Posts

வானம்.

Image
சில திரைப்படங்கள் வேறு மொழியிலிருந்து ரீமேக் செய்யும் போது, அதற்கு விமர்சனம் செய்ய சோம்பேறித்தனமாய் இருக்கும் ஆனால் கிரிஷின் வானத்துக்கு அப்படி சோம்பல் பட முடியவில்லை. தெலுங்கு வர்ஷனான வேதம் விமர்சனம் படிக்க இங்கே க்ளிக்கவும். நண்பர் விசா தெலுங்கு பட விமர்சனத்தில் விசனப்பட்டிருந்தார். இம்மாதிரி கதைகள் எல்லாம் தயாரிப்பாளர் மகன்கள் மட்டுமே நடிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் எல்லாம் ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதுதான் முக்கிய நடிப்பாய் நடித்துக் கொண்டிருக்கிறர்கள் என்று ஆதங்கப்பட்டதை நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.

Mr. Perfect

Image
  எப்போதும் தங்கள் சுயத்தை விட்டுக் கொடுக்காமல், யாருக்காகவும், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளாமல் வாழ்வதுதான் வாழ்க்கை என்று ஒருவன். தன் மனதுக்கு பிடித்தவனுக்காக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் விட்டொழித்துவிட்டு, அவனுடய ஆசையையே தன் ஆசையாய் எடுத்துக் கொண்டு வாழும் ஒருத்தி, இதில் எது சிறந்தது என்பதை பட்டிமன்றம் நடத்தாத குறையாய் சொல்லியிருக்கிறார்கள்.

ரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு

Image
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கும் ரானா திரைப்படத்தின் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் ஈராஸ் இண்டர்நேஷனலும், சவுந்தர்யா ரஜினிகாந்தும் வெளியிட்டிருக்கிறார்கள்.  கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், தீபிகா படுகோன், இலியானா மற்றும இன்னொரு பிரபல நடிகை நடிக்கவிருப்பதாய் செய்திகள் உலவுகிறது. எந்திரன் படத்தின் பட்ஜெட்டை பார்த்து தங்களால் ஆகாது என்று ஐங்கரனிடம் கைவிரித்த நிறுவனம் தான் இந்த ஈராஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.   எஸ்

சாப்பாட்டுக்கடை- மீன் சாப்பாடு

அரசு பிஷ்ஷரீஸ் டிபார்ட்மெண்ட் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறது. சென்னையில் அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயம் தாண்டி வரும் சிக்னலிருந்து, போயஸ் கார்டனுக்கு திரும்பும் இடத்தில் அந்த உணவகம் இருக்கிறது. இங்கு மதியம் அவர்கள் தரும் மீன் சாப்பாடு ம்ம்ம்.. செம தூள். ஒரு கப் சாதம், ஒரு பொரியல், மற்றும் மீன் குழம்பு, ரசம், மற்றும் மோருடன் நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். எக்ஸ்ட்ராவாக வறுத்த மீன், குழம்பு மீன், மீன் கட்லெட், என்று தனி லிஸ்டே இருக்கிறது. என்ன நின்று கொண்டு சாப்பிட வேண்டும், சரியான சர்வீஸ் கொஞ்சம் கிடைக்காது.. அதை பொறுத்துக் கொண்டு சாப்பிட்டால் நிஜமாகவே ம்ம்ம்ம்ம். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Dum Maro Dum

Image
மிகப் புகழ் பெற்ற பாடல். முக்கியமாய் ஹிப்பிகளின் போதை கலாச்சாரத்தையும், அதன் மையமான கோவாவையும், களமாய்க்  கொண்ட திரைப்படத்துக்கு இந்த பெயர் மகா பொருத்தம். ஷோலே இயக்குனரின் மகன் இயக்கியிருககும் படம். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரித்திருக்கும் படம் என்று ஏக எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் படம்.

கொத்து பரோட்டா-25/04/11

Image
படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்துத்தான் தியேட்டரின் உள் நுழைந்தேன். சீட் கண்டுபிடித்து உட்கார்ந்தவுடன், என் மூன்றாவது சீட்காரன் “சார். சீட் மாற்றிக் கொள்ளுங்கள்” என்றான். ஏன் என்று கேட்டதற்கு “லேடீஸ் இருக்காங்க” என்றதும் எனக்கு சுரீரென்று கோபம் வந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு “நான் படம் பார்க்க வந்திருக்கேன்” என்றேன். அவன் மறுபடியும் சார்.. லேடீஸ் இருக்காங்கன்னு சொல்றேன்.. மாத்திக்க மாட்டீங்களா? என்றதும். “அலோ.. நான் தான் சொன்னேன் இல்ல.. நான் படம் பார்க்க வந்திருக்கேன். உங்க கூட வந்திருக்கிற லேடீஸை உரச வரலை” என்றதும் மறு பேச்சில்லாமல் படம் பார்க்க ஆரம்பித்தான்.

கோ

Image
தமிழ் சினிமாவின் சமீபத்திய தியேட்டர் கூட்ட வறட்சியை போக்க வந்திருக்கும் முதல் கோடைக்காலப் படம் “கோ ”.  ஓளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது படம். முதல் படத்தில் டீசண்டாய்  இருந்து கொண்டு கந்துவட்டி மேட்டர், இரண்டாவது படத்தில் கள்ளக்கடத்தல் பின்னணி. இதில் அரசியலும், பத்திரிக்கை போட்டோகிராபரின் வாழ்க்கையை ஒட்டிய பின்னணி. மூன்றிலும் ஒவ்வொரு கதை களன். முந்தைய படமான அயனின் வெற்றியும், ஹாரிஸின் என்னவோ ஏதோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.

Just Go With It- கல்யாணம் பண்ணி காதல்

Image
ப்ளாஸ்டிக் சர்ஜனான டானிக்கு ஒரு கெட்ட பழக்கம். தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதனால் மிகப் ப்ரச்சனையில் இருப்பதாக சொல்லி, சென்சிட்டிவாக உள்ள பெண்களை வளைத்து ஜாலி பண்ணும் பேர்வழி. உடன் வேலை செய்யும் காத்தரீனுடன் அப்படி ப்ளிரிட் செய்து கொண்டிருக்கிறான். காத்தரீன் ஒரு சிங்கிள் மாம். இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஒரு பார்ட்டியில் பால்மர் எனும் ஒரு பாம்ஷெல்லை பார்த்து டானி மயங்கிவிட, அவளிடம் தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், அவளுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகப் போகிறதென்றும், சொல்லி சிம்பதி தேடிக் கொள்ள, இருவரும் உடலுறவு வரை போய்விடுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் போது பால்மர் அவனுடய மனைவியை பார்க்க விரும்ப, வேறு வழியில்லாமல் காத்தரீனை நடிக்கச் சொல்கிறான். அவளுடய குழந்தைகளை தன் குழந்தைகள் என்று பொய் சொல்லிவிட, அவர்களை சமாளிப்பதற்காக ஹவாயன் டிரிப் ஒன்றை லஞ்சமாய் கூட்டிக் கொண்டு போக, அங்கு இருக்கும் நாட்களில் காத்தரினுகும், பால்மருக்கும், டானிக்குமிடையே நடக்கும் காதல் போராட்டம் தான் படம்.

RIO

Image
ஐஸ் ஏஜ் குழுவினரின் அனிமேஷன் படம். 3 டி வேறு என்றவுடன் எதிர்ப்பார்ப்பு ஏகிறித்தான் பார்த்தேன். எனக்கு அனிமேஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். இவ்வகை படங்களின் கதை சொல்லல் முறை, நோகாமல் அறிவுரை சொல்லும் பாங்கு எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானது.

கமலின் அடுத்த படம்?

செல்வராகவன், கமல் கூட்டணி விசா மற்றும் சில பல ப்ரச்சனைகளால் கிளம்ப நேரமாகியிருக்கும் நேரத்தில் ஒரு க்யூக்கியாய் மலையாள சூப்பர்ஹிட்டான “டிராபிக்’ படத்தை ரீமேக்க திட்டமிட்டிருப்பதாய் செய்திகள் உலவுகிறது.