கொத்து பரோட்டா 08/02/16

கெத்து படத்துக்கு ஒரு வழியாய் ஹைகோர்ட் வரிவிலக்கு அளிக்க சொல்லி உத்தரவிட்டது. ஆனால்  இப்படத்திற்கு வரி விலக்கு கொடுக்கக் கூடாது என்று போராடிய தமிழக அரசின் முனைப்பு பெரும் காமெடியானது. இதில் கட்டிய முனைப்பை மற்ற மக்கள் நல திட்டங்களுக்கு செலவழித்திருந்தால் நல்ல பேராவது கிடைத்திருக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Breaking Bad
கடந்த ஒரு வாரமாய் தெனம் வீட்டிற்கு வந்த மாத்திரத்தில் ஹார்டிஸ்க்கை மாட்டி ரெண்டு எபிசோடாவது பார்க்காவிட்டால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது. காரணம் ப்ரேக்கிங் பேட் எனும் ஆங்கில சீரியல். ரெண்டே நாளில் ரெண்டு சீசன் பார்த்தாகிவிட்டது. இத்தனைக்கும் 2008ல் எடுக்கப்பட்ட சீரியல். எல்லா எபிசோடுகளும் 45 நிமிடங்களுக்கு அட்டகாசமான விஷுவல்களோடு, பரபரக்க வைக்கும் திரைக்கதை, ஆக்‌ஷன்களோடு போகிறது. சினிமா கெட்டது. என்பதுகளில் அமெரிக்க ஸோப் ஓப்ராக்களை வைத்து உட்டாலக்கடி செய்ய ஆர்மபித்து, ஒருத்திக்கு ரெண்டு புருஷன், ஒரு கள்ள காதலனென ஆரம்பித்த இந்திய சீரியல்கள் அதனிலிருந்து வெளி வர முடியாமல் இன்றைக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்திய மொழிகள் அனைத்திலும், உன்னையும் உன் குடும்பத்தையும் அழிக்காம விடமாட்டேன். என கண் முழுவதும் மை அப்பிய வில்லிகள் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹிந்தியில் இம்மாதிரியான சீரியல்களை சமீபத்தில் அமிதாப்பை வைத்து சோனி ஆரம்பித்தது கிட்டத்தட்ட சினிமா போல பட் பெரிதாய் செல்ப் எடுக்கவில்லை. இன்னமும் சில சேனல்கள் ஆரம்பிக்க இருக்க, இந்தியில் விரைவில் இந்த சீரியல்கள் எல்லாம் ரைட்ஸ் வாங்கப்பட்டு ரீமேக்காகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்ன அந்த சீரியல்களை நாம நம்ம ஊர் சேனல்களில் டப்பிங்கில் மட்டுமே பார்க்க முடியும். ஏனென்றால் பட்ஜெட் அப்படியாக இருக்கும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெங்களூர் நாட்கள்
மலையாளத்தில் உருகி உருகி பார்த்த படம். சென்னையிலேயே நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம். மலையாளத்தில் நிஜ வாழ்க்கை தம்பதிகளான பகத் பாசிலும், நஸ்ரியாவும் நிழல் வாழ்க்கையில் ஒட்டுதல் இல்லாமல் வாழும் தம்பதிகளாய் நடித்திருக்க, இன்னும் கொஞ்சம் ஆடட் அட்வாண்டேஜாய் படம் நெடுக ஒரு நெருக்கமான உணர்வைக் கொடுத்தது என்பதை சொல்ல வேண்டும். அது இப்படத்தில் இல்லை என்பது போன்ற சப்பைக் காரணங்களை மீறீ முடிந்தவரை பெயித்புல் ரீமேக் தான். என்ன காஸ்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம். ஆர்யாவாகட்டும், பாபியாகட்டும் ஒரிஜினல் படத்தில் துல்கரின் எந்நேரமும் வெடிக்கத் தயாராக இருக்கும் பாம் போன்ற ஒரு துறுதுறுப்பு  அவரிடம் இருக்கும் இதில் டோட்டலாய் மிஸ்ஸிங். அதே போல நிவீன் பாலியின் கண்களில் தெரியும் ஒரு இன்னொசென்ஸ். அதைக் பாபியிடம் கொண்டு வர, தழைத்து வாரிய தலை முடி விக்கும், ஸ்பெக்ஸினாலும் கொண்டு வர முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீதிவ்யாவிற்குள் இருக்கும் துள்ளல் அளவிற்கு டெப்தான ரியாக்‌ஷன்களில் ஒர்க்கவுட் ஆகவில்லை. ஒரிஜினல், மற்றும் ரீமேக்கிலும் ஸ்கோர் செய்தவர் பார்வதி மேனன் மட்டுமே. ஒரிஜினல் படம் பார்த்த போது கிடைத்த அதே நெகிழ்வு இவரின் காட்சிகளில். மற்றபடி கோபி சுந்தரின் இசையில் மாங்கல்யம் தந்துனானா பாடலைத் தவிர பெரிதாய் பாடல்கள் ஈர்க்கவில்லை. குகனின் பளிச் ஒளிப்பதிவு. ஆங்காங்கே ஆர்யா கேரக்டர் கிடைத்த பொருட்களை வைத்து செய்யும் கைவினை எக்ஸ்ட்ராக்ட்கள், பெயிண்டிங்கிற்கு பதிலாய் கார் மற்றும் பைக்கின் உதிரி பாகங்களை வரையப்பட்ட பார்வதியின் ஓவியம் போன்ற கிடைக்கிற இடங்களில் பொம்மரில்லும் பாஸ்கர் ஸ்கோர் செய்கிறார். கம்பேர் செய்யாமல் பார்த்தால் ஓக்க்க்கே படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மனித உரிமை, சிஸ்டம், போன்ற டகால்டி வார்த்தைகளை எல்லாம் மீறி அதே வார்த்தைகளுக்கான ஒரிஜினல் அர்த்தத்தை போலீஸின் பார்வையில் ‪#‎ActionHeroBiju‬

Good. Engaging. Some places stunning. But too predictable

nice to see a full house in pvr 3rd time ‪#‎iruthisutru‬ @sash041075

அரசு ஊழியர்கள் மேல் லஞ்ச புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு வேணுமாம். இனி புகார் வேலை செஞ்சா மாதிரிதான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தவிதமான் வியாபாரத்திலும் தலையிட மாட்டோம்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு. அத நம்பி ஒரு புது டிஜிட்டல் நெட்வொர்க். ஆரம்பிச்சிருக்காங்க.. வார்த்தைய காப்பாத்தணும். கண்கள் பனித்து இதயம் உருகிறக்கூடாது.

what a sereis.. finished first season couldn't able to stop ‪#‎BreakingBad‬
@@@@@@@@@@@@@@@@@@@@@@
பேலியோ புகழ் நியாண்டர் செல்வனின் இன்னொரு புதிய வீடியோ, நான்கைந்து பக்கங்கள் எழுதி சொல்வதை விட இம்மாதிரியான வீடியோக்கள் மிகச் சுலபமாய் சென்றடையும் அதை நியாண்டர் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இந்த வீடியோ ஆண்மைக் குறைபாடு குறித்து மிக எளிமையாய், தெளிவாய் விளக்கியிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விசாரணை
முடிக்க முடியாத கேஸ்களில் ஆள் அட்ரஸ் இல்லாமல் இருக்கும் ஆட்களைப் பிடித்துக் கொண்டு வந்து அடித்து உதைத்து, கேஸை ஒத்துக் கொள்ள வைப்பது தொன்று தொட்டு வரும் போலீஸ் பழக்கம். இப்பழக்கத்தினால் குற்றமே செய்யாமல் கிரிமினல் குற்றவாளியாய் வளைய வருகிறவர்கள் இருக்கிற ஊர் நம்ம ஊர். அப்படியான ஊரில் ஆந்திராவுக்கு வேலைக்கு செல்லும், தமிழ் இளைஞர்களை பிடித்து அடித்து உதைத்து கேஸை ஒப்புக் கொள்ள வைக்கும் அராஜக் முயற்சி ஒரு புறமும், இன்னொரு பக்கம் வொயிட் காலர் கிரிமினலான கிஷோரை பிடித்து விசாரிக்கும் ஒரு புறத்தையும் காட்டியிருக்கும் படம். போலீஸ் எனும் சிஸ்டம் எப்படி புரையோடிப் போயிருக்கிறது?. கேள்வி கேட்க முடியாதவனிடம் எப்படி நடந்து கொள்கிறது? வசதி படைத்தவனிடம் எப்படி நடந்து கொள்கிறது என்பது உரித்துக் காட்டியிருக்கிறது படம். 

போலீஸ் செக்கிங்கின் போது முஸ்லிம் பெயர் சொன்னவுடன்,  எந்த க்ரூப்? அல்கொய்தாவா? என கேட்பது இல்ல தமிழ் என்றவுடன் அப்ப எல்.டி.டி.யா? என்று கேட்குமிடங்கள் எல்லாம் அட்டகாசம். போலீஸ் ஸ்டேஷனில் அவர்களை அடிக்கும் முறையில் டிபிக்கல் போலீஸ் அடிகள் அதில் எத்தனை விதங்கள் என்பதை நுணுக்கமாய் காட்டியிருக்கிறார்கள். சொல்லப் போனால் தினேஷின் முதுகில் மரப்பட்டையை வைத்து அடிக்கும் காட்சி அவ்வளவு நிஜம். 

ஒரு கட்டத்திற்கு மேல் படம் திரும்பத் திரும்ப ஒரே நிலையில் சுழன்று கொண்டேயிருக்கிறது. போலீஸ் ஸ்டேஷன் அவர்களின் அடி, தந்திரங்கள் எல்லாம் இது வரை தமிழ் சினிமாவில் சொல்லாத விஷயமாய் ஏதுமில்லை. டிபிக்கல் மசாலா படங்களிலிருந்து சமீபத்தில் வந்த கிருமி வரை போலீஸ் சிஸ்டத்தில் இருக்கும் ப்ரசனைகள், பாதிப்புகள் ஆகிவையை சொல்லி வந்தவைகளே. எனவே ஒரு கட்டத்திற்கு மேல் ஷிப்ட் ஆகும் சாதிக் பாட்சா டைப் கிஷோர் விசாரணை கொஞ்சம் சினிமாவுக்காக எழுதப்பட்டதாய் இருந்தாலும், கிரிப்பிங்.. முக்கியமாய் சமுத்திரக்கனி, கிஷோர் விசாரணைக் காட்சிகள். க்ளைமேக்சில் வரும் ஷுட் அவுட் காட்சிகள். க்ரிஸ்ப் எடிட்டிங் அண்ட் மேக்கிங். அட்டகாசம். அட்ரிலினை எகிற வைக்கும் காட்சிகளாய் தெரிகிறது. சரவண சுப்பையாவில் ஆரம்பித்து, போலீஸ் பட்டாளத்தில் இருக்கும் அத்துனை நடிகர்களின் நடிப்பும்  குறிப்பாய் ராமதாஸ் ஆஸம்.

“எப்பத்தான் வேலைய கத்துக்க போறீங்களோ” 

”ஈசியா முடிய வேண்டியத இப்படி இழுத்துட்டீங்க?”

“யோய்  நான் என்ன உன்னை மாதிரி இதே பொழப்பாவா அலையுறேன்”

“உன்னை வச்சி என்னை முடிச்சாங்க.. இப்போ என்னை வச்சி உன்னை முடிக்கப் போறாங்க” என்பது போன்ற ஷார்ப் வசனங்கள் செம்ம லைவ்.

ஆனால் பாதியில் இறங்கிப் போன சந்திரக்குமாரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டதை விட ட்ராமாவாக, கொஞ்சம் சினிமாவாக இருந்தாலும் க்ளைமேக்ஸ் என்கவுண்டர் சீன் தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. போலீஸ் அட்ராஸிட்டி, சிஸ்டம், போன்றவைகள் கதற கதற இந்திய சினிமாக்களில் எல்லாவிதமான படங்களிலும் சொல்லப்பட்டவைதான். கமலின் குருதிப்புனல், மகாநதி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, போல பல தெலுங்கு படங்கள் உட்பட சொன்னவைதான். நல்ல குவாலிட்டி மேக்கிங், எடுத்த விஷயத்திலிருந்து நழுவாமை. எல்லாம் மற்ற படங்களிலிருந்து ஒரு அடி விலகி நிற்கவைக்கிற மேஜிக் வெற்றிமாறனுக்குறியது. மற்றபடி வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Action Hero Biju
டத்தின் தலைப்பைப் பார்த்ததும் அட்டகாசமான ஆக்‌ஷன் படமென்று நினைத்தீர்களானால் அது மட்டுமில்லை. எல்லாமும் இருக்கிற படம் என்று சொல்ல வேண்டும். கதையென்று என்ற ஒரு பெரிய வஸ்து படத்தில் இல்லை. ஆனால் கதையிருக்கிறது. டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐயின் ப்ரொபஷனல் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதை. ஸ்டேஷனின் வரும் கேஸ்களை கொண்டு கோர்க்கப்பட்ட திரைக்கதை, விரக்தி, கோபம், அரசியல் தலையீடு, நேர்மை, கயமை, காமெடி, பாடல், கொண்டாட்டம், நெகிழ்ச்சி, துக்கம், நிஜம், பொய், மனித உரிமை மீறல், சிஸ்டம் போன்ற எல்லா விஷயத்தையும் பேசுகிறது. படம் நெடுக உறுத்தாமல் ஊடாடும் காமெடி வசனங்கள், முக்கியமாய் சீட்டாட்ட க்ரூப்பை பிடிக்கும் காட்சி சிரிச்சு மாளலை. என படம் நெடுக அட்டகாசப் படுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் ஹீரோ நிவின் பாலி. ஆங்காங்கே ஹீரோயினாய் வரும் பெண்ணின் க்ளோசப்புக்கள் அவரை இன்னும் கொஞ்ச நேரம் காட்ட மாட்டார்களா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்தினாலும் இடைவேளைக்கு பிறகு வரும் பாடல் காட்சியில் போதும்பா என்று ஆக்கிவிட்டார்கள். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் வாழ்க்கையில் அவருக்கு ரொட்டினானாலும், நமக்கு சுவாரஸ்ய குதுகலமாய் அமைதிருக்கிறது ஆக்‌ஷன் ஹீரோ பிஜு. அடிபொளி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Which sexual position produces the ugliest children? 
Ask your mother.
கேபிள் சங்கர்

Comments

Unknown said…
//ஒரிஜினல் படத்தில் துல்கரின் எந்நேரமும் வெடிக்கத் தயாராக இருக்கும் பாம் போன்ற ஒரு துறுதுறுப்பு அவரிடம் இருக்கும் இதில் டோட்டலாய் மிஸ்ஸிங். அதே போல நிவீன் பாலியின் கண்களில் தெரியும் ஒரு இன்னொசென்ஸ். அதைக் பாபியிடம் கொண்டு வர, தழைத்து வாரிய தலை முடி விக்கும், ஸ்பெக்ஸினாலும் கொண்டு வர முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீதிவ்யாவிற்குள் இருக்கும் துள்ளல் அளவிற்கு டெப்தான ரியாக்‌ஷன்களில் ஒர்க்கவுட் ஆகவில்லை.// padam than remakena review kooda va ena ji ipdi panringa

http://m.thehindu.com/features/cinema/cinema-reviews/bangalore-naatkal-review-a-likeable-remake-despite-minor-casting-issues/article8202076.ece
பரதேசி படத்தில் நாஞ்சில் நாடனின் சிறுகதை ஒன்றையும் , ரெட் டீ நாவலையும் சேர்த்து . .
சொந்த சரக்கையும் சேர்த்து கொடுமை படுத்தினார் பாலா . . .

அதே விசயம்தான் வெற்றிமாறனின் விசாரணையிலும் . . .

லாக்கப் நூலோடு வங்கி கொள்ளை என்கவுண்டர் . . சேர்த்து குழப்பி . .

ஓவர் டோசாக ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளார் . .

பாத்திர படைப்பில் காணப்படும் எதார்த்தம் . . . திரைக்கதை அமைப்பில் இல்லாதது படத்தின் பெரிய குறை . . .

லைக்காவின் மீடியா கவனிப்பில் . . .படம் ம்ம்ம்ம்ம்ம்ம் . . .
bandhu said…
ப்ரேகிங் பேட் அட்டகாசமான ஷோ! எப்படித்தான் கடைசி எபிசோட் வரை இந்தப் பரபரப்பை மெயிண்டைன் பண்ணியிருக்கிறார்களோ!
Unknown said…
// ஓவர் டோசாக ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளார் . // miga sari
rajappa said…
Dear Cable Sankar
Try walking dead or game of thrones after breaking bad...both are good
கொத்துப்பரோட்டா கலக்கல்.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்