Posts

24 சலனங்களின் எண். விமர்சனம் -1

Image
நல்ல வாசிப்பாளரிடமிருந்து பாராட்டு. அதுவும் ஜாம்பவான்களோடு ஒப்பிட்டு. கொஞ்சம் வெட்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. நன்றி Pachaiyappan Ge வணக்கம்.சார்..நான் பச்சையப்பன். தி.மலை.உங்கள் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.கரைந்த நிழல்கள், கனவுத்தொழிற்சாலைக்குப் பிறகு திரையுலகைப் பற்றியதான நல்ல நாவல்.சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தை வழங்கிற்று.வாழ்த்துகள்.. இரண்டு மட்டுமல்ல..முகநூலில் பாலகுமாரனின் கல்லூரிப்பூக்கள் நாவலையும் இணைத்தே குறிப்பிட்டுள்ளேன்..திரையுலகின் உள்ளிருந்து எழும் உண்மையான குரல்..வெறும் நாவல் அல்ல..பலரின் வாழ்வு என்பதை எளிதில் வாசகன் உணர்ந்து விடுவான்..ஒரே குறை..ஆட்டிட்யூட்..போன்ற வார்த்தைகள் தமிழ் மட்டுமே தெரிந்த வாசகனுக்கு பிரதியை அந்நியப்படுத்திவிடும்..நன்றி நிச்சயம் தங்கள் படைப்பு தகுதியானதே..ஒரு வாசகனாக என் கணிப்பு பொய்ப்பதில்லை.இலக்கிய உலகில் நல்லதொரு அங்கீகாரமாக விருதைப்பெறும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.சுஜாதாவின் படைப்புகளுக்குரிய readability,அ.மித்ரனின் எளிம,பாலாவின் உணர்வுபூர்வமான கதை அனைத்தையும் உங்கள் நாவல் கொண்டுள்ளது.வெல்டன் சார். Nandri Pachaiyappan G...

சாப்பாட்டுக்கடை - Amma Cheyyi Curry's Point

Image
நல் உணவு நல் இதயங்களை இணைக்கும் என்பார்கள். அப்படியான ஒர் நல்லுணவை சுவைத்ததில் ஆரம்பித்ததுதான் அதிகாரம் வெப் சீரீஸ் குழு. முதல் நாள் சரணை சந்திக்க போன போது மதிய சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. ”சாப்புடுறீங்களா?” என்று பிரபு கேட்ட போது வேண்டாம் என்றுதான் சொல்ல நினைத்தேன். எண்ணை மிதக்கும் கத்திரிக்காய் காரக்குழம்பின் நிறத்தை பார்க்கும் வரை, மணத்தைப் பார்த்ததும் களம் இறங்கி விட்டேன். தேன் போன்ற காரக்குழம்பு. காரம், மணம் குணம் என எல்லாமே சரிவிகிதமாய் குழைந்த குழம்பாய் இருக்க, “எந்த மெஸ்ஸுங்க? “ என்ற போது “நம்ம வீட்டுல செய்தது சார். அம்மா தான் சமைப்பாங்க” என்றார் பிரகாஷ். நிறுவனத்தின் ஈ.பி அதன் பிறகு அவர்கள் வீட்டிலிருந்து வரும் மதிய சாப்பாட்டிற்காகவே வேலையே இல்லாவிட்டாலும் அந்நேரத்தில் ஆஜர் ஆகிவிடுவேன். அதிலும் நான் வெஜ் குழம்பும், மற்றும் தலைக்கறி, சட்னி  என்றால் கேட்கவே வேண்டாம். ப்ரகாஷும் உணவுப் பிரியர். நான் அவருக்கு பல சின்னக் கடைகளை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்பேன். பல சமயம் மதிய சாப்பாட்டிற்கு சில கடைகளின் ஸ்பெஷல் ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டும் போய் சாப்பிடுவோம். எங்கள் அலுவலகத்...

ஏழரை சங்கரன்.

  சாரதியின் இறுதி ஊர்வலத்தில் பழைய கல்லூரி நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். 30 வருட கல்லூரி நட்புகளின் சந்திப்புக்கான இடமாய் இல்லாவிட்டாலும், “நம்ம செட்டுல யார் யாரெல்லாம் உயிரோட இருக்காங்க?” என்று பாசிட்டிவாய் பேசிக் கொண்டு வந்தார்கள். கூட்டத்தில் ஒருவனைப் பார்த்த போது லேசாய் அடிவயிற்றில் கத்திக்குத்து. உடன் நடந்து வந்து கொண்டிருந்த மணியை அழைத்து “அவனைப் பார்த்தா நம்ம செட் சங்கரன் போல இல்லை?” என்று கேட்டேன். மணி அவனை உற்றுப் பார்த்தான். எனக்கு அவன் தான் என்று உறுதியாய் மனதில் மணி அடித்தது. வித்யாசமான முகம் அவனுடயது. சின்ன உடம்பில் கொஞ்சம் பெரிய தலை. அதை கொஞ்சம் கம்பரசர் கொண்டு நசுக்கியதைப் போல மண்டை நசுங்கி, மூக்கு மட்டும் பிரதானமாய் நீண்டு, நொடிக்கொருதரம் இடது தோளை ஒரு மாதிரி கரண்ட் ஷாக் அடித்தார்ப் போல விதிர்த்து கொள்ளும் பாடி லேங்குவேஜோடு, ப்ரொபைலில் பார்த்தால் கொஞ்சம் கருடனைப் போல தெரிவான். இத்தனை வருடம் கழித்து அவனைப் பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை. அதுவும் சாரதியின் இறுதி ஊர்வலத்தில். ஆனால் இந்தக்கதை சாரதியைப் பற்றி மட்டும் அல்ல. வீட்டின் காலிங் பெல் அடித்த சத்தம் கேட்டு...

லாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்

Image
”தேங்க்ஸ்” என்றாள் அனு “நோ பார்மாலிட்டி ப்ளீஸ். ரைட் சைட் உன் ரூமையே நீ எடுத்துக்கலாம். என்ன கொஞ்சம் புத்தகமெல்லாம் வச்சிருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்திடறேன் வையிட்” என்று கேஷுவலாய் சொல்லியபடி அந்த அறைக்குள் சென்றவனை   பார்த்தபடி தன் பையை மோடாவின் மேல் வைத்துவிட்டு, சுற்றிலும் பார்த்தாள். அதே சேகுவாரா, பாரதியார், பெரியதாய் ஒரு ஹிட்காக், அபூர்வ சகோதரர்கள் அப்பு கமல், குவாண்டின் ட்ரெண்டினோ மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தார்களோ அங்கேயே இப்போதும் இருந்தார்கள். @@@@@@@@@@ “நீ சினிமாக்காரனா?” “ஏன் அப்படி கேக்குறே?” “இல்லை கமல் ஹிட்காக் படமெல்லாம் வச்சிருக்கியே? அதான் கேட்டேன்?’ “சே குவாரா படம் கூட தான் வச்சிருக்கேன். அதுக்காக நான் புரட்சியாளனா?” “இல்லியா என்ன? எதுக்கெடுத்தாலும் சண்டை போடுற? ரைட்ஸுங்குற? போலீஸ் கிட்டேயே ரூல்ஸ் பேசுறே? தென் வாட்? யூ ஆர் எ புரட்சியாளன்” ”சினிமா, இலக்கியம் எல்லாமே மக்களுக்காகத்தான். ஸோ.. இப்படியெல்லாம் பேசுனா சோஷியல் மீடியாவுல புரட்சிக்காரன் பேண்டேஜ் கட்டிருவாங்க. எனக்கு இவங்க எல்லாம்   ஆதர்சம் தட்ஸால்” @@@@@@@@@@@ “ர...

எண்டர் கவிதைகள் -30

கைதட்டியாகிவிட்டது விளக்கேற்றியாகிவிட்டது தினமொரு சமையல் என சமையல் குழுவில் போஸ்ட் போட்டாகிவிட்டது வெறி கொண்டு அனைத்து சீரீஸுகளையும் படங்களையும் பார்த்தாகிவிட்டது தினம் பேசும் நண்பர்களிடையே உங்க ஏரியாவுல கொரானா வந்தாச்சா? கையில பணமேயில்லை என்ன பண்ணுறது? போன்ற பேச்சுக்களைத் தவிர பேச ஏதுவுமில்லாமல் போய்விட்டது இன்னுமொரு பதினைந்து நாளே என நான்கு மாசங்களை ஓட்டியாகிவிட்டது பேசினால் மூச்சு முட்டி இறந்துவிடுமோ? என்கிற அச்சம் வீட்டினுள் நுழைந்து மாதங்களாகிவிட்டது. யாரிடமும் எதையும் பேச தோணவேயில்லை புதியாய் முளைத்திருக்கும் வங்கிக் அழைப்பாளர்களைத் தவிர, ஏனென்றால் அவர்கள் தான் என் பாதுகாப்பை முக்கியமாய் நினைக்கிறார்கள். அட்லீஸ்ட் வரும் அக்டோபர் மாதம் வரைக்குமாவது. அதன் பிறகு அவனும் பேசுவானா என்று தெரியவில்லை ஜெய் கொரோனா.

லாக்டவுன் கதைகள் -11- கேரக்டர் ஆர்டிஸ்ட்

“சார்.. இன்னைக்கு ஒரு வண்டி போவுது. பாஸு எல்லாம் வாங்கிட்டாங்க. நான் வீட்டை காலி பண்ணிக்கிறேன். நீங்க கிளம்புங்க. அதான் உங்களுக்கும் நல்லது” என்றவனை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்தார் நமச்சிவாயம். நமச்சிவாயத்தை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் ரெட்டை நாடியாய் கருத்த உருவத்தோடு, வழுக்கையாய் இருப்பார்.   கண்கள் ரெண்டும் கோலி குண்டுகள் போல் பெரிதாய் இருக்கும் என்பதால் கிராமத்து பஞ்சாயத்தார், ஊர் பெருசு என பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு காலத்தில் வெகு பிஸியாய் இருந்தவர்தான் நமச்சிவாயம் ”நல்ல நடிப்பார் சார். நிறைய ட்ராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ஊருல நாடகக் ட்ரூப் எல்லாம் வச்சிருந்திருக்காரு. நல்ல கேரக்டர் ரோல் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க” என்று அறிமுகப்படுத்தியவர் என் நண்பர் சிவகுமார். “நல்ல கோயில் பூசாரி மாரி இருக்கீங்க சார்” என்று பார்த்த மாத்திரத்தில் சொன்னேன். அவருக்கு நான் சொன்னது பிடித்துப் போய், சட்டென என் கை பிடித்து “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார். அவரின் வெள்ளந்தித்தனம் எனக்கு மிகவும் பிடித்துப் போக அன்றிரவே நானும் நண்பரும் சரக்கடிக்க ...