Posts
சாப்பாட்டுக்கடை - சேட்டு சப்பாத்திக்கடை
- Get link
- X
- Other Apps
சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிரில் உள்ள தர்மராஜா கோவில் தெரு சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். சப்பாத்தி என்றால் சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமான கடை. எனக்கு நினைவு தெரிந்து பள்ளி படிக்கும் காலத்திலிருந்து அவர் கடை வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் அதே தெருவின் ஆரம்ப முனையில் ஒரு குட்டிக்கடையில் மாலையில் சப்பாத்தியும், பூரியும் போடுவார். சூடான உப்பிய பூரியுடன் தக்காளி குருமாவை சாப்பிட ஒரு பெரிய கூட்டமேயிருக்கும். பின்பு அதே தெருவில் பழைய கடைக்கு பகக்த்திலிருந்த கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய கடையாய் பார்த்து பிடித்து சப்பாத்தி மட்டுமே போட ஆரம்பித்தார்.
கொத்து பரோட்டா-26/09/11
- Get link
- X
- Other Apps
யுடான்ஸ் தொலைகாட்சி www.tv.udanz.com . யுடான்ஸ் ( www.udanz.com ) பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் தமிழ் வலைப்பதிவு திரட்டியின் ஒரு அங்கம். வலைப்பதிவர்களுடனான கலந்துரையாடல்கள், பிரபலங்களின் நேர்க்காணல்கள், தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ட்விட்டர்கள் சந்திப்பு, பதிவர்களின் குறும்படங்கள், பதிவர்கள் கலந்துக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை யுடான்ஸ் தொலைகாட்சியில் வெளியிடப்படும். வாரம் அல்லது மாதம் ஒரு சிறப்பு குறும்படம் ஒளிபரப்பவும் திட்டமிட்டிருக்கிறோம்.பதிவர்கள் தங்களின் விடியோ படங்களை யூட்யூபில் (YouTube), ஏற்றிவிட்டு, அதற்கான இணைப்பையும் விடியோ பற்றிய தகவல்களையும் udanztv@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால், யுடான்ஸ் குழுவால் பரிசீலிக்கப் பட்டு யுடான்ஸ் டிவியில் வெளியிடப்படும். பதிவர் சந்திப்புகள், ட்விட்டர் சந்திப்புகள், இலக்கிய கலந்துரையாடல்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பும் இடம்பெறும். உங்கள் அனைவரின் ஆதரவையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். விரைவில் யுடான்ஸிலிருந்து பதிவர்களுக்கான போட்டிகளை விரைவில் எதிர்பாருங்கள். #########################...
குறும்படம் - ஊருக்கு 4 பேர்.
- Get link
- X
- Other Apps
சமீபத்தில் பார்த்த சுவாரஸ்யமான குறும்படம். இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக செய்திருக்கலாம். நெட்வொர்க் மார்கெட்டிங்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படத்தில் உறுத்தாமல் நிறைய அட்வைஸ்களை தருகிறார்கள். சிரிக்க..சிரிக்க.. டெக்னிகலாய் கேமரா, எடிட்டிங் எல்லாம் ஓகே. படத்தில் ஆங்காங்கே நம்மை அறியாமல் புன்முறுவல் பூக்க வைக்கிறார்கள். அதுவே இவர்களது வெற்றியை சொல்கிறது. சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்
பஞ்சாட்சரம்
- Get link
- X
- Other Apps
அந்த பரந்த மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய மேடை அமைத்திருந்தார்கள். மேடையின் நடுவில் ஒரு கழு மரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, சுற்றியிருந்த மக்களிடையே பெருத்த அமைதி நிலவியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்த அமைதிக்கு பின் ஒரு பெரிய அழுத்தமிருப்பதை அவர்களின் மெளனம் வெளிப்படுத்தியது. அவர்களின் மெளனத்தை கலைப்பது போல குதிரைப்படை வீரர்கள் புழுதி பறக்க உட்புக, கடைசி குதிரையுடன் ஒரு உருவம் கயிற்றால் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்பட்டது. கூட்டத்தில் மெல்ல ஒரு ஜாக்கிரதை உணர்வுடனான ஒரு பரிதாபக் கூக்குரல் ஏறி அடங்கியது.
சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்
- Get link
- X
- Other Apps
சைதாப்பேட்டையில் நல்ல உணவகங்களுக்கு கொஞ்சம் பஞ்சமே. அதிலும் மெஸ் போன்ற நல்ல தரமான குறைந்த விலை உணவகங்கள் மிக அரிது. அந்தக் குறையை போக்க வந்திருக்கிறது சமீபத்தில் திறக்கப்பட்ட சம்பத் கெளரி மெஸ். காலையில் அருமையான பூரி, பொங்கல், தோசை, இட்லி என்று வரிசைக்கட்டி அட போட வைக்கும் நேரத்தில், மதியம் அருமையான கல்யாண சாப்பாட்டை நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். ரேஷன்கடை ஒரு ரூபாய் அரிசியை வைத்து போடாமல், நல்ல அரிசியில், அருமையான சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, புளிக்காத கெட்டி மோர், ஊறுகாய், அப்பளம் என்று அசத்துகிறார்கள். படு ஹோம்லியான சாப்பாடு. மாலையில் டிபன் வகையறாக்கள் வேறு அசத்துகிறது. இந்த ஏரியா அலுவலகம் செல்பவர்களுக்கு மாலை நேரத்தில் வீட்டில் சென்று சமைக்க நேரமில்லாதவர்கள், வீட்டிற்கு போகும் போது சாம்பார், ரசம், போன்றவற்றை பார்சல் செய்து வாங்கிப் போகிறார்கள். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மெஸ் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது.
கொத்து பரோட்டா - 19/09/11
- Get link
- X
- Other Apps
நன்றி பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டியை பற்றிய அறிவிப்பை போன வாரம் கொத்து பரோட்டாவில் அறிவித்திருந்தேன். அதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே வாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் இணைகக்ப்பட்டு, ஆரம்பித்த மாதங்களில் 20லட்சத்திற்கு மேல் இருந்த அலெக்ஸா ரேங்கிங் கடந்த ஒரே வாரத்தில் 2.50 லட்சத்திற்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் உங்கள் ஆதரவினால் மட்டுமே. விரைவில் அடுத்த சில வாரங்களில் ஒரு லட்சத்திற்குள் நம் யுடான்ஸை வரவழைத்து விடுவீர்கள் என்று நம்புகிறோம். வருகிற வாரம் முதல் ஸ்டார் ஆப் த வீக் என்ற தலைப்பில் பதிவர்களை தெரிந்தெடுத்து அவர்களுடய பதிவுகளை முன்னிறுத்தவிருக்கிறோம். அப்புறம் ஒரு விஷயம் யுடான்ஸில் யாரும் தனியாய் ரிஜிஸ்டர் செய்யாமல் உங்களுடய ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ஐடிக்களையே வைத்து இணைய முடியும். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு. http://www.udanz.com ####################################################
தமிழ் சினிமா வாழ்கிறதா? - சினிமா வியாபாரம்.
- Get link
- X
- Other Apps
தமிழ் சினிமா உலகின் பெரிய குற்றச்சாட்டே கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதிகளின் ஆக்கிரமிப்பினாலும், சன்னின் ஆதிக்கத்தினாலும் ஒடுங்கிவிட்ட்தாக புலம்பிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு காரணத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆம் தமிழ் சினிமா இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வாழ்கிறதா? என்ற கேள்வியை முன் வைத்தால் இன்றைய நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். நிச்சயம் இது சார்புடய கருத்து என்று நினைக்காதீர்கள். நிச்சயம் இல்லை. மற்றவர்கள் எல்லாரும் சொன்னது போல நிச்சயம் ஏதேனும் மாறுதல் வரும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்த்துப் போய்விடப் போகிறது என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதற்கான காரணங்களும் நிறைய இருக்கவேத்தான் இப்படிச் சொல்கிறேன்.