Thottal Thodarum

Nov 10, 2014

கொத்து பரோட்டா -10/11/14

தொட்டால் தொடரும்
தொட்டால் தொடரும் படத்தின் புதிய 30 செகண்ட் டீசர். விரைவில் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும். வரி விலக்கிற்காக காத்திருக்கிறோம்.உங்கள் கருத்துக்காக.. எங்களது புதிய டீசர்
####################################
என் ட்வீட்டிலிருந்து
விருகம்பாக்கம் ஐ நாக்ஸுல ஏதோ விபத்துன்னு வாட்ஸப்புல நியூஸ் வந்திச்சே உண்மையா?

மதுரையில அண்ணா மெஸ்ஸுனு எதாச்சும் பேமஸா என்ன?


இந்த வாரமும் ஒண்ணும் சிலாகிக்கும் படியா இல்லையே why?

நிஜம் பாதிக்கப்பட்டவனை விட சொல்பவனுக்குத்தான் வலிக்கிறது.

intrsting, engrossing,nice thriller ‪#‎GoneGirl‬

அன்னைக்கு பயமுறுத்தினாங்க. ஒரு மாஸ் இருந்திச்சு ஓகே. இப்ப எதுக்கு? ரெண்டு பேருமே ரிடையர்ட் ஆயிட்டாங்க.‪#‎தமக‬

சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாங்கிறது எவ்வளவு பொய்யோ அதப் போலத்தான் நீதி நாயம் பேசுறவனும்‪#‎அவதானிப்பூ‬

வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்த அவ்வப்போது குஞ்சலங்களும் நத்துபுல்லாக்குகளும் தேவை
######################################################
சென்ற வார டெலிவிஷன் சேனல்களின் ஜி.ஆர்.பி செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல சன் தான் முதலிடத்தில் 1331, இரண்டாவது இடமான விஜய்க்கு 420, முதலிடத்திற்கும் இரண்டாவது இடத்துக்குமான வித்யாசத்தை பாருங்கள். சன் ஒரு காலத்தில் 2400 பாயிண்டுகள் எல்லாம் இருந்திருக்கிறது. அந்த வகையில் இரண்டாவது இடத்தை விஜய் அடைந்தது மகிழ்ச்சி என்றாலும், ஆந்திர, கர்நாடக, மலையாள மாநிலங்களில் முதலிடத்திற்கும் இரண்டாவது இடத்திற்குமான வித்யாசத்தை பாருங்கள் 100 பாயிண்டுகள் தான் வித்யாசமே. ஏன் தமிழில் மட்டுமே இம்பூட்டு வித்யாசம். டீடெயிலா வேணும்னா கேபிளின் கதை புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்.
#########################################
சென்ற வாரம் ஓம் சாந்தி ஓம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். தயாரிப்பாளர் அருமை சந்திரன் சிங்கப்பூர்க்காரர். நண்பரும் கூட. விஜய் எபினேசரின் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விழாவில் தயாரிப்பாளர் தான் பிஸினெஸ்ஸில் அனுபவப்பட்டதை விட சினிமாவில் மிக மோசமான அனுபவங்களை கண்டுவிட்டதாகவும். மற்ற எல்லா தொழில்களையும் விட சினிமாவில்தான் நம்பிக்கை குறைவாக இருப்பதாக சொல்லி,  தற்போது தொழிலை கற்றுக் கொண்டதாகவும் சொன்னார்கள். சுவாரஸ்யமில்லாமல் ஆரம்பித்த அவரின் வெள்ளந்தியான பேச்சு போகப் போக படு ஸ்மார்ட்டாக மாறி மொத்த அரங்கத்தையே கலகலக்க வைத்துவிட்டார். தயா இயக்குனர் செந்தில் படு நகைச்சுவையாய் பேசினார். தயாரிப்பாளருக்கு எப்படி ஒரு படம் அனுபவமோ அதை விட மோசம் புது இயக்குனருக்கு. முதல் படத்தில் கற்பழிக்கப்படாத இயக்குனரே இல்லை என்றார். செம்ம அப்ளாஸ். ட்ரைலர் சுவாரஸ்யமாய் இருந்தது.
####################################
Gone Girl
ரொம்ப நாளுக்கு முன் ட்ரைலரை பார்த்த போதே இப்படத்தை பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு காரணம் இயக்குனர் டேவிட் பிஞ்சர் என்பதற்காகவும்தான். நிக்கும், ஆமியும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் எனும் மொனாட்டனி இருவருக்கிடையே உள்ள காதலை காணாமல் போகடிக்கிறது. நிக்கு ஒர் டீன் ஏஜ் பெண்ணுடன் உறவு இருப்பது ஆமிக்கு தெரிகிறது. ஆமி சிறு வயதிலேயே பிரபலமாய் வளர்ந்த பெண். அவரின் குழந்தை காலங்களை வைத்து ரோஸ்லேண்டின் பெற்றோர்கள் புத்தகம் எழுதியவர்கள். எல்லாமே கிடைத்து சந்தோஷமாய் இருந்த ஆமி, கொஞ்சம் வித்யாசமான பெண். இவர்களிடையே ஆன உறவு சிதைந்து கொண்டிருக்கும் நிலையில் ஆமி காணாமல் போகிறாள். விசாரணையில் நிக் ஏன் அவளை கொன்றிருக்க கூடாது? என்கிற ரீதியில் சாட்சிகள் இருக்க, பின்பு என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமான ட்விஸ்டுகளுடன் தெளிந்த நீரோடையாய் சொல்லியிருக்கிறார்கள். பென் ஆஃப்லேக்கும், ரோஸ்லேண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். அதே போல பின்னணியிசை மற்றும் எடிட்டிங். அதிராத ஸூத்திங் இசை. பரபரக்காத காட்சியமைப்புகள். நிச்சயம் மிஸ் பண்ணக்கூடாத படம்
###############################
ஒரு ஊருல ரெண்டு ராஜா
வழக்கம் போல வேலை வெட்டிக்கு போகாத ஹீரோ, காமெடியன். ஊருக்கு டாஸ்மாக் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுப்பது, ஹீரோவின் ஸ்பீடுக்கு ஓடி போட்டிப் போட்டு ஹீரோயின் சரக்கு வாங்குமிடம், ஹீரோயினின் இண்டரெல் ப்ளாக் ப்ளாஷ்பேக், ஆங்காங்காங்கே லைட்டாய் சிரிப்பு மூட்டும் சூரி, சமூக பொறுப்பு போன்ற சில நல்லவைகள் இருந்தாலும் பெரிதாய் சிலாகிக்க முடியவில்லை என்பது வருத்தமே
#####################################
Iyobinte Pushthakam
பகத் பாசிலின் தயாரிப்பில் அமல்நீரட்டின் ஒளிப்பதிவு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். 1900களில் பயணிக்கும் பீரியட் பிலிம். மூணாறு என்கிற பகுதியை உருவாக்கிய வெள்ளைக்காரன், அவனது அல்லக்கை அடிமை லால், அவனின் மூன்று பிள்ளைகள், அவன் செய்யும் துரோகம். வெள்ளைக்காரனின் மகள் மார்த்தா, லாலின் மூன்றாவது பிள்ளை பகத், இவர்களது வில்லனான தமிழ் பேசும் ராவுத்தர், பேசவே பேசாமல் கண்களாலும், நடிப்பாலும் செடியூஸ் செய்யும் பத்மபிரியா, என கேரக்டர்களும், அதற்கான பின் கதைகளும் வழிந்தோடும் திரைக்கதை. முதல் பாதி அட்டகாசம். ஒர் ஐரோப்பிய படத்தை பார்த்த உணர்வு. கொஞ்சம் சாஹேப் பீவி அவர் கேஸ்டர் டைப் கதைதான், பவர், துரோகம், வன்மம், காதல், காமம், பாசம் என போகிறது. இடைவேளை வரை படம் அட்டகாசம். அதன் பிறகு பகத்தை ஓர் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்துவிடக்கூடிய அத்துனை காரணங்களையும் முன்னமே யோசிக்க கூடிய ரேஞ்சில் காட்சிகள் இருப்பதால் டெம்போ மிஸ்ஸிங்.. ஆனால் பின்னணியிசைக்காகவும், மிக அற்புதமான ஒளிப்பதிவுக்காவும் டோண்ட் மிஸ் தூக்கத்தில் கூட விஷுவல்கள் கண்களுக்குள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
கிளி வாங்குவதற்காக ஒர் பெண் கடைக்கு போனாள். கடைக்காரர் தன்னிடமிருக்கும் கிளி பேசும் கிளி என்றார். அப்படியா என்று ஆர்வத்துடன் கிளியை பார்த்த பெண். எங்கே பேசு என்று சொல்ல கிளி அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு “நீ பார்க்க சூப்பரா அயிட்டம் போல இருக்கே” என்று சொன்னது. அதை கேட்டு கோபமான பெண் கடைக்காரரிடம் சொல்ல, அவர் அவளை கூல் செய்துவிட்டு, கிளியிடம் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு மீண்டும் பெண்ணை கேள்வி கேட்க சொன்னார்.
“நானும் ஒரு ஆணும் வீட்டினுள் நுழைந்தால் நீ என்ன நினைப்பாய்?” என கேட்டாள்.
“நீயும் உன் கணவனும் வருகிறீர்கள் என்று நினைப்பேன்”
“மூணு பேருடன் வந்தால்?”
“நீ, க்ணவர், கணவரின் தம்பி”
“நான்கு பேருடன் வந்தால்?”
“நீ, கணவர், கணவரின் தம்பி, உன் தம்பி என்று நினைப்பேன்’ என்றது
“ஐந்து பேருடன் வந்தால்?” என பெண் திரும்பக் கேட்க
கிளி கடை ஓனரைப் பார்த்து “ சார் நான் அப்பவே சொல்லலை இவ அயிட்டம்னு” என்று கத்தியது.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

ம.தி.சுதா said...

பாடல் காட்சி வெளியான போதே பயங்கர எதிர் பார்ப்பு கொடுத்தீர்கள் அண்ணா... மீண்டும் காக்க வைத்து விட்டீர்கள்.... வரி விலக்கோடு வெற்றி நடை போட ஆசையோடு காத்திருக்கிறோம்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM

'பரிவை' சே.குமார் said...

டீசர் அருமை அண்ணா...
கொத்துப் பரோட்டாவில் மற்றவையும் பதமாய்....

tripleint said...

Good Teaser.

Heroine could have been given few more frames in this teaser.

Unknown said...

Madurai amma mess is very famous for non veg...

kvn said...

Cannot hear dialogues properly as background score is preventing us from understanding what the dialogues are.