Thottal Thodarum

Mar 14, 2016

கொத்து பரோட்டா - 14/03/16

விகடன் ப்ளாக் என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. நான்கு பக்கங்கள் நாக்குத் தள்ள வலைப்பூக்கள் எழுதி வந்தவர்கள் எல்லாம், ட்வீட்டருக்கும், பேஸ்புக்கும் போய்விட, எழுத ஆளே இல்லாமல், திரட்ட வலைப்பூக்களே இல்லாமல் தமிழ் மணம் போன்ற திரட்டிகள் எல்லாம் காய்ந்து போயிருக்க, இத்தனை வருஷம் கழித்து விகடன் ப்ளாக் ஆரம்பித்திருப்பது ஏன் என்றே புரியவில்லை. விகடன் ப்ளாக் என்பது ஒரு திரட்டியைப் போல இருந்தால் கூட பிரச்சனையில்லை. இவர்களுக்கான கட்டுரையை நாம் அவர்களுக்கு மெயில் செய்து அவர்கள் செலக்ட் செய்த கட்டுரையை பின்பு வலையேற்றுவார்கள் என்பதும், அப்படி செலக்ட் ஆன கட்டுரை, படங்களை விகடன் வலைத்தளத்தில் வெளியிடுவதினாலும் பெருவாரியான மக்களுக்கு ரீச் ஆகும் என்றும், பிரதமர் எல்லாம் தமிழில் படித்து விருந்துக்கு கூப்பிட வாய்ப்பிருக்கிறது என்று பப்ளிக்குட்டி கொடுப்பதெல்லாம் செம்ம மொக்க ஐடியா. என்னைப் பொறுத்தவரை விகடன் ப்ளாக்க விட, சொந்த வலைப்பூ, பேஸ்புக், ட்வீட்டர் போன்றவற்றில் இயங்கும் சுதந்திரம் இதில் இருப்பதாய் தெரியவில்லை. அத்தோடு, இணையத்தை பொருத்தவரை தொடர்ந்து எழுதுகிறவர்கள் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப வளர்ந்து கொண்டு தானிருக்கிறார்கள் என்பது உ.கை.நெ.கனி
@@@@@@@@@@@@@@@@@@@@@
சசி போன்ற இயக்குனருக்கு மிகவும் தேவையான வெற்றி பிச்சைக்காரனின் வெற்றி. சொல்லாமலே காலத்தில் ரசிகராய் பார்க்க ஆரம்பித்தவரின் பட வெற்றி விழாவில் வாழ்த்தி பேசியதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இன்னொரு மகிழ்ச்சி இப்படத்தின் விநியோகஸ்தர்களான கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலான பழக்கம். தொடர்ந்து சினிமாவில் ஏதோ ஒரு விஷயத்தில் முட்டி மோதி, சாதிக்க வேண்டுமென்ற வெறி கொண்டு இயங்கியவர் அவரின் வெற்றி மிக்க மகிழ்ச்சியை அளித்தது. தோல்வி நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் பாஸ்ட் ட்ராக் என்பது நிதர்சனமான உண்மை.
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
I like sruthipedam and the actors performance in ‪#‎Aviyal‬ congrats @karthiksubbaraj

இப்ப கிடைக்கிறதை விட ஜெயிச்சப்புறம் வர்ற டிமாண்டே வேறயா இருக்கும்னு யோசிச்சிருப்பாரோ? ‪#‎கேப்டன்

all the best Nalan, @scriptz12 @abineshelango for ‪#‎kakapo‬..

after the call drop problem by trai.. @Airtel_Presence signal is getting very worst even very near by receiver lot of call drop in saidapet

Received call bk from airtel. Regarding call drop complaint in twitter. That first call dropped;)
@@@@@@@@@@@@@@@@@@
அவியல்
மீண்டுமொரு குறும்படங்களின் தொகுப்புப் படம். இம்முறை நான்கு படங்கள். எல்லா படங்களும் ஏற்கனவே தொடர்ந்து இணையம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறவர்கள் அறிந்து ஷேர் செய்யப்பட்டவைகளே என்றாலும் வெண் திரையில் பார்க்க சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது. நான்கு படங்களில் ஓப்பனிங் படமான “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் மச்சான்” செம்மையான படம். அடுத்ததாய் வரும் ஸ்ருதி பேதம்  இண்ட்ரஸ்டிங்கான கதை. சென்னையில் வசிக்கும் மார்வாடிக் குடும்பம்,  செம்ம பிகரா இருக்கேன்னு சைட் அடிச்சா அது தான் உன்னோட சித்தின்னா எப்படி இருக்கும்?. நடித்த நடிகர்களின் பர்பாமென்ஸ், வசனங்கள் எல்லாமே செம்ம க்யூட். முக்கியமாய் தாய் மாமாவை கல்யாணம் பண்ணிக்கும் போது தாய் சித்தியை கல்யாணம் பண்ணிக்க கூடாதா? என்பது போன்றவைகள் உதாரணம். நடித்த ரோகித்தின் நடிப்பில் கிட்டத்தட்ட பாபியின் சாயல் பாடி லேங்குவேஜில். ஆனால் அவரிடமில்லாத துள்ளலுடன் மிக அழகாய் செய்திருந்தார். அடுத்த படமான ”களம்” ஒரு ஆக்‌ஷன் திரில்லர். ரொம்பவே ப்ரெடிக்டபிளான கதை. மேக்கிங்.. நத்திங் மோர் தென் தட்.  அடுத்த படம் “கண்ணீர் அஞ்சலி” நண்பருடய அஸ்தியை கரைக்கப் போகும் போது நடக்கும் ட்ராவல் டார்க் ஹூயூமர். ஒரு கட்டத்திற்கு பிறகு முடிங்கப்பா என்று ஹூயூமர் டார்சராகிப் போனதை தவிர குறையேதுமில்லை. கட்டங்கடைசியாய் பழைய நிவின்பாலி, பாபி சிம்ஹா, அல்போன்ஸ் புத்திரன் இயக்கதில் ரொம்ப வருஷத்துக்கு முன்னால் வந்த “எலி”. டோரண்டினோ பாணி குறும்படம். விஷுவல்கள் நச். 
@@@@@@@@@@@@@@@@@@@@
காதலும் கடந்து போகும்
கொரியன் படத்தை ரைட்ஸ் வாங்கி எடுக்கிறேன் என நலன் சொல்வதற்கு முன்னாலேயே ஒரிஜினல் கொரியன் படத்தை பார்த்திருக்கிறேன். அதில் ரீமேக்க என்ன விஷயமிருக்கு என்பதை விட, ரீமேக்கினால் என்னன்ன மாற்றங்கள் வரும் அதுவும் நலன் போன்ற சிறந்த ரைட்டரிடமிருந்து என்ற ஒரு எதிர்பார்ப்பு என்னிடமிருந்தது. விஜய் சேதுபதிக்கு இது ஒரு கேட் வாக் கேரக்டர். மிக ஈஸியாய் கடந்துவிட்டார். குறிப்பாய் மிக நுணுக்கமான லுக், பாடி லேங்குவேஜ் என ஒரு சில இடங்களில் அருமையாய் செய்திருக்கிறார். மடோனா செபாஸ்டினை எனக்கு இதில் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒவ்வொரு காட்சியில் ஒவ்வொரு மாதிரியான் இருக்கிறார். ப்ரேமத்தில் இருந்த க்யூட், பப்ளினெஸ், அந்த கர்ள் ஹேர் எல்லாமே மிஸ்ஸிங். சந்தோஷ் நாராயணனின் பாடல்களில் போங்கு செம்ம ஆப்டாக ஆங்காங்கே உட்கார்ந்திருக்கிறது. ஹிட் பாடலான க.க.போ அதற்கு முன் காட்சியில் நட்நத சம்பவத்தின் ஆழத்தை விளக்கியிருந்தால் அந்த ஆட்ட அதிரிபுதிரியாய் போயிருக்கும். பட். அடக்கி வாசித்த்தால் பெரியதான் இம்பாக்டை கிரியேட் செய்யவில்லை.  தினேஷின் ஒளிப்பதிவு, லியோவின் எடிட்டிங். என எல்லாமே நலம். கொரிய படம் போலவே இப்படமும் மிக மெதுவாய் போகிறது. மாமல்லன் கார்த்தி, பாக்யம் சங்கர், போன்ற நண்பர்களுக்கு இப்படத்தின் மூலம் மீண்டுமொரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நலனிடமிருந்து நிச்சயமாய் சூது கவ்வும் 2 எதிர்பார்க்கவில்லை. பட்.. இப்படியான கிட்டத்தட்ட காட்சி, வசனம், மேக்கிங் முதற்கொண்டு ட்ரான்ஸ்லேஷனை எதிர்பாக்கவில்லை. இருந்தாலும் ஃபீல் குட்..மூவி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
How is a woman like a condom? Both spend more time in your wallet than on your dick.
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

N.H. Narasimma Prasad said...

''அத்தோடு, இணையத்தை பொருத்தவரை தொடர்ந்து எழுதுகிறவர்கள் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப வளர்ந்து கொண்டு தானிருக்கிறார்கள் என்பது உ.கை.நெ.கனி''

well said Shankar Anna...