Posts

பாலை

Image
கடந்த ரெண்டு மூன்று நாட்களாய் இணையத்தில் மட்டும் சில ஆட்கள், ஏதோ தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கழுத்தை நெரித்து கொல்ல முயல்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்களே.. அப்படி என்ன படம் என்று பார்க்க போனேன். அதுவும் இது தமிழனின் வரலாறு என்றும் இதை பார்க்காவிட்டால் தமிழனே இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று  என்று பயப்படும் அளவிற்கு இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருந்ததினால் தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்து போனேன்.

கொத்து பரோட்டா-28/11/11

Image
தமிழ்நாடே வெள்ளக் காடாய் மாறிப் போயிருக்கிறது. அதுவும் தலைநகரான சென்னை பெரும் பள்ளத்தில் தான் இருக்கிறது. போன மழைக்கும் இந்த மழைக்கும் சுமார் பத்து நாள் கேப்பிருந்தும் புதிய ரோடுகளை போட வேண்டாம் அட்லீஸ்ட் சாலைகளில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை மண் போட்டாவது நிரப்பியிருந்தால்,இந்த மழைக்கு இன்னும் மோசமாகியிருக்காது. நேற்று மதியம் போரூரிலிருந்து வடபழனி வர சுமார் 2.30 மணி நேரம் ஆனது. காரணம் ரோடு பூராவும் இருந்த பள்ளங்கள். பள்ள மேடுகளால் ஏற்படும் வாகன நெரிசல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அந்த பள்ளங்களில் மாட்டிக் கொண்டு கீழே விழும் வயதான வண்டியோட்டுனர்கள். நேற்று ஒரு வயதான தம்பதி பேலன்ஸ் தவறி ரோட்டில் வீழ்ந்து அவர்களை தூக்கி நிறுத்தக் கூட முடியாமல் ட்ராபிக் நெரிசல். ரோட்டில் தேங்கி நின்ற தண்ணீரில் வீழ்ந்து முழுவதும் நினைந்து, கை கால்களில் அடிபட்டு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாங்களாவே உதவி செய்து கொண்டு நின்றதை பார்க்கையில் பாவமாய் இருந்தது. நான் இருந்த தூரத்திலிருந்து இறங்கிப் போகக் கூட முடியாத வாகன நெரிசல். கவர்மெண்ட் என்ன பண்ணுது? என்று ஒருவர் பக்கத்து வண்டியில் உட்கார்ந்து கொண்டு கேட்...

மயக்கம் என்ன

Image
செல்வராகவன், தனுஷ் கூட்டணி, ஏற்கனவே மூன்று ஹிட் பாடல்கள், சின்னச் சின்னதாய் நம்மை கொக்கி போட்டு இழுக்கும் டீசர்கள் , என்று ஏகத்திற்கும் நம் எதிர்பார்ப்பை எழுப்பியிருந்த படம்.  சத்யமில் அடாது மழையிலும் விடாது நிரம்பியிருந்த இளைஞர்கள், குறிப்பாய் இளளைஞிகளே சாட்சி. இவர்கள் ஏற்படுத்திய ஹைஃபை கொடுத்து நம்மை அசத்தினார்களா? என்பதை பார்ப்போம்.

Happy Feet 2

Image
எனக்கு அனிமேஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். சாதாரண படங்களில் கிடைக்காத சந்தோஷம் எனக்கு இம்மாதிரியான படங்களில் கிடைக்கும். லயன் கிங் படத்தை உட்லான்ஸ் சிம்பொனியில் ஆறு மணி காட்சி பார்த்துவிட்டு, மீண்டும் அடுத்த காட்சி பார்த்தவன். இம்மாதிரியான கதைகளில் பெரும்பாலும் உறுத்தாமல் நீதி சொல்வார்கள். பல சமயம் மனதை நெகிழவும் செய்துவிடுவார்கள். சமீப கால அனிமேஷன் வளர்ச்சி மேலும் என்னைப் போன்ற அனிமேஷன் ரசிகர்களை கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நான் – ஷர்மி - வைரம்-11

Image
11. நான்   கார் ஈ.சி.ஆர் ரோட்டில் மாயாஜால் எல்லாம் தாண்டி, தொடர் இருட்டுக்கு பின் தெரிந்த ஒரு வெளிச்ச தீற்றலை நோக்கி திரும்பி, பெருத்த கதவுக்கு முன் போய் நின்றது. எலக்ட்ரானிக் கதவுகளை அஞ்சனா தன் காரிலிருந்தபடியே ஒரு கீயை எடுத்து பொத்தானை அமுக்க, திறந்த கதவினூடே, மெல்ல ஊர்ந்து உள் நுழைய, கதவு தானாய் மூடிக் கொண்டது. உள்ளே நுழைந்த்தும் தான் உள்ளே எவ்வளவு பெரிய மாளிகை என்று தெரிந்தது. அவ்வளவு அமைதியில் காரின் சத்தம் பெரிதாய் கேட்டது.

புத்தக விமர்சனங்கள்.

Image
அன்பு நண்பருக்கு வணக்கம், தங்களின் ‘கொத்து பரோட்டா’ “சினிமா வியாபாரம்” “மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய முக்கனியை சுவைத்தேன். தெவிட்டாத இன்பம் கண்டேன். சங்கீத விமர்சகர் சுப்புடு போல தங்களின் தைரியமிக்க விமர்சனமும், வீரியமும், என்னை கவர்ந்தது. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, தங்களின் சாட்டையும், சேட்டையும் தூள். காமெடிக்கு பஞ்சம் என சில சினிமாக்களில் தெரியும். அவர்கள் உங்கள் கொத்து பரோட்டாவை சுவைத்தால், ரோட்டுக்கடை சால்னாவோடு சாப்பிடும் சுவை அறிவர். மனம் தெளிவர்.

கொத்து பரோட்டா - 21/11/11

Image
நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங் கர் நாராயண் @கேபிள் சங்கர் தமிழக மக்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். தப்பு பண்ணிட்டமோ.. என்று. ஒரேடியாய் பால் விலை, பஸ் டிக்கெட் , விரைவில் மின்சாரக் கட்டணம் என்று ஏகத்துக்கு ஏற்றி விட்டார்கள். பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு இதை தவிர வேறு வழியில்லை என்ற சால்ஜாப்பு வேறு. வழக்கம் போல இதற்கு காரணம் முந்தைய மைனாரிட்டி திமுக அரசுதான் என்ற குற்றச்சாட்டு. ஆளாளுக்கு அறிக்கைவிட்டால், உடனே கேட்டு குறைக்க என்ன திமுக ஆட்சியா நடக்கிறது?. என்று கேட்கும் உ.பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். போன கொ.பரோட்டாவில் கூட எழுதியிருந்தேன். சென்னையின் சாலைகளைப் பற்றி. இந்த வாரம் வரை அதற்கான விமோசனம் ஏதுமில்லை. நம்மிடம் வாங்கும் ரோட் டாக்ஸ் பணம் எங்கு போயிற்று. அதான் கார்பரேஷன் அவர்களிடம் வந்துவிட்டதே? செலவு செய்த பணத்தை எடுக்க வேண்டாமா? அட்லீஸ்ட் அதற்காவது மீண்டும் ஒரு அறை குறை ரோட்டை போட்டு தொலைக்கலாம் அல்லவா? ########################################

Sri Ramarajyam

Image
இளையராஜாவின் இசையில் பாடல்கள் வெளிவந்தவுடன் ஹாட்கேக் போல விற்று தீர்த்து ஆந்திர பட உலகத்தினரையே ஆச்சர்யப்பட வைத்த படம். நம் தமிழ் பட உலகம் போல் இல்லாமல் காமெடிப்படம், ஆக்‌ஷன் படம், காதல் கதை, என்று வகை தொகையில்லாமல் எல்லா படங்களுமே ஓடும் மார்கெட் உண்டு. அதிலும் பிரபல ஹீரோக்கள் புராண படங்களில் நடிப்பதும், அது மாபெரும் ஹிட்டாவதும் வழக்கமான ஒன்று. சில சமயம் பெரிய ஹீரோக்களின் மார்கெட்டையே மீண்டும் நிலை நிறுத்திய படங்கள் எல்லாம் இம்மாதிரியான புராண படங்கள் தாம் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வரிசையில் அடித்து துவைத்து காயப்போடப்பட்டிருக்கும் பாலகிருஷ்ணாவின் மார்கெட்டை இந்த புராணப் படம் நிலை நிறுத்துமா? பிரபல பழம் பெரும் இயக்குனர் பாப்பு இயக்கி வெளிவந்துள்ள இப்படம் ரசிகரக்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

வித்தகன்

Image
நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங் கர் நாராயண் @கேபிள் சங்கர் பார்த்திபன் வெகு காலத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் படம். இவர் நடித்து வெளிவரும் ஐம்பதாவது படம். ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படம். வழக்கமாய் ஏதாவது சீரியசாய் படமெடுத்துவிட்டு அது ஓடாமல், வெறுத்துப் போய் மசாலாவாக கலாய்த்து உள்ளே வெளியே ஆடியவர். இப்போதும் அதைப் போலவே யோசித்து எடுத்திருக்கும் படம். செவந்த் சேனல் மாணிக்கம் தயாரித்தும், பார்த்திபனின் இயக்கத்தில் என்று இருந்தும் பெரிய எதிர்பார்ப்பையெல்லாம் எற்படுத்தாத படம்.

Rock Star

Image
நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங் கர் நாராயண் @கேபிள் சங்கர் ரண்பீர்கபூர், நர்கிஸ் ஃபக்ரி, ஏ.ஆர்.ரஹ்மான், இம்தியாஸ் அலி, என்று வரிசைக் கட்டி நிற்கும் ஹிட் லிஸ்ட். பாடல்கள் வெளியாகி ஒரு விதமான ட்ரான்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களில் நானும் ஒருவன். படத்தின் ப்ரொமோ வீடியோக்களினால் அட்ரிலின் ஏறி நரம்பு புடைக்க பாட வேண்டும் என்று தோன்ற வைத்த சாகஸமான் விளம்பரம் எல்லாம் சேர்ந்து கொடுத்த ஹைப்பை திருப்தி படுத்தினார்களா? என்று கேட்டால் ஓரள்வுக்கு பண்ணியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.