Posts

லாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்

Image
”தேங்க்ஸ்” என்றாள் அனு “நோ பார்மாலிட்டி ப்ளீஸ். ரைட் சைட் உன் ரூமையே நீ எடுத்துக்கலாம். என்ன கொஞ்சம் புத்தகமெல்லாம் வச்சிருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்திடறேன் வையிட்” என்று கேஷுவலாய் சொல்லியபடி அந்த அறைக்குள் சென்றவனை   பார்த்தபடி தன் பையை மோடாவின் மேல் வைத்துவிட்டு, சுற்றிலும் பார்த்தாள். அதே சேகுவாரா, பாரதியார், பெரியதாய் ஒரு ஹிட்காக், அபூர்வ சகோதரர்கள் அப்பு கமல், குவாண்டின் ட்ரெண்டினோ மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தார்களோ அங்கேயே இப்போதும் இருந்தார்கள். @@@@@@@@@@ “நீ சினிமாக்காரனா?” “ஏன் அப்படி கேக்குறே?” “இல்லை கமல் ஹிட்காக் படமெல்லாம் வச்சிருக்கியே? அதான் கேட்டேன்?’ “சே குவாரா படம் கூட தான் வச்சிருக்கேன். அதுக்காக நான் புரட்சியாளனா?” “இல்லியா என்ன? எதுக்கெடுத்தாலும் சண்டை போடுற? ரைட்ஸுங்குற? போலீஸ் கிட்டேயே ரூல்ஸ் பேசுறே? தென் வாட்? யூ ஆர் எ புரட்சியாளன்” ”சினிமா, இலக்கியம் எல்லாமே மக்களுக்காகத்தான். ஸோ.. இப்படியெல்லாம் பேசுனா சோஷியல் மீடியாவுல புரட்சிக்காரன் பேண்டேஜ் கட்டிருவாங்க. எனக்கு இவங்க எல்லாம்   ஆதர்சம் தட்ஸால்” @@@@@@@@@@@ “ர...

எண்டர் கவிதைகள் -30

கைதட்டியாகிவிட்டது விளக்கேற்றியாகிவிட்டது தினமொரு சமையல் என சமையல் குழுவில் போஸ்ட் போட்டாகிவிட்டது வெறி கொண்டு அனைத்து சீரீஸுகளையும் படங்களையும் பார்த்தாகிவிட்டது தினம் பேசும் நண்பர்களிடையே உங்க ஏரியாவுல கொரானா வந்தாச்சா? கையில பணமேயில்லை என்ன பண்ணுறது? போன்ற பேச்சுக்களைத் தவிர பேச ஏதுவுமில்லாமல் போய்விட்டது இன்னுமொரு பதினைந்து நாளே என நான்கு மாசங்களை ஓட்டியாகிவிட்டது பேசினால் மூச்சு முட்டி இறந்துவிடுமோ? என்கிற அச்சம் வீட்டினுள் நுழைந்து மாதங்களாகிவிட்டது. யாரிடமும் எதையும் பேச தோணவேயில்லை புதியாய் முளைத்திருக்கும் வங்கிக் அழைப்பாளர்களைத் தவிர, ஏனென்றால் அவர்கள் தான் என் பாதுகாப்பை முக்கியமாய் நினைக்கிறார்கள். அட்லீஸ்ட் வரும் அக்டோபர் மாதம் வரைக்குமாவது. அதன் பிறகு அவனும் பேசுவானா என்று தெரியவில்லை ஜெய் கொரோனா.

லாக்டவுன் கதைகள் -11- கேரக்டர் ஆர்டிஸ்ட்

“சார்.. இன்னைக்கு ஒரு வண்டி போவுது. பாஸு எல்லாம் வாங்கிட்டாங்க. நான் வீட்டை காலி பண்ணிக்கிறேன். நீங்க கிளம்புங்க. அதான் உங்களுக்கும் நல்லது” என்றவனை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்தார் நமச்சிவாயம். நமச்சிவாயத்தை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் ரெட்டை நாடியாய் கருத்த உருவத்தோடு, வழுக்கையாய் இருப்பார்.   கண்கள் ரெண்டும் கோலி குண்டுகள் போல் பெரிதாய் இருக்கும் என்பதால் கிராமத்து பஞ்சாயத்தார், ஊர் பெருசு என பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு காலத்தில் வெகு பிஸியாய் இருந்தவர்தான் நமச்சிவாயம் ”நல்ல நடிப்பார் சார். நிறைய ட்ராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ஊருல நாடகக் ட்ரூப் எல்லாம் வச்சிருந்திருக்காரு. நல்ல கேரக்டர் ரோல் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க” என்று அறிமுகப்படுத்தியவர் என் நண்பர் சிவகுமார். “நல்ல கோயில் பூசாரி மாரி இருக்கீங்க சார்” என்று பார்த்த மாத்திரத்தில் சொன்னேன். அவருக்கு நான் சொன்னது பிடித்துப் போய், சட்டென என் கை பிடித்து “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார். அவரின் வெள்ளந்தித்தனம் எனக்கு மிகவும் பிடித்துப் போக அன்றிரவே நானும் நண்பரும் சரக்கடிக்க ...

சாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்

Image
சமீபத்தில் எங்கள் குழு லொக்கேஷன் பார்க்க போன போது வெஜிட்டேரியனே அப்படி இருந்தது என்று சிலாகித்துக் கொண்டிருக்க, இங்கேயிருந்து அடையார் வரை போக வேண்டுமே என்று சோம்பேறித்தனத்தில் போகாமல் இருந்தேன். சென்ற வாரம் ஷூட்டிங் ஓ.எம்.ஆரில் என்ற போது சரி ஒரு நடை போய்விட்டு வருவோம் என நண்பர் ஜொரோமை கூப்பிட்ட போது முடியாமல் போக, கோவளம் ஷூட் முடிந்து வரும் போது நல்ல பசி. சரி இன்றைக்கு போய் விட வேண்டியதுதான் என்று போய் சேர்தேன். உள்ளே நுழையும் போதே நான்கைந்து நபர்கள் வணக்கம் சொல்லி பழைய ஈரோடு குப்பண்ணாவில் வரவேற்பது போல வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள். உள்ளே சுழன்ற மசாலா மணம் அட்டகாசமாய் இருக்க, சாமித்துரை எனும் நபர் என்னிடம் வந்து ஆர்டர் கேட்க ஆரம்பித்தார். ஒரு இட்லி தருவீங்களா? என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்தார். பிறகு நான் இன்னார் இன்னார் என்று சொன்னதும். “சார்.. அப்ப நான் ரெகமெண்ட் செய்யுற அயிட்டங்களை ஒரு டேஸ்ட் பாருங்க” என்று சொல்லிவிட்டு கோழி ரசத்தை ஆர்டர் செய்தார். நல்ல மிளகு போட்ட கோழி ரசம் ஆயிரம் கொரானாவை துறத்திவிடும் போல. அத்தனை காரம், மணத்துடன், கோழி ரசத்துடன் அட்டகாமசாமாய் ஆ...

happy womens day

Image
விமலாதித்தனின் சேட் பாக்ஸிலிருந்து.. “happy women’s day” ” இப்ப என்ன நான் தேங்க்ஸ் சொல்லணுமா?” “பெண்மையை, பெண்களைப்   போற்றுகிறோம்னு சொல்லி வாழ்த்துனா தேங்க்ஸ் சொல்லுறதுல என்ன தப்பு?” “வருஷத்துல ஒரு நாளு வாழ்த்திட்டா பெண்மையை போற்றுறதா அர்த்தமா?’ “பின்ன?” ”உனக்கு பொம்பளையப் பத்தி என்ன தெரியும்?” “ஏன் உன்னை தெரியுமே?” “அஹா.. ப்ளிட்ரிங்” “அன்பா பேசுனா ப்ளிட்ரிங்கா?” “ப்ளிட்டிரிங் அன்புனு சொல்லிட்டு நீ என்ன பண்ண நினைக்கிறேன்னு எங்களுக்கு தெரியும்” “டூ ஹார்ஷ் பேபி. நான் என்ன செய்ய நினைக்கிறேனு எப்படி நீ முடிவு பண்ணலாம்?” “எல்லா ஆம்பளை சு.. க்களுக்கும் ஒரே நினைப்புத்தானே?” “மகளிர் தினத்துக்கு வாழ்த்து சொன்னது தப்பா?’ “எவனோ ஒரு வெள்ளைக்காரன் கார்டு விக்குறதுக்காக கண்டுபிடிச்ச நாளு.. அதை இன்னமும் பிடிச்சி தொங்கிட்டிருக்கீங்க. பொம்பளைய மதிக்கிறது தனி நாளு. அன்னைக்கு அஹா ஓஹோனுட்டு அடுத்த நாளே கால்ல போட்டு மிதிப்பீங்க” “இப்ப என்ன பண்ணனும்ங்கிற?’ “ஒரு மயிரும் புடுங்க வேணாம்” “ஒரு வாழ்த்து சொன்னதுக்கு இத்தனை ஹார்ஷ் கான்வர்ஷேஷன் தேவையா? உனக்கு வேற ஏதோ ...

ஐ லவ் யூ மேன் - சுஜாதா

Image
24 சலனங்களின் எண் புத்தகம் வெளியானதும், பரவலாய்   சுஜாதாவின் கனவு தொழிற்சாலையை விடவும் சிறந்த நாவல் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது . இதோ இன்னொரு சுஜாதா என்ற விமர்சனமும் வந்தது . இவருக்கே தனி சுவாரஸ்ய நடை இருக்க எதற்கு சுஜாதாவை ஆங்காங்கே பிரதியெடுக்கிறார் என்று கூட நண்பர் ஒருவர் விமர்சித்திருந்தார் . இவனெல்லாம் சுஜாதாவா ? சும்மா ஹம்பக் . என்று இன்னொரு பக்கம் வசை பாடியும் கொண்டிருக்கிறார்கள் . எனக்கு எதுவும் மண்டையில் ஏறவே இல்லை . முதல் சிறுகதையான “ எங்கிருந்தோ வந்தாள் ” விகடனில் வெளியான போது ஆசிரியர் கண்ணன் படித்துவிட்டு பழைய சுஜாதா மாதிரி இருக்குனு சொன்னாரு என்று சொன்னார்கள் . உண்மையோ இல்லையோ நூறடி பறந்தேன் . இதோட எழுதவே வேண்டாம் என்று நினைத்தேன் . அத்தனை உற்சாகத்துக்கான காரணம் சுஜாதா . சுஜாதாவை காப்பியடிக்கிறான் என்று என்னை குற்றம் சாட்டினால் வாய் நிறை பல்லாய் நன்றி சொல்லுவேன் . அவரை காப்பியடிப்பது என்பது அத்தனை சுலபமான விஷயமா ?. காப்பியடிப்பதாய் கனவு வேண்டுமானால் காணலாம் . ...