Posts

கொத்து பரோட்டா -25/07/16

டெ ல்லியில் 14 வயது தலித் பெண்ணை இரண்டாவது முறையாய் கடத்தி கற்பழித்திருக்கிறார்கள். அதில் அப்பெண் இறந்து போயிருக்கிறாள். இது வரை எந்த மீடியாவும் பெரிதாய் கூவியதாய் தெரியவில்லை. அதே போல கபாலி பட வெளியீட்டன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு ஆலந்தூர் வழியாய் போய்க் கொண்டிருந்த போது உச்சா வர வேறு வழியில்லாமல் ரோட்டோரம் நின்று அடிக்கும் வேலையில் அங்கே ஏதோ ஒரு சத்தம் வர, என்னவென்று பார்த்த போது ஒரு பெண் தன்னை காப்பாற்றும் படி அலறியிருக்கிறார். உடனே அங்கே களத்தில் இறங்கிய போது அங்கே மூன்று வேற்று மாநில இளைஞர்கள் அப்பெண்ணின் உடைகளை களைய முயற்சித்துக் கொண்டிருக்க, தடுக்கப் போன இந்த இளைஞரை மூங்கில் கழி கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இந்த சந்தடியில் அப்பெண் அவர்களிடமிருந்து விலக, அங்கே பாஸ் செய்த ஆட்டோ ட்ரைவர் ஒருவர் துணைக்கு வர, மூவரும் தப்பியோடிவிட்டதாகவும், அவர்கள் அடித்த அடியினால் கிடைத்த காயத்தை பேஸ்புக்கில் போட்டு இதனால் தான்பெருமை கொள்வதாகவும் போட்டிருந்தார். அப்பெண் போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் போலீஸ் கம்ப்ளெயிண்ட் தரவில்லை என்றும் சொல்லியிருந்தார்...

கொத்து பரோட்டா - 18/07/16

மாற்று சினிமாவிற்காக மட்டும் சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாய் கிட்டத்தட்ட சேவை மனப்பான்மையுடனே வலம் வரும் ‘நிழல்’ திருநாவுக்கரசு அவர்கள் புதியதாய் நிழல் பதியம் திரைப்பட  அகாடமி தொடங்கியிருந்தார். அவரது மகன் விஜய் அழைத்திருந்தார். நண்பர்கள் சூழ் கூட்டம். ஆரவாரமில்லாமல் தொடக்க விழா நடந்தேறியது. எம்.பி.இளங்கோவன், டிராஸ்கி மருது, எஸ்.பி.ஜனநாதன், கவிதாபாரதி, மீரா கதிரவன், சக்திவேல் பெருமாள்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து பேசினார்கள். பின்பு தமிழகம் எங்கும் நிழல் நடத்திய குறும்பட பட்டறையில் பயின்று இன்றைக்கு திரையுலகில் காலூன்றி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் பேசினார்கள். நல்ல அனுபவத்தை கொடுக்கக்கூடிய ஒர் அகாடமியாய் இது இருக்கும் என்பதற்கான சான்று இவர்கள் தான். வாழ்த்துக்கள் நிழல் திருநாவுக்கரசு சார்.. @@@@@@@@@@@@@@@@@@@@@@ எங்கே பார்த்தாலும் கபாலி படத்தின் ப்ரோமோ, அல்லது அதைப் பற்றிய பேச்சாய்த்தான் இருக்கிறது. முதல் நாள் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் என்று பப்ளிக்காய் போட்டிருக்கிறார்கள். ஜாஸ் சினிமாதான் இப்படத்தின் தமிழக வியாபாரத்தை எடுத்...

கொத்து பரோட்டா - 11/07/16

Image
OzhivuDivasatheKali கதை கதையென்று தேடிக் கொண்டிருக்கிறோம்.. கதை நம்முள்ளேயே கொட்டிக் கிடக்கிறது என்பது இப்படம் உ.கை.நெ.கனி. ஐந்து நடு வயதுக்காரர்கள். நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கம்யூனிட்டி. நாட்டில் தேர்தல் அன்று விடுமுறையாதலால் யாருமில்லாத ஒரு கெஸ்ட் அவுஸில் ஒன்று சேர்ந்து தண்ணியடித்து கொண்டாட ப்ளான் செய்து கிளம்புகிறார்கள். அங்கேயே இருக்கும் வாட்ச்மேன் மற்றும் ஒரு சமையற்காரியை வைத்து கோழி சமைத்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். படம் முழுக்க, இவர்களின் பேச்சுக்கள் மற்றும் குடி தரும் சுகாபனுவத்திலிருந்து மோசமான அனுபவம் வரை. கிட்டத்தட்ட நிறைய காட்சிகள் ஸ்டெடி ப்ரேமாகவோ, அல்லது லேசான பேனிங்குடனோ ஆன காட்சிகள். இரண்டாம் பாதி முழுக்க ஒரே ஷாட். அட்டகாசம் என்றால் அதற்கு இதுதான் உதாரணம். நடிப்பு, வசனங்கள், படமாக்கியவிதம் என கிட்டத்தட்ட கேண்டிட்டாய் நம்மை நாமே காணும் வாய்ப்பு. அரசியல், ஆண் ஆதிக்கம், ஜாதி, வேலை, பெண், காமம், காழ்ப்புணர்ச்சி, நட்பு,  எளியோரை பழிவாங்கும் மன வியாதி. பணம் கொடுக்கும் திமிர், பதவி, பவர் என பேசாத விஷயமில்லை. படம் முடிந்து வெளியே வரும் போது க்ளைமேக்ஸ் நம்மை அப்ப...

சாப்பாட்டுக்கடை - சேலம் மங்களம் மெஸ்

Image
சேலத்து மக்களுக்கு இவர்கள் பிரபலம். குறிப்பாய் நாட்டுக் கோழி பிச்சிப் போட்டது என்று ஒரு அயிட்டம் தருவார்கள். ஆவ்ஸமாய் இருக்கும், உடன் மிளகை அதிகமாய் சேர்த்த சிக்கன், மற்றும் மட்டன் குழம்பு வகையராக்கள், கொடுப்பார்கள். சேலத்திலேயே கொஞ்சம் காஸ்ட்லியாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் கொடுக்கும் பிச்சிப் போட்ட நாட்டுக் கோழியை அடிச்சிக்க யாராலும் முடியாது. சில வருடங்களுக்கு முன் சென்னையில் சாலிகிராமத்தில் ஆரம்பித்தார்கள். நாசியில் நாக்கில் அவர்களுடய சாப்பிட்ட ருசி உட்கார்ந்து கொள்ள, அடுத்த நாளே அங்கே ஆஜாராகிவிட்டேன். 

கொத்து பரோட்டா -04/07/16

Image
நேற்று உறியடி, ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, அம்மா கணக்கு படங்களைப் பற்றிய கருத்துபதிவு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். பாஸ்கர் சக்தி, ஷான் போன்றோருடன் ராஜா மந்திரி இயக்குனரும் வந்திருந்து பேசினார். உறியடி இயக்குனருக்கு உடல் நலமில்லாததால் வர முடியவில்லை என்றாலும் அப்படத்தை அவர் எடுக்க, வெளியிட, எத்தனை மாற்றங்கள் போராட்டங்களை தொடர்ந்து இந்த வெற்றி கிடைத்து என்பதை நண்பர் என்கிற முறையில் சொன்னேன். அதே போல ராஜா மந்திரி ஸ்கிரிப்டை முழுக்க ஒரே மணி நேரத்தில் காபி டேயில் படித்ததையும், பின்பு அக்கதைக்கு விவாதம் செய்ததையும் நினைவு கூர்ந்தேன். ஒரு நாள் கூத்து படம் ஏன் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னதை முழுக்க, கேட்டுவிட்டு, கிளம்பும் போது அப்படத்தின் திரைக்கதை எழுதிய சங்கர தாஸ் வந்து பேசினார். அவரும் நானும் ஏற்கனவே போனவாரம் இயக்குனன் குறும்பட வெளியீட்டில் சந்தித்திருந்தோம்.சீரியஸான விவாதமாய் இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமாய் சென்றது விழா. அமைத்து நடத்திய விஜயனுக்கும் அவரது பொறுமைக்கும் வாழ்த்துக்கள். @@@@@@@@@@@@@@@@ அவளும் நானும்- குறும்படம் ரொ ம்பவும் சிம்பிளான கதை. ஓவர் பொஸஸிவ்னெஸினால் பிர...

கொத்து பரோட்டா - 27/06/16 - இயக்குனன் - உட்தா பஞ்சாப் - மெட்ரோ - இண்டிபெண்டெண்ட்ஸ் டே 2 - அடல்ட் கார்னர்

இண்டிபெண்டென்ஸ் டே 2 போன முறை உலகத்தை அழிக்க வந்த ஏலியன்கள். இருபது வருஷத்துக்கு பொறவு கிட்டத்தட்ட அப்போ தப்ப்பிச்ச ராணியோட தலைமையில் மீண்டும் உலகை அதுவும் குறிப்பா அமெரிக்காவை அழிக்க வந்திருக்க, கோமாவிலிருந்து எழுந்த பழைய அமெரிக்க ப்ரெசிடெண்ட்.. வில்ஸ்மித் போன்ற ஒருவர்.. ஏசியன் மார்கெட்டுக்காக  ஒரு சைனீஸ் பெண், எதிர்காலத்தை கணித்தது போல அமெரிக்கா பெண் ப்ரெசிடெண்ட். என எல்லாம் மசாலாக்களையும் ஒன்றாய் அரைத்து, அத்தனாம் பெரிய ஏலியன் தட்டுக்குள், நான்கைந்து ப்ளைட்டை விட்டு, அவர்களது ப்ளைட்டையே திருடி, ராணியோட ப்ளைட்டிலேர்ந்து அதை வெளிய வர வைச்சு, சுட்டு கொன்னுடுறாங்க. ங்கொய்யால...முடியலைடா.. வலிக்குது. ராணிய வெளிய ஓடி வர வச்சி கொல்லுறதுக்கு எதுக்குடா, பில்டப்பு, ப்ளைட்டு, 3டி, அடுத்த பார்ட் எதையாச்சும் எடுத்து வுட்டீங்க. அவ்வளவுதான் நான் எழுச்சி அடைந்திருவேன். @@@@@@@@@@@@@@@ என் ட்வீட்டிலிருந்து தினத்தந்தி, போன்ற தமிழ் பத்திரிக்கைகளைத் தவிர வேறெந்த ஆங்கில பத்திரிக்கைகளிலும்,, நான்கு பெண்கள் கொலையில் கணவன் தன் பெண்களை தகாத உறவுக்கு முயற்சித்ததாய் செய்தியேயில்லை வரி ஏய்ப்பு ...

கொத்து பரோட்டா - 20/06/16 - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - முத்தின கத்திரிக்காய்- Nani Gentleman- தவமாய் தவமிருந்து - வித்தையடி நானுனக்கு

மதியம் தந்தையர் தினத்து ஸ்பெஷலாய் சேரனின் தவமாய் தவமிருந்து போட்டிருந்தார்கள். ஏற்கனவே பல முறை பார்த்த படமாய் இருந்தாலும், ஜெயா ஹெச்.டி ஆக்கியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பேனாசோனிக் ஹெச்.டிகேமராவில் படமாக்க தமிழின் முதல் படம் எப்படி விஷுவலாய் ஹெச்.டி மாற்றத்தில் இருக்கிறது என்கிற ஆர்வம் வேறு தொற்றிக் கொள்ள மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் மூழ்கியே விட்டேன். பத்து பதினோரு வருடங்களுக்கு முன் தியேட்டரில் பார்த்த போது கிடைத்த அனுபவத்தை விட, இப்போது கிடைக்கும் அனுபவம் இன்னும் அழுத்தமாய் இருந்தது. அப்பா இருந்த போது பார்த்ததுக்கும், இப்போது இல்லாமல் பார்பதற்கு ஆயிரம் அர்த்தங்கள்,புரிதல்கள். க்ளைமேக்ஸுக்கு கொஞ்சம் முன்னால் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அப்பா, அம்மாவின் வயதோட்டம், மகனின் வாழ்க்கை முன்னேற்றம் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள், என ஸ்ரீகாந்த் தேவாவின் அருமையான பின்னணியிசையுடன், தொடர்ந்த லெந்தியான மாண்டேஜ் ஷாட்கள். அக்காட்சியின் முடிவில் சரண்யா மிகுந்த மகிழ்ச்சியோடு, தூங்க கண் மூடுவார். நம் மனதில் அவரின் சந்தோஷம் ட்ரான்ஸ்பர் ஆகும். இப்போது வரும் படங்களி...

கொத்து பரோட்டா- 13/06/16 - சாய்ரட்- ஒரு நாள்கூத்து - கன்சூரிங் 2 - கேட்டால் கிடைக்கும்

Image
கேட்டால் கிடைக்கும் சமீப காலமாய் கேட்டால் கிடைக்கும் குறித்து நிறைய ரோட்டரி சங்க கூட்டங்களில் கடந்த  ஒரு வருடத்தில் இருபதிற்கும் மேற்பட்ட குழுவில் பேசி விட்டேன். குழுவில் பேசி வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதன் பின்னர் நம்மைப் போலவே அக்குழுவில் உள்ள சில பேர் தனியே போராடி வருவதும், அது குறித்து பேசுவது அதிகமாகியிருக்கிறது. நாம கேட்டு என்ன ஆயிடப் போவுது என்ற எண்ணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணம் தழைக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமாய் இருக்கிறது. நேற்றிரவு போரூர் வரை ஓலா ஆட்டோவில் சென்றேன். டாக்ஸி வந்தது பற்றியும், தன் வாழ்க்கையைப் பற்றியும் டிரைவர் பேசிக் கொண்டு வந்தார். இன்னைக்கு கவலைப் பட்டு என்ன சார் பண்றது? ஆரம்ப காலத்துல ஒழுங்கா மீட்டர் போட்டு ஓட்டியிருந்தா இந்த கார், டாக்ஸியெல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது என்றார். மீட்டருக்கு மேல் யாரிடமும் கேட்க முடிவதில்லை. அப்படியே கேட்டால் உடனடியாய் கம்பெனிக்கு போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்து விடுகிறார்கள் என்றார். சந்தோஷமாய் இருந்தது.. மீட்டர் போட்டு, சைதாப்பேட்டையிலிருந்து போரூருக்கு 131 ரூ...

கொத்து பரோட்டா - 06/06/16

பொதிகையில் கருத்துக்களம் எனும் டாக் ஷோவுக்கு கெஸ்டாய் அழைத்திருந்தார்கள். விவாகரத்து அதிகமானதற்கு காரணம் மனமா? பணமா என்ற தலைப்பு. உடன் மனநல மருத்துவர் ஷாலினி சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்தார். நிகழ்ச்சியை நடத்து பாஸ்கர் மிகுந்த அனுபவமுள்ளவர். தூர்தர்ஷனில் இம்மாதிரியான நிகழ்ச்சி நடத்துவது என்பது சாதாரன விஷயமில்லை. என்பது அதில் உழல்பவர்களுக்கு நன்கு புரியும். எத்தனையோ சேனல்களில் நான் பங்கெடுத்திருக்கிறேன். தூர்தர்ஷனில் உள்ள ஸ்டூடியோ கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் வெகு சில சேனல்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அநியாயமாய் நம் அரசு சேனலின் ரீச்சை அரசாங்க குளறுபடியால் இழந்துவிட்டோம் என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

கொத்து பரோட்டா - 30/05/16

கேட்டால் கிடைக்கும் மெட்ப்ளஸில் மருந்து வாங்க சென்றிருந்தேன். வலது பக்கத்தில் ஒரு விளம்பரம் போட்டிருந்தார்கள். அதில் 100 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் 20 ரூபாய் மதிப்புள்ள டூத் ப்ரஷ் இலவசம் என. அது போல ஓவ்வொரு தொகைக்கு ஒவ்வொரு பொருட்களை பட்டியலிட்டிருந்தார்கள். என் மனதில் என்னவோ இதில் ஒரு டகால்டி வேலையிருக்கிறது என்று தோன்றியது. எனது பில் 172 ரூபாய். சரி.. என் போன் நம்பர் கொடுத்தால் பத்து சதவிகிதம் டிஸ்கவுண்ட் தருவதாய் சொன்னார்.. இல்லையே போன் நம்பர் இல்லாமலேயே உங்க மருந்தகத்தில் 10 சதவிகிதம் டிஸ்கவுண்ட் உண்டே என்று கேட்டதற்கு யோசித்து நம்பர் இருந்தா கொடுங்களேன் என்றார். உங்க டேட்டா பேஸுல நம்பர் ஏத்துறதுக்கும் டிஸ்கவுண்டுக்கும் என்ன சம்பந்தம் என முனகிக் கொண்டே நம்பர் அளித்தேன். மருந்தையும், பில்லையும் கொடுத்தவரிடம் அந்த இலவச விளம்பரத்தைக் காட்டி அந்த பொருட்களை கொடுங்கள் என்றேன். அது டிஸ்கவுண்ட் பெற்றவர்களுக்கு கிடையாது என்றார்கள். அப்படியென்றால் இந்த விளம்பரத்திலேயே அதை போட்டிருக்கணும் இல்லையா? என்று கேட்டபோது அது வரை மொபைலில் கேம் ஆடிக் கொண்டிருந்த அந்த கடை இன்சார்ஜ் அதெல்லாம் தர முட...