சாப்பாட்டு கடை வீடியோக்கள் நன்கு உள்ளன . . .

குறிப்பாக . . . படத்தொகுப்பு நன்றாக உள்ளது .

. . .

தொடர்ச்சியாக படம் எடுத்து நம்மை படுத்தும் பாண்டிராஜ் போன்ற இயக்குனர்கள் . .

நல்ல கதையோடு நீண்ட நாட்களாய் போராடும் பலரில் ஒருத்தருக்கு வாய்ப்பை கொடுத்து

ஒதுங்கினால புண்ணியமாவது கிடைக்கும் . . .

அதில் கதகளியின் முதல் 40 நிமிடம் என்ன செய்வது என்றே தெரியாமல் படத்தை எடுத்து வைத்துள்ளார்

ஈரோடு சுரேஷ் said...

மக்கள் காசு கொடுக்க ரெடியாத்தான் இருக்கிறார்கள்.. ஆனால் அவங்க வச்சு இருக்கிற தியேட்டர் அதற்கான தரம் இல்லையே..... இப்போ என்னோட நண்பர்களே கோயம்புத்தூர் போய் படம் பார்த்து விட்டு வந்துடுறாங்க, இங்க ஈரோடுல கொடுக்கிற காசுக்கு....