Posts

எண்டர் கவிதைகள்-8

Image
உடை களைந்ந உருவம் பார்த்ததும் ஹைப்போதலமஸிலிருந்து கட்டளை பறக்க சீறும் பாம்பாய் கிளம்பியெழுந்து கழுத்து வேர்வை கிறக்கம் ஏற்ற புற்று தேடி முட்டி மோதி விரிந்த உலகத்துள் வெடித்தெழுந்து கிளம்பும் போதும் போன் பேசிக் கொண்டிருந்தாள் ”சண்டாளி” போச்சு.. இரண்டாயிரம் கேபிள் சங்கர் டிஸ்கி: ”பெருவாரியான” ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க.. (ஹி..ஹி...டேய் அடங்குடா..) மீண்டும்.. சாரி.. பாஸ்டன் ஸ்ரீராம்..:(

கொத்து பரோட்டா –10/05/10

Image
போன வாரம் சுஜாதா அவார்ட்ஸ் விழாவுக்கு போயிருந்தோம். நல்ல கூட்டம். பிரபல எழுத்தாளர்கள் பலரும் வந்திருந்தார்கள். விருது கொடுக்க வந்த விழாவில் விருது பெற்றவர்களை பற்றி பெரிதாய் பேசாமல், எல்லோரும் சுஜாதாவை பற்றி மட்டுமே பேசியது கொஞ்சம் ஓவர் என்று சுஜாதா வெறியனாகிய எனக்கு கூட தோன்றியது. அதே போல மனுஷ்யபுத்திரனுக்கும், உயிர்மைக்கும் பி.ஆர் வேலை செய்வதையே சிலர் கடமையாய் செய்தார்கள். சாரு பேசினார். அவரை பற்றி சொல்ல ஏதுமில்லை. வழக்கம் போல். இவர்களில் உச்சம் தமிழச்சி தங்க பாண்டியனின் பேச்சு. உயிர்மை சுஜாதா புத்தகங்களை வெளியிட்ட பிறகுதான் சுஜாதா பரவலாய் போய் சேர்ந்தார் என்பதுதான் உச்சபட்ச் காமெடி. அங்கு வந்திருந்த கூட்டத்தில் எல்லா வயதினரும் வந்திருந்தார்கள் நிச்சயம் அவர்கள் எல்லாம் உயிர்மை வெளியீட்டிற்கு பிறகு சுஜாதாவை அறிந்தவர்களாய் இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். முன்னாடியெல்லாம் முப்பது, நாப்பது ரூபாய்க்கு சுஜாதா புக்கு கிடைக்கும், இவங்க புக் போட ஆரம்பிச்சதும் குறைந்தது முன்னூறு ரூபா இல்லாம வாங்க முடியறதில்லை என்றார்  வாசகர் ஒருவர். எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத்தை ...

கோரிப்பாளையம் – திரை விமர்சனம்

Image
ஆவரேஜ் கமர்சியல் ஹிட்டான மாயாண்டி குடும்பத்தார் இயக்குனர் ராசு மதுரவன், நாடோடிகள் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இணைந்து வழங்கியிருக்கும் படம். சமீபத்திய ரேனிகுண்டா, மாத்தியோசி, போன்ற படங்களை வேறு ஞாபகப்படுத்தும் நடிகர்கள். மாத்தியோசியின் நாயகனே இதிலும் நாயகர்களில் ஒருவர். மீண்டும் ஒரு மதுரை ரவுடிகள் படமா? என்ற அலுப்புடன் தான் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் மெல்ல, மெல்ல ஒரு சாதாரண ரவுடிக் கும்பலை பற்றி மட்டுமில்லாமல் கொஞ்சம், கொஞ்சமாய் கதை சொல்ல அரம்பித்தவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன். சிறு வயதிலிருந்து வீட்டின் கடைக்குட்டியான அழகரை சிகரெட்டு, பீடி வாங்க அனுப்பியே, கொஞ்சம் கொஞ்சமாய் தறுதலையாய் மாறி அலையும் அழகர், பிறந்தவுடன் குப்பைத்தொட்டியில் போடப்படும் ஏ டு இஸட், எவனோடோ ஓடிப்போய்விட்ட தாயினால் அநாதையாக்கப்பட்ட இழுப்பு, பெற்ற தாயே புருஷனும் புள்ளையும் வேண்டாம் என்று வேறு ஒருவருடன் ஓடிப்போய் குடும்பம் நடத்தியதால் யாருமில்லாதவனாய் அலையும் ஜெகன், இவர்களுடன் ஜில்பா தலையுடன் அலையும் ரிட்டயர்டு ரவுடி மயில் சாமி, எப்போது இவர்களுடன் அலையும் இவர்களுக்கு பைனான்ஸ் செய்யும் சுமார் பணக்கார...

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் –திரை விமர்சனம்.

Image
சிம்புத்தேவனின் மூன்றாவது படம், தமிழில் ரொம்ப நாளுக்கு பிறகு வந்திருக்கும் முழு நீள கெளபாய் படம். என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கோடை விடுமுறையில் வந்திருக்கும் படம் பெரிதாக கதைக்கெல்லாம் மெனக்கெடவில்லை. ஒரு வைரத்தை தொலைத்த லாரன்ஸை வைரத்தை கொண்டு வந்தால் தான் அவர் வளர்க்கும் பிள்ளைகளை ஒப்படைப்பேன் என்று கூறிவிட, அவருக்கு உதவுவதாக மெளலி, ரமேஷ்கண்ணா, இளவரசு கும்பல் சொல்ல, அதற்கு பிரதியுபகாரமாய் தங்கள் கெளபாய் கிராமத்தை அவனை போலவே இருந்த சிங்கம் என்கிற லாரன்ஸை போல நடித்து வில்லன்களை பயமுறுத்தினால் அவருக்கு அவர்கள் கோயிலில் உள்ள வைரத்தை தருவதாய் சொல்ல, அதற்காக அங்கே போகும் லாரன்ஸுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தான் படம். எல்லா கெளபாய் படங்களை போலவே மரத்தால் ஆன வீடுகள், குதிரைகள், கெள்பாய் டிரஸுகள், கோயில் ஐயருக்கு கூட தலையில் கெளபாய் தொப்பி, பாஸ்மாக் என்று டாஸ்மாக்குக்கு பதிலாய் சரக்கு கடை, காபி டேவின் வாசலில் மசால் வடை போடும் டீக்கடை, கிராமத்துக்கு பெயர் ஜெய்சங்கர்புரம், முதலில் குடிவந்தவர் கர்ணன் என்கிற கேமராமேன், அப்புறம் எம்ஜிஆர், பின்னர் அசோகன், கடைசியாய் வந்தவர் ஜெய்...

மனைவி அகராதி

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன் மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க.. அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை. மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு அர்த்தம் : வேற வீடு பாக்கணும் மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..? அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன் மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன். மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா? அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு மனைவி : சரி அர்த்தம்   :  நோ.. மனைவி : நோ அர்த்தம் : சரி மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா? ...

சாப்பாட்டுக்கடை

Image
சரியான பசி நேரத்தில் எதையாவது சாப்பிடுவோம் என்று கிடைத்ததை சாப்பிடுவது ஒரு விதம் அப்படி சாப்பிட்ட பிறகு பசியில்லைனா வாயில் வைக்க வழங்காது என்று சொல்லி பார்த்திருக்கிறோம். ஆனால் எப்போதும் அது போல நாம் சாப்பிடுவதில்லை. மனிதனுக்கு மிகப் பெரிய விஷயமே அதிகமோ, கொஞ்சமோ நல்ல  சாப்பாடு என்பது வாழ்வில் முக்கியமான, இன்றியமையாத விஷயமாகத்தான் இருக்கிறது. சுவையான சாப்பாட்டுக்கான தேடல் ஒவ்வொரு மனிதனுள் இருக்கத்தான் செய்கிறது. கொத்து பரோட்டாவில் நான் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று உணர்ந்த சின்ன சின்ன ஹோட்டல்கள், கையேந்திபவன், பெரிய ஹோட்டல்கள் வரை அறிமுகபடுத்தி வந்ததிற்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறீர்கள். பல நண்பர்கள் வெளியூரிலிருந்து சென்னை வந்ததும் சில சமயம் குடும்பத்தோடு நான் சொல்லியிருந்த கடைகளுக்கான வழியை எனக்கு போன் செய்து விசாரித்து போவார்கள். சில பேர் வருகிற போதே ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வருபவர்களும் உண்டு. சில நண்பர்கள் எனக்கு போன் செய்து ஒருகுறிப்பிட்ட கடையை சொல்லி அது எந்த கொத்து பரோட்டாவில் இருக்கிறது என்று தேடி போயிருக்கிறார்கள். சில சமயம் என் ஞாபக அடுக்குகளிலிருந...

கொத்து பரோட்டா –03/05/10

செனற வாரத்தில் ஒரு நாள் லஷ்மியின் கதையல்ல நிஜம் நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. பிரிந்திருந்த கணவன் மனைவியை சேர்த்து வைக்கிறேன் என்று மாத்தி, மாத்தி பேசி.. இப்போதே முடிவெடுங்கள், உடனே சொல்லு என்று ப்ரஷரை கொடுத்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இன்னும் ரெண்டு வருடஙகளீல் படிப்பை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொன்ன மனைவி. இவர் செய்த பிரஷரில் சேரவே முடியாது என்று சொல்லி விவாகரத்து கேட்டுவிட்டார். பேசாம அவங்க இங்க வராமயே இருந்திருக்கலாம்.. &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& குஷ்புவின் பேச்சு தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. மிகவும் வரவேற்க்க வேண்டிய ஒரு விஷயம். ஆ..ஊ வென்றால் கற்பு, கலாச்சாரம் என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் தான், ஒரு நாளைப் போல பேப்பரை திறந்தால், அடல்டரி பிரச்சனைகளுக்காக, கொலைக...

சுறா – திரை விமர்சனம்

Image
விஜயின் ஐம்பதாவது படம். சன் பிக்சர்ஸ், என தமிழ் நாடே கோலாகலமாய் எதிர்பார்த்திருத்த படம். சுமார் 600 செண்டர்களில் வெளியிடப்பட்டிருக்கும் படம். படம் பூராவும் விஜய்யின் புகழ் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் சுறா,புறா, நல்லவன், சத்ரியன், சாணக்யன் என்றெல்லாம் துதி பாடுகிறார்கள். முதல் பாதி முழுவதும் இதே வேலை தான் பாடுகிற ஆட்கள் தான் வேறு. நடுவே லூசுத்தனமான காதல், பாட்டு என்று குறிப்பிட்ட இடைவேளையில் வந்து ஆடிவிட்டு போகிறார்கள். நடு நடுவே வடிவேலுவுடன், விஜய் சேர்ந்து கிச்சு, கிச்சு மூட்டி சிரிக்க வைக்க பார்க்கிறார்கள். வழக்கமான ஒரு வில்லன், அரசியல்வாதி, ஊரையே போட்டு உலையில் வைப்பவன், நம்ம விஜயிடம் மட்டும் வசனம் பேசியே மாய்கிறார். அவ்வப்போது, அவன் சாதாரண ஆள் இல்லைடா என்பது போன்ற சொம்படிக்கும் வசனங்களை பேசிவிட்டு, விஜய்க்கு வெற்றி வாய்ப்பை கொடுத்துவிட்டு செத்துப் போகிறார். ஸோ.. விஜய் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறார். சில பல ஷாட்டுகளில் அழகாக இருக்கிறார். நான் நடந்தால், தஞ்சாவூரு பாட்டிற்கு ஜிம்னாஸ்டிக் கலந்த ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் மனுஷன். இது ஒன்று...

கல்கியில்…..

Image
இவ்வார கல்கியில் 22ஆம் பக்கத்தில் என்னுடய் சிறுகதை அப்துல்லா..சிவா டேனியல்.. வெளியாகியிருகிறது எனபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். கேபிள் சங்கர்

Darling –2010

Image
ப்ரபாஸ், கருணாகரன், காஜல் அகர்வால், நம்ம் பிரபு, ஜி.வி.ப்ரகாஷ்குமார் என்று ஆந்திராவில் சம்மருக்கு எதிர்பார்ப்பை ஏற்றியிருந்த படம். ப்ரபாஸ் ஒரு ஜாலியான இளைஞன், அவனை ஒரு பெண் ப்ரபோஸ் செய்கிறாள். ஆனால் பரபாஸோ மறுக்கிறான். இதனால் மனம் உடைந்த அந்த பெண் சூசைட் செய்ய முயல்கிறாள். அந்த பெண்ணின் தாதா அப்பன் ப்ரபாஸின் நண்பர்களை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெண்ணை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்ட, தான் ஏற்கனவே காதலித்தவன் என்றும், அவள் தற்போது ஒரு விபத்தினால் கோமாவில் இருப்பதாகவும் அவளுக்காகத்தான் உயிர் வாழ்வதாய் சொல்கிறான். இவனின் கதையை கேட்ட தாதா, மனம் இறங்கி அவனையும், நண்பர்களையும் விடுவிக்கிறான். நிஜ வாழ்வில் அவன் சின்ன வயதிலிருந்து மனதில் இருக்கும் நந்தினியை நினைத்து சொல்லிய கதை, நிஜத்தில் அவள் வரும் போது நடந்ததா? என்பதுதான் கதை படம் முழுவதும் ப்ரபாஸ் இளமை துள்ளலோடு வளைய வருகிறார். ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் நன்றாக இருக்கிறது. படத்தில் நம் மனதை அள்ளுபவர் காஜல் அகர்வால். அவ்வளவு க்யூட். அதுவும் சுவிட்சர்லேர்ந்து எபிஸோடில் அந்த லொக்கேஷன்களும், அதில் தேவதை ட்ரஸில் சுற்றும்...