Thottal Thodarum

Jul 25, 2016

கொத்து பரோட்டா -25/07/16

டெல்லியில் 14 வயது தலித் பெண்ணை இரண்டாவது முறையாய் கடத்தி கற்பழித்திருக்கிறார்கள். அதில் அப்பெண் இறந்து போயிருக்கிறாள். இது வரை எந்த மீடியாவும் பெரிதாய் கூவியதாய் தெரியவில்லை. அதே போல கபாலி பட வெளியீட்டன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு ஆலந்தூர் வழியாய் போய்க் கொண்டிருந்த போது உச்சா வர வேறு வழியில்லாமல் ரோட்டோரம் நின்று அடிக்கும் வேலையில் அங்கே ஏதோ ஒரு சத்தம் வர, என்னவென்று பார்த்த போது ஒரு பெண் தன்னை காப்பாற்றும் படி அலறியிருக்கிறார். உடனே அங்கே களத்தில் இறங்கிய போது அங்கே மூன்று வேற்று மாநில இளைஞர்கள் அப்பெண்ணின் உடைகளை களைய முயற்சித்துக் கொண்டிருக்க, தடுக்கப் போன இந்த இளைஞரை மூங்கில் கழி கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இந்த சந்தடியில் அப்பெண் அவர்களிடமிருந்து விலக, அங்கே பாஸ் செய்த ஆட்டோ ட்ரைவர் ஒருவர் துணைக்கு வர, மூவரும் தப்பியோடிவிட்டதாகவும், அவர்கள் அடித்த அடியினால் கிடைத்த காயத்தை பேஸ்புக்கில் போட்டு இதனால் தான்பெருமை கொள்வதாகவும் போட்டிருந்தார். அப்பெண் போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் போலீஸ் கம்ப்ளெயிண்ட் தரவில்லை என்றும் சொல்லியிருந்தார். அந்நேரத்தில் அங்கே சுற்றுப்புறத்தில்ல் எங்கேயும் போலீஸ் பீட்டோ, வண்டியோ இல்லையென்றும் வருத்தப்பட்டிருந்தார். இச்செய்தியை பார்த்த போலீஸார் அந்த இளைஞரை கண்டுபிடித்து சம்பவம் நடந்த இடத்தை காட்ட சொல்லியிருக்கிறார்கள்.  அன்றைக்கு தான் “சரக்கு” அடித்திருந்ததால் சரியாக இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லியிப்பதாகவும், போலீஸார் மீண்டும் விசாரணையில் இருப்பதாகவும் இன்றைய செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருக்கிறது. நிஜத்தில் அவர் சரக்கடித்திருந்தாலும்  பெண்ணை காப்பாற்றியது பாராட்டக்கூடிய விஷயம். போலீஸார் விசாரணைக்கு பயந்து இடத்தை காட்டாமல் இருந்தால் அது கண்டிக்க தக்க விஷயம்  https://www.facebook.com/VasanthPaulB/posts/10202065474074549
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
எண்கள் உண்மைகளாய் இருக்க வேண்டிய அவசியமில்லை

சந்துருங்கிற மானஸ்தனை வேறக் காணம்

டிக்கெட் விலை அதிகமா விக்குறாங்கன்னு ப்ரூப்போட கேஸ் போட்டவரை பேச விடாம அவரு திருட்டி சிடி பாக்குறவருங்கிறாங்க சி.கே..சரஸ்வதி.. சீ.. சி.ஆர்

யாரோ ஒருத்தருக்கு முகமறியா நம்ம படைப்பு பிடிச்சி நம்மளை தேடிப்பிடிச்சி பேசும் போது கிடைக்கிற சந்தோஷதிற்கு இணை எதுவுமேயில்லை ‪#‎ஐயம்ஹேப்பி‬

நேத்து நேரமே சரியில்ல போல.. மத்யானம் பார்த்த மதாரியும் கவுத்துருச்சு

டிக்கெட் விலை அதிகமா விக்குறாங்கன்னு கேஸு போட்டவர ஏன் டாஸ்மாக்குல அதிகம் காசு வச்சி விக்குறாங்கன்னு கேக்கலைன்னுகேட்குறாருபாண்டே ‪#‎விளங்கிரும்‬

அதிக விலை வைத்து விற்கும் தியேட்டர்களுக்கு ரைட் விட்டார்களாம். யாருமே விக்கலையாம். ‪#‎கபாலிடா‬ சட்டம்டா.. ரூல்ஸ்டா..

ரஜினி எனும் மிகச் சிறந்த நடிகனை மீண்டும் கண்டேன். ஒரே ஒரு விநாடி தன் மனைவியை காணப் போகும் தருணத்தில். அநியாயமாய் மாஸ் எனும் அரக்கனிடம் பலி கொடுத்திருக்கிறோம் ;(

ரிட்டார்டெட் / ஹைப்பர் ஆக்டீவ்.. ‪#‎கபாலி‬

மாஸ் எனும் அரக்கனிடம் அந்த நடிகனை காவு கொடுத்துவிட்டோம்..

ரஜினி எனும் மிகச் சிறந்த நடிகனை மீண்டும் கண்டேன். ஒரே ஒரு விநாடி தன் மனைவியை காணப் போகும் தருணத்தில். அநியாயமாய் மாஸ் எனும் அரக்கனிடம் பலி கொடுத்திருக்கிறோம் ;(

சுட்டுட்டாங்கலா

மனுஷ்னு பேர் வச்சாலே.. பஞ்சாயத்துத்தான் போல..

இணையத்திலும், மீடியாவில் தவிர பெரிய பரபரப்பு எதையும் எங்கேயும் காணவில்லை

நாலு சீசனையும் உடாம பார்த்தாச்சு.. க்ளைமேக்ஸ் எபிசோடு மொக்கையாக்கிட்டாங்க எசமான் ‪#‎HouseOfCards‬

கான்ஸெப்ட் பேஸில் ஹிந்தியில் சேனல்கள் வருவது ஆச்சர்யமாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. தமிழ் டப்பிங்குடன் ‪#‎fyitv18‬
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புதிது புதிதாய் சில ஹெச்.டி சேனல்கள் டிவி 18 குழுமம் திறந்துவிட்டிருக்கிறது. FYI டிவி என்பது தான் அது. அதில் காட்டும் சில நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாய் இருக்கிறது. கலப்பு திருமணம் புரிந்த, அல்லது செய்யப் போகிற ஜோடிகள் தம் தம் ஜோடிகளின் வீட்டுக்கு போய் அவர்களது உணவு, கலாச்சாரம் போன்றவற்றுடன் எப்படி இணைகிறார்கள்? எப்படி அட்ஜெஸ்ட் செய்து தங்கள் காதலில் ஜெயிக்கிறார்கள் என்று காட்டுகிறார்கள். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில்.  அதை தொகுத்து வழங்குவது எழுத்தாளர் சேத்தன் பகத். அதனால் அந்நிகழ்ச்சிக்கும் ரியல் 2 ஸ்டேட்ஸ் என்று வைத்திருக்கிறார்கள். மற்றொரு நிகழ்ச்சியில் மாமியார் /மருமகள் இருவரையும் இருவரையும் உட்கார வைத்து பேசுகிறார்கள். மகன் தனக்கு பிடித்த உணவு வகையைப் பற்றி சொல்கிறான். அதை மருமகள், அம்மா இருவரும் செய்கிறார்கள். இருவரது உணவையும் யார் செய்தது என்று சொல்லாமல் நடுவராய் மகன்/கணவரை வைத்தே எந்த உணவு நன்றாக இருக்கிறது என்று முடிவு சொல்ல, யார் சமைத்தது என்று வெளிப்படுத்துகிறார்கள். எத்தனை நாளைக்கு சுவாரஸ்யமாய் இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. பட்.. லைவ்லி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மதாரி
இர்பான் கான் நடித்து, கபாலி வெளியான நாளில் கிடைத்த மல்ட்டிப்ளெக்ஸ் திரைகளை ஆக்கிரமித்த ஹிந்தி படம். ஒரு தேசிய கலாமிட்டியில் தன் மகனை இழந்த தந்தை அதற்கு காரணமான உள்துறை அமைச்சரின் பையனை கடத்தி, தன் புத்திர சோகத்தை எப்படி மக்களுக்கு விளக்கி, அதன் மூலம், அரசியல்வாதிகள் எவ்வளவு சுயநலமானவர்கள். என அவர்களின் முகத்திரையை கிழிக்கிறான். காமன்மேனின் கோபம். டோம்பிவில்லி ஃபாஸ்ட், தமிழில் எவனோ ஒருவன், ஹிந்தி திரிஷ்யம், தற்போது இந்த மதாரி. படம் ஆரம்பித்த சில நிமிஷங்களிலே படத்தின் மீதான சுவாரஸ்யம் போய்விடுகிறது. பேசிப் பேசி மாய்கிறார்கள். க்ளைமேக்ஸின் போதுதான் லேசான சுவாரஸ்யம் வருகிறது. அதுவும் நீண்டு போய் விட்றா சூனா பானா.. என்று கிளம்பத்தான் தோன்றுகிறது. ம்ம்ம்
@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று மதியம் நண்பர்கள் ஆரம்பித்த ”Taal Music Studio" வை திறந்து வைக்க அழைத்திருந்தார்கள். முழுக்க முழுக்க இளைஞர்களால் நிரம்பி வழியும் இடமாய் இருந்தது. மெட்டாலையா என்கிற கல்லூரி இளைஞர்கள் ஒன்றினைந்த பேண்ட் அற்புதமான மெட்லி ஒன்றை இசைத்தார்கள். வயலின் வாசித்த அஸ்வின் ஜெயராமன் அழகாய் வாசித்தார். பாடிய சூப்பர் சிங்கர் சாய் விக்னேஷுக்கும் வெங்கட் ரமணனுக்கு நல்ல சாரீரம். குறும்படம், பெரும் படம் எல்லவற்றிக்கு டப்பிங், ரிக்கார்டிங் என ஒலி சம்பந்தமான விஷயங்களுக்கு நம்பி அணுகலாம். வாழ்த்துக்கள் அரவிந்த் அண்ட் ஸ்ரீதர் வேங்கடேசன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
This elderly lady went to the doctor for a check-up. Everything checked out fine. The old lady pulled the doctor to the side and said, ”Doctor, I haven’t had sex for years now and I was wondering how I can increase my husband’s sex drive.” The doctor smiled and said, ”Have you tried to give him Viagra?” The lady frowned. ”Doctor, I can’t even get him to take aspirin when he has a headache,” she claimed. ”Well,” the doctor continued, ”Let me suggest something. Crush the Viagra into a powder. When you are giving him coffee, stir it into the coffee and serve it. He won’t notice a thing.” The old lady was delighted. She left the doctor’s office quickly. Weeks later the old lady returned. She was frowning and the doctor asked her what was wrong. She shook her head. ”How did it go?” the doctor asked. ”Terrible, doctor, terrible.” ”Did it not work?” ”Yes,” the old lady said, ”It worked. I did as you said and he got up and ripped his clothes off right then and there and we made mad love on the table. It was the best sex that I’d had in 25 years.” ”Then what is the problem, ma’am?” ”Well,” she said. ”I can’t ever show my face in McDonald’s again.


Post a Comment

4 comments:

Unknown said...

Kabali........?

குரங்குபெடல் said...

"நேத்து நேரமே சரியில்ல போல.. மத்யானம் பார்த்த மதாரியும் கவுத்துருச்சு"




கபாலி விமர்சனம் அருமை

Unknown said...

தலை கபாலி விமர்சனம்

Unknown said...

தலை கபாலி விமர்சனம்