Posts

24 சலனங்களின் எண்- விமர்சனம் -9

Image
  நன்றி கமலக்கண்ணன். 24 salanangalin enn kindle link: https://amzn.to/3gpEOAj 24 Salanangalin Enn Book Link: https://amzn.to/36MqX3Y

பெர்முடா - விமர்சனம்-3

Image
  பெர்முடா. விமர்சனம்#3 Cable Sankar: Finished reading of Bermuda. லைட் ரீடிங் கொடுக்க முடியாத கதை. ஒவ்வொரு சாப்டரும் வேறு வேறு விதமாக வடிக்கப் பட்டு இருக்கு. புரியாதது... 3 கதைகள்.. நித்யா - சுரேஷ்வர், சாம்பசிவராவ்-தமயந்தி, ராமசுப்பு -திவ்யா... இந்த மூணு ஜோடிகள் எங்கயாவது ரிலேட் ஆகிறார்களா எனப் புரியவில்லை... எதற்காக 3 கதையை ஒரே கதையா கொடுக்க முயற்சி செஞ்சு இருக்கீங்க. செக்ஸ் கொஞ்சம் குறைச்சு இருக்கலாம்... சில இடங்களில் காமக்கதைகள் படிக்கிற மாதிரி இருக்கு..:-)) நித்யா காரெக்டர் சொன்னவிதம் பிடித்திருந்தது. சில இடங்களில் சுரேஷ்வர் வாயால் சொல்ல வைத்தது அருமை. முடிவில் முத்தாய்பாக தமயந்தி பயப்படுதாக சொல்லப்ப்டுவதும், தப்பு செஞ்சால் தண்டனை கிடைக்கும் என்று கூறவருவது போல் இருக்கு விமலாதித்தன் என்பது மாமல்லன் என்று இருக்கணுமோ.. நன்றி Raghavan Srinivasa

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -5

Image
இயக்குனர், எழுத்தாளர், நடிகர் ஈ.ராமதாஸ் அவர்களின் விமர்சனம்.  

24 சலனங்களின் எண். விமர்சனம்-8

Image
  சினிமா உலகின் பிண்ணனியில் நடக்கும் நாவல். சமகால சினிமாவைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம் என சொல்லலாம். சினிமா உலகில் இருக்கும் போட்டிகள், துரோகங்கள், வன்மம், வெற்றிக்காக படும் அவமானங்கள், இழப்புக்கள் எல்லாவற்றையும் ரத்தமும் சதையுமாக, ஆழமாக எழுதியிருக்கிறார் கேபிள் அண்ணன். அவருடைய பரந்த அனுபவமும் இதற்கு முக்கிய காரணம். அதே நேரம் - இவை அனைத்தையும் மீறி இங்கிருக்கும் நட்பு, உழைப்பு, நல்ல மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமாவில் புதிதாக நுழையும் உதவி இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். நிறைய புரிதல்களை கொடுக்கும். நன்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

நான் ஷர்மி வைரம்-விமர்சனம் -4

Image
  நான் ஷர்மி வைரம். விமர்சனம் #4 எனது பார்வை புதினம்: நான் ஷார்மி வைரம் (A) எழுத்தாளர்: கேபிள் சங்கர் ( எ) Cable Sankar விலை: ரூபாய். 200/- Kindle: https://www.amazon.in/dp/B07WNCTQF6 டிஸ்கி:. எழுத்தாளரே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு என்பதை உணர்த்த தலைப்பை விட பெரிய (A) சான்றிதழ் தந்துள்ளார். அதனால் கலாச்சார போராளிகள் வேறு இடம் பார்க்கவும். நண்பர் கேபிள் சங்கர் - வியாபாரம், எழுத்தாளர், விநியோகிஸ்தர், விமர்சகர், இயக்குனர் என்ற பன்முகம் உள்ளவர். வலைதளத்தின் (blog) தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான நபர். இவரின் எழுத்துப்பாணியை அவர் மானசீக குருவாக மதிக்கும் எழுத்தாளர் சுஜாதாவைப் போல ஒரு பாணியில் வகைப்படுத்த முடியாது. இவரின் இந்த கதை - இலக்கிய வகையை சார்ந்ததா என்ற கேள்விக்கு நமது பதில் - ஆம், இது வெகுஜன இலக்கியம். இந்த கதை, பாலியல் களத்தை பின்புலமாகக் கொண்டது. சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமகனாகும் ஒருவன் - ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தினால் விலைமகளாகும் ஒருத்தியின் மேல் காதல் கொள்ள , அதை வைரம் என்ற சூது கவ்வ - துரோகம், குரோதம், கொள்ளை , விளைவு - என ஒரு அசத்தல் புதினம். முதலில் எழுத்தாளருக...

பெர்முடா - விமர்சனம் 2

Image
  பெர்முடா. விமர்சனம் #2 Cable Sankar லேட் நைட் சந்திப்புகளில் ஏராளமான கதைகள் பேசுவோம். பெரும்பாலும் சந்தித்த நபர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை பேசும்போது அதனை நிறைய சுவரஸ்யம் கூட்டி கதைகளாக்கி விடுவார். அப்படி சொல்லப்பட்ட மூவிருவரின் வாழ்வை கதையாக்கி இருக்கிறார். Very very interesting.. நன்றி Krp Senthil

24 சலனங்களின் எண். விமர்சனம் -6

Image
  24 சலனங்களின் எண் விமர்சனம் #6 நண்பர் கேபிள் ஷங்கர் எழுதிய 24 சலனத்தின் எண் என்ற திரைத்துறை சார்ந்த நாவல். திரைக்கடலில் நீச்சல் அடிக்க துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டும். இரு தயாரிப்பாளர் இரு நாயகர் இரு நாயகியர் ஒரே ஒரு ஆபீஸ் பாய் என அனைவரும் இந்த தேரை இழுத்துச் செல்கின்றனர். திரை துறை சார்ந்த நண்பர்கள் படித்தால் அவர்கள் சந்தித்த நபர்கள் போலவே இருக்கும். எனக்கும் அப்படியே... சில இடங்களில் அசைவ வரிகள் தவிர்த்து இருக்கலாம் கேபிள் சங்கர். .கணவன் கனவை பூர்த்தி செய்ய நின்ற படத்தை முடிக்கும் திருமதி மணி அவரை மதிக்கிறேன்.அவ்வப்போது அபயக்குரல் தரும் ஆபிஸ் பாயை நேசிக்கிறேன்.சினிமாவைத்தேடுவோர்க்கு இது சிறந்த கூகுள் மேப்..இந்த நாவலை கம்பி மத்தாப்பு போல் ஜாக்கிரதையாக கொளுத்தி உள்ளார். அடுத்த நாவல் லஷ்மி வெடியாய் வெடிக்க வாழ்த்துக்கள். நன்றி இயக்குனர், எழுத்தாளர் நடிகர் E Ramdoss

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -3

Image
வெப் சீரிஸ் என்ற ஒரு வஸ்து அறிமுகமாவதற்கு முன்பே அதற்கான கண்டண்டாக பிரபல வார இதழ்களில் வெளியாகும் தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் கேபிள் சங்கர் வலைப்பதிவில் வந்து பாதியில் நின்ற 'நான் ஷர்மி வைரம்' நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே நீண்ட இடைவெளிக்குப் பின் தந்தாலும் அதன் சுவை குறையவே இல்லை. 'நான் ஷர்மி வைரம்'தலைவரின் வலைப்பூ வாசகர்களின் ஜாங்கிரி அதை அப்படியே சாப்பிட்டு விடுங்கள். கடலூர் ஜெயப்பிரகாஷ்.

24 சலனங்களின் எண். விமர்சனம்-5

Image
 எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் விமர்சனம் # 24 சலனங்களில் எண் # கேபிள் சங்கர் எழுதிய '24 சலனங்களின் எண்' சினிமாத் துறை குறித்த பல நுணுக்கமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்கள் உருவாகின்றன. பல படங்களில் அசோசியேட்டாக அனுபவம் வாய்ந்த ஒருவரும் வளர்ந்து வரும் இயக்குநர் ஒருவரும் ஒரே நாயகனை வைத்துப் படம் தொடங்குகிறார்கள். அந்த இரு படங்களின் தயாரிப்பும் வெளியீடும்தான் நாவல். தனது துறை சார்ந்த நாவல் என்பதால் நாவலாசிரியருக்குப் பல சம்பவங்களைத் துல்லியமாக எழுத வாய்த்திருக்கிறது. அவரே நேரில் பார்த்த உணர்ந்த பல விஷயங்களைத்தான் நூலில் எழுதியிருக்கிறார். துறை சார்ந்த சிலரிடம் சமீப காலங்களில் பரிச்சயம் இருப்பதால் என்னாலும் பல இடங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்தது. தமிழ் சினிமா உருவாகும் விதமானது கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் பெரிதும் மாறியிருக்கிறது. இதற்கு முன்பிருந்த புத்தகங்கள் ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலகட்டத்தின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசுபவையாக இருக்கலாம். ஆனால் தற்காலத் தமிழ்த் திரையுலகைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. ஒரு சினிமா உருவாக 24 கலைகள் ஒன்...

பெர்முடா - விமர்சனம் -1

Image
  பெர்முடா. விமர்சனம்#1 மூன்று புள்ளிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணங்களை இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள். உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். நீந்தி கரை சேர்கிறார்கள். சிலர் தெளிகிறார்கள். சிலர் காணாமல் போகிறார். எல்லாமும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கேபிளாருக்கு கதை சொல்ல வருகிறது. அதையும் பர பர என சொல்ல வருகிறது. மசாலா தூவி தூவி திகட்டாமல் சொல்லத்தெரிகிறது. படித்து முடிக்கும்போது அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த உணர்வு வருகிறது. உண்மையைச் சொன்னால் மூண்று நாவல்களுக்கான களங்கள் இதில் உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள். Mohan Balu Thx sir