Thottal Thodarum

Feb 16, 2016

கொத்து பரோட்டா - 15/02/16

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. இணையமெங்கும் இனி தமிழீழம் கிடைக்காது. அது இது என்று ம.ந.கூ கூட்டம் ஒரு புறமும். முன்னாடி இப்படி பேசினியே இப்ப எங்க போய் மூஞ்சிய வச்சிப்ப? என்பது போன்ற ரீதியில் கேள்விகளாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னவோ இப்போது தான் தமிழ் அரசியலுக வரலாற்றில் முதல் முறையாய் போன கூட்டணியில் திட்டியவர்கள் ஒன்றாய் கூடி ஓட்டுக் கேட்க வருகிறார்ப் போல.. உதிர்ந்த ரோமம், என் அம்மாவுக்கு பொறக்கலை, துரோகத்தின் மொத்த வடிவம், என் குடும்பத்திலிருந்து யாராவது பதவிக்கு வந்தால் சாட்டைய எடுத்து அடியுங்கள் என்பது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டு, மறந்து ஓட்டுப் போட்டவர்கள் தான் நாம் என்பதையும் மறந்து கருத்து சொல்லிக் கொண்டேத்தானிருக்கிறோம். சமீபத்தில் ஒர் அதிமுக முக்கிய பிரமுகரிடமும், அவர்களின் பேரவை உறுப்பினருடனும் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களில் வெற்றி வாய்ப்பு எப்படியென? கூட்டணி தான் முடிவு செய்யும். ஏன்னா.. வெள்ளத்திற்கு முன்னாடி எங்களுக்கும் என்பது சதவிகிதம் என்றால் இப்போ ஐம்பதுக்கு ஐம்பது ஆகிவிட்டது என்று தோன்றுகிறது முக்கியமாய் திமுக+ காங்கிரஸ்+ தேமுதிக சேர்ந்தால் கொஞ்சம் கஷ்டம் தான் என்றார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வில் அம்பு
பட்டர்ப்ளை எபெக்ட் என்று கமல் ஆரம்பித்ததை இப்போதுதான் இந்திய திரையுலகம் அதிகமாய் பயன் படுத்த ஆரம்பித்திருக்கிறது. சமீபத்திய தெலுங்கு ஹிட் படமான நானதோ ப்ரேமதோ, ஜில் ஜங் ஜக், இதோ இப்போ வில் அம்பு. என்ன இவைகளில் அதை சரியாக பயன்படுத்திய தமிழ் படம் இன்று வரையில் த்சாவதாரத்தோடு நின்று கொண்டிருப்பதை மறுக்க முடியாது. சந்திக்கவே சந்திக்காத இருவரின் வாழ்க்கை எப்படி அவர்களின் செயல்களால் பாதிக்கப்படுகிறது எப்படி அதிலிருந்து வெளி வருகிறார்கள் என்பதுதான் கதை. படம் முழுவதும் கோவையில் நடைபெறுகிறது ஆனால் நடிப்பவர்கள் அனைவரும் சென்னை பாஷையை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீ பார்ப்பதற்கு லோக்கல் சென்னை ரவுடி போலவே தெரிகிறார். நிறைய இடங்களில் நடிக்கிறேன் பார்.. நடிக்கிறேன் பார்.. என உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சட்டென மனதில் பதிகிறவர் ஹரிஷ் தான். சாந்தினி கேரக்டர் சுவாரஸ்யம். ஒரிரு பாடல்கள் சுவாரஸ்யம் படம் நெடுக அன்சர்டனிட்டியாய் வர வேண்டிய படம். ரொம்பவும் பாரேன் இப்படித்தான் சீன் வரப் போவுது என்று மக்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கே காட்சிகள் அமைக்கப்பட்டதினால் குறைவான நேரப் படமாய் இருந்தும் நீளமாய் தெரிகிறது. யோகிபாபு ஒரு ப்ளஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
வெள்ள பாதிப்பைப் பற்றி அதிமுக நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது மனசாட்சியோட சொல்ல்லுங்க.. வெள்ளத்த சரியான முறையில டீல் பண்ணி திறந்து விட்டிருந்தா இவ்வளவு நஷ்டம் உயிரிழப்பு இதெல்லாம் நடநதிருக்காது இல்லை. என்றேன். சற்றே யோசித்தவர்கள் அதெல்லாம் இல்லை சார்.. வெள்ளத்தினால யாருக்கும் நஷ்டமெல்லாம் கிடையாது? எப்படிங்க? என்றேன். அதான் 2000 கோடி வாங்கி கொடுத்துட்டாங்க இல்லை? என்றார் அசால்ட்டாய். ஏங்க எனக்கு கிட்டத்தட்ட எட்டு லட்சம் ரூபா காலி அது போல வெள்ளம் வந்த ஒவ்வொரு வீடும் அதே அளவுக்கு நஷ்டமாயிருக்கு அதுல வெறும் 5000 ரூபாய் என்னத்த திரும்பிக் கொண்டு வரும்? என்றேன் கோபமாய். இல்லை சார்.. வெள்ளத்தினால நிறைய பணப் புழக்கம் தான் ஏற்பட்டிருக்குன்னாரு.. எப்படி? என்றேன் புரியாமல். பின்ன வெள்ளம் வந்த ஏரியாவில இருந்தவங்க எல்லாம் வேற ஏரியாவுல வீடு பார்க்க ஆரம்பிச்சாங்க.. இங்கிருக்கிறவங்களை அங்க மாத்தி விட்டேன், இங்க காலியானதை திரும்ப பில்லப் பண்ணிட்டிருக்கோம் ரெண்டு மாசமா நான் பிஸி.. நல்ல காசு. நல்ல பணப் புழக்கம் இல்லையா? என்றார் அந்த வீட்டுப் ப்ரோக்கர் அதிமுக பாசரை பொறுப்பாளர். முடிக்கும்போது எல்லாம் அம்மா தயவால என்பதை மறக்காமல் சொல்லிப் போனார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
காதங்கிறது ஒரு எக்ஸ்டஸி..அதுனாலத்தான் கிடைக்கிற எடத்துல எல்லாம் தேடத் தொடங்கிவிடுகிறார்கள் போதைப் பிரியர்கள் 

காதல் என்பது?
இளைஞர்களுக்கானது
வயது வரம்பில்லாதது
காமத்திற்கானது
ங்கொய்யால..

அவரே தூங்கி அவரே எழுந்துக்குறாருன்னு எல்லாம் எழுதி அவரை அசிங்கப்படுத்தாதீங்கப்பா.. பாவம் அவரு..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்னையில் ரோடுகள் அனைத்தும் முழுதாகப் போடப்படாமல் நட்டநடுவே மட்டும் போடப்பட்டிருப்பதால் கடைகளின் முன் நிறுத்தும் வாகனங்கள் வேறு வழியில்லாம்ல் பாதி பள்ளத்தில் வண்டியை நிறுத்த முடியாமல் நடு ரோட்டில் வண்டியை விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சின்னச் சின்ன தெருக்களில் உடனடியாய் தார் ரோடுகள் போடப்படாமல் சிமெண்ட் கான்கிரீட் ரோடு போடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரோடு ஒவ்வொரு சிமெண்ட் கலரில் இருப்பது என்ன விதமான மிக்ஸிங்கில் இருக்கிறதோ என்று குழப்பும் அளவிற்கு சில ரோடுகளில் பாதி ரோடு ஒரு கலரும் மீதி ரோடு ஒரு கலருமாய் கூட இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

2 comments:

குரங்குபெடல் said...

" த்சாவதாரத்தோடு நின்று கொண்டிருப்பதை மறுக்க முடியாது "



" அவரே தூங்கி அவரே எழுந்துக்குறாருன்னு எல்லாம் எழுதி அவரை அசிங்கப்படுத்தாதீங்கப்பா.. பாவம் அவரு.."



நல்லா வருவீங்க அண்ணே . . .

'பரிவை' சே.குமார் said...

அதிமுக போல் கேவலப்பட்ட கட்சியும் இல்லை...
தொண்டர்களும் இல்லை...

மற்றவையும் வாசித்தேன்..