சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு
கடந்த ஒரு வாரமாக உள்ளூர் பதிவர்கள் மட்டுமல்லாது, வெளியூர் பதிவர்கள், வெளிநாட்டு பதிவர்களை கூட சந்தித்து கொண்டிருக்கிறேன். எங்கே என்று கேட்கிறீர்களா..? வேறெங்கே நம்ம புத்தக சந்தையில் தான். என்ன இந்த பக்கம் போது ஒரு நாலு பேரை பாத்தோம்னா, அந்த பக்கம் போகும் போது இரண்டு பேரை பார்ப்பேன். நான், அப்துல்லா, லக்கி, அதிஷா, நர்சிம், தண்டோரா, வாசு, எல்லோரும் பல இடங்களில் சுத்தினாலும் கிழக்கு சைடால ஒதுங்கிடறதுதான் வழக்கம். சென்னையில் இருக்கிற பதிவர்களையெலலாம் சந்திக்கணும்னு கோவையிலிருந்து நண்பர் சர்புதீன் வந்திருக்காரு. முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் சேர்த்து பார்த்தா சந்தோஷமா இருக்கும்னு சொன்னாரு. அதுமட்டுமில்லாம அவர் ஒரு பதிவரும் கூட http://www.vellinila.blogspot.com/ என்கிற பெயரில் பதிவு எழுதிவருகிறார். சென்னையில் அவர் முக்கியமாய் பதிவர்களை சந்திக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்றால் அவர் நடத்தி வரும் வெள்ளிநிலா என்கிற பத்திரிக்கையை முழுக்க, முழுக்க பதிவர்களின் பங்களிப்போடு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். பதிவர் சந்திப்புகளில் சந்திக்கலாம் என்று தோன்றிய போது இந்த மாதத்தில...