Thottal Thodarum

Jun 2, 2014

கொத்து பரோட்டா -02/06/14 -ப்ளாஷ்பேக்- திருமணம் எனும் நிக்காஹ்- கேட்டால் கிடைக்கும்- தொட்டால் தொடரும் - CityLIghts

செல்ஃபி போட்டோக்கள்
இது ஒரு விதமான மனவியாதி என்று ஆராய்சிகள் சொன்னாலும், மோடியிலிருந்து தெருக்கோடி ஆள் வரை இந்த செல்பி போட்டோக்கள் பரவித்தான் இருக்கிறது. சமீபத்தில் ஒர் இணைய தளத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாய் செக்ஸுக்கு பிறகு அவர்களாகவே எடுத்த செல்ஃபி புகைப்படங்களை like.com டாப் 10 ஆக தொகுத்திருக்கிறது. செம சுவாரஸ்யம்.. அதிலும் சில முகங்களில் தெரியும் எக்ஸ்ப்ரெஷன்களை வர்ணிக்க முடியாது. வாவ்.. இங்கே க்ளிக் செய்யவும்
@@@@@@@@@@@@@@@@@@@@@



தொட்டால் தொடரும்
திரைப்பட பாடல் டீசர் விரைவில் உங்கள் பார்வைக்கு வர இருக்கிறது. உங்கள் ஆதரவை நோக்கி..
@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
சமீபத்தில் பிட்ஸா கார்னரில் சாப்பிடப் போயிருந்தோம். கடைசியாய் பில் வர மொத்த தொகைக்கு 19 சதவிகிதம், வாட்டும், சர்வீஸ் டேக்ஸும் சேர்த்து போட்டிருந்தார்கள். இதே போன்ற உணவகங்களில் பல இடங்களில் இதைவிட குறைவான அளவு டாக்ஸ் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு விஷயம் மட்டும் புரிய மாட்டேனென்கிறது. கே.எப்.சி ஒரு விதமாய் டேக்ஸ் வாங்குகிறார்கள். மற்றவர்கள் வேறொரு மாதிரி வாங்குகிறார்கள். இதைப் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் தெளிவாக புரியும் படியாய் சொல்ல முடியுமா?
@@@@@@@@@@@@@@@
நான் டாக்டரான கதை
“சார் பேஷண்ட் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காரு.. எத்தனை மணிக்கு வருவீங்க?”

“எனக்கேது பேஷண்ட்? நான் எதுக்கு வரணும்? உங்களுக்கு யார் வேணும்?”

“டாக்டர் ... தானே. சார்..? நாங்க ராமசந்திராவிலேர்ந்து பேசுறோம்.” என்றது எதிர்முனை. இது இன்று நேற்றல்ல ஒரு சில வருடங்களாகவே இம்மாதிரியான கால்கள் வருவதும், பின்பு நின்று போவதுமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஆஸ்பிட்டல் பேர் தான் மாறுபடும். இம்முறை ராமசந்திரா. தொல்லை தாங்கமாட்டாமல் அந்த டாக்டரின் பெயர் மற்றும் செல் எண்ணை கேட்டேன். ப்ரச்சனை எங்கே என்று தெரிந்தது. என் எண் 9840332666 - டாக்டருடயது 9840323666. ஸ்லிப் ஆப் தெ பிங்கர். என்ன எனக்கு மட்டும் மாசக் கணக்கா நடக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நானும் அரசியல் பேசுறேன்
மோடி அரசின் மீது ஏகப்பட்ட எதிர்பார்புகள் மக்களிடமும், ஏன் அரசியல் கட்சிகளிடமும் கூட இருக்கிறது. மீடியாவெல்லாம் தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் போல மோடி போகுமிடமெல்லாம் கேமரா வைத்து அதை செய்கிறார். இதை செய்கிறார் என்று ஆர்பாட்டம் அதிகமாய் இருக்கிறது. மஹாராஷ்ட்ராவில் அத்யாவசிய பொருட்கள், உணவுப் பண்டங்கள் இன்று முதல் விலையேற்றமாம். டீசல் விலை மாதத்திற்கு 50 பைசா இனி ஏறுமாம். வழக்கமா லெட்டர் போடுற, அறிக்கை விடுற கட்சி ஏதுவும் விலையேற்றத்தைப் பத்தி எதுவும் சொல்லவேயில்லை. எனக்கு ஒன்ணு மட்டும் புரியுது. மாற்றம் ஒன்றே மாறாதது. 
@@@@@@@@@@@@@@@@@@@@
ஃபேம் மால் மூவி பாஸ் # ஈகா பார்க்கிங் கொள்ளை
ஏற்கனவே ஃபேம் தியேட்டர் மாலில் பைக் மற்றும் கார் பார்க்கிங்கில் அடிக்கும் மூவி பாஸ் எனும் கொள்ளையைப் பற்றி சொல்லியிருந்தேன். நேற்று படம் பார்க்க நானும் கார்க்கியும் போயிருந்தோம். 3.10க்கு படம். 2.45க்கு போயிருந்தோம். வண்டியை பார்க்க செய்யும் போதே டிக்கெட் எடுத்துரு என்று சொன்னதை பாஸ் எடுத்துரு என்று நினைத்து கார்க்கி மணிக்கு பத்து ரூபாய் டிக்கெட் எடுக்காமல் மூவி பாஸ் எனும் நாற்பது ரூபா கொள்ளை டிக்கெட்டை வாங்கிவிட்டான். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போதுதான் பார்த்தேன். டிக்கெட்டில் உள்ளே பார்க் செய்த டைம் 2.45க்கு பதிலாய் 2.35 என்று இருந்தது. பாஸ் என்பதால் டைம் சரியாய் மெயிண்டெயின் செய்யவில்லை என்றாலும் திரும்பப் போகும் போது டிக்கெட்டையும் திரும்ப கேட்கிறார்கள். அவர்களது கம்ப்யூட்டரில் தான் ஏற்கனவே வண்டி நம்பருடன் பதிவாகி இருக்கும் பட்சத்தில் எதற்காக நாம் பார்க்கிங் டிக்கெட் ரசீதை திரும்ப கொடுக்க வேண்டும்?. நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி டிக்கெட்டை எடுத்து வந்து விட்டேன்..ஏன்யா இப்படி கொள்ளையடிக்கிறீங்க? என்று டிக்கெட் கொடுப்பவரிடம் கேட்டால் ரெண்டாவது மாடில ஆபீஸ் இருக்கு போய் கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க.. நானும் எத்தன நாள் தான் திட்டு வாங்குறது? என்கிறார். அதை விட கொள்ளை ஈகா தியேட்டரில் டூ வீலர் பார்க்கிங்குக்கு 30 ரூபாயாம். காருக்கு 40ஆம். இவங்களூக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? இப்படியே தியேட்டருக்கு வருகிறவனின் பர்ஸை பிடுங்கினாலும் அவன் எப்படி தியேட்டருக்கு வருவான்? வருகிறவர்கள் எல்லோரும் புலம்பிக் கொண்டேத்தான் டிக்கெட் எடுத்தார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@
CityLights
Sean Ellis இயக்கத்தில் வெளிவந்த மெட்ரோ மனிலா எனும் படத்தின் தழுவல் தான் இந்த சிட்டி லைட்ஸ். ட்ரைலர் பார்த்த மாத்திரத்தில் பார்த்தே தீர வேண்டிய படமாய் இருந்தது பார்த்த மாத்திரத்தில் எதுக்கு பார்த்தோம் என்றாகிவிட்டது. ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. சிம்பிள் கதை. ராஜஸ்தானில் வியாபாரம் செய்து வரும் லோயர் மிடில் க்ளாஸ் குடும்பம். புருஷன், பெண்டாட்டி ஒர் சின்னக் குழந்தை. இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பதைக் காட்ட ஹிந்தி ஆனந்த யாழ் பாட்டு. பாட்டின் முடிவில் கடன் தொல்லை தாங்காமல் ஊரை விட்டு பிழைப்பிற்காக பொட்டி படுக்கையை கட்டிக் கொண்டு கிளம்புகிறான் ஹீரோ. பின்பு என்ன நடக்கும்? வழக்கம் போல் நம்பி வந்த நண்பன் இருப்பதில்லை. போன் சுவிட்ச் ஆப். பார்த்த மாத்திரத்தில் ஒருவனை நம்பி இருந்த காசையும் இழந்து, தங்க இடமில்லாமல் தவிப்பது. ஏதாவது பாழடைந்த வீடோ, முடிக்கபடாத கட்டிடத்தில் தங்குவது. பாலியல் அல்லது அதைப் போல ஒர் தொழில் செய்யும் பெண் இவர்களுக்கு உதவுவது. புருஷன் வேலையில்லாம கஷ்டப்பட, வேறு வழியேயில்லாம குடும்பப் பெண் விபசாரத்துக்கோ.. காபரே ஆடுவதற்கோ போவது, புருஷனுக்கு ஒரு வேலைக் கிடைத்து அதில் நன்றிக்காக ப்ரச்சனையில் மாட்டுவது மேற்ச் சொன்ன அத்தனையும் காட்சி மாறாமல் வருகிறது. ஸ்ஸ்ஸ்ப்பா.. ஒரே ஒரு ஆறுதல் ராஜ்குமார் ராவின் நடிப்பும். ஆங்காங்கே வரும் இயல்பான பாடல் காட்சியும்தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
அன்பான மோடி அவர்களே தயவு செய்து வரி போடுறத பிக்சுடா போட்டுத் தொலையுங்க.. கடைக்காரங்க விதவிதமா ஏமாத்துறாய்ங்க..முடியலை..
  • டீசல் விலை ஏறிடுச்சு. கூட்டணி, ஆதரவு, ஆதரவில்லாத கட்சிகள் ஏதும் சொல்லவேயில்லை?
    • காங்கிரஸ் அரசின் பத்து வருஷ சாதனை புதுசா ஆட்சிக்கு வந்தவங்க எதோட விலைய ஏத்தினாலும், அசராம அமைதியா இருக்க வச்சதுதான்.
      • அப்ப பெட்ரோல் டீசல் வெலையெல்லாம் குறையாதா? யாரும் எதிர்க்கக் காணோம்?
        • பீருக்காக மட்டும் ஒர் டாஸ்மாக் கடையாம். இங்கேயாச்சும் பாட்டிலுக்கு பத்து ரூபா எக்ஸ்ட்ரா வாங்காம இருப்பாங்களா?
          • ப்ரமோட் பண்றதுன்னு வந்திட்டா இந்த வடக்கத்திய பத்திரிக்கைகள் எப்பவுமே எல்லாத்திலேயும் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணுறாங்க #CityLights
            • மாறதுன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் எதுக்கு ப்ரஸ் மீட்?. ஏன் மாறினேன்னு யார் கேட்க போறாங்க? பின்னாடி என்னவோ இருக்கு #சாக்குரதை
              • மேலும் அம்மா உணவகங்கள் -சிறப்பு.
                • A open letter to all my male friends - excellent writeup by Estelletang in the hindu World view Moving
                  • நல்ல சினிமா பாக்குறதுக்காக நாலு ஊரு அலைஞ்சா தப்பில்லை
                    • திருமணம் என்கிற நிக்காஹ் படத்துக்கு தடை வேணுமாம். ஆரம்பிச்சுட்டானுங்கப்பா..
                      • திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாலும், சம்பந்தபட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் உண்மை தெரியும் 
                        • தேவி திரையரங்கில் வரிவிலக்கோடு கோச்சடையான். 120 டிக்கெட் -84.30பைசா

                          • டீசல் விலைக்கு ஜெ கண்டனம்.நன்றி #நம்மளையும்மதிக்கிறாய்ங்கப்பா..
                        • @@@@@@@@@@@@@@@@@@@@@
                        • வரிவிலக்கும் தேவி திரையங்கமும்
                        • தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்ற சட்டத்தை கடந்த ஆட்சியில் கொண்டு வந்தார்கள். மொக்கை பிட்டு படத்துக்கு எல்லாம் தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு வாங்குகிறார்கள் என்ற காரணத்தோடு பல காரணங்களைக் கொண்டு தற்போதைய அரசு சில விதிகளைப் போட்டு வரிவிலக்கு அளித்து வரிவிலக்கில்லாத படங்களுக்கு பதினைந்து சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாய் வரி விதித்தது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் வரிவிலகென்பது டிக்கெட் வாங்கும் மக்களுக்கா.. அல்லது படத்தை வெளியிடும் திரையரங்கு அதிபர்கள், விநியோகஸ்தர்களூக்கா? என்ற குழப்ப சட்டத்தை வைத்து மக்களுக்கு ஏதும் கொடுக்காமல் இருந்தார்கள். அதை ஒருவர் பப்ளிக் லிட்டிகேஷனாய் கேஸ் போட, இதற்கான சரியான பதிலை அரசிடம் கேட்க, அரசு தரப்பில் பதில் கிடைக்காத காரணத்தால் இனி வரும் படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு முன்பு விலக்கு வாங்கிய படங்களுக்கு வரி வாங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன் படி தேவி திரையரங்கில் மட்டும் வரி விலக்கு பெற்ற படங்களுக்கு 30 சதவிகித வரியைக் குறைத்து தான் டிக்கெட் விற்கிறார்கள். ஆனால் மற்ற மல்ட்டி ப்ளெக்ஸில் அதை நடைமுறை படுத்தவில்லை. கோர்ட்டின் தீர்ப்புக்கு அவ்வளவுதான் மதிப்பா? அரசிடமிருந்து ஏன் எந்த பதிலுமில்லை?
                        • @@@@@@@@@@@@@@@@@@@@@@@
                        • ப்ளாஷ்பேக்
                        • @@@@@@@@@@@@@@@@@@@@@
                        • செவிக்கினிமை
                        • தொட்டால் தொடரும் படத்திற்கு இசையமைக்க முதல் முதலில் ஜிப்ரானை சந்தித்தேன். என்னைப் போலவே புஷ்டியாய் அழகாய் சிரித்த முகத்துடன் வரவேற்றார். படத்தின் கதையை சொன்னதும் எனக்கு நிறைய வேலையிருக்கிற படமாய் இருக்கு என்றார். அதன் பிறகு நடந்த லெளகீக விஷயங்களால் அவரோடு பணிபுரிய முடியவில்லை. அவருடன் பேசி கொண்டிருந்த சமயத்தில் அவரின் இசையார்வமும், சாதிக்க வேண்டும் என்கிற ஆவலும் தெரிந்தது.  சமீபத்தில் அவரது திருமணம் எனும் நிக்காஹ் படப் பாடலை பார்க்க கேட்க நேர்ந்த்து. கடந்த ஒரு வாரமாய் என்னை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது இந்த பாடல். அற்புதமான காம்போஷிஷன். நெக்குருகும் குரல். அதை விட மிக அற்புதமான விஷூவல்கள். குறிப்பாய் மொட்டை மாடி கோலம், ஆர்ட் வேலை காட்சிகள். பெண் அழகாய் இருக்க உடையலங்காரம் முக்கியமென..  மெகந்தி கையை வைத்துக் கொண்டு நஸ்ரியா முகத்தில் தெரியும் சின்னச் சின்ன வெட்கப் புன்னகையோடு பாடும் ஷாட்களைப் பாருங்கள். உள்ளம் கொள்ளைப் போகும். எனக்கென்னவோ இந்த படம் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒர் டார்க் ஹார்ஸாய் இருக்க வாய்ப்பு அதிகமென தோன்றுகிறது. கலக்குறீங்க ஜிப்ரான். 
                      • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
                        அடல்ட் கார்னர்
                      • A mother is in the kitchen making dinner for her family when her daughter walks in. “Mother, where do babies come from?” The mother thinks for a few seconds and says, “Well dear, Mommy and Daddy fall in love and get married. One night they go into their bedroom, they kiss and hug, and have sex.” The daughter looks puzzled so the mother continues, “That means the daddy puts his penis in the mommy’s vagina. That’s how you get a baby, honey.” The child seems to comprehend. “Oh, I see, but the other night when I came into your room you had daddy’s penis in your mouth. What do you get when you do that?” “Jewelry, my dear. Jewelry.”
கேபிள் சங்கர்


Post a Comment

6 comments:

மென்பொருள் பிரபு said...

http://www.etable.in/blog/understanding-service-tax-at-restaurants/2171

மென்பொருள் பிரபு said...

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hotels-charge-VAT-even-on-service-charge-tax/articleshow/25349848.cms

hayyram said...

//அதை விட கொள்ளை ஈகா தியேட்டரில் டூ வீலர் பார்க்கிங்குக்கு 30 ரூபாயாம். காருக்கு 40ஆம். இவங்களூக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? இப்படியே தியேட்டருக்கு வருகிறவனின் பர்ஸை பிடுங்கினாலும் அவன் எப்படி தியேட்டருக்கு வருவான்? வருகிறவர்கள் எல்லோரும் புலம்பிக் கொண்டேத்தான் டிக்கெட் எடுத்தார்கள்.//

இந்த கருமத்துக்குத்தான் டவுன்லோடு பண்ணி பாத்துக்கறது. சில மாசம் காத்திருந்தா கூட நல்ல ப்ரிண்ட் வந்ததுக்கப்புறம் பொறுமையா ஓசிக்கு பாக்கலாம். இந்த அயோக்கியனுங்களுக்கு கொள்ளை குடுத்து கோடீஸ்வரனாக்றதுக்கு நாங்க ஏன் தியேட்டருக்கு போகனும். மால்களுக்கு போய் படம் பார்ப்பதை மக்கள் அடியோடு நிறுத்திக் கொன்டால்தானாக இறங்கி வருவார்கள். வருவார்கள், எத்தனை நாள் தான் கொள்ளையடிக்க முடியும்?

Unknown said...

Surat is best for watch movies.
No parking charge in malls
Morning 70
Evening 120
Night 160

Unknown said...

Respected Cable Sankar ji,
i am one of the regular visitor's your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. If they wish 'll ready to help them related this field .i am giving free services.if you wish you 'll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
Thanks in advance
Regds P.Bharath

சி.வேல் said...

Dear cable sir


VAT 14.5 for star hotels , other hotels VAT 2% (on sales value )
and Service tax 4.99 % ( that menas 40 % of 12.5 service tax )

so star hotels :14.5( VAT) +4.99 ( service Tax)
other hotels : 2 +4.99