Thottal Thodarum

Feb 1, 2016

கொத்து பரோட்டா - 01/02/16

மல் ட்வீட்டருக்கு வந்திருக்கிறார். எல்லாருக்கும் வரும் ப்ரச்சனைப் போலவே ஆரம்ப கால ட்வீட்டர் பழக்கமில்லாமையும், தமிழ் தட்டச்சு ப்ரச்சனையும் அவருக்கு இருக்கிறது. ரெண்டு நாள் முன்னால் வெற்றிமாறன் என்பதற்கு பதிலாய் மணி மாறன் என்று டைப்படித்துவிட்டார். இதாண்டா சாக்கு என்று ஆளாளுக்கு ஓட்ட ஆரம்பிக்க, சில மணி நேரங்கள் கழித்து தன் தவறை உணர்ந்து கீ போர்ட் ப்ரச்சனை என்று புளுகினால் ஏன் என்று கேட்கக்கூட மாட்டார்கள் அப்படியிருந்தும், அது கீ போர்ட் தவறல்ல என் தவறுதான் என்று ஒத்துக் கொண்டு தான் மனுஷன் என்று நிருபித்துவிட்டார். ஆர்மபக் காலங்களில் இருந்து இன்று வரை விடாமல் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதுவது ஸ்டைல் என்று எழுதுபவர்கள் இருக்கிறவர்கள் உலகமடா இந்த இணைய உலகம்.
@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஓடிப் போய் ஒரு பாயிட் சிகரெட் வாங்கிட்டு வந்திரு கண்ணு -பத்து செகண்ட் முத்தம் ‪#‎சுஜாதா‬

we miss a lot of intense emotions because of this u certificate and tax free..

ஹீரோன்னு சொல்லிட்டு ரிச் பாயா யூஸ் பண்ணியிருக்காங்க. .

a kiss on her cheek tells a lot in climax ‪#‎SaalaKhadoos‬

after tamil Saw Hindi version too. other than opening scence and one or two shots, climax one dilague though same. i loved it ‪#‎SaalaKhadoos‬

what a performance @ritika_offl. spell bound.sure shot winner all the best @sash041075 @icvkumar @ActorMadhavan @Music_Santhosh

அம்மாவின் சாதனை விளம்பரப்படத்தை நிறுத்துவோம்னு தேர்தல் அறிக்கை கொடுத்தாங்கன்னா ரெண்டு ஒட்டு போடுறேன்.

இந்த இண்டர்வெல் அரசு சாதனை விளம்பரப்படத்த நிறுத்துறதுக்காகவே ஆட்சிய மாத்தணும் போல இருக்கு வாரத்துல நாலு படம் பாக்குற எங்களால முடியலை 

இனிமே நாம எங்க போனாலும் ஆள் வச்சி போட்டோ எடுத்து வேற ஒருத்தரை விட்டு போட்டோவ போடச் சொல்லணும்

மற்றவர்களின் ப்ரச்சனையைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாய் இருக்கிறார்கள் - மகாநதி வசனம் கரெக்ட் தான்

பணம் போனா திரும்ப வரும் என்ற வசனம் அபத்தம். ஏனென்றால் போன பணம் போனதுதான் திரும்ப அது வரவே வராது

வளைச்சி வளைச்சி அடிச்சி அனுப்பினாலும் ஒரு வாட்டி கெலிச்சிட்டா மறுக்கா வந்து உக்காந்திருது ஆசை

உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?
“இதுக்கு அறுநூறு.. இதுக்கு அறுநூறு” ஒரு நடுப்பகல் மரணம் முதலிரவு காட்சி வசனம் smile emoticon ‪#‎சுஜாதாடா‬

டெக்னாலஜியில் முன்னணியில் இருப்பவரின் லேட்டான என்ட்ரி ட்விட்டர். வா..தலைவா வா..@ikamalhaasan
@@@@@@@@@@@@@@@@@@@@
இறுதிச்சுற்று
தமிழில் விளையாட்டை மையமாய் வைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரிரு படங்கள் வந்திருந்தாலும் எந்த படமும் ப்ரொபஷனலாய் அதை வெளிப்படுத்தியது இல்லை என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் வந்த பூலோகம் உட்பட. அந்த வகையில் இப்படம் தமிழ் சினிமாவின் ஒரு அத்திப் பூ. சிடுமூஞ்சி கோச்சுக்கும், ஃபார்ன் டேலண்டோடு வளரும் மதி எனும் மீன் கார குத்துச்சண்டை பெண்ணிற்குமிடையே ஆன கதை. இம்மாதிரியான கதைகளின் டெம்ப்ளேட் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் அதிலும் உலகப்படங்களிலிருந்து இந்திப்படங்கள் வரை பார்க்கிறவர்களுக்கு இப்படம் அப்படி ஒன்று புதிதாய் சொல்லவில்லையே என்று தோன்றும் ஆனால் நிச்சயமாய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

மாதவனின் கண்ட்ரோல்ட் நடிப்பு. ரித்விக்கா சிங்கின் ஆர்பாட்டமான, அசால்ட்டான நடிப்பு. உடல் மொழி. ஒரிஜினல் பாக்ஸ்ர் என்பதினால் உடலில் வரும் ரிப்ளெக்ஸ் எல்லாம் அட்டகாசம். அவருடய அக்காக வரும் பெண்ணின் நடிப்பு அபாரம். நாசர் நன்றாக நடித்திருக்கிறார் என்பது சூ.டார்ச். அதிலும் சரக்கடிக்கும் போது லீவர் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான வியாக்கியானம் கொடுக்கும் அழகிருக்கிறது அட அட அட.. அதே போல அக்கா தங்கையிடையே ஏற்படும் பொறாமை. அத வெளிப்படுத்தும் காட்சிக்காக வெகுவாக பிரயத்தனப்படாமல், மிகச் சிறிய ஷாட்கள் மூலம், வன்மத்தையும் கோபத்தையும், அகங்காரத்தையும் வெளிப்படுத்திய விதம், பின்னால் நீ எனக்கு செய்தது தெரியும் என்பது போல ரித்விகா, அக்காவை சிறிய பார்வையினாலேயே தள்ளி வைக்குமிடமும், அதை அவர் உணர்ந்து தயங்குமிடமும் அட்டகாசம். கச்சிதமான ஒளிப்பதிவு, ஸ்லீக்கான எடிட்டிங். ஆக்கிரமிக்காத பின்னணியிசை. வித்யாசமான பாடல்கள், நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் என அசர அடிக்கக்கூடிய படமாய் அமைந்திருப்பதும் சரியான ப்ரோமோக்களும் கொடுத்திருக்கிறது. இப்படத்தில் குறைகளே இல்லையா? என்று கேட்டீர்களானால் இருக்கத்தான் செய்கிறது. பட் அதையெல்லாம் மீறி தமிழில் இம்மாதிரியான குவாலிட்டியான படங்கள் வருவது நல்ல விஷயமே. கோச்சுக்கும், மாணவிக்குமிடையே ஆன காதல் பற்றி ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறார்கள். க்ளைமேக்ஸுக்கு முன் அதை ரித்விகா நீ எனக்காக செய்யும் விஷயமெல்லாம் காதல் இல்லாமல் வேறென்ன? என்று கேட்கிறார். ஆனால் அதற்கான பதிலை இந்ஹ்டி வர்ஷன் படத்தில் ஒரே ஒரு கன்னத்து முத்தமிட்டு “மேரே மொகம்மது அலி” என்று மாதவன் கண்ணீர் விடும் காட்சி சொல்லும் நெகிழ்வும், காதலும், தமிழில் இல்லாதது வருத்தம். பட் என்ன தான் இங்க ஓடினாலும் இந்தியில் செல்ப் எடுக்காது .
@@@@@@@@@@@@@@@@@@@@@
அரண்மனை2
முதல் பாகம் யாருமே எதிர்பார்க்காத வகையில் சுமார் 45 கோடிக்கும் மேல் சம்பாதித்து கொடுக்க, விடுவார்களா? அதே செட்டப்பை வைத்துக் கொண்டு அடுத்த பாகத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் பாகத்திற்கு ஹிட் படமான ஆயிரம் ஜென்மங்கள் என்றால் இதில் அதே ஆயிரம் ஜென்மங்களை வேறு சில பல உட்டாலக்கடி செய்து முதல் பாகம் மாதிரியே திரும்பவும் எடுத்திருக்கிறார்கள். என்ன அதில் சந்தானம், மனோபாலா, கோவை சரளா மேட்டர் எடுபட்ட அளவிற்கு இதில்  எடுபடவேயில்லை. சூரியும் எவ்வளவோ முயற்சி செய்தும் சிரிப்புத்தான் வர மாட்டேன் என்கிறது. திரிஷா, பூனம் பாஜ்வா, திரிஷா எல்லாம் முதல் பாகத்தில் காட்டிய கவர்சிக்காக என்று நினைத்தால் இதில் அதிலும் முதலுக்கே மோசம். திரிஷாவை புடவையோடு, தண்ணீரில் நினைத்துக் காட்டுகிறார்கள்.விளங்கிடும். மிக மோசமான சிஜி. கண்டின்யூட்டி ப்ராப்ளம்ங்கள் என ஏனோ தானோ என்று இருக்கிறது படம்
@@@@@@@@@@@@@@@@@@@
சென்னையை ஸ்மார்ட் சிட்டி ஆக்கப் போகிறார்களாம். போன மாசம் பெய்த மழைக்கு போட்ட ரோடுங்க எல்லாம் கோவணம் கணக்காத்தான் போட்டிருக்கானுங்க.. ஒரு வேளை இது தான் ஸ்மார்ட் சிட்டிக்கான அடையாளமோ? இதனால என்ன ஆகுதுன்னா? வண்டிங்க எல்லாம் நல்ல ரோடு போட்டிருக்கிற பக்கமே போவதால் இடது பக்கம் பள்ளமாய் இருக்கும் பக்கம் வண்டிகள் போகாமல் அது நிறைய இடங்களில் பார்க்கிங் ப்ளேஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்கள் என்றால் சின்னச் சின்ன கடைகள் முளைக்க ஆரம்பித்திருக்கிறது.  வண்டி நிறைய போகணும்னுதான் எழுபது அடிக்கும் என்பது அடிக்கும் ரோடு போடுறாங்க.. அதுல ரெண்டு பக்கமும் சரிகை போல விட்டுட்டு என்பது அடி ரோட்டை அறுபது அடி ரோடு ஆக்கினா யாருக்கு பிரயோஜனம்?
@@@@@@@@@@@@@@@@@@@
நண்பர் விஜயன் நடத்தும் திரைப்பட இலக்கிய சங்கமத்தில் பேச அழைத்திருந்தார்கள். இம்மாதம் வெளியான திரைப்படங்களில் நான்கை தெரிந்தெடுத்து பேசச் சொல்லியிருந்தார்கள். அழகு குட்டி செல்லம், தாரை தப்பட்டை, கதகளி, ரஜினி முருகன். இதில் முதல் மற்றும் கடைசி படங்களைப் பற்றி மட்டுமே பேச விஷயமிருந்தது. முன்னதில் டிஸ்கஸ் செய்யும் அளவுக்கும் பின்னதில் பேசுவதற்கான விஷயம் எனும் அளவிற்கு. பலர் சின்ன திரைப்படங்களை திரையங்குகளில் சென்று பார்க்க முடியவில்லை என்று புலம்பினார்கள். ஏன் இப்படி திரையரங்குகாரர்கள் அநியாயம் செய்கிறார்கள் என்று புழுங்கினார்கள். திரையர்ங்கு மற்றும் விநியோகம் குறித்து எனக்கு தெரிந்ததினாலேயே சட்டென அவர்களை குறை சொல்ல முடியவில்லை. குறையில்லாமலும் இல்லை. மீண்டும் ஒரு விரிவான கட்டுரை எழுதும் எண்ணத்தை தூண்டியது இக்கூட்டம். நன்றி விஜயன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
"காந்தா” என மலையாள மீயூசிக் மோஜோவில் பிரபலமான பேண்ட் பாடல். அதே பாடலை அவர்களை வைத்தே.. தமிழில் உறியடி படத்துக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். சுவாரஸ்யமாய் வந்திருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
அமெரிக்க பே ஏரியாவில் உள்ள தமிழர்கள் எல்லோரும் இணைந்து தமிழ் குறும்படப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் பதிவர் இளா கூட போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியின் இறுதிச் சுற்று தற்போது நடக்கவிருக்கிறது. எல்லா கதைகளில் ஒரு ப்ளூ பை இடம் பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயத்தோடுதான் எல்லா படங்களும் அமைய வேண்டும் என்பது ரூல். அதில் ஒரு படம் தான் இந்த பிள்ளையார் படம். ப்ரொபஷனலாய் டெக்னிக்கல் குறைபாடுகள் இருந்தாலும் வாய் விட்டு சிரிக்க வைத்த குறும்படம்.  கமல் என்பவர் இயக்கியிருக்கிறார். 
@@@@@@@@@@@@@@@@@@@
இன்னொரு படமான ஓளிப்படம் என் நண்பர் தொட்டால் தொடரும் படத்தில் நடித்த ரஞ்சனின் குழு எடுத்திருக்கிறது இவர்களும் பைனல் லிஸ்டிலிருக்கிறார்கள்.இப்படத்தை விவேக் இயக்கியிருக்கிறார். கொஞ்சம் சூது கவ்வும், முண்டாசுப்பட்டி பேட்டர்ன் என்றாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. ஃபைனலிஸ்ட் படங்களை பார்க்க  http://www.bayareafinearts.org/shortfilm2016.php
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A young newlywed couple wanted to join a church. The pastor told them, "We have special requirements for new parishioners. You must abstain from having sex for two weeks." The couple agreed and came back at the end of two weeks. The pastor asked them, "Well, were you able to get through the two weeks without being intimate?" "Pastor, I'm afraid we were not able to go without sex for the two weeks," the young man replied. "What happened?" inquired the pastor. "My wife was reaching for a can of corn on the top shelf and dropped it. When she bent over to pick it up, I was over come with lust and took advantage of her right there." "You understand, of course, that this means you will not be welcome in our church," stated the pastor. "That's okay," said the young man. "We're not welcome at the grocery store anymore either."
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

சாதாரண கிராமத்தான் said...

auto correct works only for english words not for tamil words. He has already made a typo in English which he correctly accounted for auto correction. Not for this Manimaran to Vetrimaran. Any way he is very engaging in twitter. Looking forward to his tweets.

kurangupedal said...


ஆர்மபக் காலங்களில் இருந்து இன்று வரை விடாமல் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதுவது ஸ்டைல் என்று எழுதுபவர்கள் இருக்கிறவர்கள் உலகமடா இந்த இணைய உலகம்.



ஆர்மபக் . . . .


அருமையான ஒப்புதல் அண்ணே . . . .

kumar said...

குரங்கு பெடலை முழு மனதாக வழிமொழிகிறேன்.

kumar said...

ஆர்மபக் காலங்களில்,ஒரு பாயிட் சிகரெட்,ஃபார்ன் டேலண்டோடு,
அவருடய அக்காக வரும்,சரக்கடிக்கும் போது லீவர் ஆர்டர்,
கொடுக்கும் அழகிருக்கிறது,அதற்கான பதிலை இந்ஹ்டி வர்ஷன்,
"" குரங்கு பெடலை முழு மனதாக வழிமொழிகிறேன் ""

Cable சங்கர் said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கும் டைப்போ எரருக்கும் வித்யாசம் தெரியாமல் இருப்பவர்கள் உலாவும் இடம் தான் இணையம் . மிஸ்டர் குரங்கு பெடல் அண்ட் குமார்.. பாயிட் என்பது எதற்காக எழுதப்பட்டது என்பது தெரியாமல் புரியாம்ல கமெண்ட் அடிப்பது பார்த்தால் ம்ம்ம்... சரி விடுங்க..