Thottal Thodarum

Apr 24, 2009

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்

kk090209_2

காதல், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு, போன்ற படங்களின் லைவான திரைக்கதை அமைப்பு இயல்பாகவே அந்த படங்களுக்கு  அமைந்தது. அந்த இயல்பு இல்லாமல் வலுக்கட்டாயமாய் திணித்தால், நம்மால் உட்காரமுடியாது.  அதுமட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கை பல சமயங்களில் சினிமாவை போல டிவிஸ்ட் அண்ட் டர்ன்களூடன் இருப்பதில்லை. அதே போல்தான் குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்.
kk090209_1

தன் தாய் தந்தையரால் அநாதரவாய் விடப்பட்ட துளசி தன் பாட்டியுடன் முட்டத்திற்கு வந்து சேருகிறாள். பக்கத்து வீட்டு இருக்கும் ஹீரோ ராம்கியுடன் பத்தாவது ஒன்றாய் படிக்க, அப்படியே ஒன்னாய் பள்ளியூடத்துக்கு போய் வந்து லவ் அடிக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் துளசியிடம் வயசுக்கு வர்றதுன்னா என்ன என்பது போன்ற சீன்கள்  எல்லாம் இருக்கிறது. உசிருக்கு உசிராய் காதலிக்கும் இருவரை பற்றி ஒரு வழியாய் இண்டர்வெல் நேரத்தில் ஹீரோவின் அம்மாவுக்கு தெரியவர, துளசியின் தலைமுடியை நறுக்கி அவமான படுத்தி, ஊரை விட்டே வெளியேற்றுகிறாள்.
ஸ்கூல் டூர் போய் திரும்பி வரும் ஹீரோ, அவளை தேடி ஓடி வர, ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆக, ஹீரோயினுக்கு வேறு இடத்தில்  தேவடியாள் என்று  ஊரறிந்தவளுடய தம்பிக்கு பாட்டி திருமணம் செய்து  வைத்துவிட, கடைசி நேரத்தில் சரியான நேரத்தில் வந்தும் ஏதும் செய்யாமல் போய்விடுகிறான் ஹீரோ. அதற்கு அப்புறம் என்னவானால் என்ன?. அதற்கப்புறம் நடப்பதெல்லாம் பழைய படங்கள் போல ஓரே சொதப்பல்.
kk221008_6

ஹீரோயின் தர்ஷனாவின் கண்கள் காந்தம்,  ஹீரோ ராம்கி, கதையில் அவர்கள் சொல்லும் பத்தாவது படிக்கும் மாணவனின் கேரக்டருக்கும் சரியாக செட்டாகவில்லை. அவ்வப்போது சுப்ரமணியபுரம் ஜெய் போல அசடு வழிந்தப்டி தலையாட்டுகிறார். தண்ணியடிக்கிறார். அழுகிறார். செத்து போகிறார். படம் எந்த கால கட்டத்தில் நடைபெறுகிறது என்கிற குழப்பம் நிறைய இடங்களில் வருகிறது. பிண்ணனியில் போடப்படும் பாடல்களும், திருவிழாக்களில் காட்டப்படும் கரகாட்டகாரன்  திரைப்படமும் படத்தின் காட்சிகளும், வழக்கமாய் இம்மாதிரியான லைவ் படங்களில் ஒரு திருவிழா சீன் கண்டிப்பாய் இருக்க வேண்டும் என்கிற கட்டாய காட்சிகளும், குத்து பாட்டும் … ஏன் இந்த கொலைவெறி..?
 

படம் நெடுக பல கேரக்டர்கள், ஏதுவும் மனதில் நிற்க மாட்டேன் என்கிறது. துளசியை திருமணம் செய்யும் தர்மன் கேரக்டருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பார்க்க கஞ்சா கருப்பு போல காமெடி பார்டியார் உள்ள அவருக்கு ஒரு எஸ்.பி.பி பாட்டு வேற.  தாங்க முடியலடா சாமி. ஊரே தெரிந்து தேவடியா தொழில் செய்யும், ஒருத்தியின் வீட்டிற்கு போய் துளசியின் பாட்டி ஏன் அவளூடய தம்பிக்கு திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள வேண்டும்?. பிடிக்காத ஒருவனை திருமணம் செய்துவிட்டு, திடீரென நான் தர்மன் பொண்டாட்டி என்று தன் மச்சானில் கழுத்தில் அரிவாள்மனையை வைத்து மிரட்டும் அளவுக்கு தன் புருஷனை எவ்வாறு துளசி உணர்ந்தாள். க்ளைமாக்ஸில் பரோலில் வெளிவரும் போது,  கொலை செய்துவிட்டு வரும் துளசியின் புருஷனுக்கு பதிலாய் எதற்காக ஹீரோ கொலை பழியை ஏற்க வேண்டும், அப்படியே இருந்தாலும் அவன் ஒன்றும் கதையில் முக்கிய கதாபாத்திரம் கிடையாது. க்ளைமாக்ஸில் சாவதற்க்காவே உருவாக்கபட்டவன். அவனை ஹீரோ கொலை செய்துவிட்டான் என்று நினைத்து, தேவையேயில்லாமல் டயலாக்கில் ஜாதி  பிரச்சனையை சொல்லி ஹீரோவை எதற்காக  அடித்தே  கொல்ல வேண்டும்?  என்பது போன்ற கேள்விகள் பல படம் பூராவும்  வந்த வந்த வண்ணம் இருக்கிறது.
kk221008_28
இரகசியம் சொல்வதாய் கிட்டே வந்து முத்தம் கொடுக்க முயற்சிக்கும் காட்சியில் கிட்டே வந்து நாக்கு  உலர்ந்து போய் கணக்கு புத்தகம் கேட்பதும்,  அதே டெக்னிக்கை துளசி ஹீரோ கூச்சாவிடம் பயன் படுத்தி முத்தமிடும் காட்சிகள் மயிலிறகு.

படத்தில் பாராட்ட பட வேண்டியவர் யுவன் சங்கர் ராஜா மூன்று பாடல்கள் அருமை. கேமராமேன் சித்தார்த் முட்டத்து அலைகளையும், அந்த கடலோரத்தையும் கண் முன்னே  நிறுத்தியிருக்கிறார் இருவரும் தங்கள் பங்கை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.
  kk221008_21

படத்தில் கூப்பிடும் போது பகலில் இருக்கும் கேரக்டர்கள், நடந்து அடுத்த தெருவில் வருவதற்குள் இரவாகி விடுகிறது. நடு இரவில் அடிவாங்க ஆரம்பிக்கும் ஹீரோ.. அடுத்த நாள் காலை வரை அடிவாங்கி கொண்டிருப்பதும், மத்யானம் ஹீரோயின் செத்ததும் சாவதும், இப்படி நிறைய இடங்களில் இம்மாதிரியான் குளறுபடிகள். முழுக்க, முழுக்க, வட்டார வழக்கும் இல்லை, இயல்பாய் வரவேண்டிய நகைச்சுவைக்கு பதிலாய் பத்திரிக்கைகளில் வந்த ஜோக்குகள் என்று ஆங்காங்கே பிண்ணனியில் வரும் காட்சிகள் எழுபதுகளில் வந்த படங்களின் காட்சியமைப்பை நினைவூட்டுகிறது. நிறைய இடங்களில் ஒட்டவில்லை.  கேரக்டர்களில் டெப்த் இல்லாததால் எதையும் உணர்வு பூர்வமாய் பார்க்க முடியவில்லை. நிஜ வாழ்க்கை சம்பவஙக்ள் பல சமயம் மிகவும் போர் அடிக்கும், அதை லைவாக காட்டுகிறேன் என்று நம்மை நுங்கு எடுத்துவிட்டார்கள். க்ளைமாக்ஸில் செத்து போனால் படம் ஹிட்டாகும்னு யாரோ சொல்லியிருப்பாங்க போலருக்கு. ம்ஹூம்ம்ம் … பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராஜ்மோகன்.

குங்குமபூவும் கொஞ்சும்புறாவும் -  புறா செத்திருச்சு..


Post a Comment

61 comments:

யாத்ரீகன் said...

ஏன் இந்த கொலவெறி.. பீஸ் பை பீஸ்.. நார் நாரா கிழிச்சிட்டீங்க :-)

Chill-Peer said...

திரைவிமர்சனத்திற்கு பின்னூட்டம் இடுவது எப்படி?
அப்படின்னு யாராவது புத்தகம் போட்டிருக்கீங்களாப்பா?

கார்க்கி said...

ராஜ்குமார்ன்னா மழை இயக்குனரா? அபப்டின்னா அப்பிட்டூதான்

Sukumar Swaminathan said...

அண்ணே ரொம்ப தேங்க்ஸ் அண்ணே மறுபடியும் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பண்ணிட்டீங்க... இந்த படத்துக்கு இதோட டைரக்டர் விகடன்ல ஒரு பெட்டி கொடுத்திருந்தார் பாருங்க... ஐயோ கடவுளே...

ஹாலிவுட் பாலா said...

புறா.. செத்துடுச்சா...? ப்ரொடியூசருக்கும் சேர்த்து.. சங்குதானா?!

இராகவன் நைஜிரியா said...

விமர்சனத்தில் படத்தைப் போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க... பாவங்க இயக்குனர்.

அக்னி பார்வை said...

oh god,

இந்த படமும் நட்டுக்கிச்சா!!!

pappu said...

புறா செத்திருச்சு/////

செம காமெடி

ஷண்முகப்ரியன் said...

வருத்தப் படுவதைத் தவிர வேறு என்ன செய்ய?

Suresh said...

நான் நல்ல வேளை பார்க்கலாம் இருந்தேன் இப்போ எஸ்கேப்

வித்யா said...

அடிச்சு தொவச்சு தொங்க விட்டிருக்கீங்க. மீ த எஸ்கேப்

வண்ணத்துபூச்சியார் said...

புறா செத்திருச்சு/////

ஆழ்ந்த இரங்கல்...

Cable Sankar said...

//ஏன் இந்த கொலவெறி.. பீஸ் பை பீஸ்.. நார் நாரா கிழிச்சிட்டீங்க :-)

//

:)

Cable Sankar said...

//திரைவிமர்சனத்திற்கு பின்னூட்டம் இடுவது எப்படி?
அப்படின்னு யாராவது புத்தகம் போட்டிருக்கீங்களாப்பா?

//

பீரு அதுக்கு வேறபுக் போடணுமாப்பு....? நல்லா கிளம்பிட்டாங்கய்யா..

Cable Sankar said...

//ராஜ்குமார்ன்னா மழை இயக்குனரா? அபப்டின்னா அப்பிட்டூதான்//

இல்லை கார்க்கி இவரு வேற.. புதுசு..

Cable Sankar said...

//இந்த படத்துக்கு இதோட டைரக்டர் விகடன்ல ஒரு பெட்டி கொடுத்திருந்தார் பாருங்க... ஐயோ கடவுளே...
//

:(0

Cable Sankar said...

//புறா.. செத்துடுச்சா...? ப்ரொடியூசருக்கும் சேர்த்து.. சங்குதானா?!

//

புரொடியூசர் ஒரளவுக்கு படத்தை பத்தி பில்டப் செய்தே பெரிய அளவு லாபத்துல விக்கலைன்னாலும்,.. தேத்திட்டாருன்னுதான் சொல்லணும்.

Cable Sankar said...

//விமர்சனத்தில் படத்தைப் போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க... பாவங்க இயக்குனர்.

//

நான் கிழிக்கவேயில்லை இராகவன்.. காசு கொடுத்து படம் பார்க்கும்போது எனக்குள் எழுந்த கேள்விகள்.. அவ்வளவுதான்.

Cable Sankar said...

//oh god,

இந்த படமும் நட்டுக்கிச்சா!!!

//

அக்னி எஸ்கேப்..

Cable Sankar said...

//வருத்தப் படுவதைத் தவிர வேறு என்ன செய்ய?

//

அந்த வருத்தம்தான் எனக்கும் அதைத்தான் விமர்சனமா எழுதிட்டேன்.சார்.

Cable Sankar said...

//புறா செத்திருச்சு/////

செம காமெடி//

கஷ்டம் வரும் போது சிரிக்க சொல்லி வள்ளுவர் சொல்லியிருக்காரு இல்ல பப்பு.. அதான்.

Cable Sankar said...

//நான் நல்ல வேளை பார்க்கலாம் இருந்தேன் இப்போ எஸ்கேப்

//

நீங்களும் ஒரு முறை படம் பார்த்து.. நான் சொல்லியிருப்பது சரிதானான்னு கிளியர் பண்ணிக்கலாம் இல்ல சுரேஷ்..??:)

Cable Sankar said...

//அடிச்சு தொவச்சு தொங்க விட்டிருக்கீங்க. மீ த எஸ்கேப்//

வேற என்ன பண்ண வித்யா..? முடியல..?

Cable Sankar said...

//புறா செத்திருச்சு/////

ஆழ்ந்த இரங்கல்...//

ஆமா நானும் கலந்துக்கிறேன்.

HASAN RAJA said...

புறா செத்தது சங்கடமாக உள்ளது
சங்கர்..

மரியாதை தேறுமா ? மாலை மெரினாவில் சொல்லுங்க...

ஹஸன் ராஜா.

தராசு said...

இப்படியா கிழிப்பாய்ங்க,

பாவம், டைரக்டரு

Murali said...

வணக்கம் சங்கர், உங்கள் எல்லா விமர்சனமும் சரிதான். யுவன் பின்னணி நிச்சயம் படத்திற்கு நல்ல பலம். கேமராவும் இசையும் இல்லாவிட்டால் மொக்கை லிஸ்டில் சேர்ந்திருக்கும். அந்த பாட்டி கேரக்டரை பத்தி ஒண்ணுமே சொல்லலையே? என்னை ரொம்பவும் டிஸ்டர்ப் பண்ணது அந்த பாட்டி கேரக்டர்தான். இந்த தலைப்புக்கும் படத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....((

இவங்க எல்லாம் சினிமா எடுக்கலைனு யார் தான் கவலைபட்டாங்களோ?... :((

MayVee said...

என்ன சார் ....
இப்படி சொல்லுரிங்க...
இந்த படத்திற்கு நாலு டிக்கெட் வைத்து இருக்கேன் இன்றைய ஷோவுக்கு ....
என்ன செய்ய .....


போகலாமா வேண்டாமா ???

Cable Sankar said...

//என்ன சார் ....
இப்படி சொல்லுரிங்க...
இந்த படத்திற்கு நாலு டிக்கெட் வைத்து இருக்கேன் இன்றைய ஷோவுக்கு ....
என்ன செய்ய .....


போகலாமா வேண்டாமா ???

//

நீங்களும்தான் படம் பார்த்துட்டு சொல்லுங்களேன் மாயாவி..

Anbu said...

\\புறா செத்தது சங்கடமாக உள்ளது\\மரியாதை?????

Cable Sankar said...

//வணக்கம் சங்கர், உங்கள் எல்லா விமர்சனமும் சரிதான். யுவன் பின்னணி நிச்சயம் படத்திற்கு நல்ல பலம். கேமராவும் இசையும் இல்லாவிட்டால் மொக்கை லிஸ்டில் சேர்ந்திருக்கும். அந்த பாட்டி கேரக்டரை பத்தி ஒண்ணுமே சொல்லலையே? என்னை ரொம்பவும் டிஸ்டர்ப் பண்ணது அந்த பாட்டி கேரக்டர்தான். இந்த தலைப்புக்கும் படத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

//

மிக நிச்சயமாய் யுவனும், சித்தார்த்தும் இல்லையென்றால் நீங்கள் சொன்ன கேட்டகரியில் சேர்ந்திருக்கும். அந்த பாட்டி கேரக்டர் மிக குழப்பமான கேரக்டர்.. தன் பேத்தியை இரண்டாம் தாரமாய் கொடுக்க மறுப்பவள் எப்படி அப்படி பட்ட ஒருத்தியின் தம்பிக்கு தன் பேத்தியை கொடுப்பாள். அது மட்டுமில்லாமல் கூச்சாவின் தாய் என்ன ஊர் பஞ்சாயத்து த்லைவியா.. அவரின் பையனை காதலித்ததால் ஊரை விட்டே வெளியேற.. ஊர் எல்லையில் துளசி இரவு வரை பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் துளசியிடம் ஸ்கூல் நண்பர்கள் அவளுக்கு எதையோ வாங்கி வந்திருப்பதாய் சொல்லிவிட்டு போகிறார்கள் அப்படியிருக்க, ஊர் எல்லையில் உள்ள அவர்களை பார்க்காமல் எப்படி கூச்சா ஊருக்குள் வந்தான்.? இப்படி கேட்க பல கேள்விகள் படம் பூராவும் வந்துகிட்டே யிருக்கா இல்லையா முரளி..? பின்ன எப்படி படம் நம் மனதில் ஏறும்./

Cable Sankar said...

//மரியாதை?????//

இப்பத்தான் ஒரு கொடுமை முடிஞ்சுருக்கு.. அதுகுள்ளய.. இருங்க் மெதுவா பாக்கலாம்.அன்பு..

தங்கவேல் மாணிக்கம் said...

நேரம் மிச்சம்... நன்றி கேபிள் சங்கர்.

குசும்பன் said...

புறாவின் இறுதி ஊர்வலம் எங்கு நடக்கிறது?:)

பரிசல்காரன் said...

உங்கள் விமர்சனங்கள் பலராலும் பாராட்டப்படுவது ஏன் என்று இப்போது புரிகிறது!

இந்தப் படக்குழுவினரோடு உங்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பதும், நல்லா வரும்க படம் என்றும் நீங்கள் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் சரியில்லாததை சரியில்லை என்று கிழி கிழித்ததன் மூலம் விமர்சன தர்மத்தைக் காப்பாற்றி விட்டீர்கள்.

நன்றி சங்கர்!

தீப்பெட்டி said...
This comment has been removed by the author.
தீப்பெட்டி said...

இயக்குனர் மேல கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம்....

thanjai gemini said...

நானும் அந்த கொடுமைய அனுபவிச்சேன். விகடன்ல பேட்டிய படிச்சிட்டு ரொம்ப எதிர்பார்போட போனா செம ஆப்பு. படத்துல வர்ற எல்லா கேரக்டரும் ஒரு தடவையாச்சும் அய்யய்யோன்னு கத்துறாங்க. காது கிழியுது.

Cable Sankar said...

//புறா செத்தது சங்கடமாக உள்ளது
சங்கர்..

மரியாதை தேறுமா ? மாலை மெரினாவில் சொல்லுங்க...

ஹஸன் ராஜா.

//
சாயங்காலம் மீட் பண்ணுவோம் ராஜா..

Cable Sankar said...

//இப்படியா கிழிப்பாய்ங்க,

பாவம், டைரக்டரு//

தாங்க முடியல தராசண்ணே..

Cable Sankar said...

//நேரம் மிச்சம்... நன்றி கேபிள் சங்கர்//

நன்றி தங்கவேல் மாணிக்கம்.

Cable Sankar said...

//புறாவின் இறுதி ஊர்வலம் எங்கு நடக்கிறது?:)//

ஆனாலும் ரொம்பத்தான் குசும்பு..

Cable Sankar said...

//இயக்குனர் மேல கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம்....//

முடியல தீப்பெட்டி.. மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்..

Cable Sankar said...

//இந்தப் படக்குழுவினரோடு உங்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பதும், நல்லா வரும்க படம் என்றும் நீங்கள் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் சரியில்லாததை சரியில்லை என்று கிழி கிழித்ததன் மூலம் விமர்சன தர்மத்தைக் காப்பாற்றி விட்டீர்கள்.

நன்றி சங்கர்!
//

மிக்க நன்றி பரிசல்.

Cable Sankar said...

//நானும் அந்த கொடுமைய அனுபவிச்சேன். விகடன்ல பேட்டிய படிச்சிட்டு ரொம்ப எதிர்பார்போட போனா செம ஆப்பு. படத்துல வர்ற எல்லா கேரக்டரும் ஒரு தடவையாச்சும் அய்யய்யோன்னு கத்துறாங்க. காது கிழியுது.

//

:(:(

Anonymous said...

விகடனில் பேட்டி தருபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் சொல்கிறார்கள். அதை நம்பி
படத்தைப் பார்க்க முடியுமா.

Anonymous said...

'திரைவிமர்சனத்திற்கு பின்னூட்டம் இடுவது எப்படி? '
அப்படின்னு யாராவது புத்தகம் போட்டிருக்கீங்களாப்பா?'

கிழக்கு பத்ரி/பாரா/லக்கிலுக்கிடம்
கேட்க வேண்டிய கேள்வி :).

அத்திரி said...

//படத்தில் கூப்பிடும் போது பகலில் இருக்கும் கேரக்டர்கள், நடந்து அடுத்த தெருவில் வருவதற்குள் இரவாகி விடுகிறது. நடு இரவில் அடிவாங்க ஆரம்பிக்கும் ஹீரோ.. அடுத்த நாள் காலை வரை அடிவாங்கி கொண்டிருப்பதும்,///

அய்யய்யோ.......இப்படி வேறயா/

அத்திரி said...

50 அடிச்சாச்சு....

Subash said...

ம்ம்ம்
நீங்க பதிவில் கேட்ட கேள்விகளை ஸ்கிரிப் எழுதும்போது டைரக்டரே யோச்சிருக்கமாட்டார்
கிழிச்சிட்டீங்க

வண்ணத்துபூச்சியார் said...

எத்தனை நாளைக்கு விமர்சனமே எழுதி கொண்டு..???

இந்த வருடமாவது நல்ல செய்தி சொல்லுங்க கேபிளாரே...

அதுக்கு நானும் பாலாவும் விமர்சனம் எழுத வேண்டாமா ..??

Cable Sankar said...

//விகடனில் பேட்டி தருபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் சொல்கிறார்கள். அதை நம்பி
படத்தைப் பார்க்க முடியுமா.

//

எல்லாத்தையும் அப்படி சொல்ல முடியாது..

Cable Sankar said...

//'திரைவிமர்சனத்திற்கு பின்னூட்டம் இடுவது எப்படி? '
அப்படின்னு யாராவது புத்தகம் போட்டிருக்கீங்களாப்பா?'

கிழக்கு பத்ரி/பாரா/லக்கிலுக்கிடம்
கேட்க வேண்டிய கேள்வி :).//

இதில் லக்கி லுக் எங்கே வந்தார்..? அனானி..

Cable Sankar said...

//50 அடிச்சாச்சு....

//

நன்றி அத்திரி..

Cable Sankar said...

//ம்ம்ம்
நீங்க பதிவில் கேட்ட கேள்விகளை ஸ்கிரிப் எழுதும்போது டைரக்டரே யோச்சிருக்கமாட்டார்
கிழிச்சிட்டீங்க

//

:):)

Cable Sankar said...

//எத்தனை நாளைக்கு விமர்சனமே எழுதி கொண்டு..???

இந்த வருடமாவது நல்ல செய்தி சொல்லுங்க கேபிளாரே...

அதுக்கு நானும் பாலாவும் விமர்சனம் எழுத வேண்டாமா ..??

//

நானா மாட்டேங்கிறேன்.. நீங்க விமர்சன்ம் எழுதும் நாள் வெகு விரைவில் வர கடவுளை பிரார்த்திக்கிறேன்.
மிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே..

Cable Sankar said...

//எத்தனை நாளைக்கு விமர்சனமே எழுதி கொண்டு..???

இந்த வருடமாவது நல்ல செய்தி சொல்லுங்க கேபிளாரே...

அதுக்கு நானும் பாலாவும் விமர்சனம் எழுத வேண்டாமா ..??

//

நானா மாட்டேங்கிறேன்.. நீங்க விமர்சன்ம் எழுதும் நாள் வெகு விரைவில் வர கடவுளை பிரார்த்திக்கிறேன்.
மிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே..

ஆதிமூலகிருஷ்ணன் said...

புறா65 பண்ணிட்டீங்க.. செம்ம டேஸ்ட்டு!

Mehar said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com

umesh said...

Urs is a gr8 review.Check out mine:
"KPKPvum 1001 clichevum"
http://theumeshblog.blogspot.com/2009/05/kunguma-poovum-1001-clichevum.html