Posts

சந்தோஷம் பொங்குதே..

இன்றைய தினம் மிக சந்தோஷமாய் பிறந்திருக்கிறது.  நேற்று படுக்க போகும் போதிருந்த முதுகுவலி காலையில் லேசாக குறைந்ததினாலா?  காலையில் எல்லாம் நல்ல படியாய் நடந்ததினாலா?  ரொம்ப நாளாய் வர வேண்டிய பணம் திரும்ப வந்ததினாலா? இல்லை ஆஸ்கர் ரவிசந்திரன் நம்மளை புக் செய்யிற மாதிரி கனவு கண்டதாலா?  என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காலையில் நம்ம பக்கத்தை திறந்து பார்த்ததும் நம்ம பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்திருந்த்து. ஒரு வாரமாய் செஞ்சுரிக்கு முன் தடுமாறும் டெண்டுல்கர் போல 140க்கு அப்புறம் தடுமாறிக் கொண்டிருந்தது தடாலென்று 154 அகி விட்டது. அதுவும் என் சந்தோஷத்திற்கு காரணம். என்னை தொடர்பவர்களுக்கெல்லாம் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏதோ நானும் எழுதுகிறேன் பேர்விழி என்று கடந்த எட்டு மாத காலமாய் தொடந்து எழுதிவருகிறேன்..( அப்படி என்ன எழுதி கிழிச்சிட்டேன்னு… என்பது போன்ற குரல்கள் கேட்கிறது) என்னையும் ஒரு மனுஷனாய் மதித்து தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் நன்றி மீண்டும் உரித்தாகுக.. சந்தோஷம்னா நம்ம சந்தோஷம் மட்டும்தானா.? நம் நண்பர்களின் சந்தோஷம் கூட நம் ...

உலக சினிமா – Lust & Caution (2007)

Image
crouching tigers, Brokeback Mountain போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனர் Ang Lee இயக்கிய படம். ஒரு அருமையான திரில்லரும், காமமும், காதலும் கலந்த கதை. 1942ல் ஒரு காபி ஷாபிலிருந்து சங்கேதமாய் ஒரு போன் செய்துவிட்டு,  உட்காரும் ஒரு பெண்  தன் வாழ்கையை பின்னோக்கி பார்க்கிறாள். அமைதியான அப்பாவியான இளம் பெண் Wong chai chai ஆனவள். எப்படி மிஸஸ். மேக் ஆகி ஜப்பானிய அரசியம் முக்கியஸ்தரான Mr.Yee ஐ மயக்கி, பழகி, அவனை கொல்ல முயற்சிக்கிறாள் நம்ம சிவாஜி, சரோஜாதேவி நடித்த புதிய பறவை படத்தில் சிவாஜியை லவ் செய்வது போல் பழகி உண்மையை கண்டுபிடிக்க சரோஜாதேவி போவாங்க இல்ல அதுமாதிரி. என்ன அதுல கொலைகாரனை பிடிக்க போவாங்க. இதுல கொல்ல போறாங்க.. Mr.Yee ஏன் கொல்ல முயற்சிக்கிறாங்கன்னா.. அவர் இரண்டாம் உலக போரில் ஜாப்பான் ஆக்கிரமிச்சிருக்கிற சைனாவில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர். அவர் எடுத்த பல முடிவுகளால் பல பேர் பல உறவுகளை, இழந்து இருப்பதால் அவரை பழிவாங்க அவருக்கு எதிரா ஒரு தீவிரவாத குழு அமையுது. அவங்க இரண்டு மூன்று முறை அவரை மயக்க பெண்களை பயன் ப்டுத்தியும் அவங்க மாட்டிகிட்டாங்க. அதன...

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்

Image
காதல், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு, போன்ற படங்களின் லைவான திரைக்கதை அமைப்பு இயல்பாகவே அந்த படங்களுக்கு  அமைந்தது. அந்த இயல்பு இல்லாமல் வலுக்கட்டாயமாய் திணித்தால், நம்மால் உட்காரமுடியாது.  அதுமட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கை பல சமயங்களில் சினிமாவை போல டிவிஸ்ட் அண்ட் டர்ன்களூடன் இருப்பதில்லை. அதே போல்தான் குங்குமபூவும் கொஞ்சும்புறாவும். தன் தாய் தந்தையரால் அநாதரவாய் விடப்பட்ட துளசி தன் பாட்டியுடன் முட்டத்திற்கு வந்து சேருகிறாள். பக்கத்து வீட்டு இருக்கும் ஹீரோ ராம்கியுடன் பத்தாவது ஒன்றாய் படிக்க, அப்படியே ஒன்னாய் பள்ளியூடத்துக்கு போய் வந்து லவ் அடிக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் துளசியிடம் வயசுக்கு வர்றதுன்னா என்ன என்பது போன்ற சீன்கள்  எல்லாம் இருக்கிறது. உசிருக்கு உசிராய் காதலிக்கும் இருவரை பற்றி ஒரு வழியாய் இண்டர்வெல் நேரத்தில் ஹீரோவின் அம்மாவுக்கு தெரியவர, துளசியின் தலைமுடியை நறுக்கி அவமான படுத்தி, ஊரை விட்டே வெளியேற்றுகிறாள். ஸ்கூல் டூர் போய் திரும்பி வரும் ஹீரோ, அவளை தேடி ஓடி வர, ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆக, ஹீரோயினுக்கு வேறு இடத்தில்  த...

போர் நிறுத்தம் அறிவிப்பு

25/04/09 பதிவர் சந்திப்பு அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கபட்டுவிட்டது. தமிழன தலைவர் கலைஞர், தமிழனத்தின் ஒரே காவலர், கடந்த 50 வருடமாய் ஈழத்தமிழர்களை கட்டி காப்பாற்றிவரும் ஒரே தமிழர் தலைவர் எடுத்த கடைசி ஆயுதமான வேலை நிறுத்ததை பார்த்து ஸ்தம்பித்து போனது இலங்கை அரசு. ஆளாளுக்கு தன்னை தூக்கி போட்டு இலங்கை பிரச்சனையில் பந்தாடுவதை தவிர்க்கவும், தான் தான் இன்னமும் தமிழன் காவலர் தான் என்பதை நிருபிக்க,  அரசு வேலை நிறுத்தம் செய்யவில்லை..? திமுக கட்சி வேலைநிறுத்தத்தை அறிவித்து, மாபெரும் வெற்றி அடைந்த போராட்டம் என்று மார் தட்டி கொள்கிறது சன்னும், கலைஞரும். இம் மாதிரி எதையாவது அறிவித்து மாட்டி கொள்வார் என்றுதான்  மற்ற கட்சிகளும் எதிர்பார்த்தது. இந்த வேலை நிறுத்தத்தை கொண்டாடும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க, உணவகள் எல்லாம் மூடி கிடக்க, ஏதோ ஒரே ஒரு கடை திறந்திருக்க, அதையும் மூடும் படி போலீஸார் சொல்லி மூட வைத்து விட்டார்கள். நன்றாக சரக்கடித்துவிட்டு சன் டிவியில் திருடா திருடி, சரவணாவையும்,  கலைஞர டிவியில் முரட்டுகாளையும், வெள்ளித்திரையும்,  பா...

எ.வ.த.இ.மா.படம்? – Mumbai Meri Jaan

Image
11-7-2006ல் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு ஓவ்வோரு மும்பைகாரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த ஓரு அதிர்சியே. கொஞ்சம் நினைத்து பாருங்கள் அந்த நேரத்தில் அதே ரயிலில்களில் நீங்கள் இருந்திருந்தால் அதிலிருந்து தப்பியிருந்தாலும், உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எப்படி அதிலிருந்து மீள்வீர்கள். அதை பற்றி படம் தான் நிஷிகாந்த காமத என்கிற இயக்குனர் இயக்கிய ஹிந்தி படம். "மும்பை மேரி ஜான்". இன்னும் சில நாட்களில் ரிட்டைய்ர் ஆக போகும் பாடில்(பரேஷ் ராவல்), அவரின் வாழ்க்கை தத்துவம் "எப்பவுமே ஓரமாய் நின்று பார்க்க பழகிக்கொள், அந்த படத்தில் நடிக்க ஆசைபடாதே" என்றும், தன் வாழ்கையில் எந்த ஓரு நேரத்திலும், மிகப் பெரிய திருடனையோ, தீவிரவாதியையோ, பிடித்ததில்லை. என்பதில் எந்த வருத்தமும் இல்லாதவர். பரேஷ் ராவலுக்கு ஓரு லைப் டைம் கேரக்டர்.மனுஷன் சும்மா பின்னியிருக்கிறார். அவருடய அசிஸ்டெண்டாக வரும் கதம் (விஜய் மெளரியா) தனது புது பெண்டாட்டியுடன் ஹனிமூன் போகயிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், அவருடய லீவ் கேன்சலாகி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த நாளன்று பாரில் லஞ...

ஹாலிவுட் சினிமா - Fast And Furious –4

Image
ஹைவேஸில் கார் டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்தபடி அவர் கிளட்ச் போடும்போது, நீங்களும் கிளட்ச் போட்டு, அவர் பிரேக் போடும் போது நீஙக்ளும் பிரேக் போடுபவரா..? அப்படின்னா நீங்க காலை மடிச்சு வச்சிகிட்டுதான் படம் பாக்கணும். நான் முதல் பாகத்துக்கு அப்புறம் இப்பத்தான் படம் பாக்குறேன். அதனால எதுவும் படம் பாக்கிறதுக்கு பிரச்சனையில்லை. நடுவுல வந்த ரெண்டும் படு சொதப்பல்னு சொன்னாங்க.. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடிதத முக்கிய நடிகர்கள் விண்டென்ஸல், அந்த ஹிரோயின், டென்சலின் நண்பராக வருபவர் ஆகியோர் மீண்டும் நடித்திருக்கிறார்கள். ஒரு மெல்லீசான கதையை வைத்து உட்டாலக்கடி அடித்திருக்கிறார்கள். ஓப்பனிங் காட்சி சேஸிங் படமெடுதிருக்கும் விதமும், ஆக்‌ஷன் அமைப்பும், எடிட்டிங்கும் நம்மை மயிர்கூச்செரிய வைத்துவிடும். அப்படி ஒரு வெறி பிடித்த சேஸிங். நீங்கள் தியேட்டருக்கு செல்லும் போது படம் ஆரம்பிப்பதற்கு முன் செல்லுங்கள், முதல் காட்சியே இந்த சேஸிங் தான், டென்ஸலும் அவனின் காதலியும் விட்ட திருட்டு தொழிலை மீண்டும் செய்துவிட்டு ஆளாளூக்கு பிரிந்துவிட, ஒரு நாள் டென்ஸலுக்கு அவனுடய காதலி கொல்லப்பட்ட விஷய்ம...

I.P.L – ஒரு பார்வை.

Image
இந்த ஐ.பி.எல் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிது, எல்லாருமே பிஸியாட்டாங்க.. இந்த போட்டிய நடத்திறதுனால இந்திய கிரிக்கெட் போர்டுக்கு ஆயிரம் கோடி கிட்ட வருமானம் வருதுங்கிறாஙக், இங்க இந்தியாவில நடத்த முடியாட்டாலும் சவுத் ஆப்ரிக்காவிலாவது நடத்துறாங்க வருமானம் போயிருமென்னு. இந்த ஐ.பி.எல். எதுக்கு ஆரம்பிச்சிதுன்னா, கபில் தேவ் தலைமையில் ஜீ டிவிக்காரஙக..  இந்தியன் கிரிகெட் லீக்னு ஒன்ணை ஆரம்பிச்சாங்க. ஏன் ஆரம்பிச்சாங்கன்னு அவங்க சொன்ன காரணம் இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதற்க்காகன்னு சொன்னாங்க. ஆனா நிஜ காரணம் அது இல்ல.. இவங்களுக்கு கிரிக்கெட் போர்டுக்கும் இவங்க ஜீ ஸ்போர்ட்ஸ் சேனல் ஆரம்பிச்சதும் கிரிக்கெட் போட்டி ரைட்ஸ் வாங்க முயற்சி செய்ய, அது ஏதோ பிரச்சனை வந்ததும், ஆஸ்திரேலியாவில சேனல் 9 ஆரம்பிச்ச மாதிரி ஒரு கிரிகெட் லீக் டீமை ஆரம்பிச்சாங்க.. இவங்க ஏன் இப்படி கிரிகெட், கிரிகெட்ன்னு அலையுறாங்கன்னா.. அதன் மூலமா வர்ற காசு. கொஞ்ச நஞ்சமில்ல.. இவங்க ஆரம்பிச்ச ஐ.சி.எல்.ல விளையாடுற வீரர்களுக்கு, லட்சக்கணக்குல பணம் கொடுக்க, நிறைய வீரர்கள் ஐ.சி.எல் பக்கம் சாய,  முதல் ஐ.சி.எல் ப்ரபரப்பை பார்...

தமிழ்சினிமாவின் 90 நாட்கள்

Image
எவ்வளவுதான் ரிசஷனில் இருந்தாலும் பெரிதாய் பாதிக்கபடாத சில தொழில்களில் சினிமாவும் ஒன்று. மக்கள் பொழுது போக்கிக்கிற்காக, செலவு செய்வதை பெரிதாய் கருதுவதில்லை.  அவர்கள் கொடுக்கும் காசுக்கு தகுதியானது கிடைக்கும் வரை. அப்படி கடந்த 90 நாட்களில்  அதாவது ஜனவரி 1 முதல் மார்ச் வரையில் வெளியான திரைப்ப்டஙக்ளை பற்றிய ஒரு கண்ணோட்டம். ஜனவரி 2009 இம் மாதத்தில் ஏவி.எம். குமரனின் அ.ஆ.இ.ஈ,  வில்லு, காதல்னா சும்மா இல்லை, படிக்காதவன், என்னை தெரியுமா, சற்று முன் கிடைத்த தகவல், வெண்ணிலா கபடிக் குழு ஆகியவை வெளியானது. இதில் அ…ஆ….இ…ஈ மிக்ப் பெரிய தோல்வியை சந்தித்த படம். தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு மிகவும் எதிர்பார்க்க பட்ட படம். காதல்னா சும்மா இல்லை திரைப்படமும், தெலுங்கில் கம்யம் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஏனோ தெரியவில்லை தெலுங்கில் பெரிய ஹிட்டான இந்தபடம். தமிழில் வேலைக்காகவில்லை. முக்கியமாய் பாதி படத்தை தெலுங்கிலிருந்து டப் செய்துவிட்டு, ரவிகிருஷணா வரும் காட்சிகளை மட்டும் தமிழில் எடுத்து வெளியிட்டது ஒரு மைனஸ்.. வில்லை பற்றி நாம் சொல்தற்கு ஏதுமில்லை உலகமறிந்ததே...

உலக சினிமா – Death Proof

Image
அர்லின், ஷானா, ஜங்கிள் ஜூலியா மூவரும் ஜங்கிள் ஜூலியாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக டெக்ஸாஸை நோக்கி செல்கிறார்கள். இவர்களை பாலோ செய்யும் ஸ்டண்ட்மேன் மைக் தன்னுடய டெத்புரூப் காரில பயணிக்கிறான். அவன் ஒருவிதமான சைக்கோ.. இந்த மூன்று பெண்களை பற்றிய விஷயங்களை முன்பே அறிந்திருக்கிறான். மைக் பாலோ செய்வதை முன்பே கவனித்திருந்த ஜங்கிள் ஜூலியானா. அவள் ஒரு ரேடியோ ஆர்.ஜே. பெண்கள் மூவரும் ஒரு பாரில் அமர்ந்திருக்க, அங்கே மைக் வர, அவனின் கட்டுமஸ்தான உடலையும், அவனுடய ஆண்மையையின் காரணமாய் அவன் தொடர்ந்து வந்த விஷயம் தெரிந்தாலும், அவனுடன் பழகுகிறாள். அப்போது ஜூலியானாவின் தோழி பாம் பார்ட்டி முடிந்ததும், அவளை தான் ட்ராப் செய்வதாய் கூறி தன்னுடய டெத்புருப் காரில் அழைத்து சென்று அவளை காரை படு வேகமாய் ஓட்டி சென்று, திடீரென ப்ரேக் போட்டே கொன்று விடுகிறான். ஜூலியானாவையும் அவள் தோழிகளையும் தனியே துரத்தி, அவனுடய காரை நேருக்கு நேராய் மோதி அவர்கள் மூவரையும் கொல்கிறான். அந்த விபத்தில் சிறிய காயமடையும் அவன் மீண்டும் பதினான்கு மாதம் கழித்து வேறு ஒரு செட் ஆப் பெண்களை பாலோ செய்கிறான். லி, ரோஸ், மற்றும் மேத்திஸ் இவர்கள...

கார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்

Image
பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \படத்தின் பூஜையின் போது வெளியிட்ட டிசைன் கண்டிப்பாய் வித்யாசமாய் ஒரு படமாய் இருக்கும் என்று கட்டியம் கூறியது. அதன் பிறகு படத்தின் போஸ்டர் டிசைன் மேலும் வா,, வா… என்று அழைக்க, தியேட்டரில் நான். கார்த்திக்கும் அனிதாவும் எதிர் எதிர் வீட்டில் வசிப்பவர்கள், சிறு வயதிலிருந்தே சேர்ந்தே எலியும் பூனையுமாய் இருப்பவர்கள். கார்த்திகின் அப்பா கோட்டா சீனிவாசராவ் எதிர்வீட்டு அனிதாவின் அம்மாவை தங்கையாய் பாவிக்க, இருவர் குடும்பமும் உறவு முறை சொல்லி அழைக்கும் அளவுக்கு ஒற்றுமையான குடும்பம். கார்த்திக் அனிதா இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி சண்டைகளில், ஒருவரை ஒருவர் வாரி விட்டு கொண்டிருக்க, ஒரு நிலையில் அனிதாவால் கார்த்திக் காலேஜில் ச்ஸ்பெண்ட் செய்யப்படுகிறான். இந்த இடைப்பட்ட நிலையில் அனிதாவுக்கு கார்த்திக்கின் மேல் காதல் வர, கார்த்திக் அவளை காதலித்தானா.. அனிதாவுக்கு நிச்சயத்த திருமணம் நடந்ததா.? கார்த்திக்கின் அப்பா ஏன் திடீரென்று இற்ந்து போனார் என்பதை வெள்ளிதிரையில் காண்க. கார்த்திக்காக வரும் ரத்தன் நல்ல எதிர்காலம் இருக்கிற...