Thottal Thodarum

Jul 13, 2019

செலவுகளைக் குறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சென்ற வாரம் ஒரு அறிக்கை அதாவது இனி வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படும் நிகழ்ச்சிக்களுக்கு எல்லாம் அன்பளிப்பு கவர் அளிக்கப்படாது என்றும். மேலும் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு சாப்பாடு, விருந்துக்கு பதிலாய் டீயும்ஸ்நாக்ஸும் தான் தரப்படும் என் பீ.ஆர்.ஓ யூனியனுடன் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாய் தெரிவித்திருந்தார்கள்.

அது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் யாராவது தரம் தாழ்ந்து விமர்சனம் எழுதி, அல்லது வீடியோ வெளியிட்டால் இந்த டீ காப்பிக்கூட அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் அதையும் மீறி விமர்சித்தால் கிரிமினல் கேஸ் போடுவோம் என்றும் சொல்லியிருந்தார்கள்.

இதில் காமெடி என்னவென்றால் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது இவர்கள் தான். முன்பு பத்திரிக்கைகளில் வேலை செய்கிறவர்களுக்கு பத்திரிக்கை சம்பளம் தரும். எனவே பத்திரிக்கையாளர்கள் செய்திகளை சேகரிப்பதற்காக அன்பளிப்பு எல்லாம் கொடுத்ததில்லை. என்ன ஸ்பெஷல் போட்டோ செஷன், கட்டுரைகள், மற்றும் பேட்டிகள் வர வழைப்பதற்காக அன்பளிப்பு கொடுத்த காலமிருந்தது. மெல்ல டிஜிட்டல் காலமாக வெப்சைட் வைத்திருக்கிறவர்கள் டிவிட்டர் பேஸ்புக், யூடியூப் அக்கவுண்ட் வைத்திருக்கிறவர்கள் எல்லாரையும் அழைக்க ஆரம்பிக்க தியேட்டரில் ஹவுல் புல் ஷோவாக ஆகிறதோ இல்லையோ ப்ரிவியூ ஷோ ஹவுஸ்புல்லாக ஆரம்பித்தது.

பத்திரிக்கைகளில் வேலைப் பார்த்து கொஞ்சம் காசு சேர்த்து ஒர் இணைய தளத்தை ஆரம்பித்து, இவர்கள் தரும் அன்பளிப்பை மட்டுமே நம்பி வாழும் இணைய தள பத்திரிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேலே. இவர்கள் நிலமைதான் இனி மோசம். அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காகவது. ஏனென்றால் நிச்சயம் இந்த ரூல் மீறப்படும். என்பது உறுதி.

விமர்சனம் குறித்த இவர்களது கருத்து செம்ம காமெடி. நிச்சயம் செல்ப் எடுக்காது. ஏற்கனவே கம்ப்ளெயிண்ட் கொடுத்து பேட்டியெல்லாம் கொடுத்தும் போலிஸ் ஸ்டேஷனில் கூப்பிட்டு விசாரிக்க கூட இல்லைன்னாங்க்.. ஸோ.. லெட்ஸ் ஸீ


Post a Comment

No comments: