Posts

நான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு

Image
இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்? என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது.  புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க்  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform?usp=pp_url இத்துடன் 24 சலனங்களின் எண் என்கிற புதிய நாவலையும் வெளிக்கொணர்கிறேன். சினிமா, அதன் பின்னணியில் உள்ள பிரச்சனைகள், என சினிமா மாந்தர்களை சுற்றி வரும் நாவல். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத நாவல். இதன் விலை. 300 . சலுகை விலையாய் ரூ.250க்கு தருகிறோம். அதற்கான லின்ங் இரண்டு நாவல்களின் விலை ரூ.500 முன்பதிவு சலுகையாய் ரூ.375க்கு இலவச கொரியர் மூலமாய் அனுப்புகிறோம். அதற்கான லிங்க். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform?usp=pp_url

அத்திவரதர் ஒர் மார்கெட்டிங் ஹைஃப் - பாஸ்கர் சச்தி - Chat with x

Image

மக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x

Image

திருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆர். | Chat With X| Bhaskar Sakthi

Image

சாப்பாட்டுக்கடை - அக்கா கடை

Image
சென்னையில் நான்கைந்து வருடங்களாய் புதிய ஹோட்டல்களை விட தள்ளுவண்டிக் கடைகள், சிறு உணவகங்கள் நிறைய முளைக்க ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் குடும்பப் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்க, தங்களுக்கு ஆகி வந்த கலையான சமையலை கையில் எடுத்து களம் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் மேற்கு சைதாப்பேட்டையில், வன்னியர் தெருவின் முனையில் ஒரு கையேந்தி பவன் நான்கு வருடமாய் இருக்கிறது.  அக்கா கடை என்று தான் அழைக்கிறார்கள். மாலை வேளையில் இட்லி, தோசை, மசாலா தோசை, பெசரட்டு, அடை, வடைகறி, சாம்பார் இட்லி , குருமா, இரண்டு வகை சட்னி,சாம்பாருடன் அட்டகாசமான ஒர் விருந்தையே இந்த சின்னச் தள்ளுவண்டியில் தருகிறார்கள். அடை எல்லாம் வீட்டுப் பதத்தில் நல்ல எண்ணெய் விட்டு முறுகலாய் அவியலோடும், காரச்சட்னியோடும் பறிமாறப்படுகிறது. மசாலா தோசை என்றால் காளான் மசாலா, பன்னீர் மசாலா என தினத்துக்கு ஒன்றாய் ஸ்பெஷல் அயிட்டங்கள். சாப்பிட்டுப் போனால் நிச்சயம் வயிற்றைக் கெடுக்காத சகாய விலை உணவு. நிச்சயம் அந்தப் பக்கம் போகும் போது ஒரு கை பார்த்துவிட்டுப் போங்க. ரொம்ப லேட்டாய் போனால் ஸ்பெஷல் அயிட்டங்கள் க...

பொன்னி

Image
வெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்று அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது.  பொன்னியைத் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம். இன்றைய தேதியில் வரலாறு காணாத வகையில்  தங்க விலையுர்ந்து  கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க். கிபி  இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது? எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது? கோலார் தங்க வயல், அதன்  பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்...

Igloo- அன்பின் கதகதப்பு

Image
Igloo- அன்பின் கதகதப்பு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் மனதுக்கு நெருக்கமாய், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சீரியல் கண்டெண்ட் என்று மிக சுலபமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவெஞெர்ஸோ, சிங்கம் 3 பார்க்க போய்விடுகிறோம். தயாரிப்பாளர்களும் இனி இம்மாதிரியான ஆர்டிஸ்ட் படம் தான் ஓடும் என்று முடிவெடுத்து நம்மை கொலையாய் கொல்வார்கள். ஃபீல் குட் படங்கள், குடும்ப உறவுகளைச் சொல்லும் படங்கள். மிக அழுத்தமான கருக்களை கொண்ட கதைகள். சின்ன த்ரில்லர்கள் போன்றவைகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாய் வியாதியை, ஆஸ்பிட்டலை அடிப்படையாய்க் கொண்டு எடுக்கப்படும் கதைக்களன்களை தொடுவதற்கு எல்லோருமே பயப்படும் படியான காலமாகிவிட்ட நிலையில், அக்டோபர் போன்ற மிகச் சில ஹிந்தி படங்கள் மெல்லிய நம்பிக்கையை கொடுக்க வரும். ஆனால் அப்படமே இயக்குனரின் பெயரால் நற்பெயர் பெற்றதேயன்றி பெரும் வசூல் எல்லாம் கிடையாது. அப்படியான இன்றைய பரபர சினிமாவில் நிறுத்தி நிதானமாய் ஒர் அழகிய தமிழ் திரைப்படம் சாரி.. தமிழ் இணையப்படம் இக்லூ. ஓ.டீ.டீ எனும் இம்மாதிரியான ப்ளாட...

Post Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்

Image

செலவுகளைக் குறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சென்ற வாரம் ஒரு அறிக்கை அதாவது இனி வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படும் நிகழ்ச்சிக்களுக்கு எல்லாம் அன்பளிப்பு கவர் அளிக்கப்படாது என்றும். மேலும் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு சாப்பாடு, விருந்துக்கு பதிலாய் டீயும்ஸ்நாக்ஸும் தான் தரப்படும் என் பீ.ஆர்.ஓ யூனியனுடன் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாய் தெரிவித்திருந்தார்கள். அது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் யாராவது தரம் தாழ்ந்து விமர்சனம் எழுதி, அல்லது வீடியோ வெளியிட்டால் இந்த டீ காப்பிக்கூட அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் அதையும் மீறி விமர்சித்தால் கிரிமினல் கேஸ் போடுவோம் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் காமெடி என்னவென்றால் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது இவர்கள் தான். முன்பு பத்திரிக்கைகளில் வேலை செய்கிறவர்களுக்கு பத்திரிக்கை சம்பளம் தரும். எனவே பத்திரிக்கையாளர்கள் செய்திகளை சேகரிப்பதற்காக அன்பளிப்பு எல்லாம் கொடுத்ததில்லை. என்ன ஸ்பெஷல் போட்டோ செஷன், கட்டுரைகள், மற்றும் பேட்டிகள் வர வழைப்பதற்காக அன்பளிப்பு கொடுத்த காலமிருந்தது. மெல்ல டிஜிட்டல் காலமாக வெப்சைட் வைத்த...

Article 15

Article 15 ஆயுஷ்மான் குரானா. இந்தி திரையுலகில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஹீரோ. அதற்கு காரணம் இவர் தெரிந்தெடுக்கும் கதைகள். இவரது முதல் படமே கொஞ்சம் களேபரமான கதைக்களம் கொண்டதுதான். விந்து தானம் செய்கிறவரின் கதை. அதில் ஆரம்பித்து தொடர் வெற்றியில் இருக்கிற ஒர் நம்பிக்கைக்குறிய நாயகனாய் நான்கு ஹிட்டுக்கு பிறகு வரும் படம். இந்த ஆர்டிக்கள் 15. ஜாதியை வைத்து பாகுபாடு காட்டி ஒதுக்கி வைப்பது இந்திய அரசியல் அமைப்பின் படி குற்றம் என்றாலும் நம் நாட்டில் ஜாதி எப்படி புரையோடியிருக்கிறது என்பதை 2014ல் பதூனில் நடந்த கற்பழிப்பு வழக்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட மிகவும் தைரியமாய் சொல்லப்பட்டிருக்கும் கதை. மூன்று ரூபாய் கூலி அதிகம் கேட்டு போராட்டம் செய்ததற்காக இளம் பெண்கள் மூன்று பேர் கேங் ரேப் செய்யப்பட்டு அதில் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னொரு பெண்ணை காணவில்லை. அவர்களை ஆணவக்கொலை செய்து தூக்கிலிட்டதாய் கேஸை ஜோடித்து அவர்களது பெற்றோர்கள் மீது கேஸ் போட்டு முடிக்க பார்க்கிறார்கள். லண்டனின் படித்த அப்பாவின் ஆசைக்காக இந்தியாவில் பணி செய்ய வந்து டெல்லியில் நோ சொன்னதினால் இந்த கிராமத்துக்க...