Thottal Thodarum

Apr 13, 2009

கொத்து பரோட்டா 13/04/09

பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்..

சமீபத்தில் போலந்தில் ஒருவர் ஒரு மானை காப்பாற்றியதற்காக கைது செய்யப்பட்டார். ஒரு நாள் காரில் வேலைக்கு செல்கையில் ரோடின் ஓரத்தில் ஒரு மான் படுத்திருப்பதை கண்டு கிட்டே சென்று பார்த்தார், மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது. சரி இறந்து போய்விட்டது என்று எண்ணி  போகிற வழியில் போலீஸில் சொல்லிவிட்டு போகலாம் என்று நினைத்தவர், மானை எடுத்து பின் சீட்டில் போட்டு விட்டு கிளம்பினார்.  அவசர வேலையாய் ஆபீஸுக்குள் சென்றவர், மானை மறந்தே போனார். மயக்கமுற்றிருந்த மான் தெளிந்து காரினுள் அலைய, வெளியேயிருந்து பார்த்தவர்கள், மிருக வதை தடுப்பு ஆட்களிடம் சொல்ல, காரின் உரிமையாளரை கைது செய்திருக்கிரார்கள். உடனடியாய் ஆஸ்பத்திரியில் சேர்காமல், அடைத்து வைத்ததுக்காக அவருக்கு ஏதாவது குறைந்த படசம் சிறைவாச தண்டனையும், அபராதமும் விதித்திருக்கிறார்கள். நல்லதுக்கு காலமில்ல போலருக்கு..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வர வர பல கடைகளில் ஐம்பது பைசா சில்லறை தருவதேயில்லை. அதற்கு பதிலாய் நாம் கேட்காமலேயே ஒரு சாக்லெட்டை கொடுத்து விடுகிறரர்கள், காக்லெட் வேண்டாம் காசு கொடுங்கள் என்றால் சில்லறையில்லை என்றே சொல்கிறார்கள். நாட்டில் ஒன்றும் 50பைசா நாணயங்கள் தட்டுப்பாட்டில் இல்லை. அப்படியிருக்க இப்படி வம்படியாய்  சாக்லெட்டை விற்கிறார்கள்., அப்படி கொடுக்கும் சாக்லெட்டும் டுபாக்கூர் கம்பெனியுடையாதிருக்கு. இவர்களுக்கு  வியாபாரத்துக்கு வியாபராமும் ஆச்சு,  என் நண்பர் ஒருவர் ரொம்ப நொந்து போய் வழக்கமாய் ஒரு வாங்கும் கடையில், கடைக்காரர் சில்லறைக்கு பதிலாய் கொடுத்த சாக்லெட்டையெல்லாம் சேர்த்து வைத்து, தான் கொடுக்க  வேண்டிய நூறு ரூபாய் கடனுக்காக,  பெரிய பஞ்சாயத்து வைத்து ”நீமட்டும் சில்லறை கொடுக்க காசில்லைன்னு சாக்லெட்டை கொடுக்கலாம், நாம் மட்டும் நான் கொடுக்க வேண்டிய பாக்கிக்காக நீ கொடுத்த சாக்லெட்டையே கொடுக்க கூடாதா?” என்றார். கும்பல் சேர்ந்து நண்பர் பக்கம் ஆதரவு அதிகமாக, வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டார். இப்போதெல்லாம் அந்த கடைக்காரர் சாக்லெட் கொடுப்பதில்லை. உங்க உரிமையை கேளுங்கப்பா..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஏ- ஜோக்

ஒரு வயதான கிழவர் தன்னுடய இளம் மனைவியை கர்பமாக்க விரும்பி, டாக்டரிடம் தன்னுடய விந்தணுக்களை செக் செய்ய சென்றார். டாக்டர் ஒரு பாட்டிலை கொடுத்து அதில் அவரது விந்தை கொண்டு வரச் சொல்ல, அடுத்த நாள் வெறும் பாட்டிலோடு வ்ந்த பெரியவரிடம் ஏன் என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டார். அதற்கு முதியவர், நானும் என் மனைவியிடத்திலும், என்னுடய, வலதுகை, இடதுகை, என் மனைவினுடய வலதுகை, இடதுகை, அவளுடய வாய், பின் மனைவியின் தோழியின் கை, வாய் எல்லாவற்றையும்  முயன்று பார்த்துவிட்டேன். என்று சொல்லும்போது, இடைமறிந்த, டாக்டர்.. என்ன சொன்னீர்கள் உஙக்ள் மனைவியின் தோழியுடனுமா..? என்று ஆச்சர்யத்தோடு கேட்க, ஆமாம் டாக்டர் இவ்வளவு பேர் முயன்றும் பாட்டிலின் மூடியை திறக்க முடியவில்லை. என்றார்.

 

ஒர் ஆணும் பெண்ணும் திடீரென மூடு வந்து  நடுகாட்டில் இருட்டில் ”மேட்டர்”  செய்ய ஆரம்பிக்க, ஒரு பதினைந்து நிமிடம் கழித்து,

ஆண் : சே. அட்லீஸ்ட் ஒரு டார்ச் லைட்டாவது எடுத்து வந்திருக்கலாம்

பெண் :  ஆமாமா.. பதினைஞ்சு நிமிஷமா நீ புல்லைத்தானே பண்ணிட்டிருக்கே.ஆனந்த தாண்டவம் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

48 comments:

தராசு said...

மீ தெ பர்ஸ்டூ,

அந்த 50 பைசா மேட்டர் சூப்பர்ணே.

டக்ளஸ்....... said...

முதலாவது சூப்பரு...
இரண்டாவது டாப் டக்கர்..எல்லாரும் ட்ரை பண்ணலாம்...
மூணாவது ஏ‍ ஜோக் நான் படிக்கல..( நான் ரொம்ப நல்ல பையன்ங்கோ)

கோவி.கண்ணன் said...

//பெரிய பஞ்சாயத்து வைத்து ”நீமட்டும் சில்லறை கொடுக்க காசில்லைன்னு சாக்லெட்டை கொடுக்கலாம், நாம் மட்டும் நான் கொடுக்க வேண்டிய பாக்கிக்காக நீ கொடுத்த சாக்லெட்டையே கொடுக்க கூடாதா?” என்றார். கும்பல் சேர்ந்து நண்பர் பக்கம் ஆதரவு அதிகமாக, வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டார். இப்போதெல்லாம் அந்த கடைக்காரர் சாக்லெட் கொடுப்பதில்லை. உங்க உரிமையை கேளுங்கப்பா..//

பாராட்ட வேண்டிய ஒன்று, இப்படி பலர் செய்தால் ஏமாற்றுபவர்கள் திருந்துவார்கள். நான் இனி ஊருக்கு வந்தால் 25 பைசா சாக்லெட் ஒரு பை வாங்கி வைத்துக் கொள்வேன்.

Anbu said...

a joke super

Raj said...

hot spot ஐ கொஞ்சம் zoom பண்ணுங்க தெளிவா இல்ல

பரிசல்காரன் said...

சில்லறை மேட்டரை நீங்க்ளும் எழுதியிருந்தது ஆச்சர்யப்பட வைக்கீறது. அதுவும் உங்கள் நண்பர் செய்ததைத்தான் நான் ஒரு நாள் செய்யப்போகிறேன் என்று நேற்று நான் உமாவிடம் சொன்னேன்!!

ஏ - வர வர ரொம்ப ஓவராப் போகுதுங்க...

MayVee said...

muthal A joke vikatan la vanthu irukku...
erndavathu super...


chocolate matteryai first start panni vaithathu saravana bhavan hotel karananga thaan... athavathu 80's la entru ninaikkiren ....

கார்க்கி said...

என்னை மாதிரி சின்ன பசங்க வந்து கெட்டு போறோம். வார்னிங் போடுங்க தல தலைப்புல..

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

நையாண்டி நைனா said...

அண்ணே கொத்து பரோட்டாவிலே ரெண்டே ரெண்டு பரோட்டா தான் போடுறீங்க. அது எனக்கு பத்தவே மாட்டேங்குது. அப்புறம் கடையிசியிலே வைகிறீன்களே, "garam masaalaa" அது இப்ப ரொம்ப காரமா இருக்கு, ஒல்டுமாங்குக்கு சூபரா இருக்கு.

shortfilmindia.com said...

//மீ தெ பர்ஸ்டூ,

அந்த 50 பைசா மேட்டர் சூப்பர்ணே.

//
ரொம்ப நன்றிண்ணே..

Cable Sankar said...

//முதலாவது சூப்பரு...
இரண்டாவது டாப் டக்கர்..எல்லாரும் ட்ரை பண்ணலாம்...
மூணாவது ஏ‍ ஜோக் நான் படிக்கல..( நான் ரொம்ப நல்ல பையன்ங்கோ//

டக்ளஸ் நம்ம பரோட்டா கடை சின்ன பசங்கள்லேர்ந்து , பெரியவஙக் வரைக்கும் அவங்க, அவங்க தேவைகேற்ப போடறேன். யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கங்க..

Cable Sankar said...

//நான் இனி ஊருக்கு வந்தால் 25 பைசா சாக்லெட் ஒரு பை வாங்கி வைத்துக் கொள்வேன்.
//

":):):)"

Cable Sankar said...

//a joke super//
நன்றி அன்பு.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable Sankar said...

//hot spot ஐ கொஞ்சம் zoom பண்ணுங்க தெளிவா இல்ல//

டிரை பண்ணினேன் ராஜ்.. வர மாட்டேங்குது..

Cable Sankar said...

//சில்லறை மேட்டரை நீங்க்ளும் எழுதியிருந்தது ஆச்சர்யப்பட வைக்கீறது. அதுவும் உங்கள் நண்பர் செய்ததைத்தான் நான் ஒரு நாள் செய்யப்போகிறேன் என்று நேற்று நான் உமாவிடம் சொன்னேன்!!//

நிஜமாவே செம கோயிண்ஸிடெண்ஸு பரிசல்..

ஏ - வர வர ரொம்ப ஓவராப் போகுதுங்க...//

நானும் ரொம்பத்தான் ஜாக்கிரதையாத்தான் போடறேன். ரொம்ப ஏவா இருக்கு?

Cable Sankar said...

//muthal A joke vikatan la vanthu irukku...
erndavathu super...
//

அப்படியா மாயாவி.. இது பழைய ஜோக்.. இப்பத்தான் எங்க காலேஜில சொன்னாங்க.. (நாங்க யூத்துல்ல)

Cable Sankar said...

//என்னை மாதிரி சின்ன பசங்க வந்து கெட்டு போறோம். வார்னிங் போடுங்க தல தலைப்புல..

//

யாரு சின்னப்புள்ள.. நல்லா வந்துட்டாங்கய்யா சின்னபுள்ளைன்னு சொல்லிகிட்டு.

Cable Sankar said...

//தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.//

நன்றி.. உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜாராமன்

Cable Sankar said...

//அண்ணே கொத்து பரோட்டாவிலே ரெண்டே ரெண்டு பரோட்டா தான் போடுறீங்க. அது எனக்கு பத்தவே மாட்டேங்குது. அப்புறம் கடையிசியிலே வைகிறீன்களே, "garam masaalaa" அது இப்ப ரொம்ப காரமா இருக்கு, ஒல்டுமாங்குக்கு சூபரா இருக்கு.

//

இத போடற்துக்குள்ளவே தாவூதீர்ந்துடுது.. அதுசரி.. கரம் மசாலா நல்லாருக்கா இல்லையா.. கொஞ்சம் மசாலா கொறைச்சா டேஸ்ட் இல்லைன்னு வேற சொல்றீங்க..என்ன பண்றதுன்னே தெரியல நைனா..

வண்ணத்துபூச்சியார் said...

கொத்து பரோட்டா சூப்பர்.

ஏ வர வர Double AA.

ரவிசங்கர் said...

chocolate செய்தி அருமை. நானும் இதற்காக கடைகளில் சண்டை போட்டிருக்கும். இனி உங்கள் நண்பர் வழியைப் பின்பற்ற வேண்டியது தான் !

லக்கிலுக் said...

பரோட்டா நல்ல சுவை கேபிளாரே!

m bala said...

மூணாவது ஏ‍ ஜோக் சூப்பரு ரொம்ப நன்றிண்ணே.

m bala said...

அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்

ஜுர்கேன் க்ருகேர் said...

சாக்லேட் மேட்டர் அருமை...
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

தலைவர் said...

தல, நாமேல்லாம் எ-ஜோக் மட்டும் தான் படிப்போம், கக்கிட்ட போ...

சுட்டி குரங்கு said...

எங்க தங்க தலைவர் சல்மான் கான் கூட இப்படி தான் மானை காப்பத்த ட்ரை பண்ணி மாட்டிகிட்டார் போல. இது தெரியாம !! mmm.....

சூபெர் போஸ்ட் !!

குசும்பன் said...

இரண்டாவது ஜோக்கை கொஞ்சம் வேற மாதியில்ல சொல்லுவாங்க:))))

Cable Sankar said...

//இரண்டாவது ஜோக்கை கொஞ்சம் வேற மாதியில்ல சொல்லுவாங்க:))))//

ம்.. இதுக்கே ஏ ஜோக் ரொம்ப ஏவாயிருச்சின்னு சொல்றாரு.. பரிசல்.. நீங்க வேற உண்மையிலேயே அதை வேற மாதிரிதான் சொல்வாங்க.. குசும்பன்:):)

Cable Sankar said...

//சூபெர் போஸ்ட் !!
//

மிக்க் நன்றி சுட்டி குரங்கு.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்

Cable Sankar said...

//தல, நாமேல்லாம் எ-ஜோக் மட்டும் தான் படிப்போம், கக்கிட்ட போ...//

நல்லாருந்திச்சா தலைவரே.. மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்

Cable Sankar said...

//சாக்லேட் மேட்டர் அருமை...
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!//

மிக்க நன்றி ஜூர்கேன்.. உங்கள் தொடர் ஆதரவுக்கு

Cable Sankar said...

//அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலா.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Cable Sankar said...

//பரோட்டா நல்ல சுவை கேபிளாரே//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி லக்கி..

Cable Sankar said...

//chocolate செய்தி அருமை. நானும் இதற்காக கடைகளில் சண்டை போட்டிருக்கும். இனி உங்கள் நண்பர் வழியைப் பின்பற்ற வேண்டியது தான் !//

பின்பற்றுங்க.. வாழ்த்துக்கள்.

Cable Sankar said...

//கொத்து பரோட்டா சூப்பர்.

ஏ வர வர Double AA.

//

அப்படியா வண்ணத்துபூச்சியாரே..

pappu said...

தலைவா, ஹா ஸ்பாட்ல யாரு?

அத்திரி said...

சில்லரை மேட்டர் பெரிய தொல்லை அண்ணே... என்ன பண்றது. ஏ ஜோக் திலகம்னு பட்டம் கொடுத்திடவா அண்ணே

Cable Sankar said...

//சில்லரை மேட்டர் பெரிய தொல்லை அண்ணே... என்ன பண்றது. ஏ ஜோக் திலகம்னு பட்டம் கொடுத்திடவா அண்ணே

//

ஹி..ஹீ.. ரொம்ப நன்றிண்ணே..

Cable Sankar said...

//சில்லரை மேட்டர் பெரிய தொல்லை அண்ணே... என்ன பண்றது. ஏ ஜோக் திலகம்னு பட்டம் கொடுத்திடவா அண்ணே

//

ஹி..ஹீ.. ரொம்ப நன்றிண்ணே..

D.R.Ashok said...

அந்த first joke … saarra callaas…thalaiva……. chancse ella…..

ஷண்முகப்ரியன் said...

கொத்து பரோட்ட்டா நல்ல் கமர்ஷியல் படம் பார்ப்பது போல இருந்தது,ஷங்கர்.

Cable Sankar said...

//அந்த first joke … saarra callaas…thalaiva……. chancse ella…..//

மிக்க நன்றி அசோக்..

Cable Sankar said...

//கொத்து பரோட்ட்டா நல்ல் கமர்ஷியல் படம் பார்ப்பது போல இருந்தது,ஷங்கர்//

கண்டிப்பாய் ஒரு நல்ல கமர்ஷியல் படத்தை கொடுக்க ஆண்டவன் அருள் புரியணும் சார்.

Sukumar Swaminathan said...
This comment has been removed by the author.
Sukumar Swaminathan said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களா .....? அப்ப அய்யா கோவிச்சிக்க மாட்டாரா

Cable Sankar said...

//தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களா .....? அப்ப அய்யா கோவிச்சிக்க மாட்டாரா

//

இது மாதிரி அய்யா தெலுங்கு காரங்க, மலையாளத்து காரங்க கிட்ட சொல்ல சொல்லுங்களேன். தமிழந்தான் இளிச்சவாயன் எது சொன்னாலும் கேட்டுப்பான்.