Posts

கொத்து பரோட்டா -31/10/11

Image
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனை விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று மம்மி சொல்லியிருப்பது ஒன்றும் ஆச்சர்யமேயில்லை. என்னை அவர்களை நம்பி.. ஆஹா ஓஹோவென காலில் விழாத குறையாய் துதி பாடியவர்களை பார்த்துத்தான் பாவ்மாய் இருக்கிறது. சட்டசபையில் தீர்மானமெலலாம் இயற்றினார்களே? என்று கேட்பவர்களுக்கு என்னா பாஸ் விளையாட்டுப் புள்ளைகளா இருக்கீங்களே? உள்ளாட்சி தேர்தலும் முடிஞ்சுருச்சு. இனி பாராளுமன்ற தேர்தலின் போதுதானே வந்து நிக்கணும். அப்ப பாத்துக்கலாம்.  அம்மா தன் இன்ப்ளூயன்ஸ் முழுக்க யூஸ் பண்ணி அவங்களை ரிலீஸ் பண்ணனும்னு சொல்லியிருக்காரு... தானைத் தலைவர். அம்மாவோட பதில் திருப்தி தரலையாம் டாக்டருக்கு. கேப்டன் ஒன்னியும் சொன்னாமேரி தெரியலை. #############################

சாப்பாட்டுக்கடை - ID@ Sathyam

Image
நல்ல தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் சென்னைவாசிகளின் முதல் ஆப்ஷன் சத்யமாய்த் தான் இருக்கும். சென்னையின் முக்கிய டெஸ்டினேஷன்களில் ஒன்றாக விளங்கும் இந்த மல்ட்டிப்ளெக்ஸில் முதல் மாடியில் ஒரு வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்ட் இருக்கிறது. பெயர் ஐடி.  நிர்வாகத்தினர் பெயருக்கான பாண்ட் டிசைனிலேயே நம்மை கவர்ந்து விடுவார்கள். உள்ளே சென்றதும் அருமையான ஆம்பியன்ஸ். நடுவே சமையல் இடம். அதை சுற்றி பாரில் உள்ளது போல ஒரு சீட்டிங் அரேஞ்ச்மெண்ட். அவசர அடியாய் தனியாய் என்னைப் போன்றவர்களுக்காக அமைத்திருப்பார்கள் போலும். தோசைக்கல்லுக்கு முன்னாடியே உட்கார்ந்து சுடசுட சாப்பிடலாம்.

வேலாயுதம்

Image
தொடர்ந்து ஆறரை தோல்விகள். அதை மீறி ஏதாவது மேஜிக் செய்வார் என்ற எதிர்பார்பை ரசிகர்களிடையே இன்னமும் வைத்திருக்கும் விஜய். தசாவதாரத்தை தயாரித்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன். ரீமேக் புகழ் ராஜா. ஹிட்டான பாடல்கள் என்று ஏழாம் அறிவுக்கான எதிர்பார்ப்பையும் மீறி தனக்கென ஒரு ஓப்பனிங்கை வைத்திருக்கும் விஜய்யின் படம். விஜய் லோ ப்ரொபைலில் இருக்கும் காலத்தில் வந்த படம் தான் திருமலை. அதற்கு முன்னால் ரிலீஸான படங்கள் எல்லாம் தோல்வியடைந்திருக்க, எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான திருமலை ஹிட்டடித்தது. அதே போன்ற மேஜிக்கை இந்த வேலாயுதம் செய்தானா? என்பதை பார்ப்போம்.

Trespass -2011

Image
பல சமயங்களில் நம் உறவுகளின் பலம் பற்றித் தெரியாது. அதைப் பற்றி கவலை கூட பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஒரு ப்ரச்சனை என்று வரும் போது அந்த உறவுகள் பற்றிய அத்துனை விஷயங்களும் நமக்கு தெரியவரும். துன்பம் வரும் போதுதான் நிஜ நண்பர்கள், உறவுகள் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வார்கள். அதை அடிப்படையாய் வைத்து வெளிவந்திருக்கும் படம் தான் இது. நிகலோஸ் கேஜ், நிக்கோல் கிட்மென், பிரபல இயக்குனர் ஜோல் ஷுமேக்கர் என்று எதிர்பார்பை ஏற்படுத்தும் ஸ்டார் காஸ்ட்.

கொத்து பரோட்டா -24/10/11

Image
தமிழ் சினிமா என்கிற பொன் முட்டையிடும் வாத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நான் நிறைய முறை டிக்கெட் கட்டணங்களை நியாய விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவை என்ன? என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன். சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஆட்சியில் வரிவிலக்கை ஆல்மோஸ்ட் ரத்து செய்து, வரியை டபுளாக்கியதை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அந்த வரி அரசுக்கு செல்லுமா? என்றால் அது இல்லை. ஒவ்வொரு தியேட்டரும் 120யிலிருந்து 300 ரூபாய் வரை மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பல தியேட்டர்களில் அந்த விலை வைக்க அரசாணையே கிடையாது. கேட்டால் வாய் மொழி உத்தரவு என்கிறார்கள். சில மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் டிக்கெட்டுடன் சாப்பாட்டை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு ரசிகர்களை தள்ளுகிறார்கள். நிஜத்தில் கடைசியாய் நம் அரசாணைப் படி ஒவ்வொரு தியேட்டரும் வாங்க வேண்டிய டிக்கெட் விலை என்ன தெரியுமா?  http://www.tn.gov.in/stationeryprinting/gazette/2009/22-III-1(a).pdf  கீழே கொடுக்கப்பட்டுள்ள வில...

Oosaravelli

Image
சமீபகாலமாய் தெலுங்கு பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மரண அடி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மகேஷ்பாபுவின் தூக்குடு வந்து கொஞ்சம் காப்பாற்றியது. எப்படி நம்ம மங்காத்தா தல அஜீத்துக்காக பார்த்தோமோ அதே நிலையில் தான் தூக்குடுவும். அந்த வரிசையில் இப்போது ஜூனியர் என்.டி.ஆர். சுரேந்திர ரெட்டி, தேவி ஸ்ரீ பிரசாத் என்று ஜாம்பவான்களின் அணிவகுப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எண்டர் கவிதைகள் -20

Image
பால்கனியின் ஜன்னலை பூட்டுப் போட்டு வைத்திருக்கிறேன் எதிர்வீட்டு இளைஞனோடு  அவள் ஓடாதிருக்க பூட்டிற்கு வெளியே தெரு  விளக்கொன்று மினுக்கி  மினுக்கி எறிகின்றது இருட்டினிலிருந்து பார்த்தாலும் வெளிச்சம் மின்னத்தான் செய்கிறது அவளுக்கு அவன் சிகரெட் முனையும் அவனுக்கு அவள் மூக்குத்தி ஒளியும் உடைகளை களைந்து பூட்டி வைத்தேன் இருட்டில் நிர்வாணம் பொருட்டல்ல மனமே பிரதானமென்று  பூட்டியும் பிரயோஜனமில்லை சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்

The Three Musketeers

Image
ரொம்ப நாள் ஆயிற்று ஆங்கில படங்களை ரீலீஸின் போதே பார்த்து.இந்த வாரம் பெரிதாய் சொல்லுமளவுக்கு தமிழில் படங்கள் வராததால் வேறு வழியில்லாமல் ஏற்கனவே கேட்ட, பார்த்த கதையாய் இருந்தாலும் பார்க்கலாம் என்று போனேன். இதில் 3டி வேறு.

தமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.

சினிமா என்பதே கேளிக்கைதானே? தனியாக என்ன தமிழ் சினிமா கேளிக்கைகள் என்று சிலர் கேட்கலாம். சினிமாவை பார்பவர்களாகிய நமக்கு வேண்டுமானல் சினிமா கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் அதை தயாரிப்பவர்களுக்கு, இயக்குபவர்களுக்கு, அதையே தன் வாழ்வாதாரமாய் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது வெறும் கேளிக்கையல்ல வாழ்க்கை.

Sahib.. Biwi.. Aur Gangster

Image
குருதத்தின் சாஹிப், பீவி, அவுர் குலாம் படத்தின் பெயரை உங்களுக்கு இது ஞாபகப்படுத்தலாம். ஆனால் இது வேறு. சமீபத்தில் வெளியான பல தமிழ், தெலுங்கு பட ரீமெக் ஹிந்தி படங்களை  பார்க்கவே இஷ்டமில்லாமல் இருந்தேன். சரி பெயரளவில் ஏதோ நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று பார்த்த படம். ஆனால் படம் பார்த்து மூன்று நாட்களாகியும் மனதினுள் ஓடிக் கொண்டேயிருக்கிறது.