Thottal Thodarum

Sep 1, 2017

கொத்து பரோட்டா 2.0-40

கொத்து பரோட்டா 2.0-41
As Iam Suffering From காதல்
வழக்கமான டிவி சீரியலுக்கு இல்லாத சுதந்திரம், இண்டர்நெட் ஒரிஜினல் சீரிஸுக்கு உண்டு. முக்கியமாய் தடாலடி கருத்து கொண்ட கதைகளை சென்சாரில்லாமல்   சொல்ல முடிவது . டிவி சீரியல் ரேஞ்சுக்கு மொக்கையாக இல்லாமல், அமெரிக்க சிரீஸ் அளவுக்கு சூப்பராகவும் இல்லாமல் ஹிந்தியில் நல்ல தரமான, சீரீஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது. இப்போது தமிழில் இயக்குனர் பாலாஜி மோகனிடமிருந்து ஹாட்ஸ்டாரில். அதுவும் பிங்கி வாட்சிங் செய்ய ஏதுவாய் ஒரு சீசன் பூராவையும் ஒட்டுக்காய் போட்டிருக்கிறார்கள்.
கல்யாணம் ஆகி ஒருத்தரை ஒருத்தர் வச்சி செய்து கொண்டிருக்கும் பாலாஜி மோகன், தன்யா தம்பதி, லிவிங் டூ கெதரில் இருக்கும் சனானத்,  சஞ்சனா  ஜோடி,  எட்டு வருடங்கள் காதலித்து தங்கள் திருமணத்தை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நட்சத்திரா நாகேஷ், அபிஷேக் ஜோடி. டைவர்ஸ் ஆகி, வாரத்தில் இரண்டு நாட்கள் தன் ஸ்வீட் குழந்தைக்காக வாழும் டைவர்ஸி, ஆன்லைன் பிலிம் ரிவ்வீயூவர் சுந்தர் ராமு. இவர்களுக்குள் நடக்கும் கதை தான். கல்யாணத்துக்கு முன் பேச்சுலர் பார்ட்டியில் பேங்காக்கில், போதையில் நீவாசூயிடம், “Cock” யூஸ் செய்ததினால் தனக்கு துரோகம் செய்துவிட்டதாய் உணர்ந்த மனைவி முதல் ராத்திரியில் குடித்துவிட்டு, வேறொருவனுடன் மேட்டர் செய்துவிட, காதலித்து மணந்த இருவரும் எதிர் எதிர் துவங்களாய் வீட்டிற்குள் இருந்தபடியே இந்தியா பாகிஸ்தான் போர் நடந்திக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய ராத்திரியில் அவளுடன் இருந்தவன் யார்? என்பது கதையில் தெரிய வரும் போது செம்ம இண்டர்ஸ்டிங் ப்ளாட்டாய் மாறுகிறது.

அதிக பட்ச நுனி நாக்கு  ஆங்கில வசனங்கள், ஆங்கிலம், தமிழ் கெட்ட வார்த்தைகள், செக்ஸ் பற்றிய இயல்பான பேச்சுக்கிடையே, காதல், துரோகம் உறவுகள், நெகிழ்ச்சி என செம்ம கலாய் வசனங்கள். தன்யா, பாலாஜி மோகன், ஜார்ஜ், ஆகியோரின் மிக இயல்பான நடிப்பு. பட்ஜெட்டின் சிக்கனத்தை நடிகர்கள், காஸ்ட்யூம், விஷுவல்கள் மூலம் ரிச்சாய் ஆக்கியிருப்பது சாமர்த்தியம். பல இடங்களில் ஆர்.ஜே லவ் குருவின் கேள்விகளுக்கான  பதிலாய் கேமராவைப் பார்த்து பேசியபடி கதை நகர்த்தும் விதம் சுவாரஸ்யம்.

மொத்தமாய் பார்க்கும் போது ஆங்காங்கே 20 சொச்ச நிமிட எபிசோடில் ரோபோ சங்கர் வரும் காட்சிகள் எல்லாம் தொங்கினாலும், பாலாஜி மோகனின் ரைட்டிங் நிச்சயம் பெரிய ப்ள்ஸ். நிறைய இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. என்னங்கடா.. தமிழ் நாட்டில் பொண்ணுங்க, ஹிந்தி சீரியல் கணக்கா தண்ணியடிப்பது, பார்ட்டி, செக்ஸ் என காட்டி  கலாச்சார சீரழிவை செய்கிறார்களே?  என்றெல்லாம் குதிக்கும் ஆளாக இருந்தால் தயவு செய்து ஒரு பெண்ணுக்கு மூணு புருஷன் கதை வரும் டிவி சிரியலை மட்டும் பார்க்கவும். மற்றவர்கள் என்ஜாய். வாழ்த்துக்கள் பாலாஜி மோகன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
13 Reasons why?
ஹென்னா பேக்கர். 17 வயது அழகி, கொஞ்சம் பூசினார்ப் போன்ற உடல் வாகு. இண்ட்ரோவர்ட். உயர்நிலை பள்ளி மாணவி. அவளைப் பற்றிய கதை தான் இந்த சீரிஸ்.  ஆனால் அவள் உயிரோடு இல்லை. சக மாணவன், உள்ளுக்குள் ஹேன்னா பேக்கரை காதலிப்பவன்.  இன்னொரு இண்ட்ரோவர்ட். க்ளே ஜென்சன். ஹேன்னா இறந்து இரண்டு வாரங்களுக்கு பின் அவனுக்கு ஒர் பார்சல் வருகிறது. அதில்  7 ஆடியோ கேசட்டுகள் இருக்க, அதில் ஹேன்னா தான் ஏன் தற்கொலை முடிவுக்கு வந்தேன் என்பதற்கான 13 காரணங்களை பேசி அனுப்பியிருக்கிறாள். ஒவ்வொரு பக்கமாய் கேட்கக் கேட்க சம்பந்தப்பட்ட்வர்களிடம் க்ளே ரியாக்ட் செய்ய ஆரம்பிக்கிறான். அதற்கு அவர்கள் சொல்லும் பதில் “ஹேன்னா ஒரு பொய்யி. அவள் சொல்வதை நம்பாதே. அது மட்டுமில்லாமல் உன் சைட் கேசட்டை கேட்டு விட்டு வா” என்கிறார்கள். அவள் அனுப்பிய கேசட்டோடு கேட்டு விட்டு யாரிடம் கொடுக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

கதை ஆரம்பித்த விதத்திலாகட்டும், அதை அன்போல்ட் செய்த விதமாகட்டும் க்ளாஸ் ரைட்டிங் அண்ட் மேக்கிங். இன்றைய அமெரிக்க கலாச்சாரம். புல்லியிங், செக்ஸ், இண்டெர்நெட், ஸ்லட் பட்டம், ஹார்ட் டிரிங்க்ஸ், பீர், உறவுகளின் முக்யத்துவம், காதல், இன்பாச்சுவேஷன், சுதந்திரம், ரேப், என  சகலத்தையும் மிக அழகாய் பேசுகிறது இந்த சீரிஸ்.  எபிசோடின் கடைசி காட்சிகள் எல்லாம் கொஞ்சம் நம் மனதை பாதிக்கவே செய்கிறது. கதையில் வரும் மாந்தர்களின் குற்றவுணர்ச்சி உறுத்துவதைப் போல நம்முள்ளும் உறுத்த ஆரம்பிக்கிறது.  

2007ல் ஜே ஆஷர் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த சீரீஸ்.  கிரிக்டிக்கலாய் பல பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும், க்ளைமேக்ஸில் காட்டப்பட்ட தற்கொலை காட்சியை பற்றிய விவாதங்களை பெருமளவில் எழுப்பியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இளகிய மனமிருப்பவர்கள் நிச்சயம் பார்த்தால் நான்கு நாளைக்கு தூங்க மாட்டார்கள். அதுவும் அந்த குழந்தைத்தனமான கேத்தரின் லாங் போர்ட்டின்  முகமும், பாத்டப் நிறைய தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதில் உட்கார்ந்து கொண்டு, அவள் கைகளை அறுத்துக் கொள்ளும் காட்சி..  அய்யோ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Post a Comment

3 comments:

Unknown said...

ஆக சீரியல் என்றால் அடல்டரி இல்லாமல் இருக்காது.

க கந்தசாமி said...

Theater சென்று படம் பார்ப்பதை நிப்பாட்டியாச்சா?

Madhusudhanan T said...

Vazhga Valamudan