Posts

முகமூடி

Image
தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட படம். மிஷ்கின், ஜீவா, யுடிவி என்று ஒரு நல்ல டீம். நிச்சயம் ஒரு நல்ல படத்தை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருந்தது.  அந்த நம்பிக்கையை லேசாய் ஆட்டிப் பார்த்தது இந்த படத்தின் ட்ரைலர்.  சரி..  நம்மாளு கொரிய, ஜப்பானிய படங்களையே இன்ஸ்பிரேஷனில் பின்னியெடுப்பவர். கிட்டானோவின் சிஷ்யர் என்று தன்னை சொல்லிக் கொள்பவர் பேட்மேன், சூப்பர் மேன் படங்களின் பாதியையாவது கொடுத்துவிடமாட்டாரா? என்ற எண்ணம் ஒரு மூலையில் கூவிக் கொண்டிருந்தது. 

சினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாகம்

கடந்த சில வருடங்களுக்கு முன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்த, குற்றம் சாட்டிக் கொண்டிருந்த விஷயம் சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. எல்லா தியேட்டர்களையும் முதல்வரின் குடும்பமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்றார்கள். ஆனாலும் அன்றைய காலத்திலும் வாரத்திற்கு எட்டு படங்கள் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டுதானிருக்கிறது.  சரி அதுதான் ஆட்சி மாறிவிட்டதே சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, கிடைக்கிறது சென்ற ஆட்சியில் கிடைத்தது போலவே பெரிய படங்களுக்கு நடுவில் இரண்டு காட்சிகளோ, ஒரு காட்சியோ, அல்லது மொத்தமாய் ஒரு நாளோ ஓடுகிறார்ப் போல கிடைக்கிறது. சென்ற ஆட்சியில் ஒரு குடும்பமே ஆக்கிரமித்திருந்தது என்று சொன்னவர்கள் இன்று யாரைச் சொல்வது என்று புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்

சாப்பாட்டுக்கடை - மன்சுக்

Image
  மன்சுக்லால் சேட் சுவீட் கடை என்றால் சவுக்கார்பேட்டையில் பிரபலம். அவர்களின் டோக்லா, மற்றும் சமோசா, கச்சோடி, போன்றவை போட்ட மாத்திரத்திலேயே காலியாகிவிடும் அளவிற்கு பிரசித்தி பெற்ற கடை. இவர்களின் உணவகம் கம் ஸ்வீட் கடை ஒன்றை வெகு காலத்திற்கு முன்பே ராமசாமி தெருவில் ஆரம்பித்திருந்தார்கள். இவர்களிடம் மதிய நேரத்தில் சூடான சப்பாத்தி, புல்கா, வெஜ் ப்ரைட் ரைஸ் மற்றும் புலாவ் அயிட்டங்கள் பாஸ்ட் புட் முறையில் வெகு காலத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் படு சாப்டான சப்பாத்தி மற்றும் புல்காவிற்காகவே கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்தாலும் அவ்வப்போது சென்று சாப்பிட்டு வருவேன். 

18 வயசு

Image
55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர் ரெடியாகி ரொம்ப நாளாக வெளிவராமல் இருந்த படம். ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய அடுத்த படம் என்கிற போது ஏற்பட்ட எதிர்பார்பை படம் காப்பாற்றியதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ரேணி குண்டா படம் வசூல் ரீதியாய் சரியாய் போகாவிட்டாலும், டெக்னிக்கலாகவும், க்ரிட்டிகலாகவும் பெயர் வாங்கிக் கொடுத்தபடம். அதே தயாரிப்பாளருக்கு மற்றொரு படம், அதுவும் மீண்டும் அவரின் மகனுக்காகவே எனும் போது பாவம் மனிதருக்கு என்ன பிரச்சனையோ? தன்னை அடமானம் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது.

கொத்து பரோட்டா 27/08/12

Image
தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் முதல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்கள், வாசகர்கள், வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அங்கேயே ஒரு சிறு புத்தகக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காலையில் மூத்த பதிவர்களோடு ஆரம்பித்த நிகழ்வு,  தொடர்ந்து இளைய பதிவர்கள் மூத்த பதிவர்களை பாராட்டி மகிழ, அதன் பிறகு வந்திருந்த அத்துனை பதிவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சியை நானும், சி.பியும், சிராஜுதீனும், சங்கவியும் சேர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடத்தினோம். மதியம் அருமையான வெஜ் விருந்து. அடுத்த ஒரு மணி நேரத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் விழாவை சிறப்பிக்க வந்தார். கவியரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் நானும் ஒரு எண்டர் கவிதையை படித்தேன். நிறைய பேர் கைதட்டியது நான் சீக்கிரம் முடித்தேன் என்பதற்கா அல்லது நிஜமாகவே கவிதையாய் வந்துவிட்டதற்கா? என்று தெரியவில்லை.சென்னையில் உள்ள முக்கிய பதிவர்கள் அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பித்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வெளிநாடு, வெளி மாநிலம், வெளியூரிலிர...

பெருமான்

Image
இந்தவாரத்தின் மற்றொரு சிறு முதலீட்டு டிஜிட்டல் படம். பெருமான் என்கிற ரஜினிகாந்த் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்பு ரஜினிபெயரை எடுத்துவிட்டார்கள். ஆச்சரியங்கள் படத்தைப் போலவே இவர்களும் வழக்கமான ஒரு கதைக் களனை எடுக்காமல் இருந்ததற்காக பாராட்டப்பட வேண்டும்.

ஆச்சரியங்கள்

Image
மீண்டுமொரு சின்ன பட்ஜெட் படம். அது அவர்களின் விளம்பரங்களிலேயே தெரிந்தது. பல சின்ன பட்ஜெட் டிஜிட்டல் படங்களைப் பார்த்து சலித்துப் போன நேரத்தில் ஆச்சர்யமாய் வந்திருக்கும் படம்.

வலிக்காமல் கொள்ளையடிக்கும் மால்கள்

Image
தமிழகத்தில் பல இடங்களில் மால் கலாச்சாரம் பரவிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இன்னும் சில வருடங்களில் சுமார் இருபது மால்கள் திறக்கப்பட இருக்கிறது. சிற்றூர்களிலும், மேலும் பல முக்கிய நகரங்களிலும் சிறு சிறு மால்கள் தியேட்டர்களோடு திறக்கப்படவிருக்க, பார்க்கிங் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளையைப் போல புது புதுசாய் யோசித்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். கவர்ச்சிகரமான ஸ்டைலில். முக்கியமாய் புட்கோர்ட்டில், கேம்ஸ் செக்‌ஷனில்.

HP

Image
55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர் ஒரு மாதத்திற்கு முன் புதியதாய் ஹெச்.பி பிரிண்டர் கம் ஸ்கேனர் ஒன்றை வாங்கினேன். வாங்கிய சில நாட்களிலேயே ப்ரிண்ட் செய்ய கமாண்ட் கொடுத்தவுடன் ப்ரிண்ட் சரசரவென வர வேண்டிய ப்ரிண்டர் திக்கித் திணறி ப்ரிண்ட் செய்தது. நாளாக.. நாளாக பிரிண்ட் கொடுத்தால் அது பிரிண்டாகி வருவதற்கு குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது. 

கொத்து பரோட்டா -20/08/12

Image
55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர் மீண்டுமொரு பள்ளி விபத்தும், உயிரிழப்பும். இப்படி சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது நாட்டில் நிகழும் பள்ளிச் சிறுவர்களின் மரண நிகழ்வுகள். சிறுவன் ரஞ்சித்தின் மரணம் பெற்றோர்களிடையே ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மேலாளர்களை கைது செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் திடீர் புரட்சியாளர்கள், பார்பனிய எதிர்பாளர்கள், நிஜமாகவே சமூக அக்கறைக் கொண்டவர்கள் என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பும், போராட்டமும் கிளம்பியிருப்பது நல்ல விஷயம்தான் என்றாலும் இவ்வளவு எழுச்சியும் , கேள்விகளும் இம்மாதிரியான பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்க்கும் போது கேட்கிறோமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நல்ல பள்ளி, பிரபலமான பள்ளி என்பதை மட்டுமே வைத்து டொனேஷன் கொடுத்தெல்லாம் அப்பள்ளியில் நம் பிள்ளைகளை சேர்க்கிறோம். ஆனால் எப்போது நாம் அவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் தட்டிக் கேட்கிறோம்?. நீச்சல் குளத்தில் அதிகப்படியான மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். சரியான ஆள...