Thottal Thodarum

Jun 20, 2016

கொத்து பரோட்டா - 20/06/16 - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - முத்தின கத்திரிக்காய்- Nani Gentleman- தவமாய் தவமிருந்து - வித்தையடி நானுனக்கு

மதியம் தந்தையர் தினத்து ஸ்பெஷலாய் சேரனின் தவமாய் தவமிருந்து போட்டிருந்தார்கள். ஏற்கனவே பல முறை பார்த்த படமாய் இருந்தாலும், ஜெயா ஹெச்.டி ஆக்கியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பேனாசோனிக் ஹெச்.டிகேமராவில் படமாக்க தமிழின் முதல் படம் எப்படி விஷுவலாய் ஹெச்.டி மாற்றத்தில் இருக்கிறது என்கிற ஆர்வம் வேறு தொற்றிக் கொள்ள மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் மூழ்கியே விட்டேன். பத்து பதினோரு வருடங்களுக்கு முன் தியேட்டரில் பார்த்த போது கிடைத்த அனுபவத்தை விட, இப்போது கிடைக்கும் அனுபவம் இன்னும் அழுத்தமாய் இருந்தது. அப்பா இருந்த போது பார்த்ததுக்கும், இப்போது இல்லாமல் பார்பதற்கு ஆயிரம் அர்த்தங்கள்,புரிதல்கள். க்ளைமேக்ஸுக்கு கொஞ்சம் முன்னால் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அப்பா, அம்மாவின் வயதோட்டம், மகனின் வாழ்க்கை முன்னேற்றம் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள், என ஸ்ரீகாந்த் தேவாவின் அருமையான பின்னணியிசையுடன், தொடர்ந்த லெந்தியான மாண்டேஜ் ஷாட்கள். அக்காட்சியின் முடிவில் சரண்யா மிகுந்த மகிழ்ச்சியோடு, தூங்க கண் மூடுவார். நம் மனதில் அவரின் சந்தோஷம் ட்ரான்ஸ்பர் ஆகும். இப்போது வரும் படங்களில் எங்கேயாவது கொஞ்ச நேரம் ஸ்டெடி ப்ரேம் வைத்தாலே.. லேக்.லேக் என்று எடிட்டரிலிருந்து கடை நிலை அஸிஸ்டெண்ட் வரை அலறும் காலமாயிருக்க, எமோஷனையே அவசர மோஷனாய் சொல்ல வேண்டிய கட்டாயம். படம் பார்த்த பின் ஞாயிறு ஆதலால் சேரனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தேன். மாலையில் அழைத்திருந்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அந்த படம் கொடுத்த அனுபவத்தைப் பற்றியும், புரிதல்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு பேரின் பேச்சும் பெரிய உற்சாகத்தை தந்தது. நன்றி சேரன் சார்.. உங்களது படத்திற்கும் நேற்றைய மாலை பேச்சிற்கும்..  அனுபவத்திற்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மறைந்த கவிஞர் குமர குருபரனை இவ்வாண்டு மனுஷ்யபுத்திரன் அளித்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தான் சந்தித்தேன். கவிஞர் என்று அறிமுகப்படுத்தினார்கள். அவர் என்னைத் தெரிந்திருந்தார். அம்மாத உயிர்மையில் வெள்ளம் குறித்து நான் எழுதிய கட்டுரையை வாசித்ததாய் சொன்னார். எனக்கும் கவிதைக்குமான தூரம் அதிகமென்பதால் நான் அதிகம் பேசவில்லை. வெளியே தனியே பேசிக் கொண்டிருந்த போது டிவி சேனல் ப்ரோகிராம் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். எதைப் பற்றி பேசினாலும்  ஞானத்தோடு கொஞ்சம் அழுத்தமாகவே பேசினார். அதன் பிறகு அவர் விருது பெற்ற செய்தி ஃபேஸ்;புக்கில் வந்திருந்து. அடுத்த நாளே அவரின் மறைவுச் செய்தி. வருத்தமாயிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் அவருடன் பேசியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் சன் நியூஸ் தொலைக்காட்சியில் உத்த பஞ்சாப் படத்தின் சென்சார் பிரச்சனை குறித்து பேச அழைத்திருந்தார்கள். ஒவ்வொரு படத்திற்கும் சென்சார் கொடுக்கும் அதிகாரிகள் பெரிய படமென்றால் ஒரு விதமான மனநிலையும், சிறிய படமென்றால் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் மனநிலையுடன் தான் கையெழுத்திடுகிறார்கள். என்னுடய தொட்டால் தொடரும் படத்திற்கு யூ சர்டிபிகேட் வாங்க அவர்கள் கொடுத்த சவுண்ட் மியூட்டெல்லாம் அபத்ததின் உச்சம். மியூட் போட்டா டபுள் மீனிங் ஆயிருங்க.. என்றேன்.. இல்லைங்க ஆபாசமா இருக்கு என்றார்கள். இன்றைக்கு “போடட்டுமா?’ என்று பெண்களைப் பார்த்து கேட்பது யூ சர்டிபிக்கேட் வசனமாகி விட்டது. சமீபத்தில் மெட்ரோ எனும் தமிழ் படம் இதே போன்ற பல இன்னல்களுக்கு உள்ளாகி வெளியாக இருக்கிறது. செயின் பறிப்பை அடிப்படையாய் கொண்ட படம். இதை பார்த்தால் செயின் பறிக்க ஆரமித்துவிடுவார்கள் என்றெல்லாம் சொல்லி, சர்ட்டிபிக்கேட்டே மறுத்திருக்கிறார்கள். இன்று ட்ரிப்யூனல் சென்று ஏ சர்டிபிகேட் வாங்கி வெளியிட தயாராக இருக்கிறது. இதையெல்லாத்தையும் கேக்க ஆரம்பிக்கணும்.
@@@@@@@@@@@@@@@@@
என்ன தான் மின் மிகை மாநிலம் என்று சொன்னால் தினம் அரை மணி நேரமாவது மின்சாரம் இல்லாமல் போவது வாடிக்கையாகிவிட்டது. அப்படியே மின்சாரம் வந்தாலும் பெரும்பாலும் மூன்று ஃபேஸ்களில் ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் இருக்க மாட்டேன் என்கிறது. தினம் செய்தி தாள்களில் மின்சார துண்டிப்பு காரணமாய் நடக்கும் போராட்டங்களை தொலைக்காட்சி மீடியாக்கள் ஏதும் சொல்லாமல் அமைதியாய் போய்க் கொண்டிருக்கிறதற்கான காரணமும் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் அரசு கேபிளில் அத்தொலைக்காட்சி பின்னுக்கு போய் விடும். இதற்குத்தான் அரசு கையில் மீடியா இருக்கக் கூடாது என்கிறது ட்ராய். 
@@@@@@@@@@@@@@@@@@
தெரியாமல் போய் மாட்டி கொண்டேன்.நேற்று அதிமுக செயற்குழு கூட்டமாம். ஒரே ட்ராபிக் ஜாமில் திணறியது அதன் சுற்றுப்புற ஏரியாக்கள் எல்லாம். போஸ்டரில்லை, பேனரில்லை அதே போல இது போன்ற கூட்டம் நடக்கும் போது ட்ராபிக் ஜாமில்லை என்ற நிலையையும் கொண்டு வந்தால் நல்லாருக்கும். வண்டி ட்ராபிக்கைவிட, அமைச்சர்கள் தங்கள் படை சூழ நடந்து வந்து கொடுக்கும் ட்ராபிக் இம்சைகள் தான் அதிக கொடுமை. இவர்களை ஏன் இம்பூட்டு மெதுவா நடக்குறீங்கன்னு யாரும் கேட்க முடியாது? ஸ்பீடா போங்கன்னு சொல்லவும் முடியாத நிலையில் போலீஸ்காரர்கள். கொஞ்சம் பார்த்துக்கங்க.. நேத்து மட்டும் டி.டிகே சாலை, மயிலாப்பூர் பிரிட்ஜ் எல்லாம் தாண்டிப் போக குறைஞ்சது ரெண்டு மணி நேரம் ஆயிருச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@
வித்தையடி நானுனக்கு
ரெண்டே ரெண்டு பேரை மட்டும் வைத்துக் கொண்டு படமெடுக்க கொஞ்சம் தைரியம் மட்டுமல்ல அறிவும், புத்திசாலித்தனமும் வேண்டும். அது இந்த படத்தின் மொத்த டீமிற்கும் இருந்திருக்கிறது. கமர்ஷியலாய் வெற்றி என்பதை விட, வித்யாசமான முயற்சி என்பதில் அழுத்தமாய் நின்றிருக்கிறார்கள். இயக்குனர் நடிகராய் கே.பி. ராம்நாத், உடன் ஹோஸ்டேஜாய் இருக்கும் பெண்ணாய் செளராசையத். வயதுக்கே ஏற்ற பரபரப்பு, ஆன்க்ஸைட்டி, கோபம், விரக்தி எல்லாம் கொண்ட கலவையாய் இந்த பெண் அடித்து ஆடுகிறார். அதே நேரத்தில் எல்லாவற்றையும் பார்த்து இதுல என்ன இருக்கு? என்பது போன்ற மனநிலையில், கொஞ்சம் டெரராக, கூலாக, சைக்கோவாக, பிலாசபி பேசிக் கொண்டு இருக்கும் கேரக்டர் ராம்நாத்துக்கு. அவரது வயதும் அனுபவமும், வசனங்களில் பளிச்..பளிச். மிக இயல்பான லைட்டிங்கில் ஒளிப்பதிவு. அழுத்தம் கொடுக்கும் விவேக் நாராயணனின் பின்னணியிசை என வித்யாச அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள். குறையாய் சொல்ல, படத்தின் லெந்த், பட்ஜெட், இன்னும் கொஞ்சம் அப்படி செய்திருக்கலாம், என சொல்ல பல  விஷயங்கள் இருந்தாலும், கிடைத்த பட்ஜெட்டில் கொஞ்சம் இண்டெலெக்சுவலாய் யோசிக்கிற்வங்களை ஏன் நாம கடித்து குதறணும்?. அதை இந்தச் சமூகமே செய்து கொண்டிருக்கிற போது.. ஏதாவது வெளிநாட்டு பட விழாவில், கலந்து கொண்டது, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் சிலாகித்து பேஸ்புக்கிலாவது ஹிட் கொடுத்திருப்பார்கள்.
@@@@@@@@@@@@@@@@@
எனக்கு இன்னொரு பேர் இருக்கு
ஜி.வி, சாம் என ஹிட் கொடுத்த டீம். திரிஷா இல்லைன்னா நயன் தாரா கொடுத்த ஹிட் எல்லாம் சேர்ந்து மீண்டும் அதே போன்ற ஒரு தர லோக்கல் கண்டெண்டோடு, காமெடியை கலந்து கொடுத்திருக்கிறார்கள். படம் நெடுக, வரும் ரெட்டை அர்த்த காமெடிகள், பெண்களை கலாய்த்து வரும் வசனங்கள் என புது நண்டு சிண்டு அப்கம்மிங்க் இளைஞர்களை குறிவைத்து அடித்தது முதல் பாதியில் குதூகலமாய் போக பயணளித்திருக்கிறது. குறிப்பாய், ஜோகிபாபு, கருணாஸ் நடத்து சூப்பர் சிங்கர் பாணி, காமெடி. ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கதை சொல்லலாமென்ற முனைப்பில் இறங்கி வேலை செய்ய சுஸ்து குறைந்து போய் விட்டால் போதுமென்ற லெவலுக்கு போய்விடுகிறது. காமெடியில் லாஜிக், கூஜுக் எல்லாம் பார்க்கக் கூடாதுதான் என்றாலும், எதையும் பார்க்காம, யோசிக்க வைக்காம இருக்கிறதுதான் காமெடிப் படங்களின் பலம். அப்படி எங்கெல்லாம் குறையுதோ அங்கெயெல்லாம் வாய்ஸ் ஓவரில் கபாலி படத்தை பற்றிய கமெண்டெல்லாம் போட்டு, ரிலீஸுக்கு முந்தின நாள் வரை வேலை செய்திருப்பதை காட்டியிருக்கிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
முத்தின கத்திரிக்கா
வெள்ளி மூங்கா படத்தின் ரீமேக். மலையாள படத்தைப் போல தமிழில் அரசியல் பேச தனி தைரியம் வேண்டும். அதனால் அதை கொஞ்சம் நீர்த்துப் போக வைத்து, முழுக் காமெடியாய் உட்டாலக்கடியடித்திருக்கிறார்கள். டிபிக்கல் சுந்தர் சி 80ஸ் காமெடி. ஷூ ஸ்ட்ரிங் பட்ஜெட் என்பது போல ப்ரேம் ப்ரேமாய் எல்லாம் வந்து பேசிவிட்டு போகிறார்கள். இதிலும் யோகி பாபுவின் காட்சிகள் அருமை. போட்டோவை கொடுத்து அவனான்னு பாருன்னு சொன்னா அவனே வந்து பார்க்குற அளவுக்காடா பாப்பே? என்பதில் ஆரம்பித்து, எம்ஜிஆரே 42 வயசுல தான் ஹீரோவானார் என்று சுந்தர் சி சொல்ல, டெண்டுல்கர் 40 வயசுல தான் ரிட்டையர் ஆனார் எனும் கவுண்டர் எல்லாம் அட்டகாசம். மொக்கை பிகரை ரூமுக்குள் ஏத்தி வெளியே வர முடியாமல் கணேஷ். ஹீரோயின் அம்மாவை ஸ்கூல் படிக்கும் போது சைட் அடித்துவிட்டு, அவளுடய மகளையே பெண் கேக்கப் போகும் காட்சி என குதூகலிக்க நிறைய காட்சிகள் இருந்தாலும் கொஞ்சம் ஓல்ட் டைப் காமெடிதான். பட் ரசிக்கலாம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மதர்ஸ் டேக்கு ரகசியமாய் கிப்ட் வாங்கி வைக்கும் புள்ளைங்க.. ஃபாதர்ஸ் டேக்கு வந்து என்ன ட்ரீட்டுன்னு கேக்குதுங்க.. அப்பனா பொறந்தாலே கஷ்டம்யா

செண்டிமெண்டா நாங்க இன்னும் கொஞ்சம் நல்ல நெட்வொர்கா மாறணும் நீங்க உதவி பண்ணுங்கங்கறது எல்லாம் பம்மாத்து நம்பாதீங்க@Airtel_Presence

எங்களுது நல்ல நெட்வொர்க் இல்லைன்னு ஏட்டெல்காரனே சொல்லியிருக்கான். எல்லாரும் வேற நெட்வொர்க் போங்க

அன்னைக்கும் ஓடியிருக்காது. இன்னைக்கும் ஓடாது. நேற்று பார்த்த ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆனா நல்ல படம் 

லஷ்மி போன்ற அன்பை, காதலை,காமத்தை, மிக அழகாக வெளிப்படுத்தும் நடிகை தற்போது இல்லை ஜெ மூவீஸில் நடிகை நாடகம் பார்க்கிறாள்
@@@@@@@@@@@@@@@@@@
Nani Gentleman
நானியின் தொடர் வெற்றிக் களிப்பில் வெளியாகியிருக்கும் புதிய படம். இரண்டு முன் பின் தெரியாத பெண்கள் விமானபயணத்தின் போது அறிமுகமாகிறார்கள். அறிமுகமன மாத்திரத்தில் நட்பாகி, ஒரு பெண் தன் காதலனைப் பற்றியும், இன்னொரு பெண் தான் மணக்கப் போகும் ஆளைப் பற்றியும் கதை சொல்ல, விமானப் பயணம் முடிந்து இறங்கினால் ரெண்டு பேருடையை காதலனும், கணவனும் ஒருவனே.. அது நானி. குழம்பிப் போனவள் தன் காதலனை காணப் போக, அங்கே ஒரு ட்விஸ்ட்.. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஆரம்பத்தில் கொஞ்சம் அசுவாரஸ்யமாய் போனாலும், இடைவேளைபாயிண்ட் வரும் போது பிரிஸ்க்காய் எழுந்து உட்கார வைத்துவிடுகிறார்கள். அதன் பிறகு விழும் முடிச்சுக்களும் சுவாரஸ்யம். க்ளைமேக்ஸின் போதுதான் கொஞ்சம் வழக்கமான தெலுங்கு பட பார்முலாவில் விழுந்தெழுந்து சமாளித்தி நின்றிருக்கிறார்கள். பட்.. வழக்கம் போல் நானி டெடிக்கேட்டட் பர்பாமென்ஸ். தேவையில்லாத பாடல்கள், குத்து பாட்டு எல்லாம் இல்லாத கிரஹணம் போன்ற தெளிவான தெலுங்கு த்ரில்லர் படங்கள் சமீப கால ஆச்சர்யங்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why do scientists watch animals having sex? 
Because, that's the only sex they'll ever experience! 


Post a Comment

1 comment:

குரங்குபெடல் said...

தவமாய் தவமிருந்து குறித்த பதிவு அருமை . . .

அது குறித்து சில தகவல்கள்

டிஜிட்டல் மேக்கிங் என்பதால்
படத்தின் ரஷ் மிக அதிகம் . . .

நீண்ட நாள் பணி . . . NL எடிட்டராக பணி புரிந்தவர் . . . AL ராமசாமி

அந்த படத்தின் பிலிம் எடிட்டராக ( பாலுமகேந்திரா போல் ) பெயர் போட்டுக்கொள்ள சேரனே விரும்பினார் . . .

ஆனால் . . . யூனியனில் எதிர்ப்பு கிளம்பியது

இறுதியில் 5 மணி நேர படத்தின் நீளத்தை குறைப்பதற்காக லெனின் வந்தார் . . .

அவர் பெயருடன் படம் வெளியானது .

படம் வெளியானபோது நல்ல மழை . . .

அதனாலேயே அவ்வளவாக கவனம் பெறவில்லை படம் .