Thottal Thodarum

Jun 30, 2014

கொத்து பரோட்டா -30/06/14

தொட்டால் தொடரும்- பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீடு
படம் ஆரம்பித்த போது கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும் என்று மனதினுள் பதட்டமிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கமல் சொன்ன வீரத்தை காட்டிக் கொண்டிருந்தேன். படத்தின் டிசைன் வெளியான போது கிடைத்த ஆதரவு லேசான தைரியத்தை கொடுத்தது. அந்த தைரியம் பாஸு பாஸு பாடலை சிங்கிளாய் முதலிலேயே வெளியிடுவோம் என்று முடிவெடுக்க செய்தது. அதற்கான முஸ்தீப்பு வேலைகளில் இறங்கினோம். பாடல் நக்கல் நையாண்டியோடு ஜாலியாக எழுதப்பட்ட பாடல் ஆதலால் மக்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்குமென தெரிந்து கொள்ள ஆசையாய் இருந்தது. பாடல் ரிக்கார்ட் ஆனவுடன் மொபைலில் அதை எடுத்துக் கொண்டு, சினி சிட்டி கரோக்கே பாரில் கரோக்கேவுக்கு நடுவே அப்பாடலை ப்ளே செய்தேன். சரக்கே அடிக்காமல் ஏசியிலும் வியர்த்தது. பாடல் கேட்க ஆரம்பித்த சில நொடிகளில் மக்கள் சலசலப்பு குறைந்து பாடல் வரிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அப்புறம் சிரிப்பும், கும்மாளமும் சேர்ந்து கொள்ள, கைதட்டல் தொடர்ந்தது பாடல் முடிந்தும்.  அப்பாடா.. பாட்டு நல்லாத்தான் வந்திருக்கு போல என நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து “இந்த படத்தோட பாட்டு ரிலீஸாயிருச்சா?” என்று கேட்டார். “இல்லை”. என் கையில் ஒர் விசிட்டிங் கார்டை கொடுத்து பாட்டெல்லாம் ரெடியானதும் சொல்லுங்க. நாங்க யாஷ்ராஜ் கம்பெனியோட சவுத் டிவிஷன் ஹெட். பேசுவோம் என்றார். பாட்டை ஒரு முறை கேட்ட மாத்திரத்தில் கிடைத்த அங்கீகாரம். இப்பாடலை நல்ல முறையில் மக்களிடம் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்ற உறுதியை தந்தது.


இப்பாடலைப் பற்றி பிரபலங்களின் கருத்துக்களை ஷூட் செய்ய நினைத்து ஒவ்வொருவராய் தொடர்பு கொண்டோம். எல்லா பிரபலங்களும் போன் செய்தவுடனே “உங்க படத்தோட பாட்டா.. வாங்க.. கேட்டே ஆகணும்.  என ஆர்வத்துடன் அழைத்தார்கள். மைண்ட் வாய்ஸில் “வாடி.. நீ என்ன பண்ணியிருக்கேன்னு  பாக்குறேன்” என்று சொல்லியிருப்பாங்க என்றான் கார்க்கி. ஜிவி, பாண்டியராஜ், விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்பாராஜ், அஜயன் பாலா, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன்,சிவி.குமார், சுரேஷ், மதன் கார்க்கி, லிப்ரா சந்திரசேகர், பத்ரி, எழுத்தாளர் சுகா, மகேஷ், விஜய்மில்டன், சிபிராஜ் என அனைவரும் பாட்டை கேட்டு கொடுத்த வீடியோ பைட்சுக்காக கிட்டத்தட்ட ஒரு வாரம் ஷூட் செய்து, ப்ரோமோவை விட்டோம். என்னடா இவனுங்க.. ரொம்பத்தான் பில்டப் பண்றாங்க.. என்று ஒரு பக்கம் முணுமுணுப்பது கேட்டாலும், அதை எப்படி நாங்கள் பாடல் வெளியாகும் போது சமாளிக்கிறோமென்ற சவால் இருந்து கொண்டேதானிருந்தது.
ரேடியோசிட்டி கார்த்திக், ராஜவேல், பரத்தின் ஆதரவும், டைகர் ஆடியோசின் ஆர்வமும் ஒன்று சேர ஒரே நாளில் ப்ளான் செய்யப்பட்டு, சிங்கிள் லாஞ்ச் ஆனதிலிருந்து இதோ இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை உலகமெங்கிலும், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் முதல் பிரபலங்கள் வரை பாராட்டுக்கள் வந்து கொண்டேயிருக்கிறது. உங்களின் உற்சாகமான ஆதரவு கொடுத்த தைரியம் இப்போது படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு வரை வந்திருக்கிறது. வருகிற 4ஆம்தேதி சத்யம் திரையரங்க வளாகத்தில் காலை 8.30 மணிக்கு தொட்டால் தொடரும் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீடு நடக்கவிருக்கிறது. நண்பர்கள் அனைவரும் வந்திருந்து வாழ்த்த தொட்டால் தொடரும் டீமின் சார்பாக அழைக்கிறோம். வாங்க.. வந்திருந்து உங்க ஆதரவை தெரிவியுங்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இரண்டாய் பிளந்து தரைமட்டமானதாய் சனி மாலையிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஒவ்வொரு ஊடகங்களில் ஒவ்வொரு செய்தி, 11 மாடி, 12 மாடி கட்டிடம். 200 பேர் முதல் 35 பேர் இறந்திருக்கக் கூடுமென்ற செய்தி வந்த வண்ணம் இருந்தது. எங்கப்பா கட்டிங் வாங்கிட்டு அப்ரூவல் கொடுத்துடறாங்க.. பின்ன எப்படி விழாம இருக்குமென்றும், பாவம் அந்த ப்ளாட்டுக்கு லோன் போட்டு காசு கட்டுனவங்களோட கதி?  வீடும் இல்லாம இ.எம்.ஐ மட்டும் கட்டுறதுன்னா என்ன கொடுமை? என்று ஒரு சில பேரும், பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரே சம்பவம் தான் பல பேருடய பர்ஷப்ஷனில் பார்க்கப்படும், பேசப்படும் போது வேறு வேறு செய்திகளாய் போகிறது. அவரவர்களுக்கு தேவையான லெவலில்.ஆனால் இந்த விபத்தினால் இறந்து போன வெளி மாநில தொழிலாளர்கள், விபத்தின் காரணமாய் அதிர்வில் இடிந்து போன இன்னொரு சின்னக் கட்டிட உரிமையாளர் என சம்பந்தமேயில்லாமல் பாதிப்படைந்தோர் லிஸ்டைப் போட்டால் அது நீண்டு கொண்டேயிருக்கும். பாஸு பாஸு பாட்டுக்கு இம்மாதிரியான பல விஷயங்கள் தான் இன்ஸ்பிரேஷன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
  • Never lose hope when things don’t seem to work out. Cinema is the best industry to be a part of and the tables will always turn eventually.
  • மழை. உயரமான பில்டிங் பக்கத்திலேயோ. கீழயோ நிக்காதீங்க
  • @@@@@@@@@@@@@@@@@@@
    Bangalore Days
இரண்டு முறை டிக்கெட் புக் செய்ய ட்ரை செய்து கிடைக்கவேயில்லை. ஒரு வழியாய் சென்ற வாரம் லூக்ஸில் புக் செய்து பார்த்துவிட்டேன். அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது. பகத் பாஸில், துல்கர் சல்மான், நஸ்ரியா, நவீன்பாலி என இளமை ததும்பும் மல்ட்டி ஸ்டார் காஸ்ட். துல்கர், நவீன், நவீன் மூவரும் கஸின்கள்.மூவரும் மூன்று விதமான கேரக்டர்கள். வெவ்வேறு விதமான குடும்பப் பின்னணி உள்ளவர்கள். அவர்களின் பெற்றோர்களும் வெவ்வேறு விதமானவர்கள்.ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒர் ஆசை பெங்களூரில் வசிப்பது. நஸ்ரியா பகத் பாஸிலின் முன்னால் காதல் கதை பற்றி சொல்லும் போது அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு பெங்களூர் போவதிலிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்க, பின்னால் வரும் துல்கர், ரேடியோ ஆர்.ஜி காதல், நிவின், இஷா தல்வார் காதல் என பின்னி பெடலெடுக்கிறது. ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து எழுதப்பட்டிருப்பதால் வசனங்களில் ஆரம்பித்து, பாடி லேங்குவேஜ் வரை கலக்கலாய் அமைந்திருக்கிறது. “எதுக்காக இப்படி கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டே?” “அப்பா ஜோசியக்காரர் சொல்லிட்டாருன்னு பையன் பார்த்தாரு.. நல்ல பையன், அழகா இருக்கான், நல்லா சம்பாதிக்கிறான். அதை விட முக்கியம் பெங்களூரில இருக்கான். கல்யாணம் ஆனா பெங்களூர்ல செட்டில் ஆகலாமில்லை.?” ”பெங்களூர் போறதுக்கு பஸ் டிக்கெட் வாங்கினா போதும் அதுக்காக கல்யாணம் பண்ணிப்பாங்களா?” என்பது போன்ற வசனங்கள் அதகளம். படம் நெடுக மிக நுணுக்கமான பெண் மன உணர்வுகள் மட்டுமில்லாது. ஒர் பெண்ணின் பார்வையில் படும் ஆண்களின் பர்ஷப்ஷன்களை மிக அழகாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஞ்சலி மேனன். குட்டிக் குட்டியாய் நெகிழ வைக்கிறார். முக்கியமா துல்கர், ரேடியோ ஆர்.ஜே லவ். க்யூட். ஆங்காங்கே கொஞ்சம் படம் ஸ்லோவாகிப் போனாலும் படம் கொடுக்கும் நெகிழ்வுணர்ச்சியும், சந்தோஷமும், இயல்பாக இருப்பதினால் மன்னிக்கலாம். மெளனராகத்தை எப்படி மாத்திப் போட்டாலும் ஓடும் என்பது மீண்டும் நிருபணமாகியிருக்கிறது வேறு விஷயம். பட் மஸ்ட் வாட்ச்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A family is at the dinner table. The son asks the father, “Dad, how many kinds of boobs are there?” The father, surprised, answers, “Well, son, a woman goes through three phases. In her 20s, a woman’s breasts are like melons, round and firm. In her 30s and 40s, they are like pears, still nice, hanging a bit. After 50, they are like onions.” “Onions?” the son asks. “Yes. You see them and they make you cry.” This infuriated his wife and daughter. The daughter asks, “Mom, how many different kinds of willies are there?” The mother smiles and says, “Well, dear, a man goes through three phases also. In his 20s, his willy is like an oak tree, mighty and hard. In his 30s and 40s, it’s like a birch, flexible but reliable. After his 50s, it’s like a Christmas tree.” “A Christmas tree?” the daughter asks. “Yes, dead from the root up and the balls are just for decoration.”
கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

'பரிவை' சே.குமார் said...

பாஸூ பாஸூ பாட்டுக் கலக்கல் அண்ணா...

வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

குறிக்கோள் பற்றி நல்லதொரு தெளிவினைக் கொடுத்ததற்கு நன்றி அண்ணே

ம.தி.சுதா said...

பாசு பாசு பாட்டு கேட்டு ரசித்ததை விட பாடிப்பாடியே ரசித்துக் களைத்து விட்டேன் அண்ணா...

செம நக்கல... போதாத குறைக்கு காட்சியில் தோன்றும் ஒவ்வொருத்தரும் நக்கல்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM

காத்தவராயன் said...

// மெளனராகத்தை எப்படி மாத்திப் போட்டாலும் ஓடும் //

அந்த 7 நாட்களை எப்படி மாத்திப் போட்டாலும் ஓடும்

அமர பாரதி said...

Congratulations for the movie and I wish you all the best Cableji.

R. Jagannathan said...

I enjoyed the video of the song. I am sure it will be a great hit and the film too! Wishing the audio release function a great success, All the best. - R. Jagannathan

Unknown said...

சார் எந்த படத்திற்கும் நான் விமர்சனம் கொடுத்ததில்லை, கண்டிப்பாக உங்கள் படத்திற்கு கொடுப்பேன்... (பாட்டு ஹிட்டாக இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும் இதுதான் உண்மை...)

vadivelsaamy said...

தொட்டால் தொடரும் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்....

SANKAR said...

ஜில்லென்று காற்று வந்ததோ?
சொல்லாமல் ஆசை தந்ததோ?
மலர் போல் குழல அசைய....
அப்படின்னு ஒரு சுசீலா பாட்டு இருக்கு
அதை ஞாபகபடுத்தும் டியூன்
ஆனா கேட்க கேட்க நல்லாஇருக்கு.
சங்கர் திருநெல்வேலி