Thottal Thodarum

Nov 3, 2014

கொத்து பரோட்டா -03/11/14

அசோக்நகர் பஸ்ஸ்டாண்ட்
ஞாயிறு இரவு. அவ்வளவாக கூட்டமில்லை. கிட்டத்தட்ட எல்லா பஸ்களும் காலியாக்வே இருந்தது. கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள். நண்பர் செந்தில் மன்னார்குடி பஸ்ஸுக்காக காத்திருந்தார். பஸ்ஸுக்கு காத்திருக்கையில் பணக்காரன் அவனுக்கான வசதி கிடைச்சா காசைப் பத்தி கவலைப்படமாட்டான். ஏழை அதிகமா காசு கேட்டா சண்டைக்கு வருவான். அதிகமான மிடில் க்ளாஸ்தான் ரெண்டுத்துக்கும் போக முடியாம அவஸ்தை படுவான் என்று சொல்லிக் கொண்டிருக்க, மதுரைக்கு போக பக்கா கிராமத்து குடும்பம் ஒன்று ஆட்டோவில் வந்திரங்கியது. மீட்டரைப் பார்த்து காசை சரியாய் கொடுத்தவர்கள் மதுரை பஸ்ஸுக்காக காத்திருக்க, ஒரு பஸ் ரொம்ப நேரமாய் ஆட்களுக்காக காத்திருக்க, இவர்களைப் பார்த்த பஸ்காரன் “அண்ணே மதுரைண்ணே.. வாங்க..” என்றதும் “எவ்வளவு?” என்று கேட்டார் பெருசு. உடன் நான்கு டிக்கெட்டுகள் என்று கண்ணாலயே கணக்குப் போட்டு, தோராயமாய் ஒர் அமெளண்டை சொல்ல, அது கட்டுப்படியாகாது என பெண்கள் கூட்டம் அமைதியாய் முகத்தை திருப்பியது. அவர்களது ரியாக்‌ஷனைப் பார்த்த பெருசு “வேணாம்பா.. நீ ஆள் ஏத்தி கிளம்பறதுக்கு லேட்டாவும்” என்று மறுத்தார். “அண்ணே.. அப்படியெல்லாம் இல்லைண்ணே.. இது மதுரை வேல்முருகன் பஸ்ஸு ஆள் ஏத்திட்டெல்லாம் போக வெயிட் பண்ண மாட்டோம். எல்லாம் ஆன்லைன்லேயே புக்காயிருச்சு” என்றான் அரை மணி நேரமாய் ஆள் ஏற்ற காத்திருக்கும் வண்டிக்காரன்.  லிஸ்டையெல்லாம் காட்டி “அண்ணே.. சொன்னா நம்புங்கண்ணே.. ஏசி வண்டிண்ணே.. ஏறி உள்ளார பாருங்க.” என்று கிட்டத்தட்ட கெஞ்சாத நிலையில் மாடுலேஷன் கேட்க, உடன் வந்த பெண்கள் “அய்ய.. ஏசியெல்லாம் நமக்கு ஒத்துக்காது. நீ வா” என்று பெருசை அழைத்தார்கள். வண்டிக்காரன் என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென முழித்துவிட்டு நாலு டிக்கெட்டை விட மனசில்லாமல் “அண்ணே.. ஏசியெல்லாம் கொஞ்சம் நேரத்தில ஆஃப் பண்ணிருவாங்கண்ணே.. வாங்க வண்டிய ஒரு வாட்டி வந்து பாருங்கண்ணே..” என்று கெஞ்சியும் வேலைக்காகம் நொந்து போய் திரும்பியவனை இன்னொரு ஆள் தோள் மீது கை வைத்து நிறுத்தி “தம்பி ஏசி வண்டின்னு தானே சொல்லி காசு வாங்கின.. இப்ப என்னடான்னா.. கொஞ்சம் நேரத்தில ஆப் பண்ணிருவேங்குறே.. நீ என் காசைக் கொடு நான் வேற வண்டி பாத்துக்குறேன்” என்றார். வண்டிக்காரன் முகம் போன போக்கை பார்க்க பாவமாய் இருந்தது. அண்ணே வேல்முருகன்ணே.. பாவம்ணே.. புள்ள பாடா படுது கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்கண்ணே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நெருங்கி வா முத்தமிடாதே
ஆரோகணம் திரைப்படத்தை அடுத்து, லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம். பை போலர் ப்ரச்சனையை வைத்து ஆரோகணத்தை தந்திருந்தார். பெட்ரோல், டீசல் தடையினால் இந்தியாவே அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கதை நாயகன் 2000 லிட்டர் பெட்ரோலுடன் கும்பகோணம் வரை அதை தெரிந்தே கடத்திப் போகிறான். ஹீரோவுக்கும் அவனுடய அப்பாவுக்குமான பிரச்சனை. பியா பாஜ்பாய்க்கும் அவளுடய சிங்கிள் மதருக்குமிடையே உள்ள ப்ரச்சனை, இளவரசன் திவ்யாவின் கதை போல செருப்பு தைக்கும், பையனுக்கும், உயர் ஜாதி பெண்ணுக்குமிடையே ஆன காதல், ஓடல், தீவிரவாதி ஊடுருவல், அதற்கு உடந்தையாகும் ஹீரோவுடய காட்ஃபாதர் எம்.எல்.ஏ வில்லன் என பரபர சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத கதைக் களனை எடுத்துக் கொண்டு, மிக மிக மெதுவான திரைக்கதையில் இருபது கிலோமீட்டர் ஸ்பீடில் பயணிக்கிறது படம். பெண் இயக்குனராய் இருந்தாலும், மாமா பொண்டாட்டி பர்ஸ்ட் நைட்டில் எதை பார்த்து பயந்து செத்து போனாளோ? போன்ற நகைச்சுவையை வைத்திருந்தது ஆச்சர்யம். மேட்லி ப்ளூஸின் இசையில் பாடல்களை விட ஆங்காங்கே பின்னணியிசை ஓகே. ஒவ்வொரு கேரக்டருக்குமான ப்ளாஷ்பேக் சொன்ன விதம். “உனக்கு தெரிஞ்சது அங்களுக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்சது உனக்கு தெரியாது” என்பது போன்ற சுவாரஸ்ய ரைட்டிங், டாப் ஆங்கிள் ஹெலிகேம் ஷாட்கள் என ஒரு சிலதை தவிர..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பூஜை
ஏவிஎம். ராஜேஸ்வரியில் தொடர்ந்து நான் பார்த்த காட்சிகள் ஹவுஸ்புல். ப்ளாக்கில் தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். இத்தனைக்கும் வார நாட்களின் மேட்னி ஷோ. ரஜினி படத்தில் எதை பார்த்து போவோமோ அதைப் போல ஹரி படத்தில் எதை எதிர்பார்த்து போவோமோ அதை கொடுத்திருக்கிறார். அருவாள், பத்து செகண்டுக்கு மேல் ப்ரேமில் நிற்காத ஷாட்கள், முழுக்க முழுக்க எபெக்ட்டுகளை கொண்டு ஆக்கிரமிக்கும் முறை. காதல், பாசம், சோகம், நட்பு என எந்த உணர்வையும், ஐந்து செகண்டுக்கு மேல் காட்டாமல் இருப்பது என எல்லா ஹரி டெம்ப்ளேட்டுகளும் இருக்கிறது. அதையெல்லாம் மீறி கவுண்டர்/செந்தில் காமெடியை இதில் சூரி/ப்ளாக்பாண்டியை வைத்து மீண்டும் தூசி தட்டியிருக்கிறார்கள். அது சில இடங்களில் ஒர்க்கவுட்டும் ஆகியிருக்கிறது. பரபர, விறுவிறு முதல் பாதி, விஷாலை கொல்லத்தான் பீகாரிலிருந்து  வருகிறான் ஒருவன் என்கிற ட்விஸ்ட் போன்ற சில விஷயங்களைத் தவிர முதல் பாதியில் இருந்த திருப்தி இரண்டாம் பாதி இல்..:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இணையம், பத்திரிக்கைகள் என எங்கு பார்த்தாலும் மீச்சூர் கோபிதான் நிரம்பியிருக்கிறார். ஆளாளுக்கு அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவரது யூட்யூப் பேட்டி வேறு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே கருப்பர் நகரம் என தான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் கதையை தான் மெட்ராஸ் என ரஞ்சித் திருடிவிட்டார் என ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள் இவரது தயாரிப்பாளர். அவரை கூப்பிட்டு பேசியது போலவே தயாரிப்பாளரையும் கூப்பிட்டு பேசியதாகவும் சொல்லியிருந்தார். கோபியின் படத்தில் வரும் பல காட்சிகள் அட்டக்கத்தி, மெட்ராஸில் இருக்கிறது என்பதை கோபியும் அறிந்திருந்தார். ஆனால் கத்திக்கு கொடுத்த அளவு அவர் மெட்ராஸுக்கு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மேலிருக்கிறது. இதையெல்லாம் மீறி அவரது பேச்சில் நிறைய உண்மையிருப்பதாகவே எனக்கு படுகிறது. நீதிமன்றத்தில் தன்னுடய ஸ்கிரிப்ட்டை படம் வெளியாவதற்கு முன்னமே கொடுக்கும் தைரியம் நிச்சயமாய் குற்றமுள்ளவனுக்கு வராது. நேருக்கு நேராய் பேச தயாராக இருப்பவரிடம் பேச என்ன தயக்கம்?.  அவர் தன்னுடய பேட்டியின் ஆரம்பத்தில் இந்த கதைக்கு, ஆர்யாவை நடிக்க வைக்கலாம் என்று சொன்னதாகவும், பின்னர் தன்னை சத்தாயாக்க அஜித்தை வைத்து எடுக்கலாமென்று தன்னை இழுத்தடித்ததாக சொல்லியிருக்கிறார். அஜித்துக்காக டபுள் ஆக்‌ஷன் கதையாய் மாற்றியமைத்ததாகவும், அதன் பிறகு தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று சொல்லியிருந்தார். பேட்டியின் முடிவில் தலித், தமிழ் தேசியக்காரர்கள் என பேசியதுதான் இடிக்கிறது. தான் முருகதாஸிடம் நான் சாதாரண கமர்ஷியல் சினிமா செய்ய வரவில்லையென்றும், தலித்திய சினிமா செய்ய வந்ததாகவும், அம்மாதிரி சினிமா எடுக்கத்தான் என் ஆவல் அதில் எந்த மாறுபாடு வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என கூறியதாக சொன்னது தனக்கு எந்த வகையிலாவது ஆதரவு கிடைக்காதா என்கிற பரிதவிப்பில் சொல்லியிருந்தாலும், இன்னொரு பக்கம் முரணாக உள்ளதாய் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. சீக்கிரமே நியாயம் யார் பக்கமென நீதிமன்றம் தீர்ப்பளிக்குமென நம்புவோமாக..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஏதோ நான் நல்லவனா இருக்கிறதுனால என எதிர் ஆள் சொல்லும் போது வேறு வழியேயில்லாமல் தலையாட்ட வேண்டியிருக்கிறது

இவங்க விலையேத்துனதை யாரும் கேட்காம இருக்கிறத விடுங்க.. கூடவே டாஸ்மாக் கடைக்காரங்க குவாட்டருக்கும், பாட்டிலுக்குபத்து ரூபா ஏத்துறத யாருகேட்க?

இவனையெல்லாம் வளர்க்காதீங்க என்று சொல்ல அவரைப் பற்றி எழுதுவதை விட இலவச விளம்பரம் எதுவுமில்லை.‪#‎அவதானிப்பூஊஊஊஊ

எவ்வளவு பொய்.. கூட இருந்த பத்து பேருக்கு தெரியும். ம்ஹும்

திரும்பறதுக்குள்ள நாலு பஞ்ச், ரெண்டு சீன் ஓடிடுது. தீப்பொறி. முதல் பாதி செம்ம. இரண்டாம் பாதி செம் ‪#‎பூஜை‬

ஃபாதர் ஆப் நேஷன் யாரு? மகாத்மா காந்தி.
அப்ப மதர் ஆப் நேஷன்?
அவங்க வைப் கஸ்தூரிபாய்தான் ‪#‎பசங்க‬
.@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A housewife takes a lover during the day, while her husband is at work. Not aware that 9 year old son was hiding in the closet. Her husband came home unexpectedly, so she hid her lover in the closet. The boy now has company. 
Boy: "Dark in here."
Man: "Yes it is." Boy: "I have a baseball." 
Man: "That's nice." 
Boy: "Want to buy it?" 
Man: "No, thanks." 
Boy: "My dad's outside." 
Man: "OK, how much?" 
Boy: "£250." 

In the next few weeks, it happens again that the boy and the mom's lover are in the closet together. 
Boy: "Dark in here." 
Man: "Yes, it is." 
Boy: "I have a baseball glove." 
Man: "That's nice." 
Boy: "Want to buy it?" 
Man: "No, thanks." 
Boy: "I'll tell." 
Man: "How much?" 
Boy: "£750." 
Man: "Fine." 

A few days later, the father says to the boy, "Grab your glove. Let's go outside and toss the baseball!" The boy says, "I can't. I sold them." The father asks, "How much did you sell them for?" The son says, "£1,000." The father says, "That's terrible to over-charge your friends like that. That is way more than those two things cost. I'm going to take you to church and make you confess." 
They go to church and the father alerts the priest and makes the little boy sit in the confession booth and closes the door. The boy says, "Dark in here." The priest says, "Don't start that sh*t again."
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

dhandapani said...

// Don't start that s##t again. // Superb.

R. Jagannathan said...

When the boy told the lover that his 'father is outside' to blackmail him, the lover should have said, 'Father is inside too'! - R. J.

'பரிவை' சே.குமார் said...

கோபி உண்மை பேசுவதாய்த்தான் தெரிகிறது...

அனைத்தும் அருமை.