Posts

hara hara mahadevki - My Opinion

Image

கொத்து பரோட்டா 2.0-42

Okja நெட்ப்ளிக்ஸின் திரைப்படம். 2017 கான்ஸ் பெஸ்டிவலில் திரையிடப்பட்ட போது மிக்ஸ்ட் ரெவ்யூவே கிடைத்தாலும், படம் முடிகையில் நான்கு நிமிட ஸ்டாண்டிங் ஓவேஷன் கிடைத்தது என்றார்கள். திரையரங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட படமல்ல என்றதும் அதற்கு ஒரு எதிர்ப்பும் எழுந்தது. சரி..இப்படியான சர்ச்சைகளை மீறி அப்படி என்ன இருக்கிறது இந்த ஓஜாவில் என்று பார்ப்போம். 2007 மி மிராண்டா கம்பெனியின் லூசி மிராண்டா தங்களுடய பேக்டரியில் ஒர் புதிய வகை காண்டாமிருக சைஸ் பன்னியை உருவாக்குகிறார். அதில் 26 குட்டிகளை உலகமெங்கும் ஒவ்வொருவருரிடம்  கொடுத்து வளர்க்கச் சொல்லுகிறார். பத்து வருடங்கள் கழித்து  அவைகளில் ஒன்றை சூப்பர் பிக்காக தெரிந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கிறார். பார்க்கும்போது அஹா.. என்பது போல தோன்றினாலும், அவர்களது உண்மையான எண்ணம் ஜெயண்ட் சைஸ் பன்னியின் மாமிசம்.   பத்து வருடங்கள் கழித்து சவுத் கொரியாவில் உள்ள ஒர் மலை கிராமத்தில் மிஜா எனும் சிறுமியுடன் ஓஜா அறிமுகமாகிறது. கிட்டத்தட்ட குழந்தையோடு குழந்தையாய் விளையாடுகிறது. மலை உச்சியிலிருந்து கீழே விழ இருக்கும் மிஜாவை தன் உயிரை தியாகம் செய்யும...

Spyder - My Opinion

Image

Jai Lava Kusa - My opinion

Image

சாப்பாட்டுக்கடை - பழனியப்பா மெஸ் - புதுக்கோட்டை

ஏற்கனவே இங்கே ஒரு முறை என் தயாரிப்பு நிர்வாகியோடு சாப்பிட்டிருக்கிறேன். டிபிக்கல் செட்டிநாடு மெஸ். புதுக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் அருகில் இருக்கிறது.  வெளியேயிருந்து பார்க்க, ஏதோ குட்டி ஓட்டல் போலிருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல, அகண்டு விரிந்து ஏசி ஹால், நான் ஏசி ஹால் என போய்க் கொண்டேயிருந்தது. சமீபத்தில் நண்பர்களுடன் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு கிளம்பும் போது சொன்னேன். அட்டகாசமான மதிய சாப்பாடு என. அனைவரும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். என் மேல் உள்ள நம்பிக்கையில். நான் கடையின் மேல் உள்ள நம்பிக்கையில் கிளம்பினேன். வழக்கம் போல கூட்டமாய்த்தான் இருந்தது. எல்லாருக்கும் லஞ்சும், ஒருவர் மட்டும் பிரியாணி ஆர்டர் செய்தார். சைட் டிஷ் ட்ரே எடுத்து வந்தார்கள். கோலா உருண்டை, ப்ரான், மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி, என வகையாய் ஆர்டர் செய்த மாத்திரத்தில் வந்தது.  மட்டன் கோலா மட்டும் ஆறியிருக்க, மட்டனை விட பருப்பு அதிகம் இருந்த்தாய் பட்டது. நாட்டுக்கோழி ஆசம், மட்டன் சுக்காவும், ப்ரானும் ஸ்பெஷலாய் பாராட்டப் பட வேண்டிய ஐட்டங்கள். முறையே சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகள். வயிற்றை பதம் பார்க்...

கொத்து பரோட்டா 2.0-41

கொத்து பரோட்டா -2.0 -42 கக்கூஸ் தமிழகத்தில் பல இடங்களில் திரையிட போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்ட ஆவணப்படம். மேனுவல் ஸ்கேவஞ்சிங் எனப்படும் மனிதனால் மனித கழிவுகளை அகற்றுகிறவர்களைப் பற்றியும், துப்புறவு பணியார்களின் பிரச்சனை, வேலை, உடல் நலம், அவர்களது ஜாதிப் பின்னணி, ஏன் குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே இப்பணிக்கு தெரிந்தெடுக்கப்படுகிறார்கள்? அரசாங்கம் இவர்களது நலனில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது? விஷ வாயு மரணங்கள், அவர்களுக்கான இழப்பீடு? என பல விஷயங்களைப் பற்றி  இந்த ஆவணப்படம் பேசுகிறது. சென்னை வெள்ளத்தின் போது தெருவெங்கும் கழிவுகள் மலை போல குவிந்து கிடக்க, அதை சுத்தமாக்க, அசலூர், மாநிலங்களில் இருந்து எல்லாம் துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கும் போது பயமாய்த்தான் இருக்கிறது. அடைப்பட்ட, ட்ரைனேஜ், செப்ட்டிக் டேங்குகள், கிடைத்த இடத்தில் எல்லாம் ஒண்ணுக்கடிக்கும் சிவிக் சென்ஸ் இல்லாத நம் மக்கள், நாப்கின்களாலும், ரோட்டில் தூக்கியெறியப்படும் ப்ளாஸ்டிக்கினாலும் அடைபட்ட கக்கூஸ் ட்ரைனேஜுகள், என பல இக்கட்டுகளுக்கு ...

கொத்து பரோட்டா 2.0-40

கொத்து பரோட்டா 2.0-41 As Iam Suffering From காதல் வழக்கமான டிவி சீரியலுக்கு இல்லாத சுதந்திரம், இண்டர்நெட் ஒரிஜினல் சீரிஸுக்கு உண்டு. முக்கியமாய் தடாலடி கருத்து கொண்ட கதைகளை சென்சாரில்லாமல்   சொல்ல முடிவது . டிவி சீரியல் ரேஞ்சுக்கு மொக்கையாக இல்லாமல், அமெரிக்க சிரீஸ் அளவுக்கு சூப்பராகவும் இல்லாமல் ஹிந்தியில் நல்ல தரமான, சீரீஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது. இப்போது தமிழில் இயக்குனர் பாலாஜி மோகனிடமிருந்து ஹாட்ஸ்டாரில். அதுவும் பிங்கி வாட்சிங் செய்ய ஏதுவாய் ஒரு சீசன் பூராவையும் ஒட்டுக்காய் போட்டிருக்கிறார்கள். கல்யாணம் ஆகி ஒருத்தரை ஒருத்தர் வச்சி செய்து கொண்டிருக்கும் பாலாஜி மோகன், தன்யா தம்பதி, லிவிங் டூ கெதரில் இருக்கும் சனானத்,  சஞ்சனா  ஜோடி,  எட்டு வருடங்கள் காதலித்து தங்கள் திருமணத்தை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நட்சத்திரா நாகேஷ், அபிஷேக் ஜோடி. டைவர்ஸ் ஆகி, வாரத்தில் இரண்டு நாட்கள் தன் ஸ்வீட் குழந்தைக்காக வாழும் டைவர்ஸி, ஆன்லைன் பிலிம் ரிவ்வீயூவர் சுந்தர் ராமு. இவர்களுக்குள் நடக்கும் கதை தான். கல்யாணத்துக்கு முன் பேச்சுலர் பார்ட்டியில் பேங்காக்...

கொத்து பரோட்டா 2.0-39

கொத்து பரோட்டா 2.0-40 Play test – Black Mirror கூப்பர் ஒரு அமெரிக்கன். உலகம் சுற்றும் வாலிபன்.  லண்டனில் சுற்றி வரும் போது சோஞ்சா எனும் டெக் ஜர்னலிஸ்டை சந்திக்கிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள். அன்றிரவை அவளுடன் கழிக்கிறான். அடுத்த நாள் தன் டூரை தொடர நினைக்கும் போது அவனுடய க்ரெடிட் கார்ட் நம்பர் திருடப்பட்டு, பயணத்திற்கு பணமில்லாமல் போகிறது. வேறு வழியில்லாமல் மீண்டும் சோஞ்சாவிடம் போய் உதவி கேட்க, “ஆட் ஜாப்” எனும் ஆப் மூலம் ஒரு பிரபல கேம் கம்பெனியின் விளையாட்டை டெஸ்ட் செய்யும் ஆளாய் போகிறான். அங்கே அவனுடய கழுத்துக்கு பின் ஒர் பட்டன் போன்ற ஒன்றை வைத்துவிட்டு, கிட்டத்தட்ட விர்சுவல் ரியாலிட்டி போன்ற ஒரு விளையாட்டை விளையாட சொல்கிறார்கள். அதில் அவன் தன் முடிவுகளை சொல்ல, இதனிடையில் அவனை அங்கே கூட்டிச் செல்லும் பெண் போனவுடன் அவனுடய செல் போனை அணைக்கச் சொல்கிறாள். விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் அக்ரிமெண்ட் காப்பி எடுத்து வர அவள் போகின்ற நேரத்தில் கூப்பர் போனை ஆன் செய்து அந்த மெஷினின் படத்தை சோஞ்சாவுக்கு அனுப்புகிறான். முதல் ஆட்டத்தை முடித்தவுடன் அந்த கேம் கம்பெனியின் ஓனர் தங்களிடம...

கொத்து பரோட்டா -2.0-38

கொத்து பரோட்டா -2.0-38 Socio Sexuals எனும் டெர்ம் சமீபகாலமாய் இணையத்தில் வளைய வர ஆரம்பித்திருக்கிறது.  இது என்ன புது கலாட்டா? என்றால் புதுசு எல்லாம் ஒன்றுமில்லை. பழசுதான் புதுசாய் பெயர் வைத்திருக்கிறார்கள். காதல், டேட்டிங், மீட்டிங் எல்லாம் இன்றைக்கு இணையம் மூலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்க, நான் ஒரு “கே” “லெஸ்பியன்” பை- செக்‌ஷுவல்” “ஸ்ட்ரெயிட்” என்பது போல “இந்த சோபியா செக்‌ஷுவல். சரி சோபியா செக்‌ஷுவல் என்றால் என்ன? இனக்கவர்ச்சி, அழகு, வயது எல்லாவற்றையும் மீறி அறிவு சார்ந்த, புத்திசாலித்தனமான விஷயங்களை பேசி அதன் மூலமாய் ஒருவருக்கு ஒருவர் இன்ஸ்பயர் ஆகி, செக்‌ஷுவல் தேடலை தொடர்வது.  டாரன்  ஸ்டான்லர் தான்  1998ல் இந்த சோஷியோ செக்‌ஷுவல் என்ற வார்த்தையை  தன்னுடய செக்‌ஷுவாலிட்டியாய்  அறிவித்தாராம். . காதல், செக்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, கதை, கட்டுரை, மதம், இசை, என இரண்டு பேரின் ஒருமித்த கருத்துக்களை அறிவுப் பூர்வமாய் முதல் டேட்டிங்கில் பேச ஆர்மபித்து, மெல்ல அந்த பேச்சு பேசுகிறவர்கள் மீது காதலாய் மாறி, செக்சுவல் உறவு வரை போவது தான் இந்த சோசியோ செக்‌ஷுவல். இவ...

கொத்து பரோட்டா 2.0-37

கொத்து பரோட்டா 2.0-38 Rarandoi Veduka Chudham அப்பா நாகார்ஜுனாவை வைத்து குஜாலான சின்னி நைனா படத்தை எடுத்து ஹிட் கொடுத்தவர்,  பையன் நாக சைத்தன்யாவை வைத்து டிபிக்கல், தெலுங்கு டெம்ப்ளேட் காதல் குடும்பக் கதை எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண்.  ஆஸ்யூஸ்வல் கல்யாணத்தில் ஹீரோயின் சந்திப்பு. பார்த்தவுடன் பிடித்துப் போதல். சைத்தன்யாவின் ‘மச்சித்தனம்” பார்த்து ஹீரோயின் குடும்பமே இம்ப்ரஸ் ஆவது. ட்விஸ்ட் என்னவென்றால் ஹீரோயின் அப்பாவும், ஹீரோ அப்பாவும் முன்னாள் நண்பர்கள் இன்னாள் விரோதிகள். காரணம் ஆஸ்யூஸ்வலான நட்பு துரோகம். தங்கையுடன் திருட்டுக் கல்யாணம் செய்ய முனையும் போது தங்கையின் சாவு. ஆனால் பின்னணியில் ஒர் மொக்கை குடும்ப வில்லன். குடும்பத்தையும், காதலையும் சேர்க்க ஹீரோவின் முயற்சி என சகலவிதமான தெலுங்கு பட டெம்ப்ளேட்டுகளுடனான கதை. ரசிக்கக்கூடிய ஒர் விஷயம் குளுகுளு ராகுல் ப்ரீதி சிங். தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஒரிரு பாடல்கள். கலர்புல் ஒளிப்பதிவு மட்டுமே. ரொமான்ஸில் தம்பி இன்னும் ப்ரீகேஜியே தாண்டவில்லை. அப்பாவை வைத்து இந்த கதையை எடுத்திருந்தால் மிண்டும் ஹிட்டடித்திருப்பார் இயக்குனர். ...